Home கட்டுரைகள் சமூக அக்கரை தட்ஸ் தமிழ் இணையதளத்தின் பொய்ப்பிரச்சாரம்!
தட்ஸ் தமிழ் இணையதளத்தின் பொய்ப்பிரச்சாரம்! PDF Print E-mail
Friday, 25 January 2013 07:29
Share

தட்ஸ் தமிழ் இணையதளத்தின் பொய்ப்பிரச்சாரம்!

  சங்கை ரிதுவான் 

இந்தியாவில் எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் அடுத்த 10 நிமிடத்தில் அந்த குண்டுவெடிப்புகளுக்கு காரணமே இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தினர் என்று ஊடகத்துறையும், உளவுத்துறையும் செய்தி வெளியிட்டு வந்தது நாட்டு மக்கள் நன்கு அறிவர்,

செய்தி கூறியதோடு மட்டுமில்லாமல் குண்டுவெடிப்பை காரணம் காட்டி அந்த ஊரில் உள்ள அப்பாவி முஸ்லிம்கள் சிலரை விசாரணை என்ற பெயரில் கைது செய்து அழைத்து செல்லும் காவல்துறை,

ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் என காலம் ஓடிய பின் இவர்கள் அப்பாவிகள் என கூறி விடுதலை செய்துவந்தது, அந்த பத்து ஆண்டுகளில் குண்டுவைத்த காவி பயங்கரவாதிகள் வெளியில் சுற்றி திரிவார்கள், மேலும் பல ஊர்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவார்கள்.

இந்நிலையில் இவை அனைத்தையும் உற்று கவனித்த லல்லு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் சில மாதங்களுக்கு முன் பிரதமரை நேரில் சந்தித்து...

நாட்டில் எங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தினரே காரணம் என உங்களது ஆளுகைக்கு உட்பட்ட உளவுத்துறையும், ஊடகத்துறையும் செய்தி வெளியிடுகிறதே, அப்படியென்றால் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தின் தலைவர் யார்? அந்த இயக்கத்தின் அலுவலகம் எங்கு இருக்கிறது? என்று 20 க்கும் மேற்பட்ட கேள்விக்கணைகளை தொடுத்தவுடன், பதில் தெரியாமல் விழிபிதுங்கிய பிரதமர் இது பற்றி எங்கோ தவறு நடந்துள்ளது, இல்லாத ஒரு இயக்கத்தை இருப்பதாக தமது உளவுத்துறையும், ஊடகத்துறையும் செய்தி வெளியிட்டது பற்றி உடனடியாக எனது நேரடி பார்வையில் விசாரணை நடத்துகிறேன் என பிரதமர் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் சம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு உள்ளிட்டவைகளில் காவி பயங்கரவாதிகளே அப்பாவி இந்தியர்களை கொன்று குவித்தது தெரியவந்தது.

இந்நிலையில் இந்தியாவில் இந்தியன் முஜாஹிதீன் என்ற இயக்கம் இல்லவே இல்லை என்று திட்டவட்டமாக தெரிந்துள்ள நிலையில், தட்ஸ் தமிழ் என்றழைக்கப்படும் ஒன் இந்தியா தளத்தின் காவி புத்தி செய்தி வெளியிட்டுள்ளது.

குடியரசு தினத்தன்று டெல்லியில் 4 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்த லஷ்கர் இ தொய்பா திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தினரின் உதவியுடன் வெடிப்பொருட்கள் இந்தியாவிற்குள் வந்துவிட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

தட்ஸ் தமிழ் என்றழைக்கப்படும் ஒன் இந்தியா தளத்தின் நிர்வாகமே உன்னிடம் சில கேள்விகள்....

1) டெல்லியில் 4 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்த லஷ்கர் இ தொய்பா திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தினரின் உதவியுடன் வெடிப்பொருட்கள் இந்தியாவிற்குள் வந்துவிட்டதாகவும் சொன்னாயே இந்த செய்தியை சொன்ன உளவுத்துறை அதிகாரி யார் ?

2) இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தினரின் உதவியுடன் வெடிப்பொருட்கள் இந்தியாவிற்குள் வந்துவிட்டார்கள் என்றால் அவர்கள் வரும்போது இந்திய பாதுகாப்பு படை தூங்கி கொண்டிருந்ததா ?

3) இந்தியாவிற்குள் வந்துவிட்டார்கள் என்றால் இதுவரை அவர்களை கைது செய்யாதது ஏன் ?

4) பிரதமருக்கே தெரியாத இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தினரை பற்றி தெரிந்து வைத்திருப்பதால் அந்த இயக்கத்தின் தலைவர் யார் ? அந்த இயக்கத்தின் அலுவலகம் இந்தியாவில் எங்கு இருக்கிறது ?

5) இல்லாத இயக்கத்தை ஊடகத்துறையும், உளவுத்துறையும் உருவாக்கியுள்ளதை நாடே அறிந்துள்ள நிலையில் அரைத்த மாவையே மீண்டும் அரைக்க பார்க்கிறாயே நாட்டு மக்களை பற்றி அந்த அளவிற்கு கேவலமாக நினைத்து விட்டாய்,

உன்னுடைய செய்தி திணிப்பை நாட்டு மக்களுக்கு தெள்ளத் தெளிவாக தோலுரித்து, இந்திய ஊடகத்துறையின் தலைவரான உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி உயர்திரு மார்கண்டே கட்ஜு அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உனது அங்கீகாரத்தை ரத்து செய்து, உனக்கு எதிராக நீதிமன்ற படியை ஏறி சட்டத்தின் பிடியில் உன்னை சிக்கவைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை எச்சரிக்கை........!!