Home குடும்பம் ஆண்கள் ஆண்களிடம் நேரடியாய் சில கேள்விகள்...
ஆண்களிடம் நேரடியாய் சில கேள்விகள்... PDF Print E-mail
Friday, 25 May 2012 07:15
Share

ஆண்களிடம் நேரடியாய் சில கேள்விகள்...

1. "என் அம்மா செஞ்ச சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும்" "அம்மான்னா எனக்கு உசிரு" "என் அம்மா கை பக்குவமே தனி தான்" இப்படில்லாம் பாசமா தன் அம்மாவை பற்றி பேசுற மகன்கள் உண்டு. ஆனா தன் அம்மாவின் ரசனையும் தனி திறமையும் அறிந்த ஆண்கள் எத்தனை பேர் இருக்கீங்க?

2. இன்னக்கி இன்ஜினியரிங், டாக்டர் படிக்கிற பெரும்பலனவர்களோட ஆசை, லட்சியம் எல்லாம் வேற ஏதாவதா இருக்கு. ஆனா பெத்தவங்க ஆசைய நிறைவேத்தனும்னு பிடிக்காத பாடாத்த படிச்சிட்டு இருக்காங்க. ஆனா எனக்கு தெரிஞ்சு எந்த குழந்தையும் அம்மாவோட கனவை சுமக்கல. அப்பாவோட கனவ தான் சுமக்குறாங்க. எதனால் அப்படி ?

3. மச்சி அந்த figure super டா" என்று சொல்லும் எந்த பையனும் தன் தங்கை எவ்வளவு அழகாக இருக்கும் போதிலும் அடுத்தவர்களால் அப்படி அழைக்கப்பட விரும்பவில்லை. பிறகு ஏன் அடுத்தவர்களின் தங்கையை மட்டும் அப்படி அழைக்கிறீர்கள்?

4. ஒரு கவிதை வாசித்தேன் ."அழகாக இல்லை என்பதால் தங்கையாகி போனாள்" என்று ஒரு முடிகிறது அக்கவிதை. எனில் "தங்கை அழகாயிருந்தால் என்னவாயிருப்பாள்" என்று கேள்வி எழுகிறது.

5. பெண் பார்க்கும் போது "கண்டிப்பா வேலைக்கு போற பொண்ணு தான் வேணும்னு தரகர்ட்ட சொல்லிடுங்க" "கல்யாணத்துக்கு அப்புறம் கண்டிப்பா வேலைக்கு போகக் கூடாது" என்ற வரிகள் தத்தம், "நான் என் பொண்டாட்டியை வேலைக்கு அனுப்பவே மாட்டேன். வீட்ல ராணி போல பாத்துப்பேன்" என்றும் "நான் என் மனைவிக்கு சம உரிமை கொடுக்கிறேன், அதனால வேலைக்கு அனுப்புறேன். அவபடிச்ச படிப்பு வீணாகக் கூடாது பாருங்க" என்றும், உருமாறுகின்றன.

இதில் ராணி போல் வைத்து கொள்பவர்கள், தன் துணையை தனியாக எங்கும் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். தனிச்சையாய் எதுவும் செய்ய விட மாட்டார்கள். பச்சையாக சொல்வதென்றால் வீட்டுக்குள் சிறை பிடிப்பார்கள். ஆனால் கேட்டதெல்லாம் வாங்கித் தந்து, சந்தோசமாய் வைத்திருபதாய் நினைப்பவர்களும் உண்டு. தங்கக் கூண்டு என்றாலும், சிறை சிறை தானே? சம உரிமை கொடுப்பதாய் கோரும் ஆண்களிடம் நேரடியாய் ஒரு கேள்வி, நீங்கள் கொடுத்து அவள் பெறுவது சம உரிமையாய் இருக்க முடியுமா?

குடும்ப வருமானத்தை உயர்த்த இருவரும் வேலைக்கு போகிறீர்கள், சரி. வெளி வேலைகளை பகிரும் உரிமையை(!?) நீங்கள் மனைவிக்கு தரும் போது என் வீட்டு வேலையை பகிரும் உரிமையை நீங்கள் எடுத்து கொள்வதில்லை?

6. "என் மகன் அப்படியே என்ன மாதிரியே படிப்பான்" என்று பெருமை அடித்து கொள்ளும் அப்பாக்களில் எத்தனை பேர் உங்கள் மகன் கைக் குழந்தையை இருந்தபோது அவன் மலம் கழித்த துணியை மாற்றி இருகிறீர்கள்? எத்தனை பேர் உங்கள் மகன் வீட்டு பாடம் எழுத உதவி செய்திருகீர்கள்? குழந்தை வளர்ப்பது அவள் வேலை எனில் "initial " என எதற்காக உங்கள் பெயரை போட வேண்டும்?? பள்ளியில் இடம் வாங்கி தருவதுடன் உங்கள் கடமை முடிந்து விட்டதா என்ன?

அது எப்படி உங்கள் மகன் வெல்லும் போதெல்லாம் உங்கள் மகனாகவும், தோற்கும் போதெல்லாம் உங்கள் மனைவியின் மகனாகவும் மாறி போகிறான்?

7. "என் மக எவ்வளவோ பெரிய வேலையில இவ்வளவோ அதிகம் சம்பளம் வாங்கறா" என்று பெருமை பேசி கொள்ளும் எத்தனை அப்பாக்கள், தங்கள் வேலையில் தன் மேலதிகாரி பெண் என்பதால் அவள் ஒழுக்கத்தை பற்றி வதந்திகளை பரப்பாமல் இருந்துள்ளீர்கள்?