Home இஸ்லாம் கட்டுரைகள் நான்கு தீர்மானிக்கப்பட்ட அம்சங்கள்!
நான்கு தீர்மானிக்கப்பட்ட அம்சங்கள்! PDF Print E-mail
Monday, 19 November 2012 20:41
Share

நான்கு தீர்மானிக்கப்பட்ட அம்சங்கள்! 

[ 1. நோய் நமக்கு பரிகாரம். 2. சக்திக்கு மீறி துன்பம், சிரமம் வராது. 3. எவ்வளவு சாப்பாடு, எங்கே மரணம், எப்போது மரணம், 4. சுவனவாதியா நகரவாதியா? நான்கும் தாயின் கருவறையில் 120 நாள் முடிந்ததுமே தீர்மானமாகிவிட்டது.]

மீடியாவில், செய்தி ஊடகங்களில் முஸ்லிம், இஸ்லாம், குர்ஆன், நபிகளாருக்கு எதிராக செய்திகள் வெளிவந்து கொண்டேயுள்ளன. இது புதியதல்ல.

குர்ஆன் ஊடுருவல் முயற்சி நடைபெற்றது. நபிகளார் குறித்து திரைப்படம் எடுக்கின்றனர். சல்மான் ருஷ்டி தப்பும் தவறுமாக சாத்தானிக் வெர்சஸ் எழுதினார். சூரா இன்ஷிரா அத்தியாயம் 94 வசனம் 4. ''வரஃபஹ்னா லகதிக்ரக்'' - உமது நினைவை உயர்த்தினோம்.

முழு உலகம் முயற்சித்தாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மதிப்பை குறைக்க இயலாது. தினமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. அல்லாஹ், வானவர், மனிதர் ஒரு சேர நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது சலவாத் சொல்கிறோம்.

இறைவன் இணைந்து செய்யும் அமல். ஆயாத்தே சலாத்துஸ் ஸலாம். வசனத்துக்குரிய சிறப்பு ஸலவாத். சில ஆயத்துகளின் பெயர்களை தெரிந்து கொள்வது சிறப்பை உணர்த்தும். ஸலவாத் ஆயத் இறங்கியபோது நபிகளார் புன்னகைத்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதிப்படைந்தார்கள். நமக்கு மதிப்பு உயர்ந்தது. சலவாத் கூறினால் 10 நன்மைகள் கிடைக்கும். 10 தீமைகள் அழியும். யஹூதி, நஸ்ரா இருசாராரும் குர்ஆனில் ஐயத்தை எழுப்புகின்றனர். தீயமுயற்சி எல்லா காலங்களிலும் நடக்கும். நவீன உலகில் குர்ஆனை பின்பற்றினால் முஸ்லிம்கள் பின்தங்கி விடுவதாக குற்றச்சாட்டு.

'''இன்னா நஹ்னு நஜ்ஜல்ன ஜிக்ர

வஇன்னா லஹ

§லஹாபிஜுன்''. (அத்தியாயம் 15, ஹிஜ்ர், வசனம் 9)

''குர்ஆனை நாமே இறக்கினோம். நாமே பாதுகாப்போம்''.

ஹாபிஸ், தராவீஹ், குர்ஆன் விரிவுரை நிகழ்வு மூலமாக குர்ஆன் பாதுகாக்கப்படுகிறது. நீங்கள் இந்த அவைக்கு வருவதன் மூலம் அல்லாஹ்வின் மன்ஷா திட்டத்தை உள்நோக்கத்தை நிறைவேற்றுகிறீர். தூரத்திலிருந்தும் குர்ஆன் விரிவுரை செவிமடுக்க வருவது இறையன்பை சுட்டும்.

பூவுலகில் சிறந்த மேன்மை மிகு அவை குர்ஆன் விரிவுரை அவையாகும். குர்ஆன் ஆசிரியர் உலகின் சிறந்த ஆலிம். குர்ஆன் மாணவர் சிறந்த மாணவர். டாக்டர் ஹமீதுல்லாஹ் கூறுகிறார். ஒரு மாணவர் அலிஃப், பே, தே அரபி எழுத்து படிக்கிறார். இன்னொருவர் குர்ஆன் விரிவுரையாளர். இருவரும் சமமாகவே சிறப்புக்குரியவர்கள். இருவரின் தொடர்பும். குர்ஆன் மீது மையம் கொண்டுள்ளது.

எஸ்ஸர்னல் குர்ஆன் ஆரம்ப குர்ஆன் எழுத்து பயின்றவர் முழு குர்ஆனையும் படிப்பார். மனனமிடுவார். அமல் செய்வார். பிரச்சாரம் புரிவார். விரிவுரையாற்றுவார். விரிவுரைக்கான வருகை பதிவு அவசியம். தடைக்கல் வரும். திருமணம், நோய், உறவினர் வருகை தள்ளிப் போடுங்கள். விரிவுரைக்கு முக்கியத்துவமளிப்பீர். எனக்கும் ஏராளமான பணி, வேலை, கவனம் பிசகாமல் விரிவுரைக்கு வருகிறேன். குர்ஆன் தர்ஸ் வகுப்புக்கு வந்தே தீரனும் - சாக்கு போக்கு தேட வேண்டாம்.

சூரா பகரா அத்தியாயம் 2, வசனம் 165 ''வல்லதீன ஆமனூ அஷத்து ஹுப்பலில்லாஹ் மூஃமின்'' அனைவரையும் விட அல்லாஹ்வின் மீது பிரியம் வைப்பான். சோதனைகள் வரும். பெற்றோர் நெருக்கடி தருவர். நன்மைக்கு மட்டுமே உடன்படலாம்.

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தாய் கூறினார் - ''நீ இஸ்லாத்தை ஏற்றால் நான் இறந்து விடுவேன்.''

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு பதிலளித்தார் - ''நூறு தாய் இறந்தாலும் அது என்னை இஸ்லாத்தை விட்டும் தடுக்காது.''

சூரா யூனூஸ் அத்தியாயம் 10, வசனம் 94 ஃப இன்குன்த்த ஃபீஷக்கின் உங்களுக்கு சந்தேகமிருந்தால் அல்லாஹ் கோபமாக எச்சரிக்கிறான். ஆனால் கோபம் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீது அல்ல. பொதுவான, அனைத்து மக்களின் மீதான அறிவுரை. யாசீன், தாஹா, யா அய்யுஹன் னபிய்யூ, ரசூல் என்றெல்லாம் விளித்து அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பெருமைப்படுத்தியுள்ளான்.

வசனத்தில் உள்ள எச்சரிக்கை, அனைவருக்குமானது. இதில் சந்தேகமிருந்தால் முந்தைய கிதாபு உம்மத்களிடம் விசாரிக்கலாம். முந்தைய நபிமார்கள் மீது ஈமான் கொள்வோம். ஆனால் இன்ஜீல், தவ்ராத், சபூர் வேதம் இன்று பொருந்தாது.

குர்ஆனில் வேதங்களின் சாரம் உட்பொதிந்துள்ளது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறித்து முந்தைய வேதங்களில் கூறப்பட்டுள்ளது. ஹம்மாதூன் உம்மத். இன்றைய சமுதாயம் அல்லாஹ்வை புகழக் கூடியவர்கள். எந்த நிலையிலும் ''அல்ஹம்துலில்லாஹ்'' கூறும் சமுதாயம். வாரிசுக்கு அல்ஹம்துலில்லாஹ் சொல்லுமாறு பழக்கப்படுத்திக் கொள்வீர்.

o  நோய் நமக்கு பரிகாரம்.

o  சக்திக்கு மீறி துன்பம், சிரமம் வராது.

o  எவ்வளவு சாப்பாடு, எங்கே மரணம், எப்போது மரணம்,

o  சுவனவாதியா நகரவாதியா

நான்கும் தாயின் கருவறையில் 120 நாள் முடிந்ததுமே தீர்மானமாகிவிட்டது.

மௌலானா டாக்டர் முஹம்மது முஸ்தபா ஷரீபு நக்ஷபந்தீ

தமிழில்: பொறியாளர் ஆ.ர. இபுராஹிம், பி.இ.,

முஸ்லிம் முரசு அக்டோபர் 2012