Home குடும்பம் ஆண்-பெண் பாலியல் பாலியல் விருப்பம் இனிய இன்பங்களுள் தலையானது!
பாலியல் விருப்பம் இனிய இன்பங்களுள் தலையானது! PDF Print E-mail
Friday, 16 November 2012 06:45
Share

பாலியல் விருப்பம் இனிய இன்பங்களுள் தலையானது!

பாலியல் விருப்பம் என்பது தண்ணீர் அருந்த அல்லது உணவு உண்பதற்கு ஆசைப்படுவதுபோல் அல்ல. உடல் நெருக்கம் வெறுமனே உடலோடு இச்சைகாக இணைவதல்ல. அது உறவை மேன்மை வேண்டி நிகழும் நிகழ்வு.

தாம்பத்ய வாழ்க்கையில் அனுபவிக்கக் கூடிய இனிய இன்பங்களுள் தலையானது பாலியல் (உடலுறவினால்) அடையும் இனிய மகிழ்வு . இதுதான் கணவன் மனைவி இருவரையும் ஒருமனப்படுத்துவது, பரவசப்படுத்துவது, ஒன்றுபட்டுவாழ வைப்பது. ஒருவருக்காக மற்றவர் தியாகம் செய்யும் மனோவுறுதியைக் கொடுப்பது. இந்த சுகத்தை எதிர்நோக்கியே பெரும்பாலானவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

இஸ்லாமிய திருமண ஒப்பந்தம் ஒரு வரையறைக்குள் உட்படுத்தப்பட்டது. ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் உள்ள கடமையை முக்கியத்துவம் கொடுப்பதாக உள்ளது.

கணவன் மனைவி இருவருக்கும் நிகழும் உடலுறவு உன்னதத் தன்மையுடையதாக உள்ளது. உறவினால் உண்டாகும் குழந்தையை பாதுகாக்க வேண்டிய கடமை இருப்பதால் அதில் வெறும் பாலியல் உறவாக மட்டும் நினைத்துவிட முடியாது.

பாலியல் உறவு உடற்சேர்கையாக மட்டும் கருதக் கூடாது அது அதற்கு மேல் பரம்பரை என்பதில் முக்கிய இடம் வகிக்கின்றது. காமத்தினால் ஏற்படும் நிகழ்வல்ல.

காதலினால் நிகழும் கிளர்ச்சி அது பரம்பரையை வளர்க்கும் முயற்சி . உணர்ச்சி இருபாலருக்கும் இருப்பது இயல்பு. உணர்ச்சி அற்ற வாழ்வு விரயம். அதனால்தான் இறைவன் இருபாலருக்கும் உணர்ச்சியை தூண்டும் சக்தியை நமக்குத் தந்து அதன் வழியே குடும்பங்கள் செழிக்கவும், தம்பதிகள் மகிழ்வாக இருக்கவும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும், உலகம் தழைக்கவும் வைக்கின்றான்.

மிருக உணர்வினால் உண்டாகும் பாலியல் இச்சை உறவை வளர்க்கவோ பரம்பரையை உருவாக்கவோ நிகழ்வதல்ல. அதே நிலைதான் ஓரினச் சேர்கையும். அதற்குத்தான் பாலியல் கல்வி அவசியமாகின்றது.

உலகம் உருள்வது பாலியல் என்று ஒன்று இருப்பதனால்தான். ஆதம் ஹவ்வா ஆகிய இருவர் வழியாகவே மனித குலம் தோன்றியது என்பது தான் கோட்பாடு. ஆதம் ஹவ்வாவின் பாலியல் தொடர்ச்சி உலகம் உள்ளவரை தொடரும்.

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, பாலியல் என்பது நேசிப்பது உறவை மேன்படுத்துவது இயற்கையோடு ஒன்றியது மற்றும் அது வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. மனரீதியான ஒரு ஆறுதலும் அடைகின்றனர்.

நல்ல, முறையான நேர்மையான பாலியல்-செக்ஸ், பாதுகாப்பானது மகிழ்வை தருவதுடன் அது தனிப்பட்ட ஒரு எல்லைக்குள் அடங்கியது. அது கவலை மறக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. ஒரு பக்கம் வீசும் காதல் கானல் நீர். இரு பக்கமும் இணைந்தால் அது தென்றல். அது முறையாக காலத்தோடு வயதோடு முறைப் படுத்தப்பட்டிருந்தால் அனைத்து வேடிக்கையிலும் உயர்வானதாக இருக்க முடியும். இது கவர்ச்சிகரமான மற்றும் விரும்பியதாக உணரச் செய்யும் மிக பெரிய தார்மீக உயர் சக்திகள் இதில் அடங்கும்.

பதற்றமான வழி முறைகளை விடுவித்து அன்பு வழிகளில் இணைய முற்படும்போது இன்பமான இனிய நேரமாக அமையும். ஆனால் அது தவறான வழிகளில் செயல்பட முயலும் போது துயரத்தின் விளிம்பில் வர மற்றும் பல தீய விளைவுகளை உருவாக்கக் கூடும். 20 சதவிகிதம் நோயாளிகள் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தற்போது மருத்துவர்களை அணுகவும் செய்கின்றனர். இதில் வெட்கப் படுவதற்கு, தவறானது ஒன்றுமில்லை. நம்மிடம் குறை இருப்பின் அதனை போக்கிக்கொள்வது மிகவும் முக்கியமானது.

பாலியல் குறைபாட்டினால் பலரது மண வாழ்வு கசப்பாகி திருமண வாழ்வே முறிந்து விடும் அவல நிலையும் உண்டு. இது அவசர கோலத்தினால் வந்த விளைவே அதிகம் . பாலியல் குறைபாடுகள் வர பல காரணங்கள் உண்டு. அந்த குறைபாடுகள் வரும் காரணத்தினை அறிந்து செயல்பட்டால் நல் வாழ்வு மலரும்.

'முதல் கோணல் முற்றும் கோணல்' என்பர். சிலர் முதலிரவில் ஏற்படுத்திக்கொள்ளும் தவறான அணுகு முறையும் பயந்த சுபாவமும் மனதில் அழியாமல் இருக்க நேரிடலாம். அதனால் முதலிரவினை மகிழ்வான எண்ணங்கள் மலர வையுங்கள்.

மனைவியுடன் உடலுறவு முடிந்த உடனே தூங்கி விடும் பழக்கம் மன உறவினை உன்னதமாக்காது. இது இயந்திர நிலைக்கு ஒப்பாகிவிடும் கவலை, மன சோர்வு, நாள்பட்ட நோய், ஹார்மோன் குறைபாடு, புகைபிடித்தல், குடிப் பழக்கத்தில் அடிமையாதல், உயர் இரத்த அழுத்தம் காரணமாக தொடர்ந்து மருந்து சாப்பிடுவதால் இவைகள் பாலியல் குறைபாடுக்கு காரணமாக அமையும் வாய்ப்புண்டு.

கவலை, மன சோர்வு. புகைபிடித்தல், குடிப் பழக்கத்தில் அடிமையாதல் இவைகளிருந்து விடுபடுங்கள். மனமே பாலியல் வளர சிறந்த மருந்து. தாழ்வு மனப்பான்மையினை விட்டொழித்து மகிழ்வாக வாழுங்கள்.

source: www.nidurseasons.com