Home குடும்பம் இல்லறம் தீயாய் திட்டாதே ஆண் இனமே...! பிடிவாதம்–வீம்பு பிடிக்காதே பெண் இனமே...! (1)

இஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari

தீயாய் திட்டாதே ஆண் இனமே...! பிடிவாதம்–வீம்பு பிடிக்காதே பெண் இனமே...! (1) PDF Print E-mail
Monday, 17 December 2012 07:37
Share

தீயாய் திட்டாதே ஆண் இனமே...! பிடிவாதம்–வீம்பு பிடிக்காதே பெண் இனமே...!

நாம்தான் குடும்பத்தை நிர்வகிக்கின்றோம் என்ற போக்கில்.

மனைவியுடைய நிலைமையை அனுசரித்து நடப்பது குறைந்தே வருகிறது. சிறிய தவறுகள் சமையலிலோ துணிமணி துவைப்பதிலோ நடந்துவிட்டால் போதும் அன்று வீட்டில் ரகளைதான். மனைவிமார்களை தீய வார்த்தைகளால் திட்டித்தீர்த்து விடுகின்றோம்.

மனைவிமார்கள் அந்த திட்டையெல்லாம் கேட்டுக்கொண்டு சும்மா இருந்து விடவேண்டும். அப்படியில்லாமல் அவள் திரும்ப ஏதாவது சொல்லிவிட்டால் போதும் திட்டு அடிப்பதில் போய் முடிந்து விடுகிறது. கோபம் அடங்காமல் அன்றைய தினம் அவரே ஹேட்டலில் போய் சாப்பிடும் நிலை. தங்களுக்கு ஏற்பட்ட கோபத்தை கட்டுப்படுத்த அடுப்படியில் சட்டி பாணை உடைப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர் நமது வீட்டுப்பெண்மனிகள். இல்லறத்திலும் இதனுடைய தாக்கம் தெரிகிறது. மீண்டும் நிலைமை பழைய நிலைக்கு வர நாட்கள் பல பிடிக்கின்றன.

சாப்பாடு மட்டும் "ஏதோ வாக்கப்பட்டு புள்ளய பெத்துக்கிட்டோம் என்பதற்காக சமச்சு போடப்படுகிறது", பல குடும்ப தலைவர்களின் இரவு நோர சாப்பாடு ஹோட்டலில் தான் என்பது வேறு விஷயம். வீட்டிற்குள் இருப்பதை விட வெளியில் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி என்ற நிலை பரவலாகிக் கொண்டு வருகிறது. இதுபோன்று குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லையா???? என யோசிக்கும்பொழுது..... உண்டு என்பதேயே.... இந்த கட்டுரையின் தலைப்பாக ஆக்கி, அதற்கான தீர்வுகளாக என்னுடைய சிறிய அறிவிற்கு எட்டிய விசயங்களை பகிர்ந்து கொள்வதே நோக்கமாகும்.]

  தீயாய் திட்டாதே ஆண் இனமே...! பிடிவாதம்–வீம்பு பிடிக்காதே பெண் இனமே...!        

தலைப்பு புதுமாதிரியாக இருப்பதாக தோணலாம்! எல்லாம் நம்ம... வீடுகளிலே நடக்கும் குடும்ப பிரச்சனை தான். இன்று பரவலாக ஒவ்வொரு குடும்பங்களிலும் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரையாக இதனை எடுத்துக்கொள்ளலாம்.

''அவனே, உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான்; மேலும் அதிலிருந்தே அதனுடைய துணையைப் படைத்தான்; அதனிடம் அது அமைதி பெறுவதற்காக.'' (அல்குர்ஆன் 7:189)

''மனிதர்களே! உங்களுடைய ரப்பை நீங்கள் அஞ்சி நடந்து கொள்ளுங்கள்- அவன் எத்தகையோனென்றால், ஒரே ஆத்மாவிலிருந்து உங்களை அவன் படைத்தான்; அதிலிருந்து அதனுடைய ஜோடியைப் படைத்து, அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்; (எனவே,) அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.'' (அல்குர்ஆன் - ஸூரத்துன்னிஸா: 01)

வாராவாரம் ஜும்ஆ குத்பாவில் ஓதப்படும் இந்த இரண்டாவது திருக்குர்ஆன் ஆயத்து, மனிதஇனத்தின் படைப்பை அழகாக நமக்கு எடுத்துக் காட்டி, அல்லாஹ்வை அஞ்சிக் நடந்து கொள்ளும்படி அறிவுறுத்துகிறது.

இருமணம் இணையும் திருமணங்கள் இந்நாட்களில் பல சிரமங்களுக்கு மத்தியில் நிறைவேறுகின்றன. திருமண ஏற்பாடுகளுக்காக நாம் செய்யும் செலவுகளும் அலையும் அலைச்சலும் அதிகமே. ஆனாலும் நடந்த சில மாதங்களிலேயே சில காரணங்களால் புதுமணத்தம்பதிகள் பிரிந்துவிடுவதை சமுதாயத்தில் காணுகின்றோம். பல குடும்பங்களில் குழந்தைகளை பெற்றெடுத்த பிறகும் கணவன் மனைவிக்குள் தினமும் தீராத சண்டைகளை கண்கூடாக கண்டு வருகின்றோம். சில குடும்பங்களில் சிறிய அளவில் ஆரம்பமாகும் பிரச்சனைகள் விஸ்பரூபங்களாக மாறி இடியப்ப சிக்கல்களில் போய் முடிந்து விடுகிறது. இதனால் வீட்டுக்குள்ளேயே தனிக்குடித்தன வெறுப்பு வாழ்க்கை. கணவன் மனைவியும் பேசி பல வருடங்கள் உருண்டோடிக் கொண்டிருக்கின்றன.

சாப்பாடு மட்டும் "ஏதோ வாக்கப்பட்டு புள்ளய பெத்துக்கிட்டோம் என்பதற்காக சமச்சு போடப்படுகிறது", பல குடும்ப தலைவர்களின் இரவு நோர சாப்பாடு ஹோட்டலில் தான் என்பது வேறு விஷயம். வீட்டிற்குள் இருப்பதை விட வெளியில் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி என்ற நிலை பரவலாகிக் கொண்டு வருகிறது. இதுபோன்று குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லையா???? என யோசிக்கும்பொழுது..... உண்டு என்பதேயே.... இந்த கட்டுரையின் தலைப்பாக ஆக்கி, அதற்கான தீர்வுகளாக என்னுடைய சிறிய அறிவிற்கு எட்டிய விசயங்களை பகிர்ந்து கொள்வதே நோக்கமாகும். தவறான கருத்துகள் ஏதும் இருந்தால் தயவுசெய்து வாசகர்கள் தெரியப்படுத்தினால் திருத்தி கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.

   பிறப்பு-இறப்பு    

உலகில் பிறந்துவிட்ட எல்லோருக்கும் மரணம் என்பது நிச்சயம் வரவேண்டி இருக்கிறது. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலம் சிறிது தான். என்னுடைய உம்மத்தினரின் சராசரி வயது அறுபதுக்கும் எழுபதிற்கும் இடைப்பட்டது தான் என்பது நபி மொழியின் கருத்தாகும். குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அதன் காதுகளில் பாங்கும் இகாமத்தும் சொல்லி முடித்து விடுகின்றோம். பாக்கி இருப்பது இமாம் தொழுக்கைக்காக தக்பீர் கட்டவேண்டியது தான். இதற்கு எத்தனை நிமிடங்கள் தேவைப்படும் என்பதை நாம் அறிவோம்.

குறைந்தது ஒன்று அல்லது இரண்டு நிமிடத்திற்குள் தான் இருக்கும். மறுமையுடைய வாழ்க்கையை கணக்கிடும் பொழுது, உலகின் இந்த இடைப்பட்ட சிறிய நிமிடத்திற்குள் மனித வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை நிகழ்வுகள். ஆரம்பகால வாழ்க்கை தாயின் அரவணைப்பு, அடுத்து இளமை காலம், அதற்கடுத்து கல்யாண பருவம், பின்பு கல்யாணத்தின் ஆரம்ப காலம்.., இடைப்பட்ட காலம், வாழ்க்கை முடிவுக்கு வர இருக்கும் கடைசி காலம்..., என்பது போன்ற வாழ்க்கைச் சக்கரம் தான் நம்முடைய இவ்வுலக வாழ்க்கையின் முறையாகும். இதற்கு மாற்றமாக இடையில் பிறக்கும்போது, சிறு வயதில், இளமையில்.., இறைவனின் அழைப்பை ஏற்று செல்பவர்களும் உண்டு. இவையாவும் இறைவனின் ஏற்பாடாகும். எந்த வயதில் யாருக்கு மரணம் வந்தாலும் அதனை பொருந்திக்கொண்டே ஆகவேண்டும். இதில் யாருக்கும் விதிவிலக்கில்லை...

  வாழ்க்கை என்ற சக்கரத்தில் ஒர் ஆணும் ஒர் பெண்ணும் :   

திருமணபந்தத்தில் இணைந்து குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். அந்த குடும்ப வாழ்க்கையில் அவர்கள் பலவிதமான நிலைகளை-சூழல்களை கடக்கவேண்டியுள்ளது. அச்சூழல்களில் பல பிரச்சனைகளும் உருவாகின்றன. அவ்வாறு ஏற்படும் பிரச்சனைகளில் சில இருவர்களின் சமானாத்தோடு முடிந்துவிடுகின்றன. சில முடியுறாக் கணம் போல் சிக்கலாய் இழுத்துக்கொண்டே செல்கிறது.

குடும்பம் என்றால் சிக்கல்கள் பிரச்சனைகள் வராமல் இருக்கமுடியாது. வரத்தான் செய்யும். ஆனால் அதனை எப்படி தீர்த்துக்கொள்வது என்பதில் தான் பிரச்சனை. யாரிடத்தில் தவறு.... ஈகோ பிரச்சனையில் நீயா.... நானா.... உனக்கு நான் என்ன இளச்சவனா... இளச்சவளா.... இவை போன்று பல.., அதன் தீர்வுகளும் பல...,

  கணவன்மார்களினால் ஏற்படும் பிரச்சனைகள் :   

பெண் என்பவள் அடிமையல்ல.....

திருக்குர்ஆன் விவரிக்கிறது...

ஆண்கள், பெண்களை நிர்வாகிக்கின்றவர்கள்; காரணம்: (ஆண், பெண் இருபாலாரான) அவர்களில் சிலரை ( - ஆண்களை) சிலரை ( - பெண்களை) விட அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான்; இன்னும் (ஆண்கள்) அவர்களுடைய பொருட்களிலிருந்து (பெண்களுக்காகச்) செலவு செய்கின்றனர்; எனவே நல்லொழுக்கமுள்ள பெண்கள் (தம் கணவன்மாருக்கு) இணங்கி வழிப்பட்டு நடப்பார்கள்; (கற்பும், மற்றும்) மறைவானவற்றை - அல்லாஹ் (கணவன்மார்களைக் கொண்டு) பாதுகாக்கின்ற காரணத்தால் – பாதுகாப்பவர்கள். அல்குர்ஆன் - (ஸூரத்துன்னிஸா: 34)

இந்த ஆயத்தின் கருத்தை சில குடும்பத்தலைவர்கள் தவறுதலாக எடுத்துக்கொண்டு, வீட்டிற்க்கு வரும் மனைவிமார்களை நமக்கு கீழ்வுள்ளவர்கள் தான் என்றென்னி அவர்களை அடிமைகளாக பார்க்கின்றனர். அதுபோல் நடக்கின்றனர். இது முற்றிலும் தவறாகும். குடும்ப சூழ்நிலையில் கணவனுக்கு உரிமைகள் இருப்பதுபோல் மனைவிக்கும் உரிமைகள் உண்டு. இதனை மறுக்கமுடியாது-மறக்கக் கூடாது. குடும்பத்தில் மனைவியை விட கணவனுக்கு பொறுப்புகள் அதிகம் என்பதை உணர்த்துவதே இந்த ஆயத்தின் கருத்தாக இருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

குடும்பத்தை சரியான முறையில் நடத்தி கொண்டு செல்வதற்கு, குடும்பத்திற்க்குத் தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கும் பொறுப்பு கணவனையே சாரும். மனைவியுடன் இல்லறவாழ்க்கையில் ஈடுபடுவதும், மனைவிக்கு வருடத்திற்கு இரண்டு உடுப்புகள் புதிதாக வாங்கிக்கொடுப்பதும் இதில் அடங்கும். (இரண்டு உடுப்பு என்பது கணவனுக்கு தான் என நம்வீட்டுப் பெண்மணிகள் எண்ணி இரண்டு சேலை எடுத்தால் ஒரு சட்டை இலவசம் போல் தங்களுடைய கணவன்மார்களுக்கு இரண்டு சட்டையை கடைகளிலிருந்து எடுத்து வந்து கொடுக்கிறார்கள்).

  நடப்பது என்ன?   

நாம்தான் குடும்பத்தை நிர்வகிக்கின்றோம் என்ற போக்கில் மனைவியை அடிமைபோல் நடத்துகின்ற நிலைமைதான் பரவலாக குடும்பங்களில் காணப்படுகிறது. மனைவியுடைய நிலைமையை அனுசரித்து நடப்பது குறைந்தே வருகிறது. சிறிய தவறுகள் சமையலிலோ துணிமணி துவைப்பதிலோ நடந்துவிட்டால் போதும் அன்று வீட்டில் ரகளைதான். மனைவிமார்களை தீய வார்த்தைகளால் திட்டித்தீர்த்து விடுகின்றோம். மனைவிமார்கள் அந்த திட்டையெல்லாம் கேட்டுக்கொண்டு சும்மா இருந்து விடவேண்டும். அப்படியில்லாமல் அவள் திரும்ப ஏதாவது சொல்லிவிட்டால் போதும் திட்டு அடிப்பதில் போய் முடிந்து விடுகிறது. கோபம் அடங்காமல் அன்றைய தினம் அவரே ஹேட்டலில் போய் சாப்பிடும் நிலை. தங்களுக்கு ஏற்பட்ட கோபத்தை கட்டுப்படுத்த அடுப்படியில் சட்டி பாணை உடைப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர் நமது வீட்டுப்பெண்மனிகள். இல்லறத்திலும் இதனுடைய தாக்கம் தெரிகிறது. மீண்டும் நிலைமை பழைய நிலைக்கு வர நாட்கள் பல பிடிக்கின்றன.

கடையில் கடன் பிரச்சனை, அன்றைய வியாபாரம் குறைவு, கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை, வேலைசெய்யும் இடத்தில் உரிமையாளர் மற்றும் மேனேஜரின் ஏச்சுப் பேச்சு போன்றவைகளால் ஏற்படும் டென்ஷனை குறைப்பதற்கு ஒரே வழி வீட்டிற்கு வந்து காரணமே இல்லாமல் மனைவியை திட்டித்தீர்பது தான். இது பல வீடுகளில் பரவலாக அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளாகும்.

மனைவியின் மாதவிடாய் நேரங்களில் அல்லது உடல் அசுகமாக அசதி ஏற்பட்டிற்கும் சமயங்களில் சிறிது நேரம் காலையில் அயர்ந்து தூங்கிவிட்டால், அவர்களை எழுப்பவதற்கு கணவன்மார்கள் உபயோகிக்கும் சாதனம் தண்ணீராகும். அவர்கள் முகத்தில் திடீரென தண்ணீர் தெளித்து எழுப்பித் திட்டுவதும்மாகும். அச்சமயங்களில் அவர்கள் பதட்டப்பட்டு எழுவதால் பல நோய்களுக்கு ஆளாகிவிடுகிறார்கள். அதனால் பிற்காலத்தில் அவர்களுடைய நோய்க்கு மருத்துவம் பார்ப்பதற்க்கு கணவன்மார்கள் தான் செலவழிக்க வேண்டியிருப்பதை கூட உணர்வதில்லை.

மாமனார் மாமியார் வசதியாக இருந்து தொழித்துறை செய்ய பணம்கேட்டு அவர்கள் தர மறுத்துவிட்டால் அதனுடைய தாக்கம் மனைவியின் தலையில் தான் போய்விழுகிறது. போய் அத்தா அம்மாட்ட பணம்வாங்கிட்டு வா... என வீட்டை விட்டே அனுப்பும் நிலையும் பல வீடுகளில் காணப்படுகிறது. சீதனப்பணம், போட்டு வந்த நகை, சீர் வரிசையில் பாக்கியுள்ள பெண்பிள்ளைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள் படும்பாட்டை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதுமாதிரியான விசயங்களுக்காக பல குடும்பங்களில் அளவுக்கு அதிகமாக மாப்பிள்ளை வீட்டார்களிடமிருந்து டார்ச்சர் தொந்தரவுகள் கொடுக்கப்படுவதை கண்கூடாக காணுகின்றோம்.

அம்மா, அக்கா, தங்கைமார்களின் பேச்சை கேட்டுக்கொண்டு தீர விசாரிக்காமல் மனைவியை திட்டுவதும் அடிப்பதும் பல வீடுகளில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள்தான்.

தவறுதலாக சாப்பாட்டில் முடி, கல் இருந்துவிட்டால் அந்த கல்லை எடுத்து மனைவியின் நெற்றியில் கீரி காயப்படுத்துவது எல்லாம் மனைவி என்பவள் தனக்கு அடிமை என்பதை கூறாமல் கூறும் நிகழ்வுகளாகும்.

இதுபோன்ற கணவன்மார்களின் பல செயல்களால் குடும்பங்களில் பிரச்சனைகள் உருவாகி சண்டை சச்சரவுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு "Next""கிளிக்" செய்யவும்.