Home கட்டுரைகள் பொருளாதாரம் ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம்!
ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம்! PDF Print E-mail
Saturday, 05 October 2013 06:24
Share

ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம்!

இதுவரைக்கும் உலகின் சந்துபொந்துக்களில் எல்லாம் நுளைந்து தமது தனது ஆதகார சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்திக்கொண்ட ஏகாதிபத்திய நாடுகள் இப்போது என்றுமில்லாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. கிரேக்கம், போத்துக்கல், ஸ்பேயின், இத்தாலி என்ற ஐரோப்பிர அரசின் தூண்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகச் சரிந்து கொண்டிருக்கின்றன.

ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் அழிவிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக மக்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துவிட்டன. அமரிக்கப் பொருளாதாரத்தின் இதயத்தில் காலூன்றி அதன் பயங்கரவாதத்தால் பாதிப்படைந்த மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

ஐரோபிய நாகரீகம், மேற்கின் ஜனநாயகம் என்ற வார்த்தைகளுக்குள் கட்டுண்டு கிடந்த ஐரோப்பிய மக்கள் கூட்டம் இவை எல்லாம் வெற்றுச் சுலோகங்களே என்று உணர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டது.

ஐரோப்பாவின் ஒவ்வோர் அரச தலைவருக்கும் தெளிவாகத் தெரியும் அதன் பொருளாதாரம் சேடமிழித்துக் கொண்டிருக்கிறது என்று. அமரிக்க அதிபர் ஒபாமாவிற்கு ஏகாதிபத்தியப் பொருளாதாரம் செத்துக்கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகங்கள் இருக்கமுடியாது. அழிந்து போவதிலிருந்து தம்மைத் தற்காலிகமாகப் பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளே இன்று மேற்கொள்ளப்படுகின்றன.

2009 ஆம் ஆண்டில் ஆரம்பித்து இன்று வரைக்கும் உலகின் பல தலைவர்களும் பொருளாதார வல்லுனர்களும் பல தடவைகள் ஒன்றை மறுபடி மறுபடி கூறிவிட்டார்கள். "கார்ல் மார்க்ஸ் சொன்னது சரியானதே" எனபது தான் அது. மார்க்சியத்தை அதனைக் குதகைக்கு எடுத்துகொண்டவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்களோ என்னவோ, ஏகபோகங்களின் அதிகார மையங்கள் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றன.

முன்நாள் பிரஞ்சு அதிபர் நிகொலா சார்கோசியின் இரண்டாவது மனைவி கார்ல் மார்க்சை விரும்பிப் படிக்கிறார் என பல் தேசியப் பத்திரிகைகள் பரபரப்பாகப் பேசின. திடீரென கனவுலகிலிருந்து எழுந்த பிரித்தானிய ஆர்க் பிஷப் கார்ல் மார்க்ஸ் சொன்னது நடந்துகொண்டிருக்கிறது என்றார்.

கார்ல் மார்க்ஸ் சொன்னது என்ன? முதலாளித்துவப் பொருளாதாரம் எழுச்சியையும் வீழ்ச்சியையும் (boom and recession) சந்திக்கும். ஒவ்வொரு 18 இலிருந்து 20 வருட இடைவெளிக்குள் இவ்வாறன எழுச்சியும் வீழ்ச்சியும் சுழல் முறை நடைபெறும் எனக் கணித்திருந்தார். இன்றுவரைக்கும் அந்தக் கணிப்புத் தவறவில்லை. எழுச்சியும் வீழ்ச்சியும் நடந்துகொண்டே இருந்தன.

உலகின் ஒவ்வொரு முலையில் நடக்கின்ற அழிவுகளைத் தோண்டிப்பார்த்தால் அதன் ஆழத்தில் ஏகாதிபத்தியத் தலையீட்டைக் காணமுடியும். இவ்வாறான நிலையில், கார்ல் மார்க்சை இவர்கள் உணர்வு பூர்வமாகப் பாராட்டினார்களா என்ற கேள்வி பல மத்தியில் தோன்றி மறைந்தது. இறுதியில் அதற்கு உள்நோக்கம் இருப்ப்தைப் பலர் கண்டுகொண்டனர். கார்ல் மார்க்ஸ் சொன்னது போன்ற தற்காலிக வீழ்ச்சி அல்ல இன்று ஏகபோக நாடுகள் சந்தித்துக் கொண்டிருப்பது. மீட்சியடைய முடியாத நெருக்கடி. .

தவிர்க்க முடியாத இந்த நெருக்கடி நிலை மீட்சிக்கான மாற்றுத் திட்டங்கள் இன்றி செத்துக்கொண்டிருக்கிறது.

இதற்கு முன்னர் பல தடைவைகள் குறிப்பாக ஒவ்வொரு 20 ஆண்டு இடைவெளிக்குள்ளும் முதலாளித்துவப் பொருளாதாரம் நெருக்கடிகளைச் சந்திருக்கிறது. பணச் சுழற்சியின் ஒரு கட்டத்தில் பொருட்களின் வினியோகம் அதற்கான கேள்வியை விட அதிகமடையும் நிலையே இவ்வாறான நெருக்கடிகளுக்கு மூல காரணமாகக் கருதப்பட்டது.

இவ்வாறான பொருளாதாரச் சரிவு பல ஆண்டுகள் வரை நீடிக்கும். இந்த நீண்ட ஆண்டு இடைவெளிக்குள் பல போராட்டங்கள் உருவாகும். போராட்டங்கள் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பையே கேள்விக்கு உள்ளாக்கும் நிலைக்குத் தள்ளப்படும். புரட்சியினூடான சமூக மாற்றம் உருவாகும் நிலை காணப்படும். 1960 களின் நடுப்பகுதியில் ஆரம்பித்து 70 கள் வரை ஐரோப்பிய நாடுகளில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடி பல போராட்டங்களை சோசலிசப் புரட்சி வரை நகர்த்தியிருக்கின்றன.

இவ்வாறான பொருளாதார நெருக்கடியின் நீண்டகால இடைவெளியை நிரப்பும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளிலும் அமரிக்காவிலும் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டன. பிரித்தானிய பொருளியலாளரான மேனாட்ஸ் கீன்ஸ் என்பவரின் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கான சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டே இன்று நாம் வாழ்கின்ற, அழிந்துகொண்டிருக்கின்ற பொருளாதார உலகம் கட்டியெழுப்பப்பட்டது. ஏகாதிபத்திய நாடுகள் மேற்கொள்ளும் போர்களில் இருந்து அத்தனை அழிவுகளுக்கும் கீன்ஸ் இன் பொருளாதாரக் கோட்பாடுகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் தொடர்புகளைக் காணலாம்.

பொருளாதார நெருக்கடி உருவாகும் காலங்களில் உற்பத்தி குறைவடையும், இதனால் வேலையற்றோர் தொகை அதிகரிக்கும், மக்களிடம் வாங்கும் சக்தி குறைவடையும். இதனால் உற்பத்தி மேலும் குறைவடையும். இந்த நெருக்கடிகளுகு எதிராக மக்கள் போராட்டம் தோன்றும். இந்த சூழலை எதிர் கொள்வது எப்படி என்பதைத் தான் கீனெஸ் முன்வைக்கிறார். 1920 இல் உருவான உலகப் பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்வதற்கு உலகப் போர் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

1930 இல் கீன்ஸ்புதிய பொருளாதார கருத்துக்களோடு முன்வருகிறார். ஐரோப்பாவிலும் அமரிக்காவிலும் பொருளாதாரத்தில் புரட்சி நாயகனாகப் போற்றப்படுகிறார்.

1970 களின் பின்னர் கீன்ஸ் இன் கோட்பாடு பொதுவாக அனைத்து ஏகாதிபத்திய நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அரசுகள், பொருளாதார அமைப்புக்கள் எல்லாம் அவரது கோட்பாட்டை முன்வைத்தே உருவாக்கப்படுகின்றன.

1930 ஆம் ஆண்டு கீன்ஸ் வெளியிட்ட நூலின் பிரதான கருப்பொருளாக அமைந்தது பணம் குறித்தாக அமைந்திருந்தது. மக்களின் சேமிப்புத் தொகை முதலிடப்படும் தொகையை விட அதிகமாகும் போது உற்பத்தி குறைகிறது. முதலாளிகளின் லாபம் குறைகிறது. வேலைஉஒன்மை ஏற்படுகின்றது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், முதலாளிகள் லாபத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக மக்கள் பணத்தைச் செலவு செய்ய வேண்டும். இதனால் வேலை உருவாகும். வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து போகும் என்கிறார்.

தொடர்ச்சியாக இவர் வெளியிட்ட நுல்கள் அனைத்தும் மூலதனக் கொள்ளைக்காரர்களான முதலாளிகளை தொந்தரவு செய்யக் கூடாது என்பதையே அடிப்படையான கருத்தாகக் கொண்டிருந்தன. 1933 ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட நூலான "Means to Prosperity" ஏகாதிபத்திய அரசுகளுக்கு ஆலோசனை கூறியது. முதலாளித்துவப் பொருளாதாரத்திற்குப் பாதிப்பற்ற வகையில் வேலையின்மையை ஒழிப்பதற்கான கருத்துக்களைக் கொண்டிருந்தது. இவற்றினூடாக எதிர்பாக்கப்பட்ட வர்க்கப் புரட்சியை எவ்வாறு நிறுத்துவது என்பதும் முதலாளித்துவப் பொருளாதாரத்தை எப்படிப் பாதுகாப்பது என்பதுமே நூலின் சாராம்சமாக அமைந்திருந்தது.

1936 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது நூல் தெளிவான திட்டத்தை முன்வைத்தது.

இரண்டாம் உலக யுத்தக் காலகட்டத்தில் போருக்கு எப்படி பணம் வழங்குதல் என்ற நூலை வெளியிட்டார். அரச பணத்தையோ, பெரு நிறுவனங்களின் பணத்தையோ பயன்படுத்துவது தவறானது என்று வாதிட்ட கீன்ஸ், மக்கள் பணத்தை குறிப்பாக மக்கள் சேமிப்பிலிருக்கும் பணத்திற்கு அதிக வரியிடுவதனூடாகவே போருக்குரிய செலவை ஈடுசெய்யவேண்டும் என வாதிட்டார்.

கீன்ஸ் இங்கிலாந்து வங்கியின் ஆலோசகரானார். அமரிக்கா சென்று தனது பொருளாதாரக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தார். பிரித்தானிய மன்னரின் உயர்தர விருதைப் பெற்றார். பிரபுக்கள் சபை அங்கத்துவம் வழங்கியது.

அமரிக்க ஜனாதிபதியாகவிருந்த ரிச்சார் நிக்சன் நாங்கள் எல்லோரும் கீனேசியர்களே என்று தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார். ஏகாதிபத்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க முனையும் பொருளியலாளர்கள், அரசியல் வாதிகள் என்ற அனைத்துத் தரப்பிரரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரே மனிதன் கீன்ஸ் மட்டும் தான்.

முதலாளித்துவப் பொருளாதாரம் நிலைக்க முடியாது என்று கார்ல் மார்க்ஸ் உலகிற்குக் கூறிய உண்மையைப் கீன்ஸ் பொய்யாக்கிவிட்டதாகக் கூறிய அரை நூற்றாண்டுகளுக்கு உள்ளாகவே முதலாளித்துவம் இனிமேல் நிலைக்க முடியாது என்ற நிலைக்கு வந்தடந்து விட்டது. ஐரோப்பிய நாடுகளும் அமரிக்காவும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றன.

பெரு முதலாளிகளை தொந்தரவு செய்யாமல் உலகை புதிய வடிவில் ஒழுங்கமைக்க வேண்டும் என்றும் அவ்வாறான ஒழுங்கமைப்பில் மேற்கின் அரசுகள் பிரதான பாத்திரம் வகிக்க வேண்டும் என்றும் கீன்ஸ் கூறிய கருத்துக்கள் உலக வங்கியாகவும், சர்வதேச நாணய நிதியமாகவும் உருவாகின. 1944ஆம் ஆண்டு 45 நாடுகளை இணைத்து ஐ.எம்.எப் உருவானது.

வறிய நாடுகளை அந்த நாட்டின் தரகு ஆட்சியாளர்களின் துணையோடு ஒட்டச் சுரண்டி அப்பணத்தின் ஒரு பகுதிய மேற்கு நாடுகளின் அரச திறைசேரிக்கும் இன்னொரு பகுதியை பெரு நிறுவனங்களின் முதலாளிகளின் இலாபத்தை அதிகரிப்பதற்கும் ஏற்ற வகையில் ஐ.எம்.எப் ஒழுங்கமைக்கப்பட்டது.

கீன்ஸ் இன் கோட்பாடு கார்ல் மார்க்ஸ் சொன்ன சுழற்சி முறைப் பொருளாதார வீழ்ச்சியை ஏற்றுக்கொண்ட அதே வேளை அதனை எதிர்கொள்வதற்கான திட்டத்தை முதலாளிகளின் முதலீடூகளுக்கும் லாபத்திற்கும் பாதிப்பற்ற வகையில் முன்வைத்தது.

-அரசின் கையிருப்பில் ஒரு குறித்த பணத் தொகை வைத்திருக்க வேண்டும்.

-அத் தொகை ஏனைய வறிய நாடுகளைச் சுரண்டும் முறை ஒன்றிற்கான ஒழுங்கமைப்பின் ஊடாக அதிகரிக்கப்பட வேண்டும்.

-அவ்வாறான பணமும் மக்களின் சேமிப்பும் பொருளாதார நெருக்கடிக் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்.

இவை கீனேசியன் கோட்பாடுகளில் முதல் அடிப்படையாகத் திகழ்ந்தன.

எவ்வாறு மக்கள் அரச பணமும் சேமிப்பும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவாக வரையறை செய்யப்பட்டது.

பொருளாதார நெருக்கடிகள் உருவாகும் காலகட்டங்களில் இப்பணம் பொருளாதார உக்கியாகத் (Stimulate) தொழிற்பட வேண்டும் என்கிறது.

அதன் உட்பொருள் அருவருப்பானது.

முதலாளிகள் மக்களை கொள்ளையடித்துத் தமது பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். வேலையில்லாத திண்ட்டாட்டம் உருவாக ஆரம்பித்ததுமே அரசு பொதுத் துறைகளில் முதலீடுகளை ஆரம்பிக்க வேண்டும். "அபிவிருத்தி" என்று அவர்கள் அழைக்கும் பெருந் தெருக்கள், ஏனைய கட்டுமானப் பணிகள் போன்றவற்றை உருவாக்க வேண்டும்.

மந்த நிலையில் இருக்கும் அல்லது திவாலாகும் அரச நிறுவனங்கள் போன்றவற்றை மறு சீரமைக்க வேண்டும். இவ்வாறான சீரமைப்பிற்கு தொழிலாளர்கள் தேவைப்படுவர்.

இதனூடாக வேலையில்லாத் திண்டாடத்தை முடிவிற்குக் கொண்டுவரலாம். வேலை செய்வோரின் தொகை அதிகரித்ததும், மக்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும். அவ்வாறு அது அதிகரித்ததும் உற்பத்தி அதிகரிக்கும். உற்பத்தியைக் கையகப்படுத்தி வைத்திருக்கும் முதலாளிகள் தொடர்ச்சியாக லாபம் பெற்றுக்கொள்ளலாம். முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு இடைவெளியின்றித் தொடரும்.

இதுதான் முதலாளித்துவத்தை நிலை நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக கீன்ஸ் முன்வைத்த நடைமுறைத் தந்திரோபாயமாகும்.

90 களின் இறுதி வரை முதலாளித்துவ அமைப்பு கீனேசியன் கோட்பாட்டைப் பற்றிக்கொண்டு அழிவுகளின் மத்தியில் நகர்ந்து வந்தது. அதன் பின்னர் கீனேசியன் கோட்பாடு செயலிழந்து போனது. இப்போது புதிய கோட்பாடுகளையும் புதிய ஒழுங்கு விதிகளையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். முடிவற்ற தேடல் விடையற்றே காணப்படுகின்றது. மாற்றுத் திட்டங்களைக் கண்டுகொள்ளாதவர்கள் இப்போது ஐரோப்பிய மக்கள் மீதும் ஏனைய நாடுகள் மீதும் வன்முறைகளைத் தீவிரப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்று ஏகாதிபத்திய நாடுகள் தமது அழிவிற்கான நாட்களை கணக்கிட்டுக்கொண்டிருக்கிறது. அழிந்து போவதற்கு இன்னமும் பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது.புற்று நோய் பீடித்த நோயாளி போன்று மரணம் நிரந்தரமாகிவிட்டது. நாட்கள் கணக்கிடப்படுகின்றன.

- சபா நாவலன்

source: http://inioru.com/?p=24431