Home கட்டுரைகள் சமூக அக்கரை சகோதரி ரிஸானா நபீக் விவகாரம் - ஓர் அலசல் (1)
சகோதரி ரிஸானா நபீக் விவகாரம் - ஓர் அலசல் (1) PDF Print E-mail
Monday, 28 January 2013 07:26
Share

சகோதரி ரிஸானா நபீக் விவகாரம் - ஓர் அலசல் (1)

   முஜாஹித், ஸ்ரீலங்கா    

தற்போது மிகுந்த பரப்பை ஏற்படுத்தியிருக்கும் சகோதரி ரிஸானா நபீக் விவகாரம் தொடர்பில் இஸ்லாமிய வரம்புகளுக்குட்பட்ட நேர்மையானதும், நியாயமானதுமான ஒரு கண்ணோட்டத்தை இங்கே பகிரவிளைகின்றோம்.

நுழைய முன்பாக....

ஏதாவதொன்றை விமர்சிக்கும் போது தகுந்த ஆதாரம், நேர்மை, நடுநிலைமையான பார்வை போன்றன இன்றியமையாதவைகளாகின்றன. அறிவுபூர்வமான, ஆக்கபூர்வமான விமர்சனங்கள் இந்தப்பண்புகளைக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த முறைகளைக் கொண்டிராத விமர்சனங்களால் நல்ல மாற்றங்களைத் திருத்தங்களை ஏற்படுத்த முடியாது என்பதுடன் அவை விமர்சனம் என்ற பேரால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட ஒருவர் மீது ஏற்படுத்தப்படும் பழிவாங்கலாக, சேறுபூசலாகவே கருதப்படும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

சகோதரி ரிஸானா நபீக் விவகாரம் தொடர்பான கருத்தாடல்கள், விமர்சனங்களை பார்க்கும் போது தனிப்பட்ட ஒருவர் மீதான அனுதாபம் என்ற பெயரில் சவூதியின் சட்டங்களைக் குறைப்பட்டுக் கொள்வதாக எண்ணி இஸ்லாத்தின் கொள்கைகள், சட்டங்கள் சர்வசாதரணமாக குறைகாணப்படுகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சகோதரி ரிஸானா நபீக் அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானதுதானா? சவூதியரசு இவ்விடயத்தில் பக்க சார்பாக நடந்து கொண்டதா? போன்ற விடயங்கள் பற்றிப் பேசுவது தவறல்ல.

ஆனாலும் அது இஸ்லாத்தின் சட்டங்களில் கையாடல் செய்கின்ற நிலைக்கு போய் விடக்கூடாது என்பதில் நாம் மிகுந்த அவதானத்தோடிருக்க வேண்டும்.

ஆனாலும் முஸ்லிம்களிலேயே ஒரு சாரார் மரண தண்டனை சட்டத்தையே கேள்விக் குறியாக விமர்சிக்கும் நிலையேற்பட்டிருக்கிறது.

மார்க்க விளக்கமுள்ளவர்கள் என்று கருதப்படுவோர் கூட 'அந்தக் காலத்து அரபுகளிடம் பழிக்குப்பழி வாங்கும் வழக்கமிருந்தது இஸ்லாம் அதனை அங்கீகரித்தாலும் கூட....' என்று பேசத் தலைப்பட்டுவிட்டனர். சவூதியை விமர்சிப்பதற்கப்பால் இஸ்லாம் விதித்துள்ள மரண தன்டனைச் சட்டத்தையே விமர்சிக்குமளவுக்கு இவர்களின் கருத்துக்கள் வளர்ந்துவிட்டன என்பதையே நாம் இங்கே சுட்டிக்காட்டுகிறோம். இஸ்லாத்துக்கு வெளியிலிருந்து வரும் விமர்சனங்களைப் பார்க்கும் போது 'இஸ்லாம் சிறுபிள்ளை என்று கூடப்பார்க்காமல் தண்டிக்குமளவிற்கு இரக்கமற்றது. சாந்தி பிறந்த மண்ணிலேயே சாந்தி செத்து விட்டது' என்று இஸ்லாத்தை முழுமையாகவே அவை பிழைகாண்கின்றன.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை சரியா? தவறா? சட்டங்களை அமுலாக்குவதில் சவூதியில் பாரபட்சங்கள் காட்டப்படுகின்றனவா? என்ற விடயங்களைப் பேசுவது இஸ்லாத்தைப் பாதிக்காது. தனிப்பட்ட ஒரு பார்வையாகவே அது அமையும். அப்படியான விமரிசனங்கள் ஆதாரங்களோடு முன்வைக்கப்படும்போது ஏற்பது ஒரு ஞாயஸ்தனின் கடமை. அதே வேளை மரண தண்டனை விடயத்திலே நாம் நெகிழ்வோமாயின் அது இஸ்லாத்தை விமரிசிப்பதாகவே அமையும்.

மரண தண்டனை என்பது இஸ்லாத்தில் ஒரு பகுதியாகும். எப்போது மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்? யாருக்கு வழங்கப்பட வேண்டும்? அதற்கான விசாரணை எப்படியிருக்க வேண்டும்? அதற்கான சாட்சிகளை எவ்வாறு கையாள வேண்டும்? அவை நிரூபிக்கப்பட்டால் எவ்வாறு தண்டிக்க வேண்டும்? தண்டப்பரிகாரத்தை எவ்வாறு வாங்குவது? வாங்கமலிருப்பதற்கு மாற்றுத்தரப்பிற்கு என்ன உரிமையிருக்கிறது? உடன்படிக்கை செய்தவரைக் கொன்றால் என்ன? தாய் பிள்ளையைக் கொலை செய்தால் என்ன செய்ய வேண்டும்? என ஒவ்வொன்றுக்குப் பிரத்தியேகமான சட்டங்கள் இஸ்லாத்திலுண்டு. மரண தண்டனையை எழுந்தவாரியாக இஸ்லாம் கூறவில்லை.

ரிசானாவின் பிரச்சனை சம்பந்தமாக

2005ம் ஆண்டு மேமாதம் ரியாத் நகரில் தவாத்மீ என்ற இடத்துக்குப் பணிப்பெண்ணாக ரிஸானா நபீக் செல்கின்றார். அங்கு சென்ற சில நாட்களிலேயே கொலைக் குற்றச்சாட்டுக்குள்ளாகி பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றார். '4மாதக் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் போது அது தொண்டையில் கட்டியதால் நான் குழந்தையின் தொண்டையைத் தடவினேன். ஆனாலும் குழந்தை மரணித்து விட்டது' என்று அவர் தனது வாக்கு மூலத்தில் கூறியிருக்கிறார். மூன்று முறை நடைபெற்ற விசாரனைகளிலும் அவர் இதையே கூறியிருக்கிறார்.

குழந்தையின் பெற்றோரின் வாக்கு மூலத்தில் 'இப்பெண்மணிக்கும் எங்களுக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. எமக்கிடையே இந்த சிக்கல்தான் கொலைக்கான காரணம்' என்று கூறப்பட்டுள்ளது. பலதரப்பட்ட விசாரனைகள் நடாத்தப்பட்டு சுமார் ஒரு வருடத்தின் பின்பு உதைபியா கோத்திரத்தைச் சேர்ந்த காயித் இப்னு நாயிப் இப்னு ஜுஸ்யான் என்ற குழந்தையை இப்பெண்மணி கொலை செய்ததாக் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக இவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றது. சவூதி சட்டப்படி விசாரனையின் பின்னர் மரண தண்டனைதான் என்பது உறுதியாகிவிட்டால் மூன்று மாதங்களில் தண்டனை நிறைவேற்றப்பட்டு விடும். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட தரப்பிடம் மன்னிப்பு அல்லது தண்டப்பரிகாரம் பெறுவதற்காக மூன்று தடவை அவகாசம் வழங்கப்படும். ஆனாலும் சர்வதேச அழுத்தங்கள், இலங்கை அரசின் தலையீடு போன்றவைகளால் மேலும் பல விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு இக்காலக்கெடு சுமார் ஏழு வருடங்கள் வரை நீடித்தது.

இச்செய்தி பற்றி மீடியாக்கள் :

இச்செய்தியை மீடியாக்கள் கையாண்ட முறைகளுக்குப்பின்னால் பல உள்நோக்கங்கள் காணப்பட்டன. இதையொரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி சவுதி அரசை முழுமையானளவில் சிலர் விமர்சிக்கத்துவங்கினர். சிலர் இதை வைத்து நபியவர்கள் காலத்திலும் இவ்வாறுதான் தண்டனைகள் வழைங்கப்பட்டன. இப்படியொரு மார்க்கம் மனித குலத்துக்குத் தேவைதானா? என்று இஸ்லாத்தையே விமர்சித்தனர்.

இவ்வழக்கு விசாரணைகள் நீடித்திருந்த ஆறு வருட காலமும் இப்பிரச்சினை தொடர்பில் விதவிதமாக விவாதிக்க மீடியாக்களுக்கு நல்ல சந்தர்ப்பமாகவிருந்தது.

இந்த சகோதரி வறுமையில் தவித்தவர் என்பதால் இவர் மீது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் அனுதாபங்கள் அதிகரித்தன. அதிலும் தனது எதிர் கலாத்துக்காக ஒரு நல்ல வீட்டைக் கட்ட வேண்டும், திருமணம் போன்ற அவசியங்களால் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகச் சென்ற சில நாட்களிலேயே இவ்வாறு அசாதாரண நிலைமை அவருக்கேட்டபட்டமைதான் இவர் மீது மனிதாபிமானமுள்ள அனைவருக்கும் அனுதாபத்தை உண்டாக்கியது.

உணவில் எலிமருந்தைக்கலந்து கொடுத்து தாலா என்ற குழந்தையைக் கொலை செய்ததாக இந்தோனேசியப் பெண்மணி மீது குற்றம் சாட்டப்பட்டு அவ்வழக்கு இன்னும் நிலுவையிலுள்ளது. அதே போன்று மிஷாரீ என்ற குழந்தையைக் கொலை செய்ததாக எத்தியோப்பியப் பெண்ணொருவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டு அதுவும் நிலுவையிலுள்ளது. இதனால் இந்த நாடுகளைச் சேர்;ந்த பணிப்பெண்களுக்கு சவுதியில் நல்லபிப்பிராயம் குறைந்துள்ளது. பொதுவாக இலங்கைப் பணிப்பெண்கள் இவ்வாறான குற்றச் செயல்களிலீடுபடுவது மிகவும் அரிதென்பதால் 'இலங்கைப் பணிப்பெண்கள் குற்றம் செய்வது குறைவு' என்ற கருத்து பரவலாக சவுதி நீதி மன்றங்களில் காணப்படுகின்றது. இதுவும் இந்த தண்டனை காலந்தாழ்த்தப்பட் காரணமாயிருந்தது. இதற்கான முழு ஒத்துழைப்பையும் சவுதியரசு வழங்கியிருந்தது.

ஆனால் இந்நிலையை தலைகீழாக மாற்றி இலங்கை சகோதரி மீது அனுதாபக் தெரிவிக்கின்றோம் என்று கூறி 'சவுதியர்கள் இறக்கமற்றவர்கள் இவ்வளவு கெஞ்சி மன்னிப்புக் கேட்ட பின்னரும் கொஞ்சம் கூட அவர்கள் இரக்கம் காட்டவில்லையே, ஆனால் ஓர் ஐரொப்பியப் பெண்ணாக இருந்தால் மன்னித்திருப்பாளல்லவா? இந்தப் பெண்மணி ஒரு முஸ்லிமாக இருந்தும் மன்னிக்கவில்லையே' என்று சிலர் விமர்சித்தனர்.

இன்னும் சிலர் 'இது கொலையே அல்ல வேண்டுமென்றே சவுதியரசு இதைக் கொலைக் குற்றச்சாட்டாக்கி அதை நரூபித்து, கேட்க ஆளில்லாத ஓரேழையென்பதற்காக இவ்வாறு தண்டனை வழங்கியுள்ளது' என்று விமர்சித்தனர்.

இன்னும் சிலர் 'அரச குடும்பத்தவராகவிருந்தால் அவருக்கு இவ்வாறு மரண தண்டனை கொடுப்பார்களா?' என்று பேசுகின்றனர். 'மேற்கு நாட்டவராவிருந்தால் இப்படி மரண தண்டனை வழங்கியிருப்பார்களா?' என்று வேறு சிலர் கேட்கின்றனர். இன்னும் சிலரோ 'அஜமி அரபி என்ற பாகுபாட்டினாலேயே இவ்வாறு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது' என்று விமர்சித்தனர்.

'ரிஸானா நபீக்குடைய வயது 17 ஆகவே 17 வயதுடையவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது சர்வதேச சட்டங்களை மீறுவதாகும்' என்று இன்னும் சில விமர்சனங்கள் கூறுகின்றன. இந்தக் கருத்தைப் பொறுத்த மட்டில் 17 வயதுக்குக் குறைந்தவர்களை பணிப்பெண்களாக சவுதியோ இலங்கையோ அனுமதிக்காது என்பதற்காக இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் முகவர்களே இந்த சகோதரியின் வயதைக் கூட்டிக் காட்டி முறைகேடாக கடவுச்சீட்டைத் தயார் செய்து அனுப்பியுள்ளனர். விசாரனையின் போது வயதைக் காரணம் காட்டி இவருக்குத் தண்டனை நிறேவேற்ற முடியாது என்று கூறப்பட்டிருந்தது. இதை மையமாக வைத்து 'இலங்கை அரசு வயதை நிரூபித்தும் அதை சவுதியரசு கண்டு கொள்ளவில்லையே' என்றும் ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.

கட்டுஇரையின் தொடர்ச்சிக்கு "Next " "கிளிக்" செய்யவும்.