Home கட்டுரைகள் அரசியல் பாட்னா தொடர் குண்டுவெடிப்பு - ஒரு ஆய்வு!
பாட்னா தொடர் குண்டுவெடிப்பு - ஒரு ஆய்வு! PDF Print E-mail
Tuesday, 29 October 2013 09:32
Share

பாட்னா தொடர் குண்டுவெடிப்பு - ஒரு ஆய்வு!

  கான் சாஹிப்   

பாட்னா குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார்? இந்த அயோக்கியர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து தங்கள் வாரிசுகளுக்கு சொத்து சேர்க்க எனது இந்திய சகோதரன் வீணாக ரத்தம் சிந்துகிறான். இந்த நிலை என்று மாறும்? நடந்த குண்டு வெடிப்புகளை வன்மையாக அனைவரும் சேர்ந்து கண்டிக்க வேண்டும்.

1-குண்டு வெடிப்பில் உயிரிழந்தது எந்த ஒரு முக்கிய பிரமுகரும் இல்லை, எல்லாம் கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த அப்பாவிகள்தான்.

2-மாநாடு நடந்த மைதானத்தில் குண்டு வைக்க முடிந்தவனுக்கு, மாநாட்டு மேடையில் குண்டு வைக்க ரொம்ப நேரம் ஆகாது.. ஆனா குண்டுகள் வெடித்தது எல்லாம் அப்பாவி பொதுமக்கள் இருந்த பகுதியில்தான்.

இவ்வளவு பெரிய கொடூர சம்பவம் நடந்தும்கூட,எந்த ஒரு அச்சமோ பயமோ இல்லாமல் அத்தனை தலைவர்களும் அசால்ட்டா மேடையேறி பேசிட்டு போயிருக்கிறாங்க.

3-ஐந்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள், நூறுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கிறார்கள், காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கு வேண்டிய முதலுதவிகளை செய்யவோ அல்லது இவ்வளவு பெரிய துக்க நிகழ்வு நடந்துவிட்டதே என்று எண்ணி மாநாட்டை கேன்சல் செய்யவோ இல்லை, மாறாக மாநாட்டை நடத்துவதிலேயே குறியாய் இருந்திருக்கிறார்கள்.

4-இந்தியா முழுதும் சுற்று பயணம் செய்தும், எந்த ஒரு மாநிலத்திலும் நடக்காத அசம்பாவிதம், மோடியின் மிக பெரிய தலைவலியாக மாறியிருக்கும் நிதிஷ்குமார் ஆட்சி செய்யும் மாநிலத்தில் மட்டும் நடக்கிறதென்றால், இது கண்டிப்பாய் யோசிக்க வேண்டிய விசயம்தான்.

நிதிஸ்குமார் மேல் பழி போடுவதற்கு இவர்களே இதை செய்திருக்க வாய்ப்புக்கள் அதிகம்.

5-திருச்சியில் நடந்த பொது கூட்டத்தில், எல்லையில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்திய மோடி,இந்த மாநாடு நடப்பதற்கு சில மணிநேரம் முன்பு கொல்லப்பட்ட ஐந்து உயிர்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேச வில்லை. 

மேலே சொல்லப்பட்ட காரணங்கள் எல்லாம், ஒரு வேளை இது இவர்களாலே செய்யபட்டிருக்கலாம் என்ற யூகத்திற்கு வலு சேர்க்கும் காரணங்கல்தானே தவிர, இவர்கள்தான் இதை செய்தார்கள் என்று குற்றம் சாட்டுவதற்கு அல்ல. இதை பற்றி உண்மை வெளிவரும்வரை இவன்தான் இதை செய்தான் என்று சொல்லுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனமோ அதே மாதிரிதான் இவன் இதை செய்யவில்லை என்று சொல்லுவதும்! பார்போம்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரத்தில் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை பிஜேபியிடமிருந்து வருகிறது. மோடியும் நிதிஷ்குமாரை பலவாறு விமரிசிக்கிறார். மோடியை முன்பு பிரசாரத்துக்கு வர வேண்டாம் என்று அவமானப்படுத்தியதையும் இன்று வரை பிஜேபி யோடு உறவு வைத்துக் கொள்ள எந்த சமிக்ஞையும் நிதிஷிடமிருந்து வராததும் மோடி எந்த அளவு நிதிஷிடம் கோபமாக உள்ளார் என்பதைக் காட்டுகிறது. இவை எல்லாம் யூகங்கள் தான்.

வெளி நாட்டு சதிகளோ அல்லது வேறு ஏதும் தீவிரவாத குழுக்களோ கூட செய்திருக்கலாம். இது போன்று அப்பாவி மக்கள் இறப்பதை தடுக்க அரசு உண்மை குற்றவாளிகளை கண்டு பிடித்து தூக்கில் ஏற்ற வேண்டும். அதை அரசு செய்யுமா?

ஒரு முஸ்லிமோ அல்லது இஸ்லாமிய தீவிரவாத அமைப்போ இந்த காரியத்தை செய்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்களின் இலக்கு மோடிதான். அப்பாவி பொது மக்கள் அல்ல. இந்த குண்டு வெடிப்புகளால் பிஜேபியின் செல்வாக்கு உயரும். எனவே எந்த முஸ்லிமும் இந்த காரியத்தை செய்ய துணிய மாட்டான். ஆனால் பிஜேபி சில பெயர் தாங்கி முஸ்லிம்களை கூலிக்கு அமர்த்தி இந்த காரியத்தை செய்யவும் வாய்ப்புள்ளது.

......பாட்னா தொடர் குண்டுவெடிப்பை மேற்கோள்காட்டி, நாடு தழுவிய அளவில் பாஜக பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ..... இதற்காகத்தான் திட்டமிட்டு இந்த குண்டு வெடிப்பே நடத்தப் பட்டது போல் தெரிகிறது. இந்தியன் முஜாகிதீன் தொடர்பு, இப்படி ஒரு அமைப்பு போலியாக உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது, முசாபர் நகர் கலவரம் பழிவாங்கல் என்பது எல்லாம் நம்பும்படி இல்லை. ஒரு கல்லில் பல மாங்காய் தந்திரம் போல இருக்கிறது.

மோடியின் எதிப்பாளர் நிதிஷ் மேல் குற்றம், மோடி மேல் அனுதாபம், முஸ்லிம்கல் மேல் வெறுப்பு, என்று பல சாதகங்கள் ப.ஜ.க. வுக்கு. போற்றுதலுக்குரிய நேர்மையான அதிகாரி கார்கரே அவர்களை த்தான் கொன்று விட்டார்களே பாவிகள். அவரை போன்ற ஒரு அதிகாரி யாராவது நேர்மையாக விசாரணை நடதிதினால் தான் உண்மை வெளிவரும். இல்லை என்றால் முஸ்லிம்கள் அரசியல் விளையாட்டில் பகடை காயாக உருட்டப்படுவார்கள்.

நன்றி: தமிழ் ஹிந்து