Home கட்டுரைகள் சமூக அக்கரை S.ஷைஃபுத்தீன் ரஷாதி - P.ஜெய்னுல் ஆபிதீன் : நேரடி விவாதம் ஒரு பார்வை
S.ஷைஃபுத்தீன் ரஷாதி - P.ஜெய்னுல் ஆபிதீன் : நேரடி விவாதம் ஒரு பார்வை PDF Print E-mail
Sunday, 03 February 2013 07:47
Share

S.ஷைஃபுத்தீன் ரஷாதி - P.ஜெய்னுல் ஆபிதீன் : நேரடி விவாதம் ஒரு பார்வை

திருச்சியில் நடைபெற்றுவரும் மவ்லவி, S.ஷைஃபுத்தீன் ரஷாதி - P. ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோரின் நேரடி விவாதத்தின் முதல் நாள் அமர்வு சிறப்பான முறையில் நடந்தது. அல்ஹம்துலில்லாஹ். அதைப்பற்றிய மிக சுருக்கமாக சில கருத்துக்கள்...

இருவருமே நாடறிந்த ஆலிம்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. அதுபோல் இருவருமே மார்க்க விஷயத்தில் நல்ல விஷயதாரிகள். கருத்துவேறுபாடுகள் இருப்பினும் இருவரும் அறிஞர்களே!

ஒருவர் பேசும்போது ஆகா இவ்வளவு வலுவான வாதத்தை இவர் வைக்கிறாரே... இதுதான் சரியானதாக இருக்க முடியும் என்று நினைக்கும் வேளையில் அடுத்தவர் தனது வாதத்தை எடுத்து வைக்கும்போது ஆகா! இதுகூட சரியாகத்தானே தெரிகிறது.... என்று எண்ண வைக்கிறது. மறுபடியும் முதலாமவர் பேச ஆரம்பிக்கும்போது மீண்டும் இந்த சுழற்சி தொடர்கதையாகிறது.

இருவருமே விஷயதாரிகள் என்பதோடு விவாதம் புரிவதில் அனுபவப்பட்டவர்கள் என்று பரவலாக அனைவருக்கும் தெரியுமாகையால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம்தான்.

உண்மையில் இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு தமிழ் முஸ்லிம் சமுதாயம் நன்றி சொல்ல வேண்டும். நன்றியும் சொல்லிக்கொள்கிறோம். அல்லாஹ் அவர்களுக்கு இதற்கான நற்கூலியை வழங்குவானாக.

P.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் எடுத்துவைத்த சில வலுவான கேள்விகளுக்கு சில நேரம் நேரடியாக பதில் அளிக்க இயலாமல் S.ஷைஃபுத்தீன் அவர்கள் லேசாக தடுமாறியதும், S.ஷைஃபுத்தீன் அவர்கள் P.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் எடுத்துவைத்த ஒரு ஹதீஸ் எவ்வளவு பலகீனமானது என்பதை போட்டு உடைத்ததும் விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது எனலாம்.

பேச்சுத் தோரணையை கவனிக்கும்போது ஷைஃபுத்தீன் அவர்கள் மிகச்சிறந்த அழகிய முறையில் பேசக்கூடிய பேச்சாளராக தென்பட்டாலும் சில சமயம் அவர்களது பேச்சு நிச்சயமாக நடுநிலையாளர்களை முகம் சுளிக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக அவர்கள் எமோஷனலாகி ஜெய்னுல் ஆபிதீன் அவர்களை "கிறுக்கன்" என்று நேருக்கு நேராக திட்டியது அவரது அனுதாபிகளுக்கு வேண்டுமானால் கொண்டாட்டமாக இருந்திருக்கலாமே தவிர நடுநிலையாளர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சிதான். இது நிச்சயமாக வரம்பு மீறிய செயல்தான்.

ஆனால் P.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தன்னை ஷைஃபுத்தீன் அவர்கள் "கிறுக்கன்" என்று சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் மிகவும் கூலாக எடுத்துக்கொண்டு விவாதத்தைத் தொடர்ந்தது நிச்சயம் பார்வையாளர்கள் மத்தியில் அவரது இமேஜை உயர்த்தியிருக்கும் என்றே சொல்லலாம்.

S.ஷைஃபுத்தீன் அவர்கள் கேள்விகளுக்கு நேரடியான பதிலை அளிக்காமல் இடையிடையே உணர்ச்சிவசப்பட்டு பேசினாலும் P.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் கடைசி வரை தன்மையாகவே பேசினார் என்பதை எவரும் மறுக்க முடியாது. இது அவரவரின் சுபாவமாக கூட இருக்கலாம்.

அதுமட்டுமின்றி ஷைஃபுத்தீன் அவர்கள் P.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்த விதம் சில சமயம் ஏதோ பயான் செய்வதுபோல் இருந்தது. விவாதம் செய்வதற்கும் பயான் செய்வதற்கும் வேறுபாடு உண்டு.

-எம்.ஏ.முஹம்மது அலீ

www.nidur.info