Home கட்டுரைகள் அரசியல் எகிப்து ராணுவத்தின் சதிப்புரட்சி! அசத்தியம் அழிந்தே தீரும்!!
எகிப்து ராணுவத்தின் சதிப்புரட்சி! அசத்தியம் அழிந்தே தீரும்!! PDF Print E-mail
Saturday, 06 July 2013 06:13
Share

எகிப்து ராணுவத்தின் சதிப்புரட்சி! அசத்தியம் அழிந்தே தீரும்!!

-கலாநிதி இனாமுல்லாஹ்

ஒன்பது தசாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தெரிவான ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை!

ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமான அரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் செல்ல மாட்டது!

மன்னர் புவாதின் ஆட்சின் கீழ் 14 வருடங்கள், (1922-1936)
மன்னர் பாரூக்கின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1936-1952)
ஜமால் அப்துல் நாசரின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1954-1970)
அன்வர் சதாத்தின் ஆட்சின் கீழ் 11 வருடங்கள் (1970-1981)
ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் 31 வருடங்கள் (1981-2012)

என அக்கிரமக்காரர்களின் அடக்குமுறைகளில் ஒன்பது தசாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தெரிவான ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை!

முர்ஸி முழுமையானவர் என்றோ இக்வான்கள் மட்டும் இறைநேசர்கள் என்றோ நான் சொல்லவில்லை, அவர்களும் கோரவில்லை, ஆனால் ஜனாதிபதி முர்ஸியோடும் இக்வான்களோடும் முரண்பட்டோருக்கு முன்டுகொடுத்த சர்வதேச பிராந்திய சக்திகள் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பரம விரோதிகள்!

முபாரக்கிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தை முபாரக்கின் இராணுவம் காவு கொண்ட பொழுது இக்வான்கள் அதனை மீட்டெடுக்க கைகொடுத்தார்கள், இன்றுவரை இராணுவத்தின் சதிவலைகளுக்குள்ளேயே அரபு வசந்தம் அடிபட்டுக் கிடந்தது.

ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமான அரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் செல்ல மாட்டது!

இஸ்லாமியர்கள் இஸ்லாத்தை அல்ல... அன்று இஸ்லாம் இஸ்லாமியர்களை மீண்டும் அரங்கிற்கு அழைத்து வரும்... அசத்தியம் அழிந்தே தீரும்!

எகிப்திய மண்ணில் கொளுத்திவிடப் படும் சத்தியத் தீபம் எகிப்தின் மூளை முடுக்குகளில் மாத்திரமல்ல, உலகின் நாளா திசையிலும் கொழுந்து விட்டெரியும் .! அது மத்திய கிழக்கின் விடியலாக... வளைகுடாவின் வசந்தமாக வரலாற்றை பொன்னெழுத்துக்களால் பொறித்துச் செல்லும்!

எகிப்தில் நடப்பதென்ன?

குறிப்பாக, எதிரணியினர் தஹ்ரீர் சதுக்கத்தில் நிலைகொண்டிருந்தபோது, அதன் மேல் ஹெலிகொப்டர்களில் வலம் வந்த இராணுவம் சதிப் புரட்சிக்கு வெள்ளைக் கொடி காட்டியது.

திடீரென அவர்கள் விதித்த காலக்கெடு, ஜனாதிபதி முர்ஸி கைதுசெய்யப்பட்டமை, ஊடகங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டமை, முர்ஸியின் அரசாங்கத்திற்கு ஆதரவாகப் படை திரண்ட பல மில்லியன் மக்களின் அமைதிப் பேரணி மீது இராணுவம் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கை என இது இராணுவ சதிப் புரட்சிதான் என்பதைத் தெளிவாகக் காட்டும் பல விடயங்கள் நடந்தேறியுள்ளன. இன்னும் நடக்கின்றன.

இந்த இராணுவ சதிப் புரட்சிக்குப் பின்னணியிலுள்ள சக்திகள் யார்?

இந்த இராணுவ சதிப் புரட்சியின் தொடக்கமாக மக்களைத் தவறாக வழிநடத்தி, தஹ்ரீர் சதுக்கத்தில் இறக்கிய சில அடிவருடிகளும் புல்லுருவிகளும் உள்ளனர். தேர்தலில் தோற்றுப் போன ஷபீக், எகிப்தின் பிரஜா உரிமையை இல்லாத அல்பராதி, முன்னாள் முபாரக்கின் அம்ரு மூஸா போன்றவர்கள் கடந்த ஒரு வருட காலமாக இந்த இளைஞர்களை வீதிக்கு இறக்கும் சூழ்ச்சியை திரைமறை விலிருந்து மேற்கொண்டு வந்தனர்.

இவர்களின் இந்த நாசகார சதிக்கு அமெரிக்க அரசாங்கமும், சியோனிஸ இஸ்ரேலும் நிதியுதவியும் சூழ்ச்சி ஆலோசனையும் வழங்கி வந்தன. ஏற்கனவே அமெரிக்காவினதும் சியோனிஸத்தினதும் கைகளில் தொங்கும் எகிப்திய இராணுவம் காட்சியின் இறுதியில் தோன்றி, தமது சதித்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

இந்த இராணுவ சதிப் புரட்சிக்குப் பின்னணியில் உள்ள இன்னொரு சக்தி, எகிப்தில் சிறுபான்மையாக வாழும் கிப்திய கிறிஸ்தவர்கள். அவர்கள் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அதை வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டி வந்தனர்.

முர்ஸியின் ஆட்சிக்கு எதிராக மில்லியன் கணக்கானோர் திரண்டதாக ஊடகங்கள் தெரிவிக்கும் செய்தி எத்தகையது?

உண்மையில், தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்றுகூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் காற் பங்கினரே கடந்த ஒரு வருட அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்தவர்கள். குறிப்பாக வேலையில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள்.
அடுத்த அரைப் பங்கினர் எகிப்தில் இஸ்லாமிய ஆட்சியை தடுத்து வரும் கிப்திய கிறிஸ்தவ சிறுபான்மையினர். எஞ்சிய காற் பங்கினர் - ஏற்கனவே நாம் குறிப்பிட்ட ஷபீக், அமர் மூஸா, பராதி ஆகிய மும்மூர்த்திகளின் டொலர்களுக்கு மயங்கியவர்கள். அவர்களுக்கு எந்த அரசியல் குறிக்கோளும் இல்லை. தற்காலிக ஜுனை ஹுகளுக்காக (எகிப்தின் நாணயம்) பலியாகியவர்கள். இந்த உண்மையை அநேக நடுநிலையான அறபு ஊடகங்கள் வெளிப் படுத்தியுள்ளன.

எகிப்தில் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது ஏன்?

எகிப்து முழு அறபு இஸ்லாமிய உலகிலும் முக்கியமான நாடு. அதன் மக்கள் தொகை 7 கோடி. நீண்ட நாகரிக வரலாற்றுப் பெருமை கொண்ட நாடு. சுதந்திரத்திற்குப் பின்னர் மாறி மாறி மதச்சார்பற்றவர்களும் இராணுவ சர்வதிகாரிகளுமே அங்கு ஆட்சியில் நீடித்தனர். நஜீப், புவாத், பாரூக், அப்துல் நாஸர், ஸாதாத், முபாரக் என அவர்களது முகங்கள் வேறுபட்டிருப்பினும் அனைவரும் போல் அமெரிக்காவின் அடிவருடிகளாகவும் இஸ்ரேலின் காப்பாளர்களாகவுமே இருந்து வந்தனர். இன்னொரு புறம் எகிப்தின் பூகோள அரசியல் மற்றும் பொருளாதார கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்த மேலை நாடுகள் - குறிப்பாக அமெரிக்கா, இந்த வகை அதிகாரக் கும்பலின் இருப்பையே ஊக்குவித்து வருகின்றன. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

எகிப்தில் ஷரீஆ அடிப்படையிலான ஆட்சி மலரும் பட்சத்தில் அது இஸ்லாமிய உலகில் பாரிய மாற்ற அலைகளை உருவாக்கும். நீண்ட காலத்தில் வழளங்கள் ஒன்றுதிரட்டப்பட்ட, ஐக்கிய அறபு இஸ்லாமிய உலகமொன்றின் தோற்றத்திற்கு இந்த மாற்ற அலைகள் வழிவகுக்கும். இவ் வளர்ச்சி மறுபுறத்தில் பிராந்தியத்தில் தாம் அடைந்து வரும் பொருளாதார நலன்களை இழக்க துணை செய்யும். எனவே இஸ்லாமிய அடிப்படையிலான ஆட்சி மாற்றம் எகிப்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மேலைய சக்திகள் மிகவும் விழிப்பாக உள்ளன.

இஸ்ரேலைப் பாதுகாக்க வேண்டுமாயினும், இஸ்லாமியவாதிகள் அங்கு ஆட்சியில் அமர்ந்து விடக் கூடாது எனவும் இச் சக்திகள் எண்ணுகின்றன. இந்தப் பின்னணியிலேயே முர்ஸியின் ஜனநாயக ஆட்சி பீடத்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள எகிப்தின் இராணுவம் துப்பாக்கி முனையில் கவிழ்க்க முனைந்துள்ளது. ஒபாமாவும் அவரது சகபாடிகளும் இதற்குப் பின்புலமாக உள்ளமை மிகவும் தெளிவானது.

அமெரிக்கா பேசி வரும் ஜனநாயகத்தின் அடிப்படையில்தானே முர்ஸி ஆட்சிக்கு வந்தார். அப்படியாயின், இராணுவப் புரட்சியை ஆதரிப்பதேன்?

அமெரிக்கா ஜனநாயகத்தில் எப்போதும் இரட்டை விளையாட்டையே காட்டி வருகின்றது. எகிப்தில் மட்டுமல்ல, அறபு வசந்தத்திற்குப் பின்னர் தூனிஸியா, லிபியா, யெமன் ஆகிய பல்வேறு அறபு இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியவாதிகளின் ஜனநாயக செயற்பாடுகளுக்கு முதல் முட்டுக்கட்டையாக இருப்பது அமெரிக்காவே. இதனை அமெரிக்க ஆய்வாளர்களே நிரூபித்துள்ளனர்.

உண்மையில் முர்சி சுதந்திர ஜனநாயகத் தேர்தல் ஒன்றின் மூலமே ஜனாதிபதியானார். எகிப்தின் வரலாற்றில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியும் அவரே. அவர் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டமும் ஜனநாயக பூர்வமானதே. நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாக்களிப் பின் மூலமே இச்சட்டம் நிறை வேற்றப்பட்டது. ஆனால், இவை எல்லாவற்றையும் ஒரு நொடியில் தூக்கி வீசிவிட்டு, இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளமை அமெரிக்காவின் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கியுள்ளது.

================================================================

புகைப்படங்களுக்கு கீழே உள்ள ''லிங்க்''கை அழுத்தவும்.

http://www.rightnow.io/breaking-news/pro-morsi_bn_1373014853119.html

 

=========================================================

கலாநிதி முர்ஸியை ஆதரிப்பதாக அல் அஸ்ஹர் பல்கலைக்கழக முன்னணி அறிஞர்கள் உறுதி

இறுதி வரை கலாநிதி முஹம்மத் முர்ஸிக்காக போராடுவது எம் மீது கடமையாகும் என்று எகிப்து அல் அஸ்ஹர் பல்கலையைப் பிரதிநிதிதுத்துவப்படுத்தும் பல முன்னணி இஸ்லாமிய அறிஞர்கள் கபன் ஆடையை வைத்து உறுதி பிரமாணம் எடுத்து இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்கள்.

இன்று வெள்ளிக்கிழமை (05.07.2013) எகிப்து அல் அஸ்ஹர் பல்கலையைப் பிரதிநிதிதுத்துவப்படுத்தும் பல முன்னணி இஸ்லாமிய அறிஞர்கள் கலாநிதி முஹம்மத் முர்ஸிக்கு ஆதரவாக பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தியுள்ளனர். அம்மாநாட்டிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இப்பத்திரிகயையாளர் மாநாட்டின்போது அல் அஸ்ஹர் பல்கலைக்கழக முன்னணி இஸ்லாமிய அறிஞர்கள் தங்களது கபன் ஆடையை ஏந்தியபடி அம்மாநாட்டில் வைத்து உறுதி பிரமாணம் எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

source: http://www.meelparvai.net/2013-04-25-04-04-29/2013-04-25-04-12-51/446-2013-07-05-14-47-19.html