Home குடும்பம் ஆண்-பெண் பாலியல் குடும்ப உறவுகள் மிகவும் சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறது!
குடும்ப உறவுகள் மிகவும் சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறது! PDF Print E-mail
Saturday, 03 November 2012 08:40
Share

குடும்ப உறவுகள் மிகவும் சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறது!

வேகமாக இயங்கும் இந்த உலகத்தில் குடும்ப உறவுகள் மிகவும் சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறது. குடும்பத்தில் கணவன் மனைவியிடையே புரிதலின் அளவு குறைந்து கொண்டு வருகிறது. விவாகரத்துகளும் அதிகரித்து குடும்ப நல நீதிமன்றம் வழக்குகளை சுமந்து கொண்டிருக்கிறது.

பத்திரிகைகளில் தினம்தினம் கள்ளக் காதல் கொலைகளும் செய்திகளாக வர்ணிக்கப்படுகிறது. இவையெல்லாவற்றுக்கும் அடிப்படை காரணமாக உள்ள பால் உறவு குறித்த புரிந்துணர்வு இன்மையும் மோசமான அறியாமையும்தான் என பாலியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உடலுறவில் கிடைக்கும் பரவசமான சுகம் எப்படி இருக்கும்? என்று வர்ணிக்க முயன்றவர்கள் எல்லோருமே தோற்றுப்போய் இருக்கிறார்கள். 'அது ஒரு தும்மல் மாதிரி. ஆரம்பித்த பிறகு நிலை கொள்ளாமல் தவிக்கும். எப்போது வெளிப்படுமோ என்று பதற்ற பட வைக்கும். முடிந்ததும் அமைதியாகிவிடும். 'அப்படியும் கூட திருப்தி அடையவில்லை'. அனுபவித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அது. அந்த சுகம் எப்படி பட்டதென்றால் யாராலும் சொல்ல முடியாது

உறவில் ஆணுக்கு விந்தணு வெளியேறுவதால் சுகம் கிடைக்கிறது. இந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று பெண்ணுக்கு தெரியாது. பெண்ணுக்கு இதுபோல் எந்த திரவமும் வெளியேறுவதில்லை. ஆனால் அவளும் சுகம் அடைகிறாள். அது எப்படிப்பட்ட பரவச இன்பம் என்பது ஆணுக்கு தெரியாது. இதை எப்படி விவாதிப்பது? எப்படி எழுதுவது?

'பரவசம் கிடைத்ததுமே பெண்ணிடம் இருந்து ஆண் விடுபட முயற்சிப்பான். ஆனால் பெண் விடமாட்டாள். இறுக்கி அணைத்து இன்னும் வேண்டும் என்று செயல்படுவாள்' என்கிறார்.

அக்காலத்தில் செக்ஸ் உறவின் உச்சகட்டத்தில் ஆண்களுக்கு விந்தணு வெளியேறுவது போல் பெண்களுக்கும் எதோ ஒரு திரவம் வெளியேறுகிறது என்று மேற்கத்திய நிபுணர்கள் நம்பினார்கள். செக்ஸ் தொடர்பான ஆய்வுகள் அதிகமான பின் தான் அப்படி எதுவும் பெண்ணிடம் இருந்து வெளிப்படவில்லை என்று நம்பத் தொடங்கினார்கள். ஆண்களுக்கு இருப்பது போல பெண்களுக்கு சில சுரப்பிகள் இல்லை. இதனால் பெண்களுக்கு எதுவும் வெளியேறுவது இல்லை என்றும் சொன்னார்கள்.

'உடலுறவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. ஆண்களுக்கு விந்து வெளியேறிய பிறகு கட்டாயமாக ஓய்வு வேண்டும். மீண்டும் உறவுக்கு முயற்சிக்கும் போது தொடக்கத்தில் இருந்து தொடங்க வேண்டும். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. உறவுக்கு முந்தைய விளையாட்டுக்களில் தாமதமாக உணர்ச்சி வசப்பட்டாலும் கூட, உறவில் அவர்களிடமிருந்து திரவமாக எதுவும் வெளியேறுவது நடைபெறாத காரணத்தால் ஒரே நிமிடத்தில் கூட திரும்பவும் இன்னொருமுறை உறவில் உச்சக் கட்டத்தை அடைய அவர்களால் முடியும். இதனால்தான் உறவு முடிந்ததும் விலகு முயற்சிக்கும் ஆணை இறுக்கமாக அனைத்துக் கொள்கிறாள் பெண்' என்று நிபுணர்கள் கண்டுப்பிடித்தார்கள்.

செக்ஸ் உறவை முடித்த அடுத்த நிமிடம் குறட்டை விட்டு தூங்கிவிடும் வழக்கம் பல ஆண்களிடம் இருக்கிறது. இந்தியர்கள் தங்கள் மனைவியை தூக்கமாத்திரையாகதான் பயன்படுத்துகிறார்கள் என்று செக்ஸ் நிபுணர்கள் கிண்டலடிக்கிறார்கள்.

இது ரொம்ப தப்பு. 'உறவு முடிந்த களைப்பில் மனைவிக்கு முதுகுகாட்டி திரும்பி படுக்க கூடாது. இரண்டு பேரும் அன்போடு கட்டி தழுவி முத்தத்தை பரிமாறி கொள்ள வேண்டும். பரவசத்தை தூண்டும் வெறித்தனமான முத்தம் தேவை இல்லை. ஒரு குழந்தையை முத்தமிடும் போது காட்டும் களங்கமற்ற அன்புதான் அதில் இருக்க வேண்டும்.

உடலுறவின் சிகரத்தை தொட்டுவிட்டு ஓய்வெடுக்கும் போது மனம் அமைதியில் மூழ்கி இருக்கும் இது போன்ற சந்தர்பம் வேறு எப்போதும் கிடையாது. அந்த நேரத்தில் கணவன் மனைவி இருவரும் மனம்விட்டு பேச வேண்டும். இப்படி பேசுவதுதான் இருவர் மனதிலும் அன்பை ஊற்றெடுக்க வைக்கும். பாசப்பிணைப்பை அதிகமாக்கும்'.

நன்றி: தினத்தந்தி