Home கட்டுரைகள் அரசியல் எகிப்தில் இஃவான்களின் ஆட்சி கவிழ்ப்பும் பிண்ணனி அரசியலும்
எகிப்தில் இஃவான்களின் ஆட்சி கவிழ்ப்பும் பிண்ணனி அரசியலும் PDF Print E-mail
Friday, 19 July 2013 10:20
Share

எகிப்தில் இஃவான்களின் ஆட்சி கவிழ்ப்பும் பிண்ணனி அரசியலும்

கண்ணால் காண்பதும் பொய்....

அரபு வசந்தம் எனும் அண்மையில் நடந்த ஆட்சி மாற்றத்தில், இருந்த பல ஆட்சியாளர்கள் பதவியிழக்கச் செய்யப் பட்டார்கள். புதிய கிளர்ச்சியாளர்கள் ஆட்சி பீடத்தில் அமர்த்தப் பட்டார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. 

இன்னும் எகிப்தில் உதயமாகி எண்பது (80) வருடங்கள் பழமையான போராட்டத்தோடு இருந்த இஹ்வான்கள் அமைப்பினர் ஆட்சியமைத்தனர். ஆனாலும் ஆட்சி பீடமேறி ஒரு வருடம் பூர்த்தியான நிலையில் மீண்டும் மக்கள் கிளர்ச்சி எழுந்து இவர்களது ஆட்சி கவிழ்க்கப் பட்டுள்ளது.

ஆட்சி மாற்றம், இஸ்லாமிய சாம்ராச்சியம் எனும் சித்தாந்தங்களை குறிவைத்து இயங்கும் உலகிலுள்ள பல் வேறு குழுக்களுக்கு இவர்களது வீழ்ச்சி பெரும் தலை இடியை தோற்று வித்திருக்கிறது. குருவி கூடு கட்டியது போல் சிறுக சிறுகச் செய்த பெரும் வேலை தரைமட்டமாக்கப்பட்டதால் இவர்களின் கவலை நமக்கும் வருத்தமளிக்கிறது.

ஆயினும் ஊடகத் திரிபாடல்களின் சதி வலையில் தத்தளிக்கும் இந்த கால கட்டத்தில் மாற்று கருத்துக்களையும் நாம் சற்று தெரிந்திருப்பது அவசியம் என நினைக்கிறேன். ஆங்கில ஊடகங்களில் சில இதைப் பற்றி பேசினாலும் தமிழ் உலகிற்கு இது பற்றிய மாற்று சிந்தனை மறைக்கப்பட்டே வருகிறது.

நமக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அராபிய தீப கற்பம் எப்போதுமே போர்ச் சூலல்களிலேயே சீரழிகிறது.  ஈரான்-ஈராக் யுத்தம், ஈராக் - குவைத் மீதான ஆக்கிரமிப்பு, இஸ்ரேல் - பாலஸ்தீன உரிமைப் போராட்டம், அண்மையில் தொடங்கிய "அறபு வசந்தம்" வரை எல்லாமே முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட்டிய கறை  படிந்த  சுவடுகளே. 

ஆனாலும் எது எப்படியோ இவை எல்லாவற்றிலும் மேற்குலகின் செல்வாக்கும் அதிகாரமும் இந்தப் பிரதேசங்களில் அதிகரித்தது மட்டுமே உண்மை. இதனால்தான் உலகிற்கு அறிவியலையும் தொழில் நுட்பத்தையும்  மட்டும் அல்ல , சிந்தனா ரீதியான மூளை சலவைகள் மூலமும் தங்கள் சிந்தனைகளை வியாபாரம் செய்பவர்களாக அவர்கள் கணிக்கப் படுகிறார்கள்.

முஸ்லிம்களின் விடுதலை போராட்டமாக மேற்கின் பிடியிலிருந்து விடு படுதலை மையமாக வைத்து செயற்படும் எந்த குழுக்களினதும் செயற்பாடுகள் இறுதியில் முஸ்லிம்களுக்கு எதிரானதாகவே அமைந்து விடுகின்றன. இன்னும் சொல்லப் போனால் இதைதான் மேற்கின் சதியாலோசனைத் (conspiracy) திட்டமாகச் சொல்ல முடியும்.

அமெரிக்காவிற்கு பொருளையும், அதிகாரத்தையும் தாரை வார்க்கும் சவூதி , கத்தார் போன்ற நாடுகள் அப்படியே இருக்க மேற்கின் எந்தப் பல் தேசிய கம்பனிகளுக்கும் இடம் அழிக்காது போன லிபியாவில் மக்கள் புரட்சி வெடிக்கிறது. இதற்கு இஸ்லாமிய விடுதலைப் போராளிகள் களத்தில் இறங்குகிறார்கள்.

1 அமெரிக்கா, நேடோ (NATO)அமைப்புகள் ஆயுத பலம் வழங்குகின்றன. சவூதி கத்தார் போன்ற நாடுகள் பொருளுதவி செய்கிறது. கர்ளாவி போன்ற மார்க்க நிபுணர்கள் இதனை ஆதரித்து இஸ்லாத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓடி தீர்ப்பு வழங்குகிறார்கள். முஸ்லிமகளின் குரலாக நம்பப் படும் அல் - ஜசீரா போன்ற ஊடகங்கள் ஒரு தலைப் பட்ச செய்திகளை தந்து மக்களை திசை திருப்புகிறது. இங்கு நடப்பது யாருடைய யுத்தம் என்பது புத்தியுள்ள எந்த தனி மனிதனுக்கும் பிறிம்பாகச் சொல்ல வேண்டியதில்லை.

2 இந்த வரிசையில் அமெரிக்காவுக்கு தலை இடியாக இருந்த சிரியாவில் ஆட்சியை கவிழ்ப்பதற்கான மற்றுமொரு போராட்டம் நடை பெறுகிறது.இதற்கு மதச் சாயல் பூசி சுன்னி - ஷியா யுத்தமாக நம்மை நம்ப வைத்திருக்கும் மேற்கின் நுட்பமான நகர்வு மேல் சிலிர்க்க வைக்கிறது. சிரியாவையும் கவிழ்த்து விட்டால் எஞ்சியிருப்பது ஈரான் மட்டும்தான். சிரியாவைக் கவிழ்ப்பது ஈரானின் மீதான யுத்தத்திற்கான முன்னெடுப்பு என்பதை ரஷ்யா தெளிவாகவே சொல்லிக் காட்டுகிறது. சிரியாவில் நடப்பது உள்நாட்டு யுத்தம் இல்லை வெளிநாட்டு குள்ள நரிகளின் ஊடுருவல் போராட்டம் என்பது வெள்ளிடை மலை.

3 சிரியாவில் நடப்பது  வெளிநாட்டு சதியுத்தம் என்பதற்கு மற்றுமொரு நேரடி ஆதாரம்தான் சிரியா மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்

4. இதற்காகவே இஸ்ரேலையும் அமெரிக்காவையும் வாழ்த்திப் பிரார்த்திக்கும் யூசுப் கர்தாவியை என்ன சொல்வது.

5 எனவே "அரபு வசந்தம்" என்பது மாயா ஜால வார்த்தை கோலமும் வெறும் கண்கட்டி வித்தையுமே தவிர வேறொன்றில்லை. இவையெல்லாம் மேற்கின் ஆதிக்கத்தை பன்முகப் படுத்தும், "அகன்ற இஸ்ரேலை" நனவாக்கும் நகர்வுகளே.

இனி Egypt  பற்றிய நமது ஒரு சிறு கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.

Hosni Mubarak இன் இரும்புப் பிடியில் இருந்து மக்கள் புரட்சி செய்து விடுபட்டது உண்மை.ஆனால் Morsi ஆட்சிக்கு வந்தது முற்று முழுதான ஜனநாயகம் என்பதற்கில்லை. போட்டியிட்ட கட்சிகளுக்குள் ஆயுதக் குழுவாக இருந்த Morsi சார்பான  இஹ்வான்கள் ஆட்சி பீடமேறியதில் பல வேறு பட்ட கருத்துக்கள் உண்டு.

இன்னும் ஜனநாயக முறைமை பற்றி பேசிக் கொண்டு ஆட்சிக்கு வந்த Morsi அரசாங்கம். 20 மில்லியன் மக்கள் பாதையில் குதித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டபோதே ஆட்சியை துறந்திருக்க வேண்டும். இராணுவத்தால் வெளியேற்றப் படும் வரை ஆட்சியைப் பிடித்துக் கொண்டு நின்றது ஜனநாயகம் அல்ல.

6 மேலும் 2மில்லியன் மக்கள் Hosni Mubarak இற்கு எதிராக குதித்த போது ஜனநாயகத்துக்கு வழி விடுங்கள் என்றும் Mubarak இன் ஆட்சி கவிழ்க்கப் பட வேண்டும் என்றும் தீர்ப்பு கூறிய யூசுப் கர்ளாவி, 20 மில்லியன் மக்கள் கிளர்ந்தெழுந்த போது பொறுமை காக்க அழைப்பு விட்டது, இவரது இஹ்வானிய விசுவாச த்தை காட்டுகிறதே தவிர, இஸ்லாத்தின் மீதான பற்றைக் காட்டவில்லை. நாக்குப் புரண்ட பத்வாக்களை கொடுக்கும் இவர்கள்தான் இன்றைய இஸ்லாத்தின் நவீன முல்லாக்கள்.

30 வருட இரும்பாட்சியில் இருந்து விடு பட்ட மக்கள் சுதந்திரமான ஒரு அரசை எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் நடந்தது வேறு. முழு இலாக்காக்களையும் இஹ்வானிய மயமாக்கும் ஒரு சூழலையே Morsi  அரசாங்கம் அமைத்தது. தனிப் பட்ட பகைமையையும், மதக் கருத்துப் பிரிவினை வாதத்தையும் முன் வைத்தே இவர்கள் ஆட்சி செய்தார்கள்.

மேலும் இவர்களது சர்வாதிகாரப் போக்கு மிக அதிகமாக  இருந்தது. Morsi இன் ஆட்சிக்கு எதிரானவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்களாகவே கணிக்கப்பட்டார்கள். எதிர்க் கட்சியினரை இஸ்லாத்தின் பெயரில் முடக்குவதிலும் வாயடைக்கச் செய்வதிலும் அதிக பிராயச் சித்தம் எடுத்துக் கொண்டார்கள். இவர்களுக்கு குடை பிடித்த எகிப்தின் சில உலமாக்கள் " Morsi க்கும் , அவரது ஆட்சிக்கும் எதிரானவர்களை கொல்வது இஸ்லாத்தின் அறப் போர்- ஜிஹாத்" என்று பத்வா வேறு கொடுத்திருந்தார்கள். இதுதான் அந்த ஜனநாயக அரசின் உச்ச கட்டம்.

7 இஹ்வான் களின் இருள் வாழ்க்கையும் இன்னொரு முகமுமான பாதாள உலக செயற் பாடுகளையும் அங்கிகரிக்கும் அரசாகவும் தொழிற்பட்டார்கள். இதற்காகவே பாதுகாப்புப் படையையும், நீதி துறையையும் இஹ்வானிய மயப் படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார்கள்.

8  நீதித் துறைக்கு இருந்த சுயாதீனத்தை குறைப் பதற்கான சகல நடவடிக்கையும் மேற்கொண்டார்கள். இதற்காக நீதி பதிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குத்தித்தது ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன்.

9 இன்னும் நாட்டின் நலன்களை ஓரம் தள்ளி ஹமாஸை வலுப் படுத்தும் நோக்கில் Egypt இனது எண்ணை  மற்றும் ஏனைய வளங்கள் பயன் படுத்தப் பட்டதும் மக்கள் மத்தியில் Morsi இன் செல்வாக்கை சரித்தது. எகிப்திலிருந்து Gaza விற்கு சுரங்கப் பாதை ஊடாக எண்ணை வளங்களை கடத்துவதை இஹ்வான்கள் Morsi அரசாங்கத்தின் உதவியுடன் செய்தனர். இதில் இராணுவத்திற்கும் Morsi அரசாங்கத்திற்கும் கருத்து முரண் பாடுகள் தோன்றின. இந்த கால கட்டடத்தில் எகிப்தில் டீசல் தட்டுப் பாட்டில் மக்கள் அதிகம் பிரசினைக்கு உள்ளானார்கள்.

Egypt இனது பாது காப்புப் படை ஆனது தனது பொருளாதாரத்தை தாங்களே ஈட்டி தனித்து இயங்கும் நிறுவனம் ஆகும். படையினருக்கு என்றே தனியான வியாபார நிறுவனங்களும் தனி நிதியும் இருக்கிறது.

10 ஆனால் Morsi அரசாங்கம் அதையும் தங்கள் தேவைகளுக்காக  பயன் படுத்தினார்கள் .

இன்னும் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் எகிப்தின் சினாய் பகுதியில் கொல்லப் பட்ட 16 இராணுவ வீரர்கள், ஹமாஸ் கூலிப் படைகளால் கொலை செய்யப் பட்டதை உளவுப் பிரிவு கண்டு பிடித்திருந்தது.......

11  இது தனது ஹமாஸ்  மீதான் கரிசனையை கேள்விக் குறியாக்கும் என்பதால் அதனை மூடி மறைக்கும் படி இராணுவ உயர் மட்டங்களை அணுகியமையும் இராணுவத்தின் முற்று முழுதான வெறுப்பை சம்பாதிக்கக் காரணமாய் இருந்ததாய் அப்போதே தகவல்கள் வெளியாகியிருந்தன.

12  இத்தனையும் தெரிந்திருந்தாலும் இவை எல்லாமே மேற்கின் செல்வாக்கை அழித்து பாலஸ்தீனத்தையும் முஸ்லிம்களையும் பாது காக்கத்தான் என்று நம் மத்தியில் திருப்தி கொண்ட நம் நாட்டு இஹ்வானிய சகோதரர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்காக சில தகவல்கள்.

Morsi ஆட்சி பீடமேறியவுடன் இஸ்ரேலை எதிர்த்துக் கொந்தளிப்பார் என்று நம்பியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரது நட வடிக்கைகளோ சமரச யுக்தியோ இஸ்ரேலுடன் குசலம் விசாரித்து சாவகாசமாக சரசம் பாடியது. இதன் விளைவாக நெருக்கடியான நிலங்களில் வாழும் பாலஸ்தீனர்களை எகிப்தின் சினாய் போன்ற பகுதிகளுக்கு குடியமர்த்தத் திட்டம் தீட்டப் பட்டது.இத்தனை வருட போராட்டத்தின் திசையை மாற்றி "அகன்ற இஸ்ரேல்" எனும் இஸ்ரேலிய விரிவாககலுக்கு இது ஏதுவாய் இருப்பது கற்றறிந்த மனிதர்களுக்குப் புரியும்.

இன்னும் மேற்குலகும் மேற்குலக பங்காளியான சவூதியும் சேர்ந்து சிரியாவில் செய்யும் போராட்டத்திற்கு மோர்சி அரசு ஆதரவு தெரிவித்தது மட்டும் அல்லாமல், Damuscus  உடனான சகல ராஜ தந்திர உறவுகளையும் முறித்து போர் முரசை Morsi  அரசாங்கம் கொட்டிய போது  இவரது வாய் வீச்சின் சூத்திர தாரி மேற்குதான் என்பதை அனைவரும் புரிந்து கொண்டார்கள்.

13 இன்னும் அட்சி கவிழ்க்கப் பட்ட பின்னரும் அவரது அங்கத்துவம் எதிர்க் கட்சியில் இருக்க வேண்டும் என்று அமெரிக்கவே கேட்டுக் கொண்டது இதற்கு இன்னும் ஒரு சான்று.14   அது மட்டும் அல்லாமல் இஹ்வான்கள் ஒரு ஆயுதக் குழு என்பது சகலருக்கும் தெரியும் இவர்கள் கிளர்ச்சி செய்யும் காட்சிகளும் துப்பாக்கியால் சுடுகின்ற காட்சிகளும் வெளியான நிலையிலும் கூட, அப்பாவிகளான இஹ்வான்களை இராணுவம் சுட்டுக் கொன்றது என்பது வேடிக்கைக்குரியது. இன்னும் சிரியாவில் கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப் படங்களை இஹ்வான்கள் தங்களது ஆதார பூர்வ இணையத் தளங்களில் பிரசுரித்து,  எகிப்தில் நடந்ததாக போலி அனுதாப அலையை தேடுவது மிக மிகக் கீழ்த்தரமானது.

15 இலங்கையில் இருக்கும் ஒச்தாத் மன்சூர் போன்றவர்கள் அல்ல எகிப்தில் உள்ள இஹ்வான்கள். அண்மையில் அல் - ஜசீரா தொலைக் காட்சி இஹ்வான் களுக்கு பக்கச் சார்பாக Morsi  விடயத்தில் நடந்து கொண்டதால், பல ஊடகவியலாளர்கள் ராஜினமா செய்தது எத்தனை பேருக்குத் தெரியும்?

16 இவை அனைத்துமே நமக்கு காட்டித் தராத மாற்று ஊடகங்களில் கிடைத்தவைதாமே ஒழிய சுயமாக சிந்தித்தவை அல்ல.

அறிவைத் தேடுவதில் நாம் பயன்படுத்தும் சூத்திரம் திறன் குறைவாக இருந்தால் மற்ற சூத்திர முறைகளை பயன்படுத்துவதுதான் அறிவுடைமை. அது போல் அரைச்ச மாவை அரைத்து கொண்டிருக்கும் திறனற்ற ஊடகங்களை கை விட்டு மாற்று சிந்தனைகளையும் தேடி வாசியுங்கள். யார் சரி, யார் பிழை என்பதை அதற்கு பின்னால் நீங்கள் தீர்மானியுங்கள். அறிவுள்ள சமூதாயமாக வாழ வல்ல நாயன் நம் அனைவருக்கும் தௌபிக் செய்வானாக. ஆமின்.

sources:

1. http://www.youtube.com/watch?v=uNUu4cnS-Q4
2. http://www.youtube.com/watch?v=Kx1wJFNM8CU
3. http://www.youtube.com/watch?v=K2AdOxtDbpI
4. http://abcnews.go.com/blogs/politics/2013/07/us-official-israel-launched-airstrike-in-syria-last-week/
5. http://www.youtube.com/watch?v=SdwcL3CLA-k
6. http://www.youtube.com/watch?v=BCV2WdE_DEE
7. http://global.christianpost.com/news/islamists-announce-fatwa-to-kill-opponents-of-egypts-muslim-president-morsi-89887/
8. http://english.ahram.org.eg/News/50239.aspx
9. http://www.dailymail.co.uk/news/article-2240157/Courts-strike-Egypt-new-president-gave-sweeping-new-power.html
10. http://exposingliberallies.blogspot.com/2013/07/news-from-behind-scenes-in-egypt.html?m=1
11. http://www.longwarjournal.org/threat-matrix/archives/2013/03/report_hamas_involved_in_killi.php
12. http://www.foxnews.com/world/2013/03/14/egyptian-media-report-blames-hamas-for-2012-killing-16-soldiers-near-gaza/
13. http://www.aljazeera.com/news/middleeast/2013/06/201361519182028756.html
14. http://www.raymondibrahim.com/from-the-arab-world/u-s-will-pressure-egypt-on-behalf-of-brotherhood-says-u-s-ambassador/
15. http://english.alarabiya.net/en/media/2013/07/10/Revealed-How-Egyptian-Islamists-are-manipulating-the-media.html