Home குடும்பம் இல்லறம் உடலுறவின் போது ஜின்கள்...!!!

இஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari

உடலுறவின் போது ஜின்கள்...!!! PDF Print E-mail
Thursday, 27 December 2012 06:32
Share

உடலுறவின் போது ஜின்கள்...!!!

  அபூ மஸ்லமா   

மனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் "உடலுறவு" இன்றியமையாதது.

மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்லிமிற்கும் வித்தியாசம் உள்ளது. தனிமை மட்டும் இருந்தால் அனைத்தையும் மறந்து வரையறையற்று, பல விதங்களில் உடலுறவினை குஃப்பார் மேற்கொள்வர்.

ஆனால் ஒரு முஸ்லிமிற்கு உடலுறவு சட்டங்கள் பற்றி இஸ்லாம் தெளிவாக அறிவித்துள்ளது. அந்த சட்டங்களிற்கு அமையவே உண்மை முஸ்லிம் உடலுறவினை மேற்கொள்வான்.

உடலுறவின் போது வுளு செய்து கொள்வது,

அதற்கான துஆவினை ஓதிக்கொள்வது,

மார்க்க அடிப்படையில் உடலுறவு கொள்வது,

உடலுறவின் பின்னர் மீண்டும் சுத்தம் செய்து மீண்டும் வுளு செய்து கொள்வது.

உடலுறவின் போது அணிந்திருந்த ஆடையை நீக்கி கழுவி, வேறொரு ஆடையை அணிந்து கொள்வது,

குளிப்பினை தொழுகைக்கு முன்னதாக மேற்கொள்வது போன்றவற்றிற்கு பல விதிகள் உள்ளன.

ம்மில் பலர் இதன் படி தமது உடலுறவை ஒரு இபாதாவாக மேற்கொள்கின்றனர். இங்கே தான் திருவிளையாடல் ஆரம்பமாகிறது.

ஜின்களின் உணவு

ஹதிஸின் சுருக்கம், அப்போது (எலும்பும் கெட்டிச்சானமும் வேண்டாம் என்று ஏன் சொன்னீர்கள்) அதற்க்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவ்விரண்டும் ஜின்களின் உணவாகும் என்னிடம் நஸ்பீன் என்னுமிடத்தை சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது அவை நல்ல ஜின்களாக இருந்தன அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான் (அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச்சானத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப்பெற வேண்டும் என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காக பிரார்த்தித்தேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் அபூ குறைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் புகாரி 3860).

ஜின்களின் ஒரு பிரிவாகிய ஷெய்த்தான்கள் இந்த உணவை தவிர நஜீஸ்களையும் உணவாக உட்கொள்ளும். மல சல கூடங்கள், சவச்சாலைகள், பிரேதபரிசோதனை கூடம், சத்திர சிகிச்சை கூடம், சந்தை, குப்பை கூழங்கள் வீசும் கழிவுப்பிரதேசம், இடுகாடு, சுடுகாடு, கபுறுஸ்தானம் போன்றவற்றில் இந்த் ஷெய்த்தான்கள் அதிகம் அதிகம் காணமப்படும். அங்கே தமக்கான நஜீஸான உணவு கிடைக்காதா? என வட்டமிட்டு வளைய வரும்.

இவற்றில் புத்திசாலித்தனமிக்க ஷெய்த்தான்கள் சில ஆண் பெண் உடலுறவு கொள்ளும் போது அதனை காண வரும்.

அங்கும் தமக்கான நஜீஸான உணவு இருக்கும் என்பது அவற்றின் நம்பிக்கை.

என்ன தான் மார்க்க அடிப்படையில் உடலுறவு கொண்டாலும், வுளு செய்து, உடைகளை கழுவி, சுத்தமாக வந்து படுத்தாலும், நாம் உடலுறவு கொண்ட விரிப்பு (பெட்சீட்) மீது ஈரத்தன்மை பட வாய்ப்புள்ளது.

இந்திரியம் போன்ற அந்த ஈரங்களை இந்த ஷெய்த்தான் விருப்புடன் உண்ணும்.

இந்த உணவிற்காக தானும் தன்னுடைய நண்பர்களையும் அழைத்து வரும் இந்த ஷெய்த்தான் தூக்கத்தின் போது கெட்ட கனவுகளை ஏற்படுத்தும்.

அருகில் உள்ள குழந்தையை அச்சுருத்தி அழ வைக்கும். எதற்காக இதனை அது செய்கிறது.?...

மீண்டும் கண் விழிக்கும் கணவன் மனைவி இரண்டாம் முறையாகவும் உடலுறவு கொள்ள மாட்டார்களா என்று இந்த ஷெய்த்தான்கள் காத்திருக்கும். தங்கள் நஜீஸான உணவிற்காக!

ஆம் சகோதரர்களே..!! நாம் எமது கடமையான குளிப்பு அல்லது சுத்தப்படுத்தல் என்பவற்றை மட்டுமே கடமையாக எண்ணுகிறோம். கட்டிலின் மேல் விரிப்பை அதன் ஈரப்பதனை நாம் கருத்தில் எடுப்பதில்லை. இந்த கெப்பில் ஷெய்த்தான்கள் விளையாடுகின்றன.

நாம் நம் உடல் பாகங்களை, உடையை சுத்தம் செய்யும் போது கூடவே படுக்கை விரிப்பையும் சுத்தம் செய்ய வேண்டும். அல்லது அந்த விரிப்பிற்கு மேலாக பிரத்தியேகமாக இன்னொரு விரிப்பை விரித்து உடலுறவு செய்வோம். பின்னர் நாம் சுத்தம் செய்யும் அதே வேளை மேற்படி விரிப்பையும் கழுவி விடுவோம்.

சில வேளைகளில் நாம் உடலுறவில் ஈடுபடாமலே நம் குழந்தை வீறிடும். அல்லது கேவலமான காம கனவுகள் நம்மில் வந்து செல்லும். இதற்கு காரணம் ஷெய்த்தான்கள் ம்மை எழுப்ப முற்படுகின்றன.

இவற்றில் இன்னும் சில இருக்கின்றன. குழப்பம் செய்பவை. அவற்றிற்கு உணவை விடவும் குழப்பங்களை வேடிக்கை பார்ப்பது சந்தோஷமளிக்கும் விடயம்.

கணவன மனைவியரிடம் பித்னா உருவாககாதா என்று இவை தவமிருக்கும்.

நாம் உடலுறவு செய்ய மாட்டோமா என்ற எதிர்பார்ப்பில். மார்க்கம் சொன்னதை மட்டும் பின்பற்றினால் போதாது. மார்க்கம் சொன்னதை அனுஅனுவாக அச்சொட்டாக பின்பற்ற வேண்டும். அதனையே மார்க்கத்தை பின்பற்றல் என்று சொல்வர்.

ஏக இறைவன் ம்மனைவரையும் ம் சக்திக்கும் மீறிய தீய சக்திகளின் கேடுகளில் இருந்தும் பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாப்பானாக.

ஆமீன்.