Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் மதச்சார்பற்ற நிலை என்பது இறைவன் இருக்கிறான் என்ற உண்மையை இருட்டடிப்புச் செய்கிறது
மதச்சார்பற்ற நிலை என்பது இறைவன் இருக்கிறான் என்ற உண்மையை இருட்டடிப்புச் செய்கிறது PDF Print E-mail
Saturday, 29 June 2013 10:27
Share

AN EXCELLENT ARTICLE - MUST READ

மதச்சார்பின்மையும் இளைஞர்களும்

[ இன்று ஷிர்க், பிதுஅத், மூடநம்பிக்கை போன்றவைகளைவிட மதச்சார்பின்மைச் சிந்தனை முஸ்லிம் வீடுகளில் கிராமங்களில் பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில் ஆகிய அனைத்திலும் நுழைந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

''கி.பி.எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.பதிமூன்றாம் வரை இடைப்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களே உலகில் கலாச்சாரத்திலும், நாகரீகத்திலும் ஒளியை ஏற்றி நின்றனர்'' என பேராசிரியர் P.K.Hitti குறிப்பிடுகிறார்.

''மேற்கத்தைய உலகம் ஆழமான அறிவை பெற்றுக்கொள்ள எண்ணியபோதும் புராதன சிந்தனையோடு தன் உறவை புதுப்பித்துக்கொள்ள எண்ணிய போதும் அது முதலில் அரபு மூலாதாரங்களை நோக்கியே திரும்பியது'' -பேராசிரியர் GOERGE SARTON - HISTORY OF SCIENCE.

இதுபற்றி தெளிவற்றோரும் ஆழமான அறிவற்றவர்களும் புனிதமான இஸ்லாத்தை விரும்பாதோரும் முஸ்லிம் உம்மத்துக்குள் இருந்து கொண்டே மதச்சார்பின்மையை முன்வைக்கின்றமை வேதனை மிகு விசயமாகும்.]

மதச்சார்பின்மையும் இளைஞர்களும்

  M.A.Hafeez    

இஸ்லாமிய இளைஞர்கள் எதிர்நோக்கும் கொள்கைப் பிரச்சினைகளுள் மதச்சார்பற்ற சிந்தனையும் ஒன்றாக இன்று தாக்கம் செலுத்துகின்றது. இஸ்லாமிய இளைஞர்களை கொள்கையிலிருந்து கடத்திச் சென்று, கொள்கையற்ற கோமாளிகளாக மாற்றுகின்ற சதினாஷ நடவடிக்கைகள் இன்று முஸ்லிம் கிராமங்களிலும் இடம்பெறும் இவ்வேளையில் - அது பற்றி நாம் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும்.

அறிவியலும் தொழில்நுட்பமும் மாபெரும் வளர்ச்சியுற்று மனித வாழ்வில் மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. அவை பகுத்தறிவுக்குக் சிந்தனைக்கும் ஆராய்ச்சிகளுக்கும் களம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. அதனால், மத நம்பிக்கையின் செல்வாக்கு மறைந்து பகுத்தறிவினைநாடி எழுந்துள்ள அறிவியல்,விஞ்ஞான தொழில்நுட்ப யுகம் தோன்றி ஆதிக்கம் செலுத்தும் புத்துலகம் ஏற்பட்டு விட்டதாக மனித மனங்களில் ஒரு பிரமை தோற்றுவிக்கப்பட்டுலதை இன்று பரவலாக அவதானிக்க முடிகிறது.

இதன் விளைவாக மதச்சார்பின்மை (SECULARISM) என்ற சிந்தந்ததை ஆதிகளவில் பிரச்சாரப்படுத்தி, இளைஞர்களை அதிகளவில் கவர்வதொடு, இறை நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ள மதங்களை கொச்சைபடுத்துவதும் ஒழுக்கப் பெறுமானங்கள், வணக்க வழிபாடுகள், எள்ளி நகையாக்கப்பட்டு, உயர் ஒழுக்க விழிமியங்கள் மலினப்படுத்தப்படுகின்ற காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

ஆனால் அறிவுபூர்வமான கருத்துக்களை தன்னகத்தே கொண்டு,காலத்தை வென்று, வளர்ச்சி அடைந்து வரும் இஸ்லாத்தையும், சிறுமைத்தனமான சித்தாந்தங்களில் சிறைப்பட்டுப் போன சிலர் பத்தோடு பதினொன்றாக விமர்சித்தும் கொச்சைப்படுத்தியும் வருகின்றனர்.நமது இளம் பிஞ்சுகளின் உள்ளங்களில்  நஞ்சை விதைக்கின்றனர்.எனவே நாம் இந்த சதிவலையிலிருந்து மீள இது பற்றி தெளிவு அவசியமாகின்றது.

இன்றைய உலகப் பிரச்சினைகளுக்கு மதச்சார்பின்மை ஒரு தீர்வாக வைக்கப்படுகிறது. எனினும் பல வளர்ச்சி கண்டதாக இருமாந்திருக்கும் நாடுகளில் கூட இந்த சிந்தனை நடைமுறை பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையவில்லை என்பது நிரூபமான இந்தக்காலப் பிரிவில் அந்நாடுகளில் ஒரு கணிஷமனவர்களும் முஸ்லிம் சமூகத்தில் படித்த ஒரு பிரிவினரும் இளைஞர்கள் சிலரும் இச்சிந்தனைக்கு உட்பட்டு இதை பிரபலப்படுத்தியும் முக்கியம் கொடுத்துப் பேசியும் வருகின்றனர்.

இன்று ஷிர்க், பிதுஅத், மூடநம்பிக்கை போன்றவைகளைவிட மதச்சார்பின்மைச் சிந்தனை முஸ்லிம் வீடுகளில் கிராமங்களில் பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில் ஆகிய அனைத்திலும் நுழைந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே மதச்சார்பின்மை கருத்தியலின் தோற்றம், காரணம், அதுபற்றி சமூக உளவியல் சார்ந்தோரின் கருத்து போன்றவை கீழ்வரும் பந்திகளில் ஆராயப்படுகிறது.

அன்று படாடோபத்தில் திளைத்திருந்த கிருஸ்தவ உலகம் ''பூமி சுழல்கிறது'' என்பது பைபிளுக்கு விரோதமானது.பூமி தட்டைப்போல் விரிக்கப்பட்டிருப்பதாக பைபிள் கூறுகிறது. ''ஏசு நாதர் பிறந்த பூமி சூரியனை சுற்றுவதா? இல்லவே இல்லை. அப்படி சொல்பவர்களின் நாக்கை வெட்டி விடுவோம்'' என விஞ்ஞானிகளை மிரட்டி, சிறையில் அடைத்து, எரித்து, தூக்கில் இட்டு அவர்களின் குரலை ஒடுக்கியது அக்கால திருச்சபை.

இப்படியான காலப்பகுதியில் தான் தொலைநோக்கியின் முன்னோடியான கலிலியோ கலிலி (1564-1642) ''பூமி சூரியனை சுற்றுகிறது'' என்றார். இது எங்கள் வேதத்துக்கு முரணானதென்று 69 வயது தளர்ந்த கலிலியோவை படாதுபாடுபடுத்தினர். இவ்வாறன கொடூர புத்தி கொண்ட கொடியவர்கள் இஸ்லாத்தை நாகூசாமல் விமர்சனம் செய்யவும் துணிந்துள்ளனர் என்பதே ஆச்சரியமிக்க விசயமாக உள்ளது.

15,16,17 ஆம் நூற்றாண்டுளில் அறிவியலை அடக்கி தடை விதிக்கப்பட்டதால் ஐரோப்பா அறிவியல், பண்பாடு, நாகரீகத் துறைகளில் பின்னடைந்து இருட்டில் மூழ்கியது.

ஐரோப்பா இத்தகைய இருளில் மூழ்கியிருந்த வேலையில் தான் முஸ்லிம்கள் ஸ்பெயினிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் ஏற்றி வைத்த அறிவுத்தீபம் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஐரோப்பிய மன்னர்கள் கையெழுத்துப் பழகும் போது நம் முஸ்லிம் விஞ்ஞானிகள் குர்துபா (Cordoba) பல்கலைக்கழகத்தில் உலகத்தை உருண்டை வடிவில் வைத்து பாடம் நடத்திகொண்டிருண்டார்கள். அன்று அவர்கள் ஐரோப்பியாவில் ஏற்றி வைத்த அறிவுத்தீபம் இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

''கி.பி.எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.பதிமூன்றாம் வரை இடைப்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களே உலகில் கலாச்சாரத்திலும், நாகரீகத்திலும் ஒளியை ஏற்றி நின்றனர்'' என பேராசிரியர் P.K.Hitti குறிப்பிடுகிறார்.

''மேற்கத்தைய உலகம் ஆழமான அறிவை பெற்றுக்கொள்ள எண்ணியபோதும் புராதன சிந்தனையோடு தன் உறவை புதுப்பித்துக்கொள்ள எண்ணிய போதும் அது முதலில் அரபு மூலாதாரங்களை நோக்கியே திரும்பியது'' -பேராசிரியர் GOERGE SARTON - HISTORY OF SCIENCE.

இதுபற்றி தெளிவற்றோரும் ஆழமான அறிவற்றவர்களும் புனிதமான இஸ்லாத்தை விரும்பாதோரும் முஸ்லிம் உம்மத்துக்குள் இருந்து கொண்டே மதச்சார்பின்மையை முன்வைக்கின்றமை வேதனை மிகு விசயமாகும்

காலனித்துவ காலத்தில் ஐரோப்பிய கலாச்சார்ப் பன்பாடுகள் முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் விதைக்கப்பட்டன. முஸ்லிம்களில் ஒரு சாரார் அபிவிருத்திக்கு ஒரே வலி மதத்தை விட்டு வெளியேறுவதுதான் என நினைக்கலாயினர். ஆனால் இவர்கள் பின்பட்ட்ரும் வளர்ச்சியடைந்த நாடுகளில் கணிசமானோர் இப்போக்கை மறுக்கின்றனர். அங்குள்ள பல உளவியலாளர்கள் ''மனித குலத்தின் மாண்புக்கு மதமே சிறந்த வழி'' என்று தற்போது இஸ்லாத்துக்குள் வந்த வண்ணம் உள்ளனர்.

நாம் மேலே வரலாற்றின் நிகழ்வுகளிலிருந்து எடுத்துக் காட்டிய ஐரோப்பிய உலகினதும் இஸ்லாமிய உலகினதும் நிலை, மதச்சார்பின்மை தோன்றுவதற்கு காரணம் ஐரோப்பாவில் நடந்த சில துயரமான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுந்தது என்பதை தெளிவாக தெரிந்துகொண்டோம். உலகின் மனித இன வரலாற்றின் ஓட்டத்தில் மதம் அறிவியலுக்கு தடையாக ஐரோப்பா தவிர வேறு எங்கும் இடம்பெறவில்லை. ஐரோப்பாவில் நிகழ்ந்த இந்த வரலாறு இன்று உலகின் பல பாகத்திற்கும் பரப்பப்பட்டு, எமது முஸ்லிம் சமூகத்திலும் பரவி நம் முஸ்லிம் அறிவுஜீவிகளிடத்திலும் திணிக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற நிலை என்பது இறைவன் இருக்கிறான் என்ற உண்மையை இருட்டடிப்புச் செய்கிறது.

''உலகில் உள்ள அனைத்தும் பகுத்தறிவுக்குட்பட்டதே! இயற்கையின் யதார்த்தத்தில் மனித வாழ்வை விளக்கவும் முடியும் என்ற விசயத்தில் மனிதன் உறுதியாக நம்பிக்கை கொள்கிறான். இதனடிப்படையில் மறுமைவாழ்வு என்று ஒன்று இல்லை என்பதோடு, மறு உலக வாழ்விலிருந்தோ அல்லது இறைவன் மீதான நம்பிக்கையிளிருந்தோ பெறப்பட்ட எல்லா கருத்தியலையும் தவிர்த்தல் என்ற வகையில் உலக வாழ்வின் மனித இனத்தின் சுயனலனைக்குறித்த வகையில் மட்டுமே ஒழுக்கம் அடிப்படையாக அமையவேண்டும்'' என்பதே மதச்சார்பற்ற சிந்தனையின் கருப்பொருளாகும்.

உண்மையில் மதச்சார்பின்மை என்பதன் பொருள் ஒரு மதத்தையோ இனத்தையோ பிரநிதிதுவப் படுத்துவதில்லை என்ற நிலை மட்டுமல்ல. நாம் முன்னர் குறிப்பிட்டது போல் ஆன்மா, கடவுள், மறுமை வாழ்வு அனைத்தையும் மறுத்துரைக்கும் சடவாத சிந்தனைப் போக்கையே அது குறித்து நிற்கிறது. இதுஉலக வாழ்வில் எல்லையற்ற மோகத்தையும் ஆன்மீக வறுமையையும் தோற்றுவித்துள்ளது. இதனால் மேற்கத்தைய உலகம் மன அமைதியின்மையால் வாடுகிறது. அங்கே பெரும் எண்ணிக்கையானோர் நரம்புத்தளர்ச்சிக்கும் மனநோய்க்கும் ஆளாகியுள்ளனர்.

மதச்சார்பின்மை என்ற முட்டாள் கோட்பாடு இன்று மனித வாழ்வுக்கு பொருளையும் கருத்தையும் குறிக்கோளையும் இலட்ச்சியத்தையும் வழங்க முடியாமல் தோற்றுவிட்டது. எனவே வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித்தவிக்கும் மேதகுநாட்டவர்கள் ஆறுதலையும் நிம்மதியையும் தேடி இஸ்லாமிய மடியை நாடி அடைக்கலம் புகும்போது நம்மவர்கள் அந்தக் குப்பையில் போய் விழுவதும் வீழ்ந்திருப்பதும் தான் ஆச்சரியமாக உள்ளது.

கிருஸ்தவ பாதிரிமார்களின் கடும் போக்கு நிலை காரணமாகவே மனிதன் மதத்தை வெறுத்தான். இதனால் அவனின் இறை நம்பிக்கையும் விசுவாசமும் ஆட்டம் கண்டது.கிருஸ்தவ மதப்பிடியிளிருந்து விடுப்படும்பொருட்டு மனிதன் அனைத்து மதகொள்கையையும் தூக்கி எறிந்துவிட்டு தனிப்பாதையில்(மதச்சார்பின்மை) தனது பயணத்தை தொடர்ந்தான். இந்தப்பாதையில் அவன் மகத்தான வெற்றி கண்டான். எனினும் ஆத்மீக ஒளியற்ற  இவ்வளர்ச்சியினால் அவன் அவனது வாழ்வை இருட்டிலே கழிக்கிறான். அறிவு வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி முயற்ச்சிக்கும் எதிராககிருஸ்தவ திருச்சபையும் அதனை பிரதிநிதித்துவப்படுத்திய மதகுருமார்களும் நடந்துகொண்டதால் மதத்துக் எதிரான சிந்தனைப்போக்கு ஆரம்பமானது.

கிருஸ்தவ போதனை போன்று மனித வாழ்விற்குரிய தெளிவான வரையறுத்த பகுத்தறிவுபூர்வமான அறிவியலை புறக்கணிக்காத சட்டங்களும் கொள்கைகளும் பல மதங்களில் கனப்படாமையே மதச்சார்பின்மை வளர காரணமாக அமைந்தது. இச்சிந்தனையின் கருத்தாடலில் கவரப்பட்டவர்கள் இஸ்லாத்தையும் அதே மனப்பதிவோடு மேலோட்டமாக விமர்சிக்கின்றனர். இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களில் எந்த உடுருவலும் இடம்பெற முடியாது.அது தெய்வ வழிகாட்டல். அதன் பாதுகாப்பு இறைவன் அவன் வசம் வைத்துள்ளான். இங்கு மனித கையாடலோ நினைத்தவுடன் பெரும்பான்மை பலத்துடன் மாற்றுவதற்கோ இடமில்லை.எனினும் அது சில விசயங்களில் நெகிழ்ந்துகொடுக்கும் தன்மையுடன் பகுத்தரிவுபூர்வமாக காணப்படுகிறது.

மனிதன் வெறும் சடப்பொருலன்று, அவனின் புரத்தேவைகள் பூர்த்தியாக்கப்பட்டிருப்பது போல் அவனது ஆத்மாவின் தேவைகளும் பூர்த்தியாக்கப்பட வேண்டும்.

இதனைப் புறக்கணித்துவிட்டு எழுந்த சிந்தனையால் இன்று  நிலைத்து நிற்க முடியாது போய்விட்டது.

அடிப்படையில் மனிதுள்ளத்தில் இறைவன் பற்றிய எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். இறைவனைப்பற்றிய ஏதாவதொரு அமைப்பில் காணப்படாத சமூகமொன்று வரலாற்றில் காணவே முடியாது. இதற்கு புறம்பான(மதச்சார்பின்மை) கொள்கையுடையவர்கள் தற்போது இதற்கே மீண்டுள்ளனர். எங்கு  இந்த மதச்சார்பின்மை துளிர்விட்டு வளர்சியுற்றதோ அங்கேயே அது சாத்தியப்படாது என்று புரிந்து கொண்டு இன, மத, கலாச்சார பாரம்பரியங்களுக்கு மெல்ல மெல்ல மனித இனம் நகர்கிறது. எனவே இந்த மதச்சார்பின்மை என்ற எண்ணக்கரு தோல்வி கண்டு வருவதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

இக்கருத்தியல் உலகில் சமாதானம் சகவாழ்வு சமத்துவம் போன்றவற்றை ஏற்படுத்த தவறிவிட்டது. மேலை நாடுகளின் மேலாதிக்க உணர்வு, கருப்பு வெள்ளையன் என்ற நிறவெறி, பிறரை ஒழித்துக்கட்டும் வக்கிர புத்தி பலமற்றவனின் மீது அதிகார வெறியாட்டம் போன்றன மிகக்கொடுரமான நோய்களாகும்.

உலகில் சமாதனம் சகவாழ்வு சமத்துவம் போன்றவற்றை ஏற்படுத்த ஒரு வெற்றிகரமான வழி உள்ளது அது தான் இஸ்லாம். பதினான்கு நூற்றாண்டுகள் தாண்டியும் அது எதுவித மாற்றமும் இன்றி அப்படியே உயிரோட்டமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த நெறியின் பால் முழு மனித சமூகமும் மீள வேண்டும். அப்போதுதான் உண்மையான சமாதனம் சகவாழ்வு சமத்துவம் ஏற்படும்.

இஸ்லாம் காட்டிய உண்மைப்பாதையில் மனித இனம் செழித்து வளர்ந்து கிழக்கேயும் மேற்கையும் ஓர் உயிர்துடிப்புமிக்க ஆன்மீகநெறி அறிவியக்கம் செயல்படதுவங்கியுள்ளது. தீய சக்திகாளாலும் வக்கிர உணர்வாலும் கட்டவிழ்த்துவிட்ட பொய்மைகளாலும் அதன் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது. இனியும் முடியாது.

அதே வேளை, இஸ்லாமிய சிந்தனையில் கொள்கையில் வார்த்தேடுக்கப்பட்டவர்கள், ஷிர்க்கில் மூழ்கி தர்காக்களில் தஞ்சமடைவதால், இதுதான் இஸ்லாமிய பாரம்பரியம் என்று நினைகிறார்கள். சில முஸ்லிம்களின் நடவடிக்கை இஸ்லாம் ஆகிவிடாது. இஸ்லாம் என்பது குர்ஆனும் சுன்னாவுமாகும். இதுவரை அதில் எந்தவிதமான மாற்றமும் நிகழவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. இஸ்லாமே ஈருலக  வெற்றிக்கும் விமொசனத்திகும் ஒரே வழி. வேறு எந்த நம்பிக்கைகளுக்கும் மனிதனை இருளிலிருந்து விடுவிக்க முடியாது.

இந்த ஆக்கத்தை எழுதியவர் : எம்.எ.ஹஃபீழ், பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை.

source: http://www.thamilkhilafa.com/2012/02/blog-post.html