Home இஸ்லாம் இஸ்லாத்தை தழுவியோர் உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர்...

Ex.Baramin Convert to Islamᴴᴰ┇Abdur Rahim (Sankar Narayanan)┇Way to Paradise Class

இஸ்லாமை தழுவிய சகோதரி ஆயிஷா ஃபாத்திமா கடந்து வந்த சோதனைகள்

இஸ்லாமைத் தழுவிய பிரபல நடிகை மோனிகா

இஸ்லாமைத் தழுவிய தமிழ் கிருஸ்துவப்பெண்

உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர்... PDF Print E-mail
Friday, 27 April 2012 22:26
Share

உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர்...

[ ஒரு முறை வகுப்பறையில் திருக்குர்ஆனின் வசனங்களைப் படித்த போது இந்த வசனத்தை அடைந்தேன்.

''இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் ‘எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம் எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்" (அல்-குர்ஆன் 5:83)

நான் ஆச்சரியப்படும் அளவிற்கு என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதை மாணவர்களிடமிருந்து மறைப்பதற்கு முயற்சி செய்தேன்.]

நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர் ‘நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர் ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர்; மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் ‘எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம் எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்" (அல்-குர்ஆன் 5:82-83)

பிரிட்டனின் முன்னால் கத்தோலிக்க கிறிஸ்தவ மதகுரு தன்னுடைய மாணவர்களுக்கு புனித குர்ஆனின் மேற்கூறிய வசனத்தை ஓதிக்காட்டியபோது நடந்ததும் இது தான். மேலும் இதுதான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளும் தன்னுடைய பயணத்தின் முக்கியமான படிகல்லாகவும் அமைந்தது.

இவர் கெய்ரோவில் உள்ள பிரிட்ஷ் கவுன்சிலில் சமீபத்தில் உரையாற்றிய போது, தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றி நான் வருத்தப்படவில்லை என்று கூறினார். மேலும் வாடிகனில் பணியாற்றிய 5 வருட காலத்தின் போது கிறிஸ்தவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் செய்ததைப் பற்றித் தாம் கலைப்படவில்லை என்றார்.

கிறிஸ்தவ மதகுருவாக இருந்து ஒருசில வருடங்கள் மக்களுக்கு சேவை செய்ததை நான் மகிழ்ந்தேன். இருந்த போதிலும் உள் மனதில் சந்தோஷமில்லாமலும் ஏதோ சரியாக இல்லாததையும் உணர்ந்தேன். இறைவனின் அருளால், அதிர்ஷ்டவசமாக, என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சில நிகழ்வுகள் மற்றும் தற்செயலாக நடந்த சில செயல்களால் நான் இஸ்லாத்துக்கு வர நேர்ந்தது.

தவ்ஃபீக்கின் வாழ்க்கையில் நடந்த மற்றொரு தற்செயலான நிகழ்ச்சி என்னவெனில் எகிப்துக்குச் சென்று வந்த பிறகு வாடிகனில் தன்னுடைய வேலையை இராஜினாமா செய்ய அவர் எடுத்த முடிவாகும்.

எகிப்து என்றாலே பிரமிட், ஒட்டகங்ள், மணல் வெளிகள் மற்றும் பனை மரங்கள் தான் என் நினைவுக்கு வந்தது. ஆகையால் விமானத்தில் Hurghada என்ற ஊருக்குப் பறந்தேன். ஆனால் அது ஐரோப்பாவின் கடற்கரையைப் போல இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். முதல் பேருந்தைப் பிடித்து கெய்ரோவிக்குச் சென்று, என் வாழ்க்கையின் உன்னதமான ஒரு வாரத்தை செலவு செய்தேன்.

இதுதான் என்னுடைய முதல் இஸ்லாம் மற்றும் முஸ்லிமைப் பற்றிய அறிமுகமாக இருந்தது . எகிப்தியர் மிகவும் மென்மையான, இனிமையான அதே சயத்தில் மிகவும் வலிமையான மனிதர்களாக இருந்ததை கனித்தேன்.

மேற்கத்திய ஊடகங்கள் சித்தரிப்பது போலவும் அதை நம்பிக் கொண்டிருக்கும் பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் நினைப்பது போலவும் ்முஸ்லிம்கள்் என்றாலே அவர்கள் தற்கொலை படையினராகவும், போராளிகளாகவும் தான் இருப்பார்கள் என்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் எகிப்துக்கு சென்ற பிறகு இஸ்லாம் எவ்வளவு அழகான மார்க்கம் என்று கண்டு கொண்டேன். வீதியிலே பொருளை விற்பவர்கள், தொழுகைக்காக அழைப்பைக் கேட்டவுடன், தன்னுடைய வியாபாரத்தை விட்டு விட்டு பள்ளிவாசலுக்கு விரைந்து செல்வதை பார்க்க முடிகிறது. இறைவன் இருக்கிறான் என்பதையும் அவன் விருப்பப்படி தான் எல்லாம் நடக்கிறது என்றும் உறுதியாக நம்புகிறார்கள் .

அவர்கள் தொழுது, நேன்பு வைத்து, மறுமையில் சொர்க்கத்தில் வாழ்வதற்காக தன் வாழ்நாளில் மக்காவுக்கு ஒரு முறைசெல்வதற்கு கணவு காண்கிறார்கள் என்றும் விவரித்தார். நான் எகிப்தில் இருந்து திரும்பியதும், மதங்களைக் கற்பிக்கும் என் வேலையை தொடர்ந்தேன். பிரிட்டனின் கல்வித் திட்டத்தில் மார்க்கம் சம்பந்தமான படிப்பு ஒன்று தான் கட்டாய பாடமாக இருக்கிறது.

நான் கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத, மற்றும் புத்த மதங்களைப் பற்றி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். நான் ஒவ்வொரு நாளும் மதங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக இந்த மதங்களைப் பற்றிப் படிக்க வேண்டியதாக இருந்தது. மாணவர்களில் பெரும்பாலோர் அரேபிய முஸ்லிம் அகதிகளாக இருந்தனர். சரியாக சொல்ல வேண்டும் எனில் இஸ்லாத்தைப் பற்றி கற்றுக் கொடுப்பது எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தது .

பிரச்சனைகளை உண்டு பண்ணக் கூடிய மற்ற பருவ வயதினரைப் போல் அல்லாமல், ஒரு முஸ்லிம் எப்படி இருக்க வேண்டும் என்று இந்த மாணவர்கள் ஒரு முன் உதாரணமாக திகழ்ந்தார்கள். அவர்கள் அன்பாகவும் அமைதியாகவும் இருந்தார்கள். எங்களிடையே ஒரு நல்ல நட்புணர்வு வளர்ந்த போது, நோன்பு வைக்கக் கூடிய ரமலான் மாதத்தில், அந்த மாணவர்கள் என்னுடைய வகுப்பறையில் தொழுது கொள்ளலாமா என்று என்று என்னிடம் கேட்டார்கள்.

அதிர்ஷ்டவசமாக, என்னுடைய வகுப்பறை ஒன்றுதான் தரை விரிப்புடன் கூடியதாக இருந்தது. ஆகையால் அவர்கள் தொழும்போது நான் பின்னால் இருந்து பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். நான் ஒரு முஸ்லிமாக இல்லாதபோதும், அவர்களுடன் நானும் நோன்பு வைத்து அவர்களை ரமலான் மாதத்தில் நோன்பு வைக்குமாறு ஆர்வ முரட்டினேன்.

ஒரு முறை வகுப்பறையில் திருக்குர்ஆனின் வசனங்களைப் படித்த போது இந்த வசனத்தை அடைந்தேன்.

"இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் ‘எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம் எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்" (அல்-குர்ஆன் 5:83)

நான் ஆச்சரியப்படும் அளவிற்கு என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதை மாணவர்களிடமிருந்து மறைப்பதற்கு முயற்சி செய்தேன்.

மிகப் பெரும் நிகழ்ச்சி:

செப்டம்பர் 11- 2001 அன்று நடந்த அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்ப்புக்குப் பிறகு தான் என் வாழ்க்கையின் திருப்பு முனை அமைந்தது.

அடுத்த நாள், பாதுகாப்பாக நான் கீழ்தளத்தில் இருந்தேன். மேலும் மக்கள் எவ்வளவு பயந்தவர்களாக உள்ளனர் என்பதையும் கனித்தேன். இது போன்ற ஒரு நிகழ்வு பிரிட்டனிலும் நடக்கலாம் என்று நானும் பயந்தேன். அந்த சமயத்தில், மேற்கத்தியர்கள் தங்களால் பயங்கரவாத மார்க்கம் என்று குற்றம் சுமத்தப்படுகின்ற இஸ்லாத்தைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தனர்.

இருந்த போதிலும், முஸ்லிம்களிடத்தில் எனக்குள்ள முந்தய அனுபவம் என்னை வேறெரு கோணத்தில் அனுகச் செய்தது. கிறிஸ்தவர்கள் இது போன்ற செயலை செய்கின்ற போது, பயங்கரவாத கிறிஸ்தவ மதம் என்று குற்றம் சுமத்தாதவர்கள், முஸ்லிம்களாக இருக்கின்ற ஒரு சிலர் செய்கின்ற தீவிரவாத செயல்களின் போது மட்டும் ஏன் தீவிரவாதத்தை இஸ்லாமிய மதத்தோடு சேர்த்து இஸ்லாத்தை குற்றம் சுமத்துகிறார்கள்? ஏன் இஸ்லாம் (மட்டும் குறி வைக்கப்படுகின்றது)? என்று ஆச்சரியப்படத் துவங்கினேன்.

ஒரு நாள் இஸ்லாம் மதத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்காக, லண்டனில் உள்ள மிகப் பெரும் பள்ளி வாசலை நேக்கிச் சென்றேன். அங்கே முன்னால் பாப் பாடகர் யூசுப் இஸ்லாம் வட்டமாக உட்கார்ந்து கொண்டு சிலரிடையே இஸ்லாத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் சென்ற பிறகு அவரிடம், நீங்கள் முஸ்லீமாக மாறுவதற்கு என்ன செய்தீர்கள்? என்று வினவினேன்.

"ஒரு முஸ்லீம் ஒரே இறைவனை வணங்கவேண்டும், 5 நேரம் தொழ வேண்டும், ரமலான் மாதத்தில் நேன்பு வைக்க வேண்டும்" என்று பதிலளித்தார். நான் அவரை இடைமறித்து, நான் எல்லாவற்றையும் நம்பினேன், ரமலான் மாதத்தில் நேன்பும் வைத்தேன் என்றேன். பிறகு எதற்காக காத்துக் கொண்டிருக்கிறாய்? என்று அவர் என்னிடம் கேட்டார்.

நான் மதம் மாறுவதற்கு நினைக்கவில்லை என்றேன்.

அந்த சமயத்தில் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தயாராகி தொழுவதற்காக வரிசையில் நின்றனர். நான் பின்னால் அமர்ந்தேன். நான் கதறி அழுது, யாரை முட்டாளாக்க முயற்சிக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்த பிறகு, யூசுப் இஸ்லாமிடம் சென்று நான் இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு என்ன சொல்ல வேண்டும் என்று கற்றுக் கொடுக்கச் சொன்னேன்.

ஆங்கிலத்தில் அதற்குரிய விளக்கத்தை விளக்கிய பிறகு, நான் அரபியில், வணங்குவதற்கு தகுதியானவன் இறைவனைத் தவிர யாரும் இல்லை. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் தூதராக இருக்கிறார் என்றும் ஓதினேன்" என்று கண்ணீரைத் துடைத்தபடி நினைவு கூர்ந்தார். தவ்பீக் அவர்கள்.

இஸ்லாத்தின் தோட்டங்கள்:

இவ்வாறு இவருடைய வாழ்க்கை ஒரு மாறுபட்ட கோணத்தை அடைந்து எகிப்திலே வாழ்ந்து கொண்டு இஸ்லாமிய கொள்கைகள் பற்றிய புத்தகத்தை எழுதினார்.

தன்னுடைய புத்தகத்துக்கு ஏன் "சந்தோஷத்தின் தோட்டங்கள்" என்று பெயரிட்டார் என்று விளக்கும்போது "இது இஸ்லாத்தைப் பற்றிய ஒரு எளிமையான சுய விமர்சனம். இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம் அல்ல என்றும் மேலும் அது வெறுப்பை உண்டு பண்ணக் கூடிய மதமாக இல்லை என்றும் ஒவ்வொருவரும் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் இஸ்லாம் என்றால் என்ன? என்று யாரும் விளக்குவதற்கு முயற்சி செய்யவில்லை"

ஆகையால், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை விளக்குவதற்காக இந்த புத்தகத்தை எழுதுவதற்கு முடிவு எடுத்தேன். இஸ்லாம் ஒரு அழகான மார்க்கம் என்றும், அது எண்ணிலடங்கா பொக்கிஷங்களை கொண்டுள்ளது என்றும், முஸ்லிமாக இருந்து ஒருவர் மற்றவரை அன்பு செலுத்துவது என்றும் சொல்வதற்கு முயற்சி செய்தேன்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "உன் சகோதரனை பார்த்து புன்முறுவல் செய்வதும் தர்மம்" எனக் கூறினார்கள் என்று தஃபீக் கூறினார்.

மேலும் தவ்ஃபீக் அவர்கள், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார்கள். அந்த புத்தகம், இதுவரை வெளிவந்த புத்தகங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் என்றார்.

இஸ்லாத்தின் உண்மையான தோற்றத்தை, இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்ட வேகமான மற்றும் மிகச் சிறந்த வழி இந்த உலகத்தில் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நடந்து காட்டுவது தான் என்று தவ்ஃபீக் நினைக்கிறார். .

நன்றி: சுவனத்தென்றல்