Home குடும்பம் குழந்தைகள் குழந்தைகளும் பாலியலும் (2)

மன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு

குழந்தைகளும் பாலியலும் (2) PDF Print E-mail
Friday, 20 September 2013 07:10
Share

குழந்தைகளும் பாலியலும் (2)

 - ஏ.பி.எம்.இத்ரீஸ்     -

     பெற்றோரின் பாலுறவு       
 
பெற்றோருக்கிடையே நடைபெறும் பாலுறவு முறை பற்றி (Parental Sexual Relationship) குழந்தை தெளிவாகப் புரிந்து கொள்ளா விட்டாலும் குழந்தை பிறந்ததிலிருந்து தாய்க்கும் குழந்தைக்குமிடத்தில் ஒரு தனிப்பட்ட உறவு நிலவுவதை அவதானிக்கவே செய்கின்றது.

தாயும் தந்தையும் ஒன்றாகத் தூங்குகின்றார் ஆனால் குழந்தை அவர்களின் உறக்கத்திலும் உடல் அருகாமையை அனுபவிக்க முடியாதுள்ளதை அவதானிக்கின்றது. இந்த அவதானம் தான் அவர்களின் உறவை குழந்தைக்கு உறுதிப்படுத்துகின்றது இது குழந்தையின் உள்ளத்தில் ஒரு பொறாமையை உண்டு பன்னுகின்றது.

பாலுறவு ஆரம்பித்ததிலிருந்து (குழந்தை ஆறு வாரங்களின் பின்) பிடித்த பெற்றோர் தமது படுக்கையறையில் குழந்தை உறங்க அனுமதிப்பதில்லை. மற்றொரு அறைக்கு நகர்த்தி விடுவார்கள். போதியளவு தாய்ப்பாலை உற்கொண்டதும் இரவு முழுவதும் உறங்க ஆரம்பித்துவிடும். இரண்டொரு மாதங்கள் பெற்றோரின் அறையில் இருக்கக் கூடும் அல்லது பெற்றோரின் படுக்கைக்கு அருகில் பாதுகாப்பான தொட்டிலில் குழந்தை உறங்கவும் கூடும். ஆனால் பிள்ளை முட்டாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. குழந்தைக்கு அப்பருவத்தில் பேச முடியாவிட்டாலும் அது விளங்கிக் கொள்கின்றது. நாம் நினைப்பதை விட அது அங்குமிங்கும் திரும்பப் பார்த்து தேட ஆரம்பிக்கின்றது
 
இன்னும் சில பெற்றோர் ஒன்றிரண்டு வயது வரை குழந்தையை தமது படுக்கையறையில் படுத்திருப்பதை பெரிதாக அலட்சியப்படுத்திக் கொள்வதில்லை. குழந்தை தூங்கும் போது நடைபெறும் செயற்பாடுகளால் எவ்வித அபாயமும் இல்லை. ஆனால் இது சங்கடமான ஒன்றுதான். குழந்தை சில வேளை நித்திரை கலையக் கூடும் அல்லது அரை நித்திரையில் இருக்கக் கூடும் அல்லது நித்திரை போன்று நடிக்கக் கூடும் சத்தம் கேட்டு (முக்கல் முனங்கல்) தொடர்ச்சியான பயத்துக்குட்படக் கூடும். பாலுறவு என்பது மிகவும் கஷ்டமானது என்பதையும் புரியக் கூடும். எனவே அது முழுமையாகப் பாரிய ஆசைப்படக் கூடும்.

     எதிர்ப்பாலுணர்வு        

பாலியல் விடயங்கள் பால்நிலை வித்தியாசங்கள் மீதான கவனம் குழந்தைக்கு எதிர்ப்பாலனரைக் காணும் போதுதான் ஏற்படுகின்றது. இதை other sex interest என உளவியலாளர் கூறுகின்றனர். எதிர் பாலினர் மீதான கவனம், அல்லது கவனமின்மையிலும் பல கட்டங்கள் இருக்கின்றன. கவனமின்மைக்கு பெற்றோர் காரணமாக இருக்கக் கூடும்.

பொரும்பாலான எதிர்பாலினர் மீது தமது குழந்தை கவனம் செலுத்தும் போது அமைதியாக இருக்கின்றார். குறிப்பாக மூன்று வயது எதிர் பாலினக் குழந்தையை முத்தமிடும் போது அல்லது இறுக அனைக்கும் போது அமைதியாக இருக்கின்றன. அல்லது மனதுக்குள்ளால் சிரித்துக் கொள்கின்றன. அல்லது தாயோ தந்தையோ ஒருவர் மற்றவரை பார்த்து கண்ஜாடை காட்டிக் கொள்வர்.

6,7,8 வயது வரை இப்பழக்கம் குழந்தைகளிடையே தொடரும். அதன் பிறகு பாலுணர்வு முற்றாக குறைவடைந்த காலப்பகுதி வருவதுண்டு. எதிர்ப்பால் மீதான கவனமாக பலமாக இருந்தாலும், ஆச்சரியமான ஒன்றாய் தமது கருத்தை வெளிப்படுத்துவார். ஒன்பது வயதில் சிறுவர்களும் சிறுமியறும் ஒருவர் மற்றவரை விட்டு ஒதுக்கி வைத்துக் கொள்கின்றார்.

ரு பாலினர் அடுத்த பாலினரை வெறுப்பதாக காட்டிக் கொள்வர். இப்பருவத்தையும் நாம் அவதானிக்க வேண்டும். இது முதிர்ச்சியடைவது காரணமாக இருக்கலாம். இதை இயல்பாகக் கருதி விடுவிடல் வேண்டும். ஆனால் வளர்ந்து இன்னும் யுவதியானதும் ஒருவர் அடுத்த பாலினரை ஏற்றுக் கொள்வதிலும் தீவிரம் காட்டத் தொடங்குவர்.

 இந்நேரத்தில் பெற்றோரின் நிதானம் குறிப்பாக தந்தை நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். இந்த வளச்சிக் கட்டம் ஒரே நிலையில் நிற்கமாட்டாது. மிக இலகுவான ஒன்றாக நகர்வும் மாட்டாது. இதில் பல விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட வயதில் நிகழ அவற்றில் சில இன்னொரு வயதில் நிகழும். பெற்றோர் தெரிந்திருக்க வேண்டியதென்னவென்றால் எதிர் பாலினரை ஏற்பதற்காக அவர்கள் மனோநிலை பல்வேறு கட்டங்களில் சிக்கல் நிறைந்ததாக கடினமானதாக நகர்கிறது என்பதைத்தான். இந்த அறிவு, குழந்தைகளின் விடயத்தில் பொறுமையைக் கடைப்பிடித்து நிலமைச் சீராக்குவதற்கு உதவக்கூடும்.

நன்றி: மைமதர்லேன்ட்

கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள   "Next"   ஐ    "கிளிக்"   செய்யவும்.