Home கட்டுரைகள் சமூக அக்கரை "குடைக்குள் மழை" மதரஸா சிஸ்டம் மாற்றப்பட வேண்டும்
"குடைக்குள் மழை" மதரஸா சிஸ்டம் மாற்றப்பட வேண்டும் PDF Print E-mail
Tuesday, 21 May 2013 06:24
Share

"குடைக்குள் மழை" மதரஸா சிஸ்டம் மாற்றப்பட வேண்டும்

[ஒருதரப்பு இஸ்லாத்தை ஒரு கருங்கல்லாக காட்டி சமூகத்தை அதில் வந்து முட்டிக்கொள்ள சொல்கிறார்கள், சிலபோது சமூகத்தை நோக்கி வீசியும் அடிக்கிறார்கள்! இன்னொரு தரப்பு இஸ்லாத்தை 'மல்டி பிளே எலாஸ்டிக் போமட்' இல் மாற்றி குஃப்ஃபார் இழுக்கும் இழுவைக்கு எல்லாம் நெகிழ்ந்து கொடுக்கும் வடிவமாகவும் மாற்றிவிட்டார்கள்.]

"நிச்சயமாக, எனது தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும் என்று (நபியே !) நீர் கூறுவீராக!

"அவனுக்கு யாதோர் இணையுமில்லை; இதைக் கொண்டே நான் ஏவப் பட்டுள்ளேன்; இன்னும் முஸ்லீம்களில் நான் முதன்மையானவன் (என்றும் கூறுவீராக) (அல்குர்ஆன் - அல் அன் ஆம் : வசனம் 162,163)

வஹியுடைய இந்த வசனங்கள் முஸ்லீம்களால் அதிகமாக உச்சரிக்கப் படுபவை குறிப்பாக தொழுகையில் "இஹ்ராம் தக்பீருக்கு" அடுத்ததாக இந்த (வஜ்ஜஹத்து.. எனத் தொடரும்) உறுதி மொழி அடிக்கடி முஸ்லீம்களால் புதுப்பிக்கவும் படுகின்றது .

விடயம் என்னவென்றால் எமது வாயிலிருந்து அர்த்தம் புரியாத வார்த்தைகளாக இந்த உறுதி மொழியை மொழிந்து விட்டு, இன்றைய குஃப்ரிய மேலாதிக்க உலகில் வாழ்வியலையும், அரசியலையும் ("ஹம்து சலவாத்தோடு") குஃப்ரோடு இணைந்து, அல்லது அதன் கோட்பாடுகளை ஒன்றிப் போகும் வகையில் (குஃப்ஃபார்களின் திருப்திக்காக) வார்த்தைகளை கொட்டும் ஒரு பெரும் தவறை முஸ்லீம்களில் அதிகமானோர் செய்கின்றனர்!

''இஸ்லாத்தில் அரசியலா? இல்லவே இல்லை!, இஸ்லாத்தின் அடிப்படை இபாதக்களில் அரசியல் எதிர்பார்ப்பா!? இல்லவே இல்லை! இஸ்லாமிய இபாதாக்கள் சொல்லும் தத்துவம் வெறும் ஆன்மீகமே!...'' என்ற "கிளிப் பேச்சு ஆலிம்கள்" சிலரின் அடாவடியான பதில்களில் மயங்கி 'முதலாளித்துவ பண்ட உலகில் வெறும் பிண்டங்களாக வாழ்ந்து போக நிணைப்பவர்கள் மேலே தந்த வஹியின் மொழியை உணர்ந்து தமது தொழுகையில் இந்த வார்த்தைகளை தெளிவோடு உச்சரிப்பது காலத்தின் கட்டாயத் தேவையாகும் .

'செக்யுலரிசம்' இந்த வார்த்தை நாம் அறியாது அமுல் நடாத்தி வருவது இப்படி சொன்னாலும் புரியாது ,இன்னும் தெளிவாக சொன்னால் உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என பிரிப்பது ஏன்? என்றாவது நாம் எமக்குள் கேள்வி கேட்டிருப்போமா? (ஆனால் அதன் விளைவுகளை வகை தொகை இன்றி அனுபவிக்கிறோம்.) அவ்வாறு பிரிப்பது சரியா? சரி என்றால் இந்த 'செக்யுலரிசம்' சரி., பிழை என்றால் இந்த 'செக்யுலரிசம் 'பிழை. எமக்குள் இருக்கும் தவறே நாம் பருகுவது நஞ்சு எனப்புரிவதுமில்லை! யாரால் நஞ்சு தரப்பட்டது? என ஆராய்வதுமில்லை.

இந்த 'செக்யுலரிசத்தை' தமிழில் மொழி பெயர்த்தால் மதச்சார்பின்மை என பொருள் கொள்ளாலாம்

ஆனால் எம்மதமும் சம்மதம் என்பதும் இதில் அடங்கும்,

கடவுள் கொள்கையே அற்ற நாஸ்திகமும் இதில் அடங்கும்,

இந்த' செக்யுலரிசம்' எனும் சிந்தனை குறிக்க வருவது ஒவ்வொருவருக்கும் தனித்தனி மத சுதந்திரம் என்பதல்ல.

மாறாக அரசியல், சமூகவியல், பொருளியல், கலாச்சாரம் என்பவற்றில் மதம் தலையிட முடியாது. அதற்கு அதிகாரமில்லை எனும் வாதத்தையே! இங்கிருந்துதான் உலகக்கல்வி, மார்க்கக் கல்வி எனும் பிரிகோட்டை எமது சமூகமும் ஆதாரப்படுத்துகின்றது. இது தான் கிறிஸ்தவ மேற்குலகின் வாழ்க்கை முறை.

இந்தப் பார்வையூடாக திட்டமிட்டு பிரிக்கப்பட்டதே எமது கல்வி முறை அதிலும் மார்க்கக்கல்வி எனும் 'மதரசா' சிஸ்டம், உலகம் தொடர்பான இஸ்லாத்தின் பார்வை, அதில் எமது சரியான பங்கு இவை எல்லாவற்றையும் தவறாகக் காட்டும். இந்த சிஸ்டம் மாற்றப்பட வேண்டும். புரோகித பூச்சாண்டித்தனத்தின் உற்பத்திக்கூடங்களாக மாறியுள்ள இந்த மதரசா யுகம் இரட்டை தன்மையுடைய (உலகம், மார்க்கம்) வெளியீடுகளை தர, அவை வெளியில் வந்து உலகத்தை பார்த்தால் அது குஃப்ஃபாரின் அதிகார ஆதிக்க யுகம் !

இப்போது அந்த வெளியீடுகளில் ஒருதரப்பு இஸ்லாத்தை ஒரு கருங்கல்லாக காட்டி சமூகத்தை அதில் வந்து முட்டிக்கொள்ள சொல்கிறார்கள், சிலபோது சமூகத்தை நோக்கி வீசியும் அடிக்கிறார்கள்! இன்னொரு தரப்பு இஸ்லாத்தை 'மல்டி பிளே எலாஸ்டிக் போமட்' இல் மாற்றி குப்பார் இழுக்கும் இழுவைக்கு எல்லாம் நெகிழ்ந்து கொடுக்கும் வடிவமாகவும் மாற்றிவிட்டார்கள். இதுதான் நான் சொல்லும் குடைக்குள் மழை. இந்த 'செக்யுலரிசத்தை' விட்டு சிந்திக்காதவரை இந்த மழை எகிப்து, இலங்கை, இந்தியா உட்பட எங்கும் ஓயப்போவதில்லை.

-Abu Rukshan

source: http://aburukshan.blogspot.in/2012/10/blog-post.html