Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் கலப்புத் திருமணம் - ஒரு மீள்பார்வை
கலப்புத் திருமணம் - ஒரு மீள்பார்வை PDF Print E-mail
Wednesday, 19 December 2012 06:50
Share

ப்புத் திரும் - ஒரு மீள்பார்வை

      மவ்லவி கான் பாகவி        

கலப்புத் திருமணம் சாதியக் கொடுமைகளைக் களைய இந்தியர்களுக்குக் கிடைத்த ஒரு வரம் என்றே பலரும் நம்புகின்றனர். ஆனால், இன்று கலப்புத் திருமணம் பெரிய சாபமாக மாறி, தருமபுரிகள் அதர்மபுரிகளாகக காட்சியளிக்கின்றன.

தருமபுரி அருகே நாயக்கன் கொட்டாய் என்ற கிராமத்தில் 268 வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன; 54 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பலருக்குக் காயம். ஊராட்சி மன்றத் தலைவர் தாக்கப்பட்டார். சேத மதிப்பு ரூ. 3.50 கோடி.

எல்லாம் ஒரு காதல் திருமணம் செய்த லீலைகள்தான். இளவரசன் என்ற தலித் வாலிபன், திவ்யா என்ற வன்னியப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டானாம்! அவமானம் தாளாமல் பெண்ணின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்துகொள்ள, பிரச்சினை மோதலாக வெடித்தது.

''இது நிறுபூத்த நெருப்பாய், தமிழகக் கிராமங்கள் அனைத்திலும் இந்த நிலைமைதான் காணப்படுகிறது. பட்டியல் ஜாதியினர் (தலித்கள்) திட்டமிட்டு பிறசாதிப் பெண்களைக் காதலிக்கிறார்கள்; சீண்டி வேடிக்கை பார்க்கிறார்கள்; வன்கொடுமைச் சட்டம் இருக்கும் தைரியத்தில் செயல்படுகிறார்கள் என்பது ஏனைய சாதியினரின் பரவலான குற்றச்சாட்டு'' என்கிறார், தினமணி வைத்தியநாதன்.

  கலப்புத் திருமணம்  

இந்துச் சமூகத்தில் சாதிகளுக்குக் கணக்கில்லை. இந்துச் சமூகத்தில் சில பழக்கவழக்கங்களைப் பொதுவாகக் கொண்டிருப்பதும் ஒருவருடைய குடும்பத்தார், உறவினர் போன்றோரைச் சார்ந்திருப்பதும் பலபடி நிலைகளில் அமைக்கப்பட்டதுமான பிரிவுதான் 'சாதி' எனப்படுகிறது.

இந்துச் சமூகத்தை மூன்று சாதிகளாகப் பிரிக்கலாம். 1. பிராமணர் போன்ற வளர்ந்த சாதி. 2. பிராமணர் அல்லாத இந்துக்களுள் தலித்துகளைவிட உயர்ந்தவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் சாதி இந்துக்கள். இவர்களைத்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பார் என்கிறது அரசாங்கம்.

இவர்களில் நூற்றுக்கணக்கான சாதிகள் அடக்கம். வன்னியர், தேவர், பிள்ளைமார், நாடார் போன்ற சாதியினர் சாதி இந்துக்கள்தான். 3. தலித் சமூக மக்கள்; 'பட்டியல் சாதியினர்' எனப்படுவோர்.

சாதிகளிடையே ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் காலம்காலமாக இருந்துவருவதால், சுதந்திர இந்தியாவில் இதை ஒழிக்கப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தாழ்த்தப்பட்டவர்களைத் தூக்கிவிடுவதற்காக இடஒதுக்கீடு, மானியம், நல உதவிகள் எனப் பலவகையான திட்டங்கள் நாடெங்கும் செயல்படுத்தப்படுகின்றன.

சாதியை ஒழிக்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்றுதான் 'கலப்புத் திருமணம்'. அதாவது வேறு சாதி அல்லது வேறு மதத்தைச் சார்ந்தவருடன் செய்துகொள்ளும் திருமணம். இத்தகைய கலப்புத் திருமணம் இந்தியச் சட்டப்படி செல்லும் என 1954ஆம் ஆண்டில் இந்தியா சட்டம் இயற்றியது. 'ஷிஜீமீநீவீணீறீ விணீக்ஷீக்ஷீவீணீரீமீ கிசிஜி. 1954' என்பது இச்சட்டத்தின் பெயர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை, பெரியார் ஈ.வெ. ராமசாமி மற்றும் ரகுபதி வெங்கட ரத்தினம் நாயுடு, மன்தேனா வெங்கடராஜு போன்றோர் இச்சட்டம் கொண்டுவர கடுமையாகப் போராடியவர்கள் ஆவர்.

கலப்புத் திருமணங்களை அரசே செய்துவைக்கும் வகையில்தான் 'பதிவுத் திருமணம்' என்றொரு நடைமுறையை அரசு கொண்டுவந்தது. கலப்புத் திருமணத்தைச் சமூக அமைப்புகள் தடுக்கும்போது, காதலர்கள் திருமணப் பதிவாளரிடம் வந்து மாலை மாற்றி, திருமணம் செய்துகொள்வதற்கு இது வகை செய்தது.

  மீள்பார்வை  

இந்தியாவில் சாதி ஒழிந்ததா? தீண்டாமைதான் நின்றதா? இல்லவே இல்லை. மாறாக, ஒவ்வொரு சாதிக்கும் ஒரு அரசியல் கட்சி; ஒரு தினசரி பத்திரிகை; ஒரு தொலைக்காட்சி சேனல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என சாதியின் அடையாளம் ஆழமாக வேர் பதித்திருக்கிறதே தவிர, சாதி மறையவில்லை.

புரட்சிக் கருத்துகளை அன்றே சொன்னவர் பாரதியார் எனும் உயர்சாதிக் கவிஞர் என்று சொல்கின்றனர். ஆனால், 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாட்டோடு பாட்டாக பாடிவிட்டுச் சென்றாரே தவிர, அவரும் சாதிய மாச்சரியத்திற்கு உட்பட்டவர்தான் என்றே தெரிகிறது.

பெ. தூரன் எழுதிய 'பாரதி தமிழ்' எனும் நூலில் பாரதியாரின் இக்கருத்து இடம்பெறுகிறது:

ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தொல்லைப்படுவோமேயன்றி அழிந்து போய்விடமாட்டோம்.

சாதி இந்துத் தலைவர்கள் கலப்புத் திருமணத்தை வெளிப்படையாகவே எதிர்க்கின்றனர். ''காதல் திருமணத்தை நான் எதிர்க்கவில்லை; அதே நேரத்தில், காதல் திருமணம் என்ற பெயரில் திட்டமிட்டே எங்களை அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது'' என்கிறார் மருத்துவர் ராமதாஸ். இவர் ஒரு வன்னியர்.

கொங்கு வேளாளர் அமைப்பின் தலைவர் ஒருவர், எங்கள் சாதி அசிங்கப்படுவதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்கிறார்.

'பிராமணர்' என்ற இதழின் ஆசிரியர் ஒருவர், கலப்புத் திருமணத்தை எங்கள் சமூகம் அங்கீகரிக்காது என்று பேட்டி அளிக்கிறார்.

தருமபுரி அட்டூழியத்திற்கு மருத்துவர் ராமதாசே காரணம் என்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனும் இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவர் தமிழரசனும்.

ஆக, கலப்புத் திருமணத்திற்கு, சமூக மக்களிடம் ஆதரவில்லை. தலைவர்களிடமும் வரவேற்பு இல்லை. இவர்களெல்லாரும் சொல்லும் காரணம் இதுதான்: எங்கள் சமூகத்திற்கென்று சில பழக்கவழக்கங்களும் கலாசார முறைகளும் நாகரிகமும் உண்டு. அடுத்த சமூகம் கலக்கும்போது இவையெல்லாம் காலப்போக்கில் காணாமல் போய்விடும். ஒரு சமூகத்தின் அடையாளமே அதன் கலாசார வீச்சுதான். எங்கள் அடையாளத்தை இழக்க நாங்கள் தயாராயில்லை.

ஒருபடி மேலே ஒருவர் சொன்னார்: முன்னோர்களின் மரபுவழியாகத்தான் அடுத்த தலைமுறையின் பண்பாடும் நாகரிகமும் செழிக்கும் என்பது அறிவியல் உண்மை. இந்த மரபுவழியைச் சிதைக்கும் ஒரு நச்சுப் பாம்புதான் கலப்புத் திருமணம். இதை எப்படி அங்கீகரிக்க முடியும்? சொல்லுங்கள்!

வட இந்தியாவில் கௌரவக் கொலைகள் நடந்துவருகின்றன. அதாவது மேல்சாதிப் பெண்ணைக் கீழ்சாதி வாலிபன் காதலிக்கிறான் என்று தெரிந்தவுடன், பெண்ணின் பெற்றோர் சொல்லிப்பார்ப்பார்கள். மகள் பிடிவாதம் செய்தால், அன்பு காட்டுவதைப் போன்று பேசி வீட்டிற்கு அழைத்துவந்து, பெற்றோரே விஷம் கொடுத்து கொன்றுவிடுகிறார்களாம்! இதனால் குடும்பத்தின் மானமும் சாதியின் கௌரவமும் காக்கப்படுவதாக அவர்கள் எண்ணுகிறார்கள்.

  கலப்படத் திருமணம்  

மேலே கண்டது கலப்புத் திருமணம். அதாவது ஒரே மதத்தில் இருவேறு இனங்களைச் சேர்ந்தவர்களிடையே நடக்கும் திருமணம். ஐ.ஆர். இருபது அரிசியையும் பொன்னி அரிசியையும் (அவர்கள் எண்ணப்படி) கலப்பது. மணமக்கள் இருவரின் மதக் கொள்கை, பலதெய்வ நம்பிக்கை ஆகும். வழிபாட்டு முறை ஒன்று; பழக்கவழக்கங்களில் பெரும்பாலானவை ஒன்று; உணவு முறை (சிலரைத் தவிர) ஒன்று; செத்தால் சுடுகாட்டில் எரிப்பதும் ஒன்று.

சிற்சில வித்தியாசங்களைத் தவிர, மற்றெல்லா அம்சங்களும் ஒன்றாக இருக்கின்ற இருவேறு சாதி இளைஞனும் இளைஞியும் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதையே இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கலாசாரச் சீரழிவும் பண்பாட்டுச் சிதைவும் ஏற்படுகிறது என்று பதைக்கிறார்கள்; பணத்திற்காக எங்கள் பெண்ணைக் கெடுக்கிறார்கள் என்று கூக்குரலிடுகிறார்கள்.

முஸ்லிம் இளம்பெண்களைத் திட்டமிட்டே, இந்தப் பட்டியல் சாதி இளைஞர்கள் உள்ளிட்ட சிலர் காதலிப்பதைப் போன்று நடித்து, இறுதியில் நகைநட்டுகளைப் பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிடுவது, அல்லது திருமணம் செய்து குழந்தையைக் கொடுத்துவிட்டு ஓடிப்போவது, அல்லது தொடர்ந்து சேர்ந்து வாழ்வது என்று சதியாட்டம் போடுகிறார்களே! முஸ்லிம் பெற்றோர்கள் எவ்வளவு நொந்துபோவார்கள்!

அவன் பலதெய்வக் கொள்கை உடையவன்; அவளோ ஓரிறைக் கொள்கையில் பிறந்தவள். அவன் சிலைகளை வழிபடுபவன்; அவளோ ஓரிறையைத் தொழுபவள். அவன் குடிப்பான்; பன்றி உண்பான்; திருவிழா போவான்; ஆட்டம் பாட்டம் என்று மனம்போன போக்கில் வாழ்வான். அவளுக்கோ இவை எல்லாம் தடை செய்யப்பட்டவை.

இங்கு கலாசாரச் சீரழிவு என்ன! நம்பிக்கையே தகர்ந்துபோகிறது! மரபுவழியே நிர்மூலமாகிப் போகிறது! இறந்தால், இறுதித் தொழுகை நடத்தி கண்ணியமான முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டியவளை, நெருப்புக்கு இரையாக்கி சாம்பலைத் தூற்ற வேண்டியதுள்ளது. எப்படி மனம் பொறுக்கும்? அவளைப் பெற்றவர்கள் சமுதாயத்தில் எப்படி தலைகாட்டுவர்?

இது, சர்க்கரையில் பொட்டாசியத்தைக் கலப்படம் செய்வதற்கு, அல்லது தேயிலைத் தூளில் அடுப்புக் கரியைக் கலப்படம் செய்வதற்கு ஒத்ததல்லவா? எனவே, இதை 'கலப்புத் திருமணம்' என்று அழைக்க முடியாது; 'கலப்படத் திருமணம்' என்றுதான் சொல்ல வேண்டும்.

மதவெறி சக்திகள் தலித் இளைஞர்களுக்கும் வேறுசிலருக்கும் பணம் கொடுத்து, முஸ்லிம் பெண்களைக் கெடுக்கத் திட்டமிட்டு, இரகசியமாகச் செயல்படுகின்றன என்று சொல்லப்படுகிறது. நீங்கள் முஸ்லிம் சமுதாயத்தை நோக்கிவிட்ட அதே அம்பு, இப்போது உங்களையே திருப்பித் தாக்க ஆரம்பித்ததன் அடையாளம்தான் தருமபுரிகள்! இன்று நீங்கள் அனுபவிக்கிற வலியை நாங்கள் பல நாட்களாக அனுபவித்துவருகிறோம்! அதைத் தடுக்க யாரேனும் முயன்றீர்களா? துணைபோனீர்களே! -என்று முஸ்லிம்கள் கேட்கிறார்கள்.

மொத்தத்தில், பட்டியல் சாதியினர் பணத்திற்காக, சுகபோக வாழ்வுக்காக, அழகான குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நடத்திவரும் இந்த நாடகம் தடுக்கப்பட வேண்டும். இதற்குத் துணைபோவோர் தவறை உணர்ந்து திருந்த வேண்டும். இந்தியச் சமூகத்தில் பரவிவரும் இந்த நோய்க்குத் தடுப்பூசி போட்டு, நோய் வருமுன் காத்திட வேண்டும். இதற்கு எல்லா சமூகத் தலைவர்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுப்பார்களா?

(முஸ்லிமல்லாத ஒருவர் இஸ்லாத்தில் இணைந்தபின் அவருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கும் நடக்கும் திருமணம் கலப்புத் திருமணமும் அல்ல; கலப்படத் திருமணமும் அல்ல என்பது குறிப்பிடத் தக்கது.)

source: www.khanbaqavi.blogspot.in