Home இஸ்லாம் ‘ஷிர்க்’ தர்ஹா மாயையிலிருந்து விடுபட கோளங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்!
தர்ஹா மாயையிலிருந்து விடுபட கோளங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்! PDF Print E-mail
Friday, 22 February 2013 19:21
Share

தர்ஹா மாயையிலிருந்து விடுபட கோளங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்,

"யஹுதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபித்துள்ளான். அவர்கள் தங்களது நபிமார்களுடைய கபுருகளை வணக்கஸ்தலமாக்கி விட்டனர்." (நூல்: புகாரி)

பெரும்பாலான முஸ்லிம்கள் இதர சமுதாயத்தினரைப் போலவே தங்கள் தேவைகளை வேண்டுதல்களை அவுலியாக்களின் சமாதிகளை நாடிச் சென்று குறைபாடுகளை முறையிடுகின்றனர். இவர்களது முறையீடுகளை அந்த நல்லடியார்கள் செவியுறுகிறார்களா? என்றால்,

அல்லாஹ் கூறுகிறான்,

''(நபியே) நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது''. (அல்குர்ஆன் 27:80)

பிரார்த்தனை அல்லது தேவைகளை முறையீடு செய்வது என்பதும் வணக்கமேயாகும். சிபாரிசு செய்யத் தகுதி பெற்றவர்கள் எனக் கருதி மறைந்த பெரியார்களின் விக்கிரங்களை அன்றைய அரபியர்கள் வணங்கியும், பிரார்த்தித்தும் வந்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் "பிரார்த்தனை வணக்கத்தின் மூளை" (அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)

"பிரார்த்தனை என்பதே வணக்கம்தான்" (நூமானுபின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத், திர்மிதீ)

''மேலும் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான், என்னையே பிரார்த்தியுங்கள் நான் உங்களுக்கு பதிலலிக்கிறேன்.'' (அல்குர்ஆன் 40:60)

"நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கிறீர்களோ, அவர்களூம் உங்களைப் போன்ற அடிமைகளே.'' (அல்குர்ஆன் 7:194)

''எவர் அவனையன்றி அழைக்கிறார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தரமாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 13:14)

அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேடவேண்டும், அவனிடம் மட்டும் தான் பிரார்த்தனை செய்யவேண்டும் எனவும் அல்லாஹ் திருமறையில் தெளிவுபட கூறுகிறான்.

 

அல்லாஹுத்தஆலா தனது பார்வையில் இந்த பூமி ஒரு கொசுவின் இறக்கைக்கு கூட சமமில்லை என்கிறான் என்பதை விஞ்ஞானப்பூர்வமாக நம்ப வேண்டுமா......! இங்கு இடம்பெற்றுள்ள கோளங்களின் ஒப்பீட்டை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.

நம் கண்பார்வைக்கு மிகப் பிரம்மாண்டமாகத் தெரியும் இப்-பூமி மற்ற கோளங்களுடன், நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு புள்ளியளவுக்குக்கூட இல்லை.

இந்த சிறு புள்ளியளவுக்குக்கூட தெரியாத இந்த பூமிக்குள்தான் கோடான கோடி மக்களை அல்லாஹ் படைத்துள்ளான். அப்படியிருக்கையில் இந்த மனிதனைப்ப்போய் அல்லாஹ்வுக்கு இணையாக்குவதோ அவனது அதிகாரத்தில் பங்குள்ளவனாக எண்ணுவதோ, ஏன் கற்பனைகூட செய்வதோ கொஞ்சமேனும் பொருத்தமாக இருக்குமா?

தயவு செய்து சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே!

இப்படத்தில் சூரியனின் அளவே சின்னதாகத் தெரிகிறது. பூமி இருக்கும் இடமே தெரியவில்லை....

ஆனால் கண்ணுக்கே தெரியாத அந்த சின்ன பூமியில் தான் கோடான கோடி ஜீவராசிகளை அல்லாஹ் படைத்துள்ளான்.

இந்த சின்ன பூமியின் படைப்பே நம்மை வியப்பிலாழ்த்தும்போது மற்ற பிரம்மாண்டங்களில் எல்லாம் என்னென்ன வைத்துள்ளான்... நிச்சயமாக நமது அறிவுக்கு எட்ட வாய்ப்பே இல்லை.

அவ்வாறு இருக்கையில் அந்த ஏக வல்ல இறைவனுக்கு இணை வைக்கலாமா? எவ்வளவு பெரிய பாவம் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?

www.nidur.info