Home குடும்பம் ஆண்கள் மனைவியிடம் எஜமான விசுவாசத்தைப் பெற ஆண்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றனர்
மனைவியிடம் எஜமான விசுவாசத்தைப் பெற ஆண்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றனர் PDF Print E-mail
Tuesday, 10 April 2012 07:48
Share

மனைவியிடம் எஜமான விசுவாசத்தைப் பெற ஆண்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றனர்

[ ஒருவர் ஆணாக இருந்தால் மூர்க்கத்தனமாக மாற வேண்டும் என்பது இல்லை. ஆண்மை என்பது ஒரு ஆண் எந்தளவிற்கு புரிந்து கொண்டிருக்கிறாரோ, அதனடிப்படையில்தான் மனைவிகளிடம் நடந்து கொள்வார்கள் என்கிறார் JCRW 10 உறுப்பினர் ஒருவர்.

ஆண்களை எப்போதுமே - சுபீரியர் செக்ஸ் - என்று போதித்து வந்துவிட்டோம் இதுதான் மனைவிகளைக் கட்டுப்படுத்த அவர்களைத் தூண்டுகிறது.

மனைவியிடம் இருந்து எஜமான விசுவாசத்தைப் பெற மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதாக 79 சதவீத ஆண்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரத்திற்கு அடிபணிய மறுப்பது, கணவருக்கு கீழ்படிய மறுப்பது, உரிமையை விட்டுக் கொடுக்காதது மற்றும் பாலியல் தேவையை திருப்தி செய்து கொள்ள முயற்சிப்பது போனறவையும் ஒரு ஆணை மூர்க்கத்தனமாக மாற்றுகிறது.

தங்களது பேச்சை மனைவி கேட்காவிட்டால் ஆண்மைத்தன்மைக்கே இது அச்சுறுத்தலாக இருப்பதாக 77 சதவீத கணவர்கள் கூறியுள்ளனர். தங்களது ஆண்மையைக் காப்பாற்றிக் கொள்ள மனைவியிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொள்கின்றனர்.

மூர்க்கத்தனம், சமூக, பொருளாதார அந்தஸ்து மற்றும் கல்வி ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை.]

எந்தப் பெண்ணையும் சீராகச் சிந்திக்க விடுவதில், நம் ஆண்களுக்கென்னவோ, அவ்வளவாக பிடித்தமே இல்லை. பெண்ணை அடக்கி ஆளவே பழகிய விதம், ஆண்களை ஆட்டிப் படைக்கிறது. பெண்கள் படும் அவதியும், வேதனையும் அவர்களை விவகாரத்து தீக்குளிப்பு, தற்கொலை, கருக்கலைப்பு, வேறு மனைநாடுதல் என்ற அசாதராண செயல்கள் குறித்து யோசிக்கத் தூண்டுகிறது. செயற்பட வைக்கிறது. கொடுமைகளையும், ஆணாதிக்கத்தையும் அனுபவிக்கும் பெண்களில் இனப்பாகுபாடு, பணப்பாகுபாடு கிடையவே கிடையாது. இந்த வேதனை, அடக்குமுறையைப் பொறுத்தவரையில், இது பெண்களுக்கே உரிய பொதுவான சொத்து.

டில்லியில் தொழிலதிபாராக இருக்கும் தன்னுடைய கணவர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மருமகள் விவாகரத்துக் கோரி வழக்குத் தொடுக்கிறார். மும்பையில் முன்னணி நட்சத்திர நடிகை ஒருவர், தான் கர்ப்பிணியாக இருக்கும்போது கணவர் எட்டி உதைத்தார் என்று கூறி விவகாரத்து கோருகிறார். கொல்கத்தாவில் தன்னுடன் சேர்ந்து தண்ணி அடிக்கவில்லை என்று கணவர் அடிப்பதாக மனைவி விவகாரத்து கோருகிறார். சென்னையில் குழந்தை இல்லையென்ற ஒரு காரணத்திற்காக அதிகார வர்க்கத்தில் இருக்கும் கணவனிடம் நீண்ட நாட்கள் மனதளவிலும், உடலளவிலும் வேதனைப்பட்ட மனைவி விவகாரத்து கோருகிறார்.

இப்படி நாட்டில் பெண்களுக்கெதிரான கொடுமைகள் ஜாதி, மத பேதம் இல்லாமல் பண்பாட்டையும், அன்பையும் கடந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. வாழ்கையில் இவர்களுக்கு ஏற்படும் கொடுமைகள் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது.

சர்வதேச தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் நெட்வேர்க் உடன் இணைந்து சர்வதேச பெண்கள் ஆராய்ச்சி மையம் (ஜ.சி.ஆர்,டபிள்ய10) 2000 ஆவது ஆண்டு ஆய்வு மேற்கொண்டது. இதற்கு நாட்டின் ஏழு நகரங்களில் பத்தாயிரம் பெண்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன. நாட்டில் 45 சதவீதப் பெண்கள் கணவன்மார்களால் அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, அறையப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறன்றனர். 75 சதவீதப் பெண்கள் கணவர்மார்கள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதால் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர் என்பது தெரிய வந்தது. கடந்த 2002 இல் நாட்டின் நான்கு நகரங்களில் ஜ.சி.ஆர். டபிள்ய10 ஆய்வு மேற்கொண்டது.

இதில் ஆண்கள் இயற்கையாகவே மூர்க்கத்தனமாக இருப்பதில்லை என்று தெரிய வந்துள்ளது.

ஒருவர் ஆணாக இருந்தால் மூர்க்கத்தனமாக மாற வேண்டும் என்பது இல்லை. ஆண்மை என்பது ஒரு ஆண் எந்தளவிற்கு புரிந்து கொண்டிருக்கிறாரோ, அதனடிப்படையில்தான் மனைவிகளிடம் நடந்து கொள்வார்கள் என்கிறார் ஜ.சி.ஆர்.டபிள்ய10 உறுப்பினர் ஒருவர்.

ஆண்களை எப்போதுமே - சுபீரியர் செக்ஸ் - என்று போதித்து வந்துவிட்டோம் இதுதான் மனைவிகளைக் கட்டுப்படுத்த அவர்களைத் தூண்டுகிறது.

கணவனுக்கு மனைவி மரியாதை கொடுக்காமல் இருப்பதுதான் அந்த ஆணை மூர்க்கத்தனமாக மாற்றுகிறது| என்பது ஜ.ஆர்.சி.டபிள்ய10. ஆய்வில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தான், தமிழ்நாடு, பஞ்சாப், டில்லி போன்ற நகரங்களில் ஆண்களிடம் எடுக்ப்பட்ட மதிப்பீட்டில், தங்களது பேச்சை மனைவி கேட்காவிட்டால் ஆண்மைத்தன்மைக்கே இது அச்சுறுத்தலாக இருப்பதாக 77 சதவீத கணவர்கள் கூறியுள்ளனர். தங்களது ஆண்மையைக் காப்பாற்றிக் கொள்ள மனைவியிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொள்கின்றனர். அதிகார கலாச்சாரத்தில் ஊறிப் போயிருக்கும் ஆணின் தேவைகளில், ஏதாவது ஒன்று ப10ர்த்தியாகாமல் போனால், அது அந்த ஆணை மூர்க்கத்தனமாக்குகிறது. பெண்களை தங்களுக்கு இணையானவர்களாகக் கருதுவதில்லை. எந்த சந்தர்ப்பத்தில் ஒரு ஆண் மூர்க்கத்தனமாக மாறுகிறார் என்பதை நாம் கண்டறிய வேண்டும். என்கிறார் டில்லி கல்லூரி பேராசிரியை ஒருவர்.

ஆண்மைக்குரியவர் என்பதுடன் வயது, ஜாதி, சழூக அந்தஸ்து, முக்கியமாக கல்வி ஆகியவையும் சேர்ந்து கொள்கின்றன. பாலியல் ரீதியாகவும் கணவனால் மனைவி கொடுமைப்படுத்தப்படுகிறார். மனைவியிடம் இருந்து எஜமான விசுவாசத்தைப் பெற மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதாக 79 சதவீத ஆண்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரத்திற்கு அடிபணிய மறுப்பது, கணவருக்கு கீழ்படிய மறுப்பது, உரிமையை விட்டுக் கொடுக்காதது மற்றும் பாலியல் தேவையை திருப்தி செய்து கொள்ள முயற்சிப்பது போனறவையும் ஒரு ஆணை மூர்க்கத்தனமாக மாற்றுகிறது.

மூர்க்கத்தனம், சமூக, பொருளாதார அந்தஸ்து மற்றும் கல்வி ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை.

பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தும் ஆண்களில் படிக்காதவர்களை விட படித்தவர்களே முதலிடத்தில் உள்ளனர். பாலியல் கொடுமையில் ஒரு ஆண்டு கூட படிக்காத 32 சதவீத ஆண்களும், ஒன்று முதல் ஜந்தாம் வகுப்பு வரை படித்த ஆண்கள் 42 சதவீதமும் ஈடுபடுகின்றனர். படித்த ஆண்கள் 42 சதவீதமும் ஈடுபடுகின்றனர். இது ஆறு முதல் பத்தாண்டுகள் படித்தவர்களில் 57 சதவீதமாக இருக்கிறது. இதே சதவீதம் மேல்நிலைப் படிப்பு மற்றும் உயர்கல்வி படித்தவர்களிடமும் காணப்படுகிறது.சமூக, பொருளாதார, அந்தஸ்து படைத்தவர்களிடத்தில் அதிக வருமானம் பெறும் ஆண்கள், மனைவியை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துகின்றனர். இவர்களிடம் 61 சதவீதம் காணப்படுகிறது. இது அந்தஸ்து குறைந்த ஆண் வர்க்கத்தில் 35 சதவீதமாக இருக்கிறது. உயர்ந்த படிப்பு, சமூக, பொருளாதார அந்தஸ்தில் உயர்ந்த பெரும்பாலான ஆண்கள் தான் மூர்க்கத்தனமாக மாறுகின்றனர். நன்கு படித்த, சமூக அந்தஸ்து உடைய ஆண்களிடம் மூர்க்கத்தனம் இருக்காது என்று வெளியுலகம் நம்பிக் கொண்டிருப்பது ஒரு மாயைதான்.

தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளிலிருந்து வெளியே வரபெண்கள்தான் முன்வரவேண்டும். திருமண வாழ்;க்கையில் இதெல்லாம் சகஜம். தவிர்க்க முடியாதது. |கணவனே கண் கண்ட தெய்வம்| என்று பெரும்பாலான பெண்கள் நினைத்துக் கொள்வது பொறுத்துக் கொள்ளமுடியாது. இன்றும் 55 சதவீதப் பெண்கள் இந்த கொடுமைகள் எல்லாhம் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான் இது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதைத் தவிர்க்க பாடசாலைகளில் இருந்தே ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் நடத்தப்படவேண்டும். இருவருக்கும் சமுதாயத்தில் சம அந்தஸ்து உள்ளது என்பதைப் புரிய வைக்க வேண்டும். அப்பொழுதான், ஒரு பட்ச சார்பான மூர்க்கத்தனத்தை ஒழிக்க முடியும்.

நன்றி: தினக்குரல்.