இறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்கள் |
![]() |
![]() |
![]() |
Wednesday, 14 August 2013 06:01 | |||
இறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்கள் முந்தைய வேதங்கள் கூறும் ஆதாரங்கள் இறுதி வேதத்தில் சொல்லப்பட்டவாறே முந்தைய வேதங்களிலும் இறைவனுக்கு இணைவைத்தல் வன்மையாகக் கண்டிக்கப்படுவவதை நாம் காணலாம். இதற்கான ஆதாரங்கள் : o யாருடைய அறிவு உலகாசையால் களவாடப்படுகிறதோ அவர்களே போலிதேய்வங்களை வணங்குகிறார்கள். (பகவத் கீதை ௭:௨௦) o அந்தம் தமஹ பிரவிசந்தி யா அசம்பூதி முபாசதே - (பொருள்: யார் இயற்கை வஸ்த்துக்களை - காற்று நீர், நெருப்பு போன்றவை) வணங்குகிறார்களோ அவர்கள் அறியப்படாத இருளில் மூழ்குகின்றனர்.) - யஜுர்வேதம் Yajurveda, Chapter 40, Verse 9– o "யார் மனிதர்களால் படைக்கப்பட்ட பொருட்களை (மேஜை,நாற்காலி, சிலைகள் போன்றவை) வணங்குகிரார்களோ அவர்கள் இன்னும் ஆழமான இருளில் மூழ்குகின்றனர்" என்று தொடர்ந்து கூறுகிறது யஜூர் வேதம். பைபிளின் கூற்று: இன்னும் பழைய ஏற்பாட்டிலே , யாஸ்ராகாமத்திலே 1 முதல் 5 வரை உள்ள வசனங்கள் கூறுகின்றன: எகிப்து தேசம்! அடிமைத்தள வீடாகிய எகிப்து தேசத்தில் இருந்து உங்களை பிறப்படப் பண்ணிய கர்த்தராகிய நானே தேவன். என்னையல்லாது வேறு ரட்சகனில்லை. மேலே வானத்திலேயும், கீழே பூமியிலேயும், பூமியின் கீழ் தண்ணீரிலேயும் கர்த்தருக்கு இணையாக யாதொரு சொரூபத்தையும், யாதொரு விக்ரகத்தையும் நீர் எடுத்துக் கொள்ள வேண்டாம். கர்த்தர் அதை வெறுக்கிறார் என்று கூறுகிறது. இவை எல்லாம் எதை நமக்கு எடுத்துரைக்கின்றன?.... எனவே இறைவனுக்கு இணைவைத்தல் என்பது இறைவன் வன்மையாகத் தடுக்கும் காரியமும், மன்னிக்கப்படாத பாவமும் ஆகும். மேலும் இப்பாவத்துக்கான தண்டனை மறுமையில் நிரந்தர நரகமாகும் என்பதைத் தெளிவாக அறிகிறோம். ஆக, இந்த இணைவைக்கும் பாவத்தை யார் எந்த வடிவில் செய்தாலும் அது பாவமே! source: http://quranmalar.blogspot.in/2012/09/blog-post_6800.html
|