Home கட்டுரைகள் கவிதைகள் இந்துப்பெருமக்களே விழித்தெழுவீர்!
இந்துப்பெருமக்களே விழித்தெழுவீர்! PDF Print E-mail
Friday, 28 June 2013 06:35
Share

இந்துப்பெருமக்களே விழித்தெழுவீர்!

    கு. முஹம்மது ஜஃபருல்லாஹ்    
 
1. இந்துப்பெருமக்களே விழித்தெழுவீர் – இறுதிமறை
 வந்துவிட்டதை அறிந்திடுவீர் – இறைவன்
 தந்த சன்மார்க்கத்தை உணர்ந்திடுவீர்! – உங்கள்
 சொந்தங்கள் யாவருக்கும் உரைத்திடுவீர்!
 
2. ஆதித்தந்தை ஆதமின் மார்க்கம் இஸ்லாம் – அதை
 போதிக்கவே வந்த தூதர் மஹாநூவு – உலகில்
 சாதிக்க முடிந்தது சகோதர சமத்துவத்தை
 வாதிக்கவே வளரும் ஏகஇறைத்தத்துவமே!
 
3. வத்து, சுவாவு, யஹீசு, யஊக் என்று
 மொத்தமாய் நஸ்ரையும் ஐந்தாய் கூட்டி – உருவ
 தத்துவம் சொன்னான் தந்திரசாத்தன் அன்று – பின்
 எத்துனை கற்சிலைகள் செதுக்கினர் பலரும் இன்று!

4. ஒவ்வொரு சிலையினுள்ளும் ஒரு கரிய பூதம் சென்று
 பவ்வியமாய் அமைந்து பண்ணும் பூசை அலங்காரங்கள்
 செவ்விய மலர்தூவி சேர்க்கின்ற நைவேத்தியங்கள்
 கவ்விஉண்டு களிப்பானாம் – கனவுகளில் வருவானாம்!
 
5. இறைவனுக்கு உருவத்தை இதயக்கற்பனையில் – நான்கு
 மறைகளிலும் காணாத மானிட உருகொடுத்து
 குறையில்லா பெரியோனை குகைகளிலே குறுக்கி
 உறைவிடம் வகுக்கின்றீர் உண்மையிலே மதிமயங்கி!
 
6. செப்பினாலே ஓர்சிலையும் செம்பவளம் முத்து சாற்றி
 தப்பிலா ஐம்பொன்னில் தருவதும் சிற்பிகளாம்
 ஒப்பிலா அப்பெனன்று உரைக்கின்றீர் பலகாலம் – இறை
 எப்போது கேட்டது எனக்கு சிலை வேண்டுமென்று!
 
7. கண்ணிருந்தும் காணாமல் காதிருந்தும் கேளாமல்
 பண்கள் பல பாடினினும் பலவாறு ஆடினினும்
 தன்னை உணராத தகைமையது கற்சிலைகள்
 உண்மையிது உரைத்தேன் – உணர்ந்திடுவீர்! விழித்தெழுவீர்!!
 
8. இறைவனின் படைப்புகளாம் மனிதர்களும் பூதங்களும்
 மறையோனை வணங்குதற்கு மறுத்திட்ட இவற்றினுள்
 குறைமதி கொண்ட கொடும்பூதம் அதன் செயல்கள்
 வரையின்றி கீழ்வான் வரையும் செல்லுவதாம்!
 
9. இறைத்தூதர் இபுறாஹீமை பிரஹ்மா என்றழைத்தீர்
 மறைகூறும் சாராவை சரஸ்வதியாய் சிலை சமைத்தீர்
 அறைகூவல் விடவில்லை அன்புடன் அழைக்கின்றேன்
 புரையோடிய சிலைவணக்கம் பொதுவாய் களையெடுப்பீர்!
 
10. பாமர மக்களுக்கு பார்த்துக்கொள்ள சிலைகள்தானாம்
 படித்த பண்டிதர்க்கு பார்க்கவிலா பரம்பொருளாம்
 கூனல் விழுந்த இக்கொள்கை வெளிவேஷம்தானாம் – இது
 வானம் இடியும் நாள் வந்திடினும் மாறாதோ!
 
11. ஒன்றே குலமென்றும் ஒருவனே தேவனென்றும்
 நன்றே அறிவுறுத்தும் நல்லபல செய்திகளும்
 குன்றில் விளக்குபோல் கூறிநிற்கும் பாடல்களும்
 இன்றுவரை கேட்டிடினும் இதயத்தில் ஆழ்த்தவில்லை!
 
12. கலைமகளாம் திருமகளாம் காத்துநிற்கும் மலைமகளாம்
 சளையாது பெண்பாலை சாற்றிச் சொல்லல் பாவம் அன்றோ!
 விளைவுகள் அத்தனையும் அறிந்த வித்தகனாம் இறைவனுக்கு
 பலபெயர்கள் இட்டிடினும் பாலேதும் இல்லையன்றோ!
 
13. சிலைவணக்கம் அத்தனையும் சீறாய் ஒழித்துவிட்டு
 தலைவணங்க தேவையில்லை தனியொரு மாந்தருக்கு
 விலைமதிப்பில்லா வழிபாடு சிரவணக்கம் – இது
 தலைவனாம் அல்லாஹ்வை தவிர வேறுயார்க்கும் இல்லை!
 
14. எப்பாவமும் நாடியோர்க்கு எனதிறைவன் மன்னிப்பான்
 ஒப்பாத இணைவைப்பை ஒருகாலும் மன்னிக்கான்
 தப்பாக வழிகாட்டும் தலைவர்களாம் மதகுருக்கள்
 செப்பாக உருகிநிற்கும் செந்நரகில் சேர்வோரே!
 
15. இறையுண்டு இஸ்லாத்தில் இருள்சேர்க்கும் சிலையில்லை
 மறையுண்டு மார்க்கத்தில் மனிதத்தில் பிளவில்லை
 நெறியூட்டும் வேதத்தின் நேரிய அழைப்பேற்று
 சரிகண்டு நீங்களெல்லாம் சார்ந்திடுவீர் ஓர்இறையை!
 
குறிப்பு :
 
1. இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்து வேதங்களிலும், உபனிஷங்களிலும் 'மஹா நூவு' என்றும், 'மனு' என்றும் அறியப்படுகிறார்கள்.
 
2. இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஓரிரைக் கொள்கைப் பிரசாரத்துக்கு முன்பே, அந்நாட்டில் வாழ்ந்த சிறந்த மனிதர்களாய் இருந்த வத்து, சுவாவு, யஹீசு, யஊக் மற்றும் நஸ்ர் என்ற ஐவருக்கும் சிலைகளை ஏற்படுத்தி மரியாதை செய்யவேண்டும் என்று ஷைத்தான் (சாத்தன்) அந்நாட்டு மக்களிடம் கூறினான். அதை அம்மக்கள் செயல்படுத்தினர். சிலைவணக்கம் அந்நாட்களிலிருந்து தோன்றியது.

source: http://tamilmuslim.com/ta/?p=751#more-751