Home செய்திகள் இந்தியா பால் தாக்கரே பாதையில் பயணிக்கும் மும்பை போலீஸ் - மார்க்கண்டே கட்ஜூ கண்டனம்!
பால் தாக்கரே பாதையில் பயணிக்கும் மும்பை போலீஸ் - மார்க்கண்டே கட்ஜூ கண்டனம்! PDF Print E-mail
Wednesday, 21 November 2012 06:25
Share

பால் தாக்கரே பாதையில் பயணிக்கும் மும்பை போலீஸ் - மார்க்கண்டே கட்ஜூ கண்டனம்!

பால் தாக்கரே மரணத்தையொட்டி, 2 நாட்களாக நடத்தப்பட்ட கடையடுப்புக்கள், பால் தாக்கரே மீதான மரியாதையால் அல்ல, சிவசேனை ரவுடிகளின் பயத்தினால் தான் என்று, "ஃபேஸ் புக்"கில் கருத்து பகிர்ந்துக்கொண்டதால் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

மும்பையை சேர்ந்த 21வயது இளம்பெண் (சிங்கம்) "ஷாஹீன்" என்பவர், தெரிவித்திருந்த கருத்துக்கு "ரேணு" என்ற இன்னொரு இளம்பெண் "

Like" கொடுத்த பாவத்துக்காக அவரும் கைது செய்யப்பட்டார்.கருத்து சுதந்திரத்துக்கு கடும் பங்கம் விளைவிக்கும் வகையில், 2000 சிவசேனை குண்டர்கள் அவரது வீட்டிற்கு வந்து ரகளை செய்தனர்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர், உடனடியாக ஃபேஸ் புக்கில் தெரிவித்திருந்த கருத்தை நீக்கி விட்டதுடன் வருத்தம் தெரிவித்து புதிய கருத்தையும் பதிவு செய்துவிட்டார்.

என்றாலும் வெறியுடன் திரிந்த "சிவசேனை குண்டர்கள்" ஷாஹீனின் சிறிய தகப்பனாருக்கு சொந்தமான கிளினிக்கை அடித்து நொறுக்கி விட்டனர்.

அதிகார வர்க்கத்தினர், மேற்படி இரு பெண்களின் ஃபேஸ் புக் அக்கவுண்டையும் முடக்கிவிட்டனர்.

போலீசும் தன் பங்குக்கு "மத உணர்வுகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டது" மற்றும் "தகவல் தொழில்நுட்ப முறைகேடு" என (295 A, 64 A) ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.போலீசின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து, இரு பெண்களையும் தலா ரூ.15,000 ரூபாய் ரொக்க ஜாமீனில் விடுவித்தனர்.

போலீஸாரின் நடவடிக்கையை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மிலிந்த் தேவ்ரா கண்டித்துள்ளார்

ஃபேஸ்புக் இணையதளத்தில் கருத்து கூறிய ஷஹீன் மற்றும் அவரது தோழி ரேணுவும் கைது செய்யப்பட்டதை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மிலிந்த் தேவ்ரா கண்டித்துள்ளார். அவர் மும்பையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தக் கைது என்பது சட்ட அமலாக்க அமைப்புகளின் தேவையற்ற எரிச்சலூட்டும் நடவடிக்கையாகும். அந்த இரு
 பெண்களும் இணையதளத்தில் தெரிவித்த கருத்துகள் தவறானவை அல்ல. அதற்காக, எந்தச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதியத் தேவையில்லை என்பது என் கருத்து” என்றார்.
 
இதனிடையே, ஷாஹீனின் உறவினர் தானே மாவட்டம் பால்கரில் நடத்தி வரும் மருத்துவமனைக்குள் சிவசேனை தொண்டர்கள் 40 பேர் ஞாயிற்றுக்கிழமை நுழைந்தனர். திடீர்த் தாக்குதலில் ஈடுபட்ட அவர்கள், அங்குள்ள பொருள்களைச் சூறையாடினர். இது தொடர்பாக 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், 9 பேரைக் கைது செய்துள்ளனர்.
 
ஃபேஸ்புக் இணையதளத்தில் கருத்து தெரிவித்த ஷாஹீன் மற்றும் அவரது தோழி கைது செய்யப்பட்டது தவறு என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வரிடம் பேசப் போவதாகவும் அவர் கூறினார்.
 
ஷாஹீன் கைது செய்யப்பட்டதை லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானும் கண்டித்துள்ளார். இந்நிலையில், ஷாஹீன் மற்றும் அவரது தோழி கைது செய்யப்பட்டது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த பிரபல வழக்குரைஞர் ஆபா சிங், மகாராஷ்டிர மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்துள்ளார்.

   மார்க்கண்டே கட்ஜூ கண்டனம் :    

மகாராஷ்டிர போலீசின் கைது நடவடிக்கைக்கு "பிரஸ் கவுன்சில் தலைவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டே கட்ஜூ" கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,

முழு அடைப்புக்கு எதிராக கருத்து சொல்வதை, மத உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறுவது ஏற்க முடியாது.

அரசியல் சட்டம் 19-1ன் கீழ் இப்படி கருத்து தெரிவிக்க சுதந்திரம் இருக்கிறது.

நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். பாசிச சர்வாதிகார ஆட்சி இங்கு நடைபெறவில்லை.

கைது செய்ய உத்தரவிட்ட போலீஸ் மீது உடனடியாக "சஸ்பெண்ட்" அல்லது "கைது" அல்லது "குற்றவியல் நடவடிக்கை" இதில் எது அதிகபட்சமோ, அந்த நடவடிக்கையை மேற்கொண்டாக வேண்டும்.

இதை நீங்கள் செய்ய முடியாத நிலையில் அரசியல் சாசனப்படி ஒரு அரசை நடத்த தகுதியற்றவராகிறீர்கள். இதற்குரிய சட்டவிளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார்.