Home கட்டுரைகள் சமூக அக்கரை பல ஹஜ்ஜுகள் செய்பவர்களே! கோடிக்கான மக்களின் நிம்மதியைப்பற்றி சிந்தித்துப் பார்த்தீர்களா?
பல ஹஜ்ஜுகள் செய்பவர்களே! கோடிக்கான மக்களின் நிம்மதியைப்பற்றி சிந்தித்துப் பார்த்தீர்களா? PDF Print E-mail
Wednesday, 15 May 2013 07:14
Share

பல ஹஜ்ஜுகள் செய்பவர்களே!

கோடிக்கான மக்களின் நிம்மதியைப்பற்றி

சிந்தித்துப் பார்த்தீர்களா?

[ இன்று ஒன்றுக்கு அதிகமாக ஹஜ்ஜு செய்யும் ஹாஜிகளை அதிகமாகக் காண முடிகிறது. அதிலும் இரு ஹஜ்ஜுகள், ஐந்து ஹஜ்ஜுகள், பத்து ஹஜ்ஜுகள், இருபது ஹஜ்ஜுகள் நிறைவேற்றியுள்ளோம் என பெருமைப்பட்டுக் கொள்வோர் பெருகி வருகின்றனர்.

"மக்கா சென்றால் தான் நிம்மதி! ஹஜ்ஜுடைய மாதங்கள் வந்து விட்டாலே எங்களுக்கு ஹஜ்ஜுக்குச் செல்ல வேண்டுமென்ற வேட்கை அதிகமாகி விடுகிறது. மக்கா சென்றால் தான் எங்களுக்கு மன அமைதி கிடைக்கிறது" என்பது அடிக்கடி ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் செல்பவர்களின் கூற்றாக இருக்கிறது.

இவர்கள் அடுத்தவர்களை என்றாவது சிந்தித்தார்களா? தங்களின் சுயநலத்திற்காக நிம்மதியைத் தேடும் இவர்கள் உலகிலே பசியாலும், பட்டினியாலும் செத்துக் கொண்டிருக்கும் கோடிக்கான மக்களின் நிம்மதியைப்பற்றி இவர்கள் சிந்தித்துப் பார்த்தார்களா?

இலட்சோப இலட்சம் குழந்தைகள் அநாதைகளாக, ஆதரவற்றவர்களாக வீதிகளுக்கு வந்து, வானமே கூரையாக தரையே விரிப்பாக நிச்சயமில்லா எதிர்காலத்துக்காக கைகளை நீட்டிக் கொண்டு ஏங்கித் தவிக்கின்றனர். திணிக்கப்பட்ட போர்களால் சிதறுண்டு, சொந்த வீட்டையும், மண்ணையும் இழந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அகதிகளாக கண்ணீர்விட்டுக் கதறுகின்றனர்.

கோடிக்கணக்கான நோயாளிகள் ஒரு சிறு மருத்துவ உதவிகள் கூட இல்லாது மரணத்தின் விளிம்பிலே நின்று கொண்டு ஓலமிட்டு நிற்கின்றனர். பல இலட்சங்கள் செலவு செய்து மீண்டும் மீண்டும் ஹஜ்ஜுக்கு வரும் இந்த ஹாஜிகள் இவர்களைப் பற்றியெல்லாம் சிந்தித்தார்களா?

அறியாமை, மூடநம்பிக்கை, வேலையின்மையால் ஆயிரமாயிரம் பிரச்சனைகளை சந்தித்து அதல பாதாளத்திற்குச் செல்லும் அப்பாவி மக்களைப் பற்றி என்றேனும் இவர்கள் சிந்தித்தார்களா?

முஸ்லிம் சமுதாயத்தினரின் துயரங்களையும், கதறல்களையும், ஆபத்துகளையும் களைந்து அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி ஆக்கப்பணி களுக்கு உதவாமல், அதுபற்றிச் சிறிதேனும் கவலைப்படாமல் தங்களின் நிம்மதிக்காக, புகழுக்காக, பெருமைக்காக பல தடவைகள் பல இலட்சம் செலவுகள் செய்து ஸுன்னத்தான ஹஜ்ஜுகளை நிறைவேற்றுவது சரிதானா? ]

  பல ஹஜ்ஜுகள் செய்வது பற்றி? 

ஹஜ்ஜு இருவகைப்படும். ஓன்று கடமையான ஹஜ்ஜு. மற்றொன்று ஸுன்னத்தான ஹஜ்ஜு! உடலாலும் பொருளாலும் வசதிபடைத்தோருக்கு வாழ்நாளில் ஒரு முறை ஹஜ் செய்வது(பர்ளு) கடமையாகும். அல்லது ஹஜ்ஜு செய்வதாக நேர்ச்சை செய்தாலும் அதுவும் கட்டாயம் நிறை வேற்றவேண்டிய கடமைகளில் ஒன்றாகிவிடும்.

ஓன்றுக்கு அதிகமாக ஹஜ்ஜு செய்வது ஸுன்னத்தாகும். இதற்கு மார்க்கத்தில் எவ்வித தடையுமில்லை. இன்று ஒன்றுக்கு அதிகமாக ஹஜ்ஜு செய்யும் ஹாஜிகளை அதிகமாகக் காண முடிகிறது. அதிலும் இரு ஹஜ்ஜுகள், ஐந்து ஹஜ்ஜுகள், பத்து ஹஜ்ஜுகள், இருபது ஹஜ்ஜுகள் நிறைவேற்றியுள்ளோம் என பெருமைப்பட்டுக் கொள்வோர் பெருகி வருகின்றனர்.

ஒன்றுக்கு அதிகமாக அனுமதிக்கப்பட்டோர்!

ஒரு தடவைக்கு அதிகமாக,-அவசியத்தேவையின் நிமித்தம்- நிர்பந்தமான நிலை ஏற்பட்டால் மட்டும் வழிகாட்டியாக, (தாயியாக) மருத்தவராக, சமையற்காரராக, மஹ்ரமாக (ஒரு பெண்ணிற்குத் துணையாக) செல்வதற்குத் தடையில்லை.உரிய முறையில் ஹஜ்ஜை நிறைவேற்றிவிட்டு வீடு திரும்புபவர் அன்று பிறந்த பாலகனைப்போல் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக வீடு திரும்புகிறார். பாவமும் குற்றமும் கலக்காது முறையாக நிறைவேற்றப்படும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு (ஹஜ்ஜுன் மப்ரூருக்கு) சுவர்க்கமே கூலியாகும் போன்ற நபி மொழிகள் ஹஜ்ஜின் மாண்புகள் குறித்து சிறப்பித்துக் கூறுகின்றன. இதனால், ஹஜ்ஜுக்குச் செல்வோர் எண்ணிக்கை ஆண்டு தோறும்அதிகரித்து வருகிறது. ஹஜ்ஜுக்கு மட்டுமல்ல, ரமளானிலும், ரமளானல்லாத காலங்களிலும் உம்ராவுக்காக அடிக்கடி வந்து போகும் மக்கள் தொகையும் ஆண்டு தோறும் பெருகிவருகிறது.

  பல ஹஜ்ஜுகள் பற்றி இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து: 

இது குறித்து ஆய்வு செய்த இஸ்லாமியச் சிந்தனையாளர்களும்,மார்க்க அறிஞர்களும் கூறிவரும் கருத்துக்கள்

மிகவும் சிந்திக்கத் தக்கவையாகும். இதை இஸ்லாமிய உலகம் கவனத்திற் கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.

அரபு நாடுகளிலிருந்து

"அரபு நாடுகளிலிருந்து ஹஜ்ஜுக்கு வருவோரின் மொத்த ஹாஜிகள் எண்ணிக்கையில் 15 விழுக்காடு மட்டுமே முதல் தடவையாக ஹஜ்ஜை நிறைவேற்றுகின்றனர்! (அதாவது ஹஜ்ஜுக்கு வரும் இரண்டு மில்லியன் ஹாஜிகளில் மூன்று இலட்சம் பேர் மட்டுமே முதல் தடவையாக ஹஜ்ஜு செய்கின்றனர்) மீதமுள்ள 17 இலட்சம் பேர்கள் இரண்டாவது தடவையாகவோ, ஐந்தாவது தடவையாகவோ, பத்தாவது தடவையாகவோ, நாற்பதாவது தடவையாகவோ ஹஜ்ஜு செய்கின்றனர்" என டாக்டர் அஷ்ஷய்கு கர்ளாவி அவர்கள் சில ஆண்டு களுக்கு முன்னர் தெரிவித்த கருத்தை இஸ்லாமிய உலகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தென்ஆசிய நாடுகளிலிருந்து

4000 கோடிகளை சேமித்தால்! மிகப்பெரிய சாதனைகள்!

தென் ஆசிய நாடுகளிலிருந்து வருவோரில எழுபது சதவிகிதம் பேர்கள் முதல் தடவையாக ஹஜ்;ஜுக்கு வருவோராக கணித்தாலும் மீதமுள்ள 30 சதவிகித ஹாஜிகள் ஒன்றுக்கு மேற்பட்ட பல ஹஜ்ஜுகளை நிறைவேற்றியவர்களாகவே கணிக்கலாம். இந்த வகையில் சராசரியாக ஆண்டொன்றுக்கு அதிகப்படியான ஹஜ்ஜின் மூலமாக முஸ்லிம்கள் 2000 கோடி ரூபாய்கள் (200 மில்லியன்கள்) வரை செலவிடுகின்றனர்.

அதுமட்டுமல்ல, ஆண்டொன்றுக்கு திரும்மத் திரும்ப உம்ராவுக்கு வருவோரின் எண்ணிக்கையும் இதை விட பன்மடங்காகிறது. இதையும் கணக்கிட்டால் ஆண்டு தோறும் 4000 கோடிகள் (400 மில்லியன்) வரை செலவாவதைப் பார்க்கலாம். இன்றைய நவீன இஸ்லாமிய உலகின் பிரச்சனைகள், அவசரத்தேவைகள், அழிவுகள், ஆபத்துகள், பட்டடினிச் சாவுகள், போர்கள், இஸ்லாத்தின் எதிர்ப்புச் சவால்கள் எனத் தொடரும் பல் வேறு பிரச்சனைகளுக்குத் நாம் தீர்வு காண வேண்டியதிருக்கிறது.

ஒருமுறை எகிப்து, கத்தார், மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும்; ஹஜ்ஜுக்கு வரும் ஒரு குழுவை சந்தித்த அஷ்ஷய்கு கர்ளாவி அவர்கள், பின்வருமாறு கேட்டார்.

  முஸ்லிம்களுக்கு ஆபத்து!  

''ஒருபுறம் கிறித்தவ மிஷினரிகள், முஸ்லிம்களை கிறித்தவர்களாக மதமாற்றம் செய்ய ஆப்ரிக்காவின் பலபகுதிகளிலும், இந்தோனேஷியா போன்ற ஏழை நாடுகளிலும் உணவு, உடை போன்ற அத்தியவசியத்; தேவைகளுக்காக பல்வேறு கவர்ச்சித் திட்டங்களைத் தீட்டி பெருமளவில் பணத்தை வாரி இறைக்கின்றன. மறுபுறம் முஸ்லிம்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம், வீட்டுவசதிகள், வேலை வாய்ப்புகள் போன்ற சமூகப் பணிகளால் அவர்களை எளிதில் ஈர்த்து மதமாற்றங்கள் செய்துவருகின்றன. இவை மட்டுமல்ல, உலகப் பொது மறையாக விளங்கும் நமது உயிரினும் மேலான குர்ஆனை அவர்களுக்குச் சாதகமாகத் திருத்தி அச்சிட்டு இலவசமாக வினியோகிக்கவும் செய்கின்றன. அதுவும் போதாதென்று இஸ்லாமியப் பெயர்களால் விஷங்களைக் கக்கும் போலி நூல்களை வெளியிடவும், இணைய தளங்களை உருவாக்கியும் நச்சுக்கருத்துகளை புகுத்துகின்றன. இவ்வாறெல்லாம் பலியாகிக் கொண்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டியது நமது தலையாய கடமையல்லவா? நாம் இனியும் தூங்கிக் கொண்டிருக்கலாமா? விழிப்படைந்து வீறு கொண்டு பல மடங்கு வேகத்தில் சமூக சேவைகள் புரிய முன்வர வேண்டாமா?

எனவே, உடனடியாக சமுதாயத்தைக் காக்கும் இஸ்லாமிய பொது நிறுவனங்களையும் அமைப்புகளையும் உலகளாவிய அளவில் உருவாக்கியாக வேண்டும். கிறித்தவர்களைப் போல 'நமது இஸ்லாமிய சமுதாயத்திலும், இது போன்ற ஆக்கப் பணிகளை விரைந்து செய்து முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டும்.அதற்காக நீங்கள் இவ்வருடம் ஹஜ்ஜுக்குச் செல்லாது, ஹஜ்ஜுக்காகச் செலவாகும் பெருந்தொகையை முஸ்லிம்களை கிறித்தவர்களிடமிருந்து மீட்பதற்காக செலவிடுங்கள்'' என ஒரு வேண்டுகோளை முன் வைத்தார்.

அவர்களிடமிருந்து வந்த பதில் என்ன தெரியுமா ?

மக்கா சென்றால் தான் நிம்மதி! ஹஜ்ஜுடைய மாதங்கள் வந்து விட்டாலே எங்களுக்கு ஹஜ்ஜுக்குச் செல்ல வேண்டுமென்ற வேட்கை அதிகமாகி விடுகிறது. மக்கா சென்றால் தான் எங்களுக்கு மன அமைதி கிடைக்கிறது. என்று'.

அடுத்தவர்களை என்றாவது சிந்தித்தீர்களா?

தங்களின் சுயநலத்திற்காக நிம்மதியைத் தேடும் இவர்கள் உலகிலே பசியாலும், பட்டினியாலும் செத்துக் கொண்டிருக்கும் கோடிக்கான மக்களின் நிம்மதியைப்பற்றி இவர்கள் சிந்தித்துப் பார்த்தார்களா?

இலட்சோப இலட்சம் குழந்தைகள் அநாதைகளாக, ஆதரவற்றவர்களாக வீதிகளுக்கு வந்து, வானமே கூரையாக தரையே விரிப்பாக நிச்சயமில்லா எதிர்காலத்துக்காக கைகளை நீட்டிக் கொண்டு ஏங்கித் தவிக்கின்றனர்.

திணிக்கப்பட்ட போர்களால் சிதறுண்டு, சொந்த வீட்டையும், மண்ணையும் இழந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அகதிகளாக கண்ணீர்விட்டுக் கதறுகின்றனர்.

கோடிக்கணக்கான நோயாளிகள் ஒரு சிறு மருத்துவ உதவிகள் கூட இல்லாது மரணத்தின் விளிம்பிலே நின்று கொண்டு ஓலமிட்டு நிற்கின்றனர்.

பல இலட்சங்கள் செலவு செய்து மீண்டும் மீண்டும் ஹஜ்ஜுக்கு வரும் இந்த ஹாஜிகள் இவர்களைப் பற்றியெல்லாம் சிந்தித்தார்களா?

அறியாமை, மூடநம்பிக்கை, வேலையின்மையால் ஆயிரமாயிரம் பிரச்சனைகளை சந்தித்து அதல பாதாளத்திற்குச் செல்லும் அப்பாவி மக்களைப் பற்றி என்றேனும் இவர்கள் சிந்தித்தார்களா?

முஸ்லிம் சமுதாயத்தினரின் துயரங்களையும், கதறல்களையும், ஆபத்துகளையும் களைந்து அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி ஆக்கப்பணி களுக்கு உதவாமல்,அதுபற்றிச் சிறிதேனும் கவலைப்படாமல் தங்களின் நிம்மதிக்காக, புகழுக்காக, பெருமைக்காக பல தடவைகள் பல இலட்சம் செலவுகள் செய்து ஸுன்னத்தான ஹஜ்ஜுகளை நிறைவேற்றுவது சரிதானா? சமுதாயமே சிந்தியுங்கள்.

மஸ்ஜிதுல் அக்ஸாவை கபளீகரம் செய்து ஆதிக்க வெறி நடத்தும் வன்னெஞ்ச யூதர்களை எதிர்த்துப் போராடவேண்டாமா?

500 வருட பாபரி மஸ்ஜிதை இடித்து, இன்னும் பல மஸ்ஜிதுகளை இடிப்போம் என சூளுரைத்து அராஜகம் செய்யும் இந்துத்துவ வெறியர்களை எதிர்த்துப் போராட வேண்டாமா?

காஷ்மீரிலும்,குஜராத்திலும்,பீஹாரிலும்,மராட்டியிலும் முஸ்லிம் அப்பாவிகளை கொன்று குவிக்கும் இந்துத்துவ கொடும் பாவிகளை எதிர்;த்துப் போராடவேண்டாமா? அவர்களை எதிர்;துப் போராடும் முஸ்லிம் தியாகிகளுக்கு உதவ வேண்டாமா?

கொஸோவோவிலும், செச்னியாவிலும், செர்பியர்களும், இரஷ்யர்களும் முஸ்லிம்களின் குற்றமறியாப் பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்று குவிக்கும் ஈவு இரக்கமற்ற அரக்கர்களின் செயல்களை கண்டித்து இஸ்லாமிய உலகமே கொதித்து எழவேண்டாமா? இவர்கள் வாய் திறந்து ஒரு வார்த்தையாவது பேசமாட்டார்களா? என ஏங்கித்தவிக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக அன்புக்கரம் நீட்டவேண்டாமா?

பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் ஊடுருவி வரும் கிறித்தவ சிந்தனைப் படையெடுப்பை எதிர்த்து நிற்க வேண்டாமா?

போராடாவிட்டாலும்... இவைகளுக்கெதிராக போரிடாவிட்டாலும் அவர்களை தூக்கி நிறுத்தி உதவிக்கரங்களை நீட்டி, மருத்துவ முகாம்கள்,கல்வி நிலையங்கள்,தஃவா மையங்கள் முதலியவற்றை உருவாக்கி, பதிப்பகங்கள், படிப்பகங்களைத் திறந்து, புத்தகங்கள், பிரசுரங்கள், ஒலி, ஒளி நாடக்கள் வாயிலாகச் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம்,ஏராளம் உள்ளன. இந்நிலையில் கோடிக்கான பணங்களைச் செலவு செய்து ஸுன்னத்

hன ஹஜ்ஜுகளை நிறைவேற்றவும் வேண்டுமா? நிறைவேற்றுவதும் நியாயமாகுமா? சமுதாயமே சிந்தியுங்கள்!ஹஜ்ஜுக்கு வருவோர் செய்யும் விளம்பரங்கள், சுவரொட்டிகள்,மலர் மாலைகள், விருந்து உபசாரங்கள், ஆடம்பரங்கள் ஆகியவற்றுக்குச் செய்யும் செலவுகளை இந்த அபலைகளுக்கு, பட்டினியால் நாள் தோறும் செத்துக்கொண்டிருக்கும் இந்த ஆதரவற்ற வர்களுக்கு, அனாதைகளுக்குச் செலவிடவேண்டாமா? சமுதாயமே சற்று சிந்தியுங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன்னர், புகழ்பெற்ற இஸ்லாமியச் சிந்தனையாளரும், எழுத்தாள ருமான ஃபஹ்மீ ஹுவைதீ அவர்கள், 'ஃபர்ளான ஹஜ்ஜு செய்வதை விட போஸ்னியாவை மீட்பதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும்' என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீவிரமான ஒரு கருத்தை வெளியிட்டார்கள். இவரது கருத்தைப் படித்த பலரும் தடுமாறிப் போயினர்.

இதைப் பற்றி டாக்டர் கர்ளாவி அவர்களிடம் இது குறித்துக் கேட்டபோது பிக்ஹு அடிப்படையில் 'காலம் கடந்தும் நிறைவேற்றலாம்; என்னும் கடமையை விட உடனடியாக செய்யப்படவேண்டிய கடமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்' என்பது ஷரீஅத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

ஃபர்ளான ஹஜ்ஜைக்கூட காலம் கடந்து நிறை வேற்றலாம் என்று இமாம்களில் சிலர் கருதுகின்றனர். ஆகவே, பட்டினி,கடுங்குளிர்,நோய் போன்ற அழிவிலிருந்து போஸ்னிய முஸ்லிம்;களை பாதுகாப்பது உடனடியாகச் செய்யப்படவேண்டிய முக்கியக் கடமை யாகும். அவற்றை எக்காரணம் கொண்டும் பிற்படுத்த முடியாது.அது காலத்தின் கட்டாயமாகும்.

ஆனால் மக்காவுக்கருகில் வாழ்பவர்களுக்கு அதிகப் பணச் செலவு இல்லாததால் அவர்கள் ஹஜ்ஜுக் கடமையைக் காலம் தாழ்த்தாது நிறைவேற்றி விடவேண்டும்.என பதிலளித்தார்கள்.இஸ்லாத்தைப் பொறுத்தவரை செயல்கள் சுன்னத்,முஸ்ஹப்,பர்ளு அய்னு என்று பலவாறாக உள்ளன. பர்ளுகளை (கட்டாயக் கடமைகளை) உதாசீனம் செய்துவிட்டு சுன்னத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை இஸ்லாம் வரவேற்கவில்லை. கட்டாயம் மறைக்கவேண்டிய மர்மபாகத்தை மறைக்காது விட்டுவிட்டு தலையில் தொப்பி அணிவதை இதற்கு உவமையாகக் கூறலாம்.

கட்டாயக் கடமைகளை விட்டு விட்டு சுன்னத்தான ஹஜ்ஜுகள் செய்வது கூடாது என்றே இன்றைய அறிஞர் பெருமக்களின் கருத்தாகும். இதை இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் தனது இஹயா உலூமுத்தீன் நூலில் குறிப்பிட்டு அதற்கான நியாயமான உதாரணங்களையும் காட்டுகிறார்கள். அவற்றுள் சில:-

இறுதிநாள் நெருங்கும் போது ஹாஜிகள் கூட்டம்!

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:

கடைசி காலத்தில் ஹாஜிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும். அவர்களுக்கு ஹஜ்ஜுப் பயணம் மிக எளிதாகவே அமையும்.தங்குமிடம்,உணவு வசதி வாய்ப்புகள் தாராளமாகக் கிடைக்கும். ஹஜ்ஜிலிருந்து திரும்பும் போது தனக்குத் தேவையானவற்றைக் கொண்டு வருவார்கள் ;.ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் கைதாகி துன்பப்பட்டு உழலும் போது அந்த ஹாஜிகள் அவனுக்கு உதவவோ, அவனை மகிழ்விக்கவோ செய்யமாட்டார்கள்.

ஒரு தடைவை அறிஞர் பிஸ்ரு இப்னு ஹாரித் ரஹ்மதுல்லாஹி அலைஹி என்பாரிடம் வந்த ஒருவர், தான் சுன்னத்தான ஹஜ்ஜை நிறைவேற்ற நாடியிருப்பதாகவும்,தனக்கு உபதேசிக்குமாறும் வேண்டிக் கொண்டார். அதற்கு பிஸ்ரு ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், "உம்மிடம் எவ்வளவு பணமிருக்கிறது?" எனக் கேட்டார்கள்.அந்த மனிதர் 'இரண்டாயிரம் வைத்துள்ளேன்' என்றார். மீண்டும் பிஸ்ரு ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், "உமது ஹஜ்ஜின் நோக்கமென்ன? நீர் எதை அடைய விரும்புகிறீர்?" என வினவினார்.

அதற்கவர், "உலகில் பற்றற்ற மனநிலையும், கஃபாவை பார்த்துக் கொண்டிருக்கும் வேட்கையும், அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைப் பெறுவதும்" ஆகும் என்றார். அதற்கு பிஸ்ரு ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் "உமது வீட்டிலிருந்து கொண்டே இரண்டாயிரம் திர்ஹத்தை செலவு செய்து விட்டு அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும் அவனது அருளையும் பெற வழி சொல்லவா?" எனக்கேட்டார். வந்தவர் 'ஆம்' என்றார்.அப்போது பிஸ்ரு ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்.

துன்பம் துடைப்பது பல ஹஜ்ஜுகளுக்குச் சமம்!

"நீர் உடனே சென்று உம்மிடமுள்ள 2000 திர்ஹங்களை தேவையுள்ள பத்து பேருக்குக் பங்கிட்டுக் கொடுப்பீராக!

மேலும் கடன்பட்டோருக்கு கடனை அடைக்க உதவுவீராக! அவர்; நிம்மதி பெறட்டும்.

துன்பத்தில்; உழலும் ஒரு ஏழையின் துயர் போக்குவீராக! அவர் வாழ்வு மலரட்டும்!

வறுமையில் வாடும் ஒரு குடும்பத்திற்கு உம் கரம் நீட்டுவீராக! அந்தக் குடும்பம் வளவாழ்வு வாழட்டும்.

ஆதரவற்ற ஓர் அனாதைக்கு உம் தோள் கொடுத்து உதவுவீராக! அதனால் அவர் கண்ணீர் நிற்கட்டும்.!

இந்த பணம் முழுவதையும் ஒரே நபருக்குக் கொடுக்க முடிந்தால் அவ்வாறே செய்வீராக!

ஏனெனில், ஒரு முஸ்லிமின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த உன்னால் முடியுமாயின்,

ஒருவரது துக்கத்தையும் போக்க உன்னால் முடியுமாயின்,

ஒருவரது கண்ணீரைத் துடைக்க உன்னால் முடியுமாயின்,

ஒருவரது வறுமையை விரட்ட உன்னால் முடியுமாயின்,

ஒரு பலவீனனுக்கு கைகொடுத்து உதவ உன்னால் முடியுமாயின்,

அதுவே, முதல் தடவை செய்யப்படும் கடமையான ஹஜ்ஜுக்குப் பிறகு செய்யப்படும் 100 ஹஜ்ஜுகளை விட மேலானதாகும்.

எனவே, நான் கூறியவாறு சென்று அப்பணத்தைச்செலவு செய்வீராக! (நூல்: இஹ்யாவுலூமித்தீன் பாகம்-3, பக்கம்-409 கிதாபுல் குரூர்)

இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் சிந்தனைக் குரிய இந்த வரிகள், ஒருமுறைக்குப் பல முறைகள் படித்துப் பார்க்கவேண்டிய வைர வரிகள்! திரும்பத் திரும்ப அசை போட வேண்டிய உயிரோட்டமுள்ள பொன்னெழுத்துக்கள்!!

சமுதாயத்தை தூக்கி நிறுத்தி, சமுதாயத்தின் துயர் போக்கத் துடிக்கும் நல்லவர்கள் வரலாற்றிலே மின்னிக் கொண்டுதானிருக்கிறார்கள். போஸ்னிய மக்களைப் போன்றவர் களை அழிவிலிருந்து காக்க கடமையான ஹஜ்ஜைக்கூட பிற்படுத்தலாம் என உலமாக்கள் கருதும் போது, வருடா வருடம் ஹஜ்ஜுக்காகவும், ஒரே வருடத்தில் பல தடவைகள் உம்ராவுக்காகுவும் போகிறவர்களைப் பற்றிய தீர்ப்பு எப்படி அமையுமென்னதைச் சிந்தித்துப் பார்ப்போமாக!

இவ்வுண்டமையை உலக முஸ்லிமகள் உணர்ந்தால் ஹஜ்ஜில் வந்து குவியும் மக்களின் நெருக்கடியைக் குறைக்கலாம். போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையலாம்! மக்களின் நெருக்கடியைப் போக்குவதால் முதல்முறையாக ஹஜ்ஜுக்கு வருவோருக்கும் எளிதாக இருக்கும்.அவர்களுக்கும் திருப்தியாக ஹஜ்ஜு செய்த நிறைவும் ஏற்படும்.

பல ஹஜ்ஜின் பணங்கள் சமுதாயத்தைக் காக்கட்டும்!!

சுன்னத்தான ஹஜ்ஜுகளுக்காகவும், பல உம்ராக்களுக்காகவும் செலவிடப்படும் அதிகப்படியான பணத்தை முக்கியமான தஃவாப் பணிகள்,சமுதாயச் சேவைகள்,போர் அழிவுகள்;, இயற்கைச் சீற்றங்கள்,அரசியல் அராஜங்கள், மதவாதிகளின் வெறியாட் டங்கள்,பட்டினிச்சாவுகள் போன்ற பெரும் பாதிப்புகளிலிருந்துமுஸ்லிம்களைப் பாதுகாக்கவும் செலவு செய்யப்படும்; ஒவ்வொரு காசுக்கும் ஒருவரது தூய்மையான எண்ணத்திற் கேற்ப அல்லாஹ்விடம் மிகப் பெரிய கூலியுண்டு.

அதிலும் குறிப்பாக ஹஜ்ஜுக்கு முந்திய கடமையான 'ஸகாத'த்தும்,ஸக்காத்தையும் விட செல்வத்தில் வேறு பல கடமைகளும் உள்ளன என்ற நபிமொழிகளின் கட்டளை களையும் மனதிற் கொண்டு செயல்படுவோமா?

source: www.albaqavi.com