Home கட்டுரைகள் பொது ஜனநாயமும் தீவிரவாதமும் ஒன்றே! (1)
ஜனநாயமும் தீவிரவாதமும் ஒன்றே! (1) PDF Print E-mail
Tuesday, 18 December 2012 19:14
Share

Image result for republic and extremism

ஜனநாயமும் தீவிரவாதமும் ஒன்றே! (1)

தீவிரவாதம்..! என்றால் என்ன? இதுவரை எந்த அரசாவது அது பற்றிய விளக்கத்தைக் கொடுத்துள்ளதா?

தீவிரவாதம், ஜனநாயம்., இவற்றுடன் இவற்றுக்கு எதிரான இஸ்லாம் என்ற தலைப்பின் கீழ் உங்களைச் சந்திப்பதற்குக் காரணம் இருக்கின்றது. உங்கள் கைகளில் ஏதேனும் செய்திப் பத்திரிக்கை இருக்கின்றதா? சற்று அதன் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள். ஏதாவது ஒரு பக்கத்திலாவது இந்த மூன்று சொல்லாட்சிகளையும் குறித்ததொரு தகவல் இல்லாமல் இருக்காது.

இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு இப்பொழுது அந்த வார்த்தைகளைக் கேட்டால் எந்த அதிர்ச்சியும் வருவதில்லை. காலப் போக்கில் அவை நமது வாழ்வில் ஒரு அங்கம் என்ற அளவில் நம்மை அது பக்குவப்படுத்தி விட்டது, அல்லது மரத்து விட்டது என்று தான் அர்த்தம்.

சரி..! இந்த மூன்று அம்சங்கள் குறித்தும் விளக்கம் எதுவும் இருக்கின்றதா? ஆம்..! இஸ்லாம் என்ற சொல்லுக்கு கட்டுப்படுதல், அமைதி என்ற பல அர்த்தங்கள் உண்டு. பின் எப்படி அதனுடன் மேலும் இரண்டு வார்த்தைகளை இணைக்க முடிகின்றது. இணைத்துப் பேச முடிகின்றது. ஏன் அந்த வார்த்தைகளுக்கு புது அர்த்தம் எதுவும் கண்டு பிடித்தாகி விட்டதா? அல்லது இஸ்லாம் என்ற பதத்திற்கும் அந்தக் கொள்கையைப் பின்பற்றுகின்றவர்களுக்கும் முரண்பாடுகள் மிகைத்து விட்டதா? எது சரி..!

இதெல்லாம் எங்களுக்கு எதற்கு என்று சோம்பல் முறிக்கின்றீர்களா? முடியாது..! சமூகப் பொறுப்பு என்ற ஒன்று அனைவருக்கும் உண்டு. ஏனெனில் ஜனநாயகம், தீவிரவாதம் என்ற சொல்லாட்சிக்குப் பின்னால் தான் ஹிரோஷிமாவில், நாகசாகியில் அணுகுண்டுகள் போடப்பட்டன.

ஜனநாயகம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தித்தான் ஈராக்கின் மக்கள் அபூகிரைப் சித்ரவதைக் கூடத்தில் அலங்கோலப்படுத்தப்பட்டனர். தீவிவாதம், ஜனநாயகம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தித் தான் குவாண்டனாமோவில் சித்ரவதைக் கூண்டுகளுக்கு உள்ளே மிருகங்களை விடவும் கேவலமாக மனிதன் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றான்.

நாளை இதே சொல்லாட்சியைப் பயன்படுத்தி உங்களையும், நீங்கள் இல்லையென்றால் உங்களது சந்ததியினரை இதே நிலைக்கு ஆளாக்கி விட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். எனவே, இந்த கட்டுரையின் பக்கம் உங்களது கண்கள் நிலைகுத்தி அல்ல, நிதானமாக சிந்தித்து சிந்தித்து நகரட்டும்..! ஆரம்பம்..!

தீவிரவாதம்..! என்றால் என்ன? இதுவரை எந்த அரசாவது அது பற்றிய விளக்கத்தைக் கொடுத்துள்ளதா? சரி..! குஜராத்.., சபர்மதி எக்ஸ்பிரஸ்.., சரி இதற்கு மேல் விளக்கத் தேவையில்லை, கிட்டத்தட்ட 2000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அந்த படுகொலைக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட 'சபர்மதி எக்ஸ்பிரஸை பெட்ரோல் ஊற்றி முஸ்லிம்கள் கொளுத்தினார்கள்' என்பதை இன்றைய விசாரணைக் கமிஷன்கள் மறுக்கின்றது. ஆனால், அந்த ஜனநாயக அரசு முன்னின்று நடத்திய அந்த இனப்படுகொலைக்குப் பின்னர், மேலும் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டார்கள், இன்னும் தடா என்ற கொடுஞ் சட்டத்தின் கீழ் இன்றும் கொட்டடிகளில் கிடக்கின்றார்கள்.

சரி..! அவர்கள் தீவிரவாதிகள்., அவர்கள் செய்த தவறு தான் என்ன? தங்களது இளவல்களை, பெண்களை, குழந்தைகளை, தாய்மார்களை, தந்தைமார்களை, உற்றார் உறவினர்கள் என்று சங்க பரிவாரக் கும்பல்களின் கொலை பாதகச் செயலுக்கு இரையாக்கினார்கள். அதனால் அவர்கள் மீது தீவிரவாதப் பட்டம். முஸ்லிம்..! தீவிரவாதிகள்...

சரி..! சற்று வெளியில் வருவோம்..! ஈராக்..! அவர்களும் தீவிரவாதிகள்.., எப்படி..? அங்கே ஒரு ஆட்சியாளர், அவர் தான் சதாம் உசேன்.., அமெரிக்காவின் சொல்லுக்கு ஆட மறுத்தார். எண்ணெய் வளங்களை அமெரிக்காவுக்குத் தாரை வார்ப்பதற்குப் பதிலாக தன்னை வளப்படுத்திக் கொள்ளப் பார்த்தார், இன்னும் அரபுக்களின் வளங்களை அரபுக்கள் தான் அனுபவிக்க வேண்டும் என்றார். இஸ்ரேல் என்ன வளைகுடாப் பகுதிக்கு என்ன தாதாவா? என்றார்.

பிடித்தது சனியன். தீவிரவாதிகளுக்குப் பயிற்சி.., இராசயன ஆயுத உற்பத்தி என்ற பிரச்சாரம்..! சரி.., போர் நடந்தது. தீவிரவாதிகளைக் காணோம், அவர்களை விட்டாகி விட்டது, இரசாயன ஆயுதத்தையும் காணோம்.., ஈராக்கில் நுழைந்ததற்கான காரணமே இன்னும் பிடிபடவில்லை. சரி.., விட்டு விட்டுப் போக வேண்டியது தானே..! அபூ கிரைப்பில் ஏன் அந்த சித்ரவதை..! அமெரிக்கப் படைகள் நிரந்தரமாக இருப்பதற்கான படைத்தளங்கள் கட்டமைக்கப்படுகின்றன. காரணம், தீவிரவாதம்.., ஜனநாயக விரோதம்..,

யுக்ரைனில் ஜனநாயம் என்ற போர்வையில் ரஷ்யா ஒரு அணியிலும், மேற்கத்திய நாடுகள் ஒரு அணியிலும் ஒரு நாட்டின் இறையாண்மையை, மக்களை துண்டாக்கி பண பலமும், படை பலமும், மீடியா பலமும் பொருந்திய மேற்கத்திய நாடுகள் தனது ஆதிக்கத்தில் என்றும் போல் தக்கவைத்துக் கொண்டது.

மற்றொமொறு யுக்தியாக, மக்களால் நன்மை செய்வார்கள் என்ற உயர்ந்த நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாயர்கள் தனது சுய லாபத்திற்காக வலிமையுள்ளவர்களின் அடிவருடிகளாக நீதியையும், தன்மானத்தையும், மக்களின் நம்பிக்கையையும் அடகு வைத்து பலம் பொருந்தியவர்களின் காவலாளிகளாக மாற்றப்படுகிறார்கள். முரண்டு பிடிப்பவர்கள் தண்டிக்க வைக்கப்படுகிறார்கள்.

சரி..! நமது பக்கத்து நாடு.., நேபாளம். மன்னராட்சி அறிமுகம். பத்திரிக்கைகளுக்கு வாய்ப்பூட்டு..! என்ன செய்ய.., அமெரிக்கா மன்னராட்சிக்கு மலர்வளையம் வைக்கின்றது, நவீன ஆயுதங்கள் இறக்குமதியாகின்றன. பங்களாதேஷில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைமை நிலவுகின்றது. மன்மோகன் சிங் குதிக்கின்றார். சார்க் மாநாட்டுக்கு நான் போக மாட்டேன். ஜனநாயகம் மலர வேண்டும். நல்ல காரணம், நல்ல நோக்கம் தான். என்ன செய்ய கொள்கைப் பிடிப்பு தளர்கின்றதே..? எவ்வாறு..?

சற்று எட்ட தூரத்தில் பர்மா..! இராணுவ ஆட்சி.., ஜனநாயகத்திற்குப் போராடும் ஒரு பெண்மணி, வீட்டுக் காவலில்.., சார்க் மாநாட்டுக்குப் போகாத மன்மோகன் சிங் ன் அமைச்சர், இராணுவ ஆட்சி நடக்கும் பர்மா விற்கு ஒப்பந்தம் போடப் போகின்றார், ஏன்.., பர்மா, பங்களாதேஷ் வழியாக இந்தியாவுக்கு எண்ணெய்க் குழாய் பதிப்பதற்கான ஒப்பந்தத்திற்காக..! ஏன்..! அங்கு விளையும் ஓபியம் என்ற கஞ்சா தான் இன்றைக்கு உலக வல்லரசின் உளவுத் துறைக்கே தீணி போடுவதாக வேறு பிரச்சாரம் அந்த நாட்டிலேயே வெகுவேகமாக நடக்கின்றது. அதன் முன்னாள் தலைவரே அதனை ஒப்புக் கொண்டுள்ளார். மனித விரோத, சர்வாதிகார இராணுவ ஆட்சியுடன் எப்படி ஒப்பந்தம் போடுகின்றோம். ஆனால் பக்கத்தில் பாகிஸ்தானில் மட்டும் ஜனநாயகம் இன்னும் மலரவில்லை என்று தினம் அரைப்பக்கத்துக்கு செய்தி வாசிக்கின்றோம்.., முரண்பாடுகள்..!

சரி.., மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசூலா அதிபர் அவ்வப்பொழுது அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றார். அவரைக் கவிழ்ப்பதற்கான அத்தனை முயற்சிகளும் செய்யப்படுகின்றன. சரி..! கியூபா.. பிடரல் காஸ்ட்ரோ.., அவரையும் மக்கள் நேசிக்கின்றார்கள். இருந்தும் என்ன? நான் நேசிக்கவில்லையே..! என்கிறார் புஷ்..! பின்னே என்ன அங்கும் தீவிரவாதத்திற்கு பயிற்சி.., ஆயுத சப்ளை..!

சரி.., இப்படியே போய்.., இப்பொழுது ஈரான், சிரியா அடுத்த இலக்காக குறி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் ஈரானின் மீது பறந்து கொண்டு எங்கே ஆதாரம் கிட்டதா என்று அலைகின்றது. அந்நிய நாட்டின் வான் எல்லை மீறப்படுகின்றது. அந்நிய நாட்டின் இறையாண்மை தூக்கி எறிப்படுகின்றது.

ஆக, நாம் தீவிரவாதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தேடினால் எங்கெங்கோ அலைகின்றீர்களே என்று கேட்கின்றீர்களா..?!

மேலே உள்ள ஆதாரங்களின் மீது சற்று கவனத்தைத் திருப்பினால், அதிகாரத் தோரணையுடன் ஆட்சியில் வீற்றிருக்கும்.., சுருங்கச் சொன்னால் நாட்டின் உயர்அந்தஸ்தில் இருந்து கொண்டு தடி எடுத்தால் அது நிர்வாக யுக்தி, அரசியல் சாணக்கியம். அதேநேரத்தில் அதிகாரம் இல்லாத.., ஏன்.., தனிநபர் ஆயுதம் எடுத்தால் தான் என்றில்லை.., வீட்டில் ஆடு அறுக்க கத்தி வைத்திருந்தாலும் அது தீவிரவாதம்.

பக்கத்து நாட்டின் மீது போட்டுத் தாக்க ஒரு நாடு அணுஆயுதம் தயாரித்தால் அது ராஜ தந்திரம்.., ஆனால் தனிமனிதன் வெடிக்காத பட்டாசை கையில் வைத்திருந்தால் அது தீவிரவாதம். இப்பொழுது புரிகின்றதா.., ஆட்சி, அதிகாரம், ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துக் கொண்டு ஒரு சமூகத்தின் மீது அராஜகம் கட்டவிழ்த்து விடப்படும். ஆனால், அந்த சமூகம் எந்தவித உணர்ச்சியையோ எதனையும் அது வெளிக்காட்டக் கூடாது. புழுப் பூச்சியை குச்சியால் நிமிண்டினால் கூட சற்று அது உணர்;ச்சியைக் காட்டும், ஆனால்.., மனிதன்.., காட்டக் கூடாது. அதிலும் முஸ்லிம் காட்டவே கூடாது.

ஆப்கானில், பாலஸ்தீனில், ஈராக்கில், செசன்யாவில்.., காஷ்மீரில்.., தாய்லாந்து, என்று நீங்கள் எங்கு திரும்பினாலும் முஸ்லிம்கள் மீது சொல்லொண்ணா படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும், அந்த சமூகம் உணர்ச்சியற்ற ஜடமாக உலா வர வேண்டும் என்பது விபரீதமானதொரு எதிர்பார்ப்பு..

அடுத்தது ஜனநாயகம்..! நம் நாட்டில் இதுவரை நடந்த தேர்தல்களைக் கருத்தில் கொண்டால், கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கு மேல் எங்கும் ஓட்டு பதிவானது கிடையாது. ஆக, 40 சதவீதம் பேர்கள் தேர்தல்முறையை விட்டே விலகி நிற்கின்றார்கள். மீதி 60 சதவீதம் பேர்கள் தங்களுக்குப் பிடித்த வேட்பாளரைத் தேர்வு செய்கின்றார்கள்.

குறைந்தது மூன்று கட்சிகள் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால், சராசரியாக ஒரு கட்சிக்கு 20 சதவீத ஓட்டு என்றால், வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஓட்டளித்தவர்கள் 20 சதவீதம் என்றாகின்றது. ஆக, ஜனநாயகம் என்பது 80 சதவீதம் பேர் வெறுப்பில் 20 சதவீதம் பேரின் விருப்பம் நிறைவேறுகின்றது. இது என்ன ஜனநாயகம்..!

இது ஜனநாயகம் என்றால், முரண்பாடுகள் தான் முதலாக அமையும். ஏனெனில், அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றோம் என்று வெற்றி பெற்றவர்கள் அறிவிப்பது என்பது, அறுதிப் பெரும்பான்மையின் வெறுப்பில் வெற்றி பெற்றிருக்கின்றோம் என்று தான் அர்த்தமாகின்றது.

இது மக்களால் மக்களுக்காக தேர்வு செய்யப்படும் தலைமை. தலைமைகள் என்ன ஆரோக்கியமாகவா இருக்கின்றது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பதவி வகிப்பவர்களுக்கு குறைந்த பட்ச தகுதி என்னவென்றால், அவர் மீது ஏதாவது ஒரு வகையிலாவது கிரிமினல் வழக்கு பதிவாகி இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகி விட்டது.

சரி..! ஜனநாயகப்படி தேர்வு செய்யப்பட்ட அரசுகள், நாடுகள் சந்தித்த பிரச்னைகள் என்ன?..! ஜனநாயகம் இல்லை, மக்கள் அவதிப்படுகின்றார்கள், அவர்களுக்கு சுவாசத்தை மீட்டுத் தரப் போகின்றோம் என்றார்கள். ஆப்கானில் தேர்தல் நடந்தன. வாக்குப் பெட்டிகள் பாக்கிஸ்தானில் இருந்து, வாக்குச் சீட்டுகள் முத்திரையிடப்பட்டபடி ஆப்கான் வந்து சேர்ந்தன.

என்ன ஆச்சரியம்..! ஜனநாயகத் தேர்தலில் கர்சாய் வெற்றி பெற்று விட்டார். மிக நீண்ட நாட்கள் கழித்து ஈராக்கில் ஜனநாயக அடிப்படையில் தேர்தல். வேட்பாளரே முன் வந்து நான் தேர்தலில் நிற்கவில்லை என்று அறிவித்த அதிசயம் அங்கு நிகழ்ந்தது.

சரி.., மற்ற நாடுகளாக இருந்தால் அங்கு சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடக்கும். கண்காணிப்பு இருக்கும். ஆனால், ஈராக்கில் அவர்களுக்கு அனுமதி இல்லை. அதிகம் பேசிய அல் ஜஸீரா தொலைக்காட்சி நிலையம் பூட்டப்பட்டது, ஏன்..? நிருபர்களும் கூட நிரந்தரமாக உலகத்தை விட்டே அனுப்பப்பட்டு விட்டார்கள். காரணம்.., அங்கு ஜனநாயகம் இல்லை.

ஏன் இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் ஜெர்மனியில் நடந்த தேர்தலில் ஹிட்லர் அரிதப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அதுவே இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்த காரணிகளில் ஒன்றாகவும் அமைந்தது. ஏன்.., ஜனநாயகம்.., எங்கள் பாஷையில் ஜனநாயகம் என்றால்.., எங்களது நலன், அமெரிக்காவின் நலன், யூதர்களின் நலன், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நலன்.., இதுவே இரண்டாம் உலகப் போருக்கான விதை. ஜெர்மன் மக்கள் ஹிட்லரை விரும்பினால் என்ன, நாங்கள் அவரை விரும்பவில்லையே..!

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பம் அது. இந்த வரலாறு அமெரிக்க, பிரிட்டிஷ், யூத அடிவருடிகளினால் எழுதப்பட்ட வரலாறல்ல. உண்மை வரலாறு. போலந்து நாட்டில் ஆரம்பித்த போரின் ஆரம்பமானது, ஏதோ தார்மீகக் காரணத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டதல்ல, மாறாக அது ஒரு சுய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடலோடு ஆரம்பிக்கப்பட்டது. போலந்தின் மீது ஜெர்மனி போர் தொடுப்பதற்கு முன்பாக போலந்தின் இராணுவமானது செக்கோஸ்லோவாகியாவைத் தாக்கியது. ஹிட்லரோடு போலந்து நாட்டவர்கள் நல்லதொரு தொடர்போடும், உறவோடும் தான் அப்பொழுது வரை இருந்தார்கள்.

இந்த நேரத்தில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மனி மத்திய ஐரோப்பிய வணிக மையத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கின்றது. ஐரோப்பிய மார்க்கெட்டில் ஜெர்மனியின் கை ஓங்கி வருவதை பிரிட்டன், அமெரிக்கா மற்றும் யூத வணிக நிறுவனங்கள் முற்றிலும் விரும்பவில்லை. உலகிலேயே முதல் சமூகப் பாதுகாப்பு திட்டத்தையும், அத்துடன் ஜெர்மனி நாட்டவர்கள் அனைவருக்கு இலவச மருத்துவ வசதியையும் ஹிட்லரின் அரசு அறிவிக்கின்றது.

இந்த நிலையில், நியூயார்க், லண்டன் நகரங்களைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கக் கூடிய யூத வியாபாரக் கம்பெனிகள் வெளிப்படையாகவே ஹிட்லரின் அரசுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் என்று செய்தித் தாள்களில் அறிவிப்புச் செய்கின்றன. இது நடந்தது 1933 ல், இதற்குப் பின்னர் ஜெர்மனியில் நடைபெற்ற ஜனநாயக அடிப்படையிலான தேர்தலில் ஹிட்லர் வரலாறு காணாத வெற்றியைப் பெறுகின்றார். இதனை அடுத்து பாரிஸ் ல் இருந்து வெளிவந்த யூதப் பத்திரிக்கை ஒன்று (Le Droit de vivre) இவ்வாறு தலையங்கம் எழுதியது, ''ஹிட்லர் போரை விரும்பவில்லை, ஆனால் அவர் மீது நாங்கள் போரைத் திணிப்போம்'' என்றது.

அந்த நேரத்தில் பிரிட்டிஷ் முடியாட்சியானது கிட்டத்தட்ட 500 மில்லியன் ஆசிய மக்களையும், ஆப்ரிக்கர்களையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. ஹிட்லரின் ஜனநாயக அடிப்படையிலான தேர்தலானது தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஏனைய நாடுகளுக்கும் பரவினால் என்ன ஆவது என்று பிரிட்டிஷ் அரசு யோசிக்க ஆரம்பித்தது. ஹிட்லரின் மூளையில் உதித்த மூன்றாவது ரெய்க் என்ற திட்டத்தை நாசமாக்குவது என்று முடிவெடுத்தது பிரிட்டிஷ் அரசு.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஏனைய ஐரோப்பிய நாடுகளையும், இன்னும் அமெரிக்காவையும் விட வெகு வேகமாக முன்னேறி இருந்தது ஜெர்மனி. இன்னும் ஜெர்மனியின் அதிக மக்கள் தொகை வளர்ச்சியானது, ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக மனித வளத்தைக் கொண்ட நாடாகவும் அது திகழ்ந்தது. வின்த்;ரோப் ஆல்ட்ரிக் என்ற ஜேஸ் நேஷனல் பேங்க் ன் ஜெனரல் டைரக்டர் என்பவர் இவ்வாறு தனது கருத்தைப் பதிவு செய்திருக்கின்றார், அதாவது ''பிரிட்டிஷ் அரசு உருவாக்கும் அரசியல் சூழ்நிலைகள் ஹிட்லரை ஆயுதத்தைத் தூக்க வைக்கும்'' என்றார். போலந்து நாட்டவர்கள் ஜெர்மனியுடன் அமைதியாக இருக்கவே விரும்பினார்கள்.

இன்னும் ஹிட்லருடன் இணக்கமாக இருப்பதன் மூலம், சோவியத் அரசாட்சியின் பொழுது தாங்கள் இழந்த பகுதிகளை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர்கள் நம்பினார்கள். இன்னும் அமைதி நடவடிக்கைகளுக்குத் தோதாக பல வணிக வசதிகளை ஏற்படுத்தித் தரவும் ஜெர்மனி இணக்கம் தெரிவித்திருந்தது.

டான்சிக் துறைமுகப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வது, துறைமுகத்தை போலந்தும் ஜெர்மனியும் பயன்படுத்திக் கொள்வது என்பது போன்ற திட்;டங்களை ஹிட்லர் போலந்து அரசின் முன் வைத்தார். இருந்தும் என்ன செய்ய பிரான்ஸும், பிரிட்டனும் பின்னுக்கு நிற்கும் என்று நம்பி போலந்து ஏமாந்தது. அதனால் போலந்து அரசு துறைமுகத்தை உங்களுக்கு நாங்கள் தந்து விட்டால், எங்களது பொருளாதாரம் முடங்கி விடும் என்று அதற்கு இணங்க மறுத்தது.

ஹங்கேரி, சுவிட்சர்லாந்து மற்றும் செக்கோஸ்லோவிகியா போன்ற அண்டை நாடுகள் துறைமுகம் இல்லாமலேயே பணக்கார நாடுகளாக உள்ளன. எங்களுக்கு அதுவும் போய் விட்டால் நிலைமை மோசமாகி விடும் என்று கூறினார். இந்தப் பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவுகள் நடந்து கொண்டிருக்கும் போதே, போலந்து தன்னுடைய படைகளை ஜெர்மனிக்கு எதிராகத் திரட்ட ஆரம்பித்தது. இன்னும் இரண்டு நாடுகளும் எந்தவித ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலும் 25 வருடத்திற்கு ஈடுபடக் கூடாது என்ற ஒப்பந்தத்தையும் மீறி போலந்து ஜெர்மனிக்கு எதிராக போர் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் இறங்கியது.

போலந்தின் வெளியுறவு அமைச்சர் கோல் பெக் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் தயாராக இல்லை. ஹிட்லரோ பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்திக் கொண்டிருந்தார். டான்ஸிக் துறைமுகத்தை விடுவிப்பது, ஒரு வருடத்திற்குள் சர்வதேச கண்காணிப்பின் கீழ் அங்கு தேர்தலை நடத்துவது, தேர்தலுக்குப் பின் சிறு மக்கள் குழுவை இரு தரப்பிலும் பரிமாற்றம் செய்து கொள்வது, ஜெர்மனிக்கு எதிரான பிரச்சாரத்தை போலந்து பத்திரிக்கைகள் நிறுத்திக் கொள்வது போன்ற கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுவோம் என்றார் ஹிட்லர். ஆனால் போலந்து அதனை நிராகரித்தது.

இந்த நிலையில் ஆகஸ்டு 1939 ல் 76,535 ஜெர்மனியர்கள் போலந்தை விட்டும் வெளியேறினர். அவர்களில் ஒருஇனத்தாரான வோல்க்ஸ்டியூட்ஸ் என்பவர்கள் 4000 பேர் கொல்லப்பட்டனர். சிலர் சித்ரவதைகள் செய்யப்பட்டு அங்ககீனப்படுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட 12,500 ஜெர்மனியர்கள் போலந்தில் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டனர். அப்பொழுது, ஆகஸ்டு 30, 1939 ல் பிரிட்டனைச் சேர்ந்த ஹாலிபேக்ஸ் என்ற பிரபு ஒருவர், ஜெர்மனிய சிறுபான்மையினரை இனச்சுத்திகரிப்பு செய்வதை நிறுத்துமாறு போலந்தைக் கேட்டுக் கொண்டார்.

போலந்தின் உள்விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்ளுமாறு அவரை எச்சரித்தார் போலந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் கோல் பெக். போலந்து அரசே முன்னின்று மோடி வேலை பார்த்திருக்கின்றது. இருந்தும் என்ன.., அரசே முன்னின்று செய்வதால் அது தீவிரவாதமல்ல.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு "Next""கிளிக்" செய்யவும்.