Home கட்டுரைகள் கவிதைகள் இது பொன்மொழியல்ல... புன்னகை மொழி (1)
இது பொன்மொழியல்ல... புன்னகை மொழி (1) PDF Print E-mail
Tuesday, 20 November 2012 06:43
Share

   இது பொன்மொழியல்ல...  புன்னகை மொழி (1)   

o  நல்ல மனைவி அமைந்தவனின் வாழ்க்கை சொர்க்கம். நல்ல கணவன் அமையாத மனைவியின் வாழ்க்கை நரகம்.

o  குழந்தையை அன்புடன் கண்டிக்கும் அழகிய வித்தையை பெண்ணைப்போல் ஆணால் சுலபமாக கற்றுக்கொள்ள முடியாது.

o  ஆண்களின் கோபத்தை பெண்கள் சட்டை செய்வதில்லை, ஆனால் பெண்ணின் மவுனம் ஆண்களை பாடாய்ப்படுத்துகிறது, பயப்படுத்துகிறது,

o  அப்பாவிடம் 100% அன்பை மகளால் காட்ட முடிகிறது. அம்மாவுடனான அன்பை மகனால் 50% கூட காட்ட முடிவதில்லை.

o  எல்லோரிடமும் வெற்றி அடைந்து தன் ஆளுமையை நிரூபிக்கும் ஆண் தன் குழந்தையிடம் மட்டும் தோற்றுப்போவதில் மகிழ்ச்சி அடைகிறான்.

o  பெண்ணிடம் பேசும்போது ஆண் அவள் கண்களைப் பார்ப்பான். பெண் அவன் கண்ணை மட்டும்தான் பார்க்கிறானா? என்று பார்ப்பாள்.

o  ஆண்மையின் அடையாளமாக பெண்கள் நினைப்பது அவன் மீசையும், கம்பீரமும். பெண்மையின் அடையாளமாக ஆண்கள் நினைப்பது அவள் வெட்கமும், நளினமும்.

o  நம் உள்ளங்கைகள் ஒன்று சேரும்போது நம் உள்ளங்கள் ஒன்று சேர்ந்த மாதிரியே இருக்கிறது.

o சிரிக்கச் சிரிக்க பேசும் பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள். சிரிக்க வைக்கும் ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள்.

o  ஆணின் மனதை 1000 பெண்கள் எளிதாக சலனப்படுத்தி விடுவர். ஆனால், பெண்ணின் மனதை 100-இல் ஒரு ஆண் தான் வசீகரிக்க முடியும்.

o  ஆண் - கலெக்ஷன் ஆஃப் விக்டரி. பெண் கலெக்ஷன் ஆஃப் சொக்குபொடி.

o  காலம் காலமாக கண்ணுக்கு மை வைத்து வைத்தோ என்னவோ ஆணின் முகத்தில் கரி பூசுவது பெண்ணுக்கு கை வந்த கலை ஆகிறது.

o  பெண்ணின் அன்புக்கு ஆண் ஏங்குகிறான், ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ள நாணுகிறான்.

o  தன்னைவிட வயதில் குறைந்த யாராவது "டேய்" என அழைத்தால் கோபமடைபவன் தன் குழந்தை அப்படி கூப்பிட்டால் மட்டும் குதூகலம் அடைகிறான்.

o  காதலி, மனைவி, தாய், சகோதரி இப்படி எந்த லேபிளும் இல்லாத ஒரு பெண்ணின் அன்பு கூட ஆணின் மனதை வீழ்த்தி விடும்.o

o  ஆண் முரட்டுத்தனமாக வெளியில் காண்பித்துக் கொண்டாலும் பெண்ணின் பலத்தின் முன் அவன் பலவீனன் தான்.