Home கட்டுரைகள் பொது தாலிபானாக மாறும் சீன அமெரிக்க கூட்டணி!
தாலிபானாக மாறும் சீன அமெரிக்க கூட்டணி! PDF Print E-mail
Monday, 31 December 2012 19:44
Share

தாலிபானாக மாறும் சீன அமெரிக்க கூட்டணி!

சீனாவும் அமெரிக்காவும் சேர்ந்து கொண்டு புத்தர் சிலையை ஆப்கானில் இடிக்க கிளம்பிவிட்டன...! அதாவது தாலிபான் செய்த வேலையை செய்ய ஆரம்பித்து விட்டன..! ஆனால்... இடிப்பு பின்னணியை பார்த்தால்... தாலிபான் எவ்வளவோ தேவலை என்பீர்கள்..!

அன்று... ஐநாவின் யுனெஸ்கோ தாலிபான் அரசுக்கு ஆப்கானிய குழந்தை நலத்துக்கு நிதியுதவி அளிக்க மறுத்துவிட்டது. ஆனால், பெரும் நிதியை தந்து தாலிபான் புத்த சிலை உள்ள எரியாவை world heritage center என்று ஆக்கி சுற்றுலா தளமாக உலகுக்கு திறந்து வைக்க சொன்னது..! புத்தரை கடவுளாக கும்பிட ஒரு ஆப்கானிய குடிமகன் கூட இல்லாத நிலையில்... வெறும் சிலைக்கு மில்லியன் கணக்கில் டாலரை வீச தயாராக இருக்கும் ஐநா... ஆப்கானிய குழந்தைகள் நலன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற பயங்கரவாத நிலையில்... இருந்தது..!

அப்போதுதான்... கடுப்பாகிய தாலிபான் அந்த உலகமகா முட்டாள்த்தனத்தை செய்தது..! அந்த சிலையை குண்டு வைத்து உடைத்து விட்டு... 'இப்போ என்ன செய்வீங்க.. இப்போ என்னா செய்வீங்க...' என்று கேலியாக குதிக்க... அதுவரை தனது எதிரியான ரஷ்யாவையே தான் சப்ளை செய்த ஆயுதங்கள் மூலம் அபாரமாக போரிட்டு தோற்கடித்து துரத்தி அடித்தவன் தாலிபான் என்பதால் அவன் உள்ளுக்குள் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்த அமெரிக்கா... இப்போது தனது சொல்லையே கேட்கவில்லை என்றால்..?

'ஐநா தான் அமெரிக்கா... அமெரிக்காதான் ஐநா' என்று பாமர தாலிபானுக்கு தெரியாவிட்டாலும்... உலகுக்கே அந்த உண்மை தெளிவாக தெரியுமே..!

அது மட்டுமில்லை... ரஷ்யாவை வீழ்த்திய வேலை முடிந்து விட்டது..! மெலும் ரஷ்யாவையே பல துண்டாக உடைத்தாகி விட்டது. 'இனி தாலிபான் எனும் அடியாளுக்கு வேலை இல்லை. ஆகவே, அவனை என்கவுண்டரில் போட்டுத்தள்ள ஒரு காரணம் உண்டாக்க திட்டம் போடணுமே' என்று மண்டையை சொறிந்து கொண்டு இருந்த அமெரிக்காவுக்கு... ஆடே முன் வந்து 'நான் உனக்கு பிரியாணி ஆகிறேன் தோழா' என்று சொன்னால் வேண்டாம் என்றா சொல்லும்..? ஆக, நேற்றைய அமெரிக்க நண்பன் தாலிபான்... (அ)இன்றைக்கு உலக பயங்கரவாதி ஆகிவிட்டான்..!

ஆக, அன்று.... தாலிபான்கள் ஒரு பாமியான் சிலையை உடைத்த பயங்கரவாதத்துக்கு (?!) எதிராக ஆகாசத்துக்கு எம்பி குதித்தன, அமெரிக்காவும் சீனாவும்..! சீனாவுக்கு எதுக்கு மூக்கு வேர்த்தது..? தன் கம்யூனிசத்துக்கு மதம் இல்லை' என்று சொல்லிக்கொண்டாலும், சீனர்களின் கடவுளான புத்தர் என்றதும்... எங்கிருந்தோ மஞ்சள் துண்டு காவி மத ஓட்டுபொறுக்கி அரசியல் பறந்து வந்து சீனா மூக்கு மேலே உக்காந்துக்குது பாருங்க..!

இன்று அதே ஆப்கானிஸ்தானில்... மற்ற புத்தர் சிலைகளை இதே அமெரிக்காவும் சீனாவும் தனது ஆப்கானிய பொம்மை கைக்கூலி அரசுடன் சேர்ந்து கொண்டு.... சத்தம் இன்றி உடைக்க இருக்கின்றன..!

ஏன்..? என்ன காரணம்...? அந்த சிலைகளுக்கு அடியில்தான்...... அவை திருட வேண்டிய ஆப்கானியர்களுக்கு சொந்தமான காப்பர் கனிம வளங்கள் ரொம்பி வழிகிறதாம்..!

இங்கே காப்பர் பற்றி கொஞ்சம் நான் சொல்ல வேண்டும்..!

2007 இல், வீட்டு தேவைக்காக ஒரு ரோல் குண்டன் காப்பர் வயர் வாங்கினேன். 550 ரூபாய்...! ஆனால், அடுத்த வருடம், அதே பாக்கெட்... அதே கம்பெனி... 1125 ரூபாய் ஆகிவிட்டது...! அப்போதே அவ்ளோ ரேட்... இப்போது எவ்ளோ இருக்குமோ..! அறிந்தோர் இன்றைய ரேட் சொல்லுங்க..!

அந்த... "ஆப்கானிய (அதாவது அமெரிக்க)-சீன காப்பர் கனிம தோண்டல் ஒப்பந்தம்" சுமார் $ 3 பில்லியானாம்...! ஆனால், ஆரம்பிக்கும் போதே $ 30 மில்லியன் ஊழல் கசமுசா..! "இந்த கனிம செல்வத்தை விற்று பெறப்போகும் இலாபம் எல்லாம் பாமர ஏழை ஆப்கானியர் வாழ்வை முன்னேற்றும்" என்று ஆப்கானுக்கான அமெரிக்க பொம்மை அதிபர் சொல்கிறார்..! ஹா..ஹா...ஹா...!

உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளம் கொண்ட இராக்கிலும் ஒரு அமெரிக்க பொம்மை அதிபர் இப்படித்தான் (சதாம் உசேன் பிடிபட்ட பின்னர் தான் அதிபர் 'ஆக்கப்பட்டதும்') இப்படித்தான் சொன்னார்...! பாவம் அந்த படித்த பணக்கார இராக்கியர்கள்..! சதாம் உசேன் என்ற "அமெரிக்க முன்னாள் நண்பன் பின்னாள் எதிரி" யால்... ஓட்டாண்டி ஆகி சீர் குலைந்து நிம்மதி இல்லாமல் தற்போது வீதியில் திரிகிறார்கள்..! வளம் பெற்றவர்கள் என்னவோ அமெரிக்கர்கள்..!

அதேபோல... இப்போது... படிக்காத... பாமர ஆப்கானியர்கள்... தாலிபான் என்ற "அமெரிக்க முன்னாள் நண்பன் பின்னாள் எதிரி" யால்... ஓட்டாண்டி ஆகி சீர் குலைந்து நிம்மதி இல்லாமல் புழுதியில் கிடக்கிறார்கள்..! இவர்களின் காப்பர் கனிம வளம் கொள்ளை போவதாவது அவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை..!

எப்படி தெரியும்..? அவ்ளோ(?) படித்த நமக்கே தெரியாமல் சுமார் இருபது வருஷமாக நம்முடைய இந்திய கனிம வளம்... கர்நாடக-ஆந்திர மண்ணில் பலகட்சி சேர்ந்து செய்த கூட்டு களவாணித்தனம் மூலம் டன் டன்னாக காணாமல் போன கதை இப்போதுதானே

mine scandal என்ற பெயரில் நமக்கே தெரிகிறது...!சரி... மீண்டும் புத்தர் பக்கம் வருவோம். அப்போது.......... 'புத்தர்.... புத்தர்....

Save Bamiyan Budhdha' என்று கத்தியவர்கள்... இப்போது எங்கே போனார்கள்..? நல்லா இருக்குப்பா இந்த உலக நியாயம்...!ஆக, மொத்தத்தில்....

"நான் அணுகுண்டு வீசினால்... அது ஊசி வெடி..!

நீ தும்மினால் அதுதாண்டா பயங்கரவாதம்..!"

-----இதுதான் ஆப்கானில்... அமெரிக்க-சீன பாலிஸி..!

உலகமே இப்போ சைலன்ட் லிசனர் & வாட்சர்...! நாமும்..?

ஆதாரம் : நியூயார்க் டைம்ஸ் - சண்டே ரிவீவ்

WHEN the Taliban blasted the famous Bamiyan Buddhas with artillery and dynamite in March 2001, leaders of many faiths and countries denounced the destruction as an act of cultural terrorism. But today, with the encouragement of the American government, Chinese engineers are preparing a similar act of desecration in Afghanistan: the demolition of a vast complex of richly decorated ancient Buddhist monasteries.

The offense of this Afghan monument is not idolatry. Its sin is to sit atop one of the world's largest copper deposits.

The American government is okay with the destruction of the Buddhist site when the Chinese are doing it but not okay when the Taliban do it. Let's see what the difference is:

The copper at the Mes Aynak mine, just an hour's drive south of Kabul, is to be extracted under a roughly $3 billion deal signed in 2007 between Afghanistan and China's Metallurgical Group Corporation. The Afghan finance minister, Omar Zakhilwal, recently said the project could pump $300 million a year into government coffers by 2016. But the project has been plagued by rumors of corruption; there was widespread talk of a $30 million kickback involving the former minister of mines, who resigned.

Oh, copper you say! Three billion dollars worth of it! By all means, please destroy as much as possible. Will the Afghans see the $3 billion? Who knows!

source: www.pinnoottavathi.blogspot.com