பொன்மொழிப் பேழை |
![]() |
![]() |
![]() |
Monday, 02 September 2013 10:07 | |||
o பணம் பேசக் கூடியது மட்டுமல்ல பேசுபவர்களின் வாயை அடைக்கக் கூடியதும் ஆகும். o நாக்கில் எலும்புகள் கிடையாது. ஆனால், அது எலும்புகளை நொறுக்க வல்லது! o பொறுமையே இல்லாதவன் கூட ஒரு குழந்தைக்கு தகப்பனாக முடியும். ஆனால் பொருப்புள்ளவன் தான் ஒரு தந்தையாக முடியும். o விரும்பும் போதெல்லாம் விரும்புகிறேன் என்பதை விட வெறுத்த போதும் விரும்பினேன் என்பதே உண்மையான அன்பு. o அம்மா என்று நீ சொல்லும் ஒரு வார்த்தைக்காக ஆயிரம் முறை அம்மா அம்மா என்று அலறியிருப்பாள் பிரசவத்தில் உன்னுடைய அம்மா !!! o ஆயிரம் எதிரிகளை விட ஒரு போலி நண்பனால்தான் அதிக தீமை! o அழகான பெண் மற்றவர்கள் தன் அழகை பார்க்க வேண்டும் என்று நினைப்பாள்..!
o தன்னை அறிந்தவன் ஆசைபடமாட்டன் உலகை அறிந்தவன் கோபப்படமாட்டான் இந்த இரண்டையும் உணர்ந்தவன் கஷ்டபப்படமாட்டான்..! o விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒரு போதும் உறங்குவதில்லை. o முதல் குற்றத்தை சரி என்று சாதிப்பவன், இரண்டாவது குற்றத்தையும் செய்தவனாகிறான். o நான் புத்தகம் போன்றவன் புறிந்து கொண்டவர்களுக்கு சுகமாவேன் புரியாதவர்களுக்கு சுமையாவேன். o எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கபடுகின்றனவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்க படுவார்கள் !! o வளமான காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்துகொள்கிறார்கள். வறுமையான காலத்தில் நாம் நண்பர்களை தெரிந்துகொள்கிறோம். o தெருவில் கண்டவளை நினைத்து கருவில் உன்னனை கொண்டவளை மறந்து விடாதே நண்பா..
o ஒரு சொல் போதுமென்றால் இரு சொற்களை செலவு செய்யாதே. எவ்வளவு சொல்லியும் பயன் இல்லையென்றால் ஒரு சொல்லையும் விரயமாக்காதே! o உண்மையினை பேசும் பொது பழிப்புக்கு ஆளாவது பற்றி கவலை பட கூடாது. o கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும். o படிச்சவன் பாடம் நடத்துறான்... படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துகிறான். o செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால் உடனே அவர் தம்மை விட கீழ்யிருப்பவர்களை நினைத்து பார்க்கட்டும் o உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள். o வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சையம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள். www.nidur.info
|