Home குடும்பம் ஆண்-பெண் பாலியல் பெண்களின் பாலியல் பிரச்சனைகளும் தீர்வுகளும் (2)
பெண்களின் பாலியல் பிரச்சனைகளும் தீர்வுகளும் (2) PDF Print E-mail
Tuesday, 13 March 2012 07:34
Share

  பெண்களின் பாலியல் பிரச்சனைகளும் தீர்வுகளும் (2) 

 கேள்வி - 16.  மாதவிலக்கு காலத்திற்கு பின் முட்டை வெளிப்படுகிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

 பதில் :  மார்பகங்கள் கனமாக இருக்கும். அடி வயிறு வலிக்கும். லேசான ரத்தக்கசிவு ஏற்படும். உடலின் வெப்ப நிலையை அதிகாலையில் அளக்கும் பரிசோதனையை மேற் கொள்ளும்போது, கருவணு விடுபடும் வாய்ப்பு இருந்தால் வெப்பம் குறைந்து மறுநாளே கூடும்.

இவை போன்ற அறிகுறிகள் இருந்தால் கருவணு விடுபடுகிறது என யூகிக்கலாம். கருப்பை திசு சுரண்டல் பரிசோதனை போன்ற ஆய்வுகள் மூலமும் கண்டறியலாம்.

 கேள்வி - 17.  என் வயது 26. மிகவும் ஒல்லியாக இருப்பதால் திருமணம் தள்ளிப் போகிறது. உடல் இளைக்க மாத்திரைகள் இருப்பதைப்போல், குண்டாக்க ஏதேனும் சிகிச்சைகள் இருந்தால் சொல்லுங்களேன்.

பதில் :  குண்டான உடலைக் குறைப்பதுதான் இப்போது பலபெண்களுக்கும் பிரச்சினையே. குண்டாக விரும்புவோர் உணவின் மூலமே அதை சாத்தியப்படுத்தலாம். அரைக்கிலோ உடைத்த கடலை, கால் கிலோ சர்க்கரை இரண்டையும்பொடி செய்து, அதில் கால் கிலோ நெய் சேர்த்து சின்னச் சின்ன லட்டுகளாகப் பிடித்து தினம் ஆறு அல்லது ஏழு சாப்பிடவும்.

அமுக்கராக் கிழங்குசூரணம் ஒரு சிட்டிகையை நெய்யில் குழைத்து தினம் மூன்று வேளைகள் சாப்பிடவும். ச்யவன பிராஷ் லேகியம் தினம் மூன்று வேளைகள் சாப்பிடவும். தினம் சிறிது தேங்காயைப் பச்சையாக சாப்பிடவும். உணவிலும் தேங்காய் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். தினம் இரு வேளை ஐந்து பாதாம், ஒருமுட்டை சாப்பிடவும்.

தினம் நான்கு டம்ளர் பால் குடிக்கலாம். வாரம் ஒரு முறை ஆட்டிறைச்சி சேர்த்துக் கொள்ளவும். மேற்சொன்ன உணவுகள் செரிக்க தினம் ஒரு கீழா நெல்லி மாத்திரை சாப்பிடவும். காபி, டீயைக்குறைக்கவும். ராத்திரியில் கைப்பிடியளவு கொண்டைக்கடலையை மண் சட்டியில் ஊற வைத்து காலை யில் சாப்பிடலாம். இவற்றையெல்லாம் செய்து பாருங்கள், மூன்றே மாதங்களில் வியப்பான மாற்றம் காண்பீர்கள்.

 கேள்வி - 18.  நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்பம் உறுதியான நாள் முதல் ஆளாளுக்கு ஒரு ஆலோசனை சொல்லி பயமுறுத்துகிறார்கள். ரொம்பவும் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் அபார்ஷன் ஆகிவிடும் என்கிறார்கள். அபார்ஷன் எந்தெந்தக் காரணங்களால் ஏற்படும்?

 பதில் :  அபார்ஷன் எனப்படுகிற கருச்சிதைவுக்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. கருத்தரிக்கும் ஆற்றல் உள்ள உயிரணுக்கள் குறைந்திருந்து நீங்கள் கருத்தரித்திருந்தால்.- முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குதல், நீண்டதூரப் பயணம் மேற்கொள்தல், அளவுக்கதிக டென்ஷன் போன்றவற்றால்.- காரமான உணவுகளை அதிகம் உண்பதால். கோழி, பப்பாளி, அன்னாசி, பலாபோன்றவற்றை முதல் 90 நாட்களுக்குத் தவிர்க்கவேண்டும்.

உணவில் காரத்தையும், புளிப்பையும் குறைத்து செயற்கை மணம்மற்றும் நிறத்தைத் தவிர்த்து உண்ணவும். இயற்கையான பழம், காய்கறிகள், ஜூஸ்சாப்பிடவும். தினம் 3 முதல் 4 டம்ளர்பால் கட்டாயம் குடிக்கவும். கர்ப்பத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் இல்லை என்ற பட்சத்தில் அடிக்கடி ஸ்கேன் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். 14-வது வாரம் ஸ்கேன் செய்தால் போதும். இப்படியெல்லாம் இருந்தாலே உங்களுக்கு நல்லபடியாக பிரசவம் நடக்கும். கவலைவேண்டாம்.

 கேள்வி - 19.  முதல் கருவை கலைத்துவிட்டால் அடுத்து குழந்தையே பிறக்காது என்பது உண்மையா?

 பதில் :  முதல் கருவை கலைத்தால் அடுத்து குழந்தையே பிறக்காது என்பது உண்மையல்ல. கரு உண்டாவதைத் தடுக்க, மாதவிலக்கு சுழற்சியின் நடுவில் உள்ள 10 நாட்கள் பாதுகாப்பானவை என்று பலரும் எண்ணுகின்றனர். ஆனால் பலருக்கு மாதவிலக்கு சுழற்சி சீராக இருப்பது இல்லை. எனவே கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவது நல்லது.

 கேள்வி - 20.  எனக்குப் பதினேழு வயதில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்தநான்கு வருட காலமாக வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கிறது. இதனால் எப்போதும் தர்ம சங்கடமாகவே உணர்கிறேன். என்னதான் தீர்வு?

 பதில் :  அதிக சூடுதான் வெள்ளைப்படுதலுக்குக் காரணம். உணவில் உப்பு, காரம்தவிர்க்கவும். வாரம் ஒரு முறை புளித்த கீரை சேர்த்துக் கொள்ளவும். தினம் ஒரு பெரிய நெல்லிக்காயும், கொஞ்சம் உலர்ந்த திராட்சையும் சாப்பிடவும். அடிக்கடி பொன்னாங்கண்ணிக்கீரை சேர்த்துக் கொள்ளவும். வெள்ளை முள்ளங்கியை வேக வைத்த தண்ணீரைக்குடிக்கவும். வாழைத் தண்டும், பயத்தம் பருப்பும் வேக வைத்து கூட்டுமாதிரி சமைத்து சாப்பிடவும்.

நீர்மோர் நிறைய குடிக்கவும். ஊறுகாய் பக்கமேபோகாதீர்கள். உணவில் காய் கறிகள், பழங்கள், கீரைமூன்றும் அதிக மிருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். அமுக்கராக்கிழங்கு மாத்திரையை வேளைக்கு ஒன்றாக தினம் மூன்று சாப்பிடவும். மாதுளம்பழத்தின் ஓட்டைக் காய வைத்துப் பொடித்து ஒரு சிட்டிகையை தண்ணீரில் கலந்து மூன்று வேளைகள் குடிக்கவும்.

அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தினம் இரண்டு வேளைகள் உள்ளாடைகளை மாற்றவும். காட்டன் உள்ளாடையையே அணியவும். மருந்துக் கடைகளில் பொட்டாசியம் பர்மாங்கனேட் என்றுகிடைக்கும். அதில் சிட்டிகையை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்யவும். போதிய அளவு ஓய்வு, சரிவிகித உணவு என எல்லாம் இருந்தும் தொடர்ச்சியாக வெள்ளைப்படுகிற பட்சத்தில் ஸ்கேன் செய்து பார்க்கலாம.

 கேள்வி - 21.  என் வயது 26. ஒரு குழந்தை உண்டு. கடந்த சில நாட்களாக எனக்கு சிறுநீரை அடக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நிமிடம் கூட அடக்க முடியவில்லை. சில சமயங்களில் உடை நனைந்து தர்ம சங்கடத்தை உண்டாக்குகிறது. இதைக்குணப்படுத்த முடியுமா?

 பதில் :  திடீரென உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், பிரச்சினைகளைக் குறித்த பயம் போன்றவை இதற்குக்காரணமாக இருக்கலாம். சர்ககரை நோய்க்கான சோதனையைச் செய்து பாருங்கள். உங்களுடைய உணவு எப்படிப்பட்டது எனத் தெரியவில்லை. அதில் எல்லா வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன் மற்றும் தாதுப் பொருட்கள் இருக்கிற மாதிரிப்பார்த்துக் கொள்ளுங்கள். பருப்பும், முட்டையும் தினம் சேர்த்துக் கொள்ளவும். காய்கறி, கீரை, பழம்மூன்றும் தினசரி மெனுவில் இருக்கவேண்டும். பாலில் தண்ணீர் விடாமல் காய்ச்சி அப்படியே குடிக்கவும். ச்யவனபிராஷ் லேகியம் சாப்பிடலாம்.

மருத்துவரிடம் நேரடிப் பரிசோதனை மேற்கொண்ட பிறகு, அவரது ஆலோசனையின் பேரில் காலையிலும், மாலையிலும் அஷ்வ கந்தா மாத்திரை ஒவ்வொன்று சாப்பிடலாம். மாலை நேரத்தில் கைப்பிடியளவு பொட்டுக் கடலையும், ஒரு ஆப்பிளும் சாப்பிடவும். மனத்தை ஒரு முகப்படுத்தும் தியானப் பயிற்சி இந்தப் பிரச்சினைக்குமிக அருமையான சிகிச்சை. முடிந்தால் தினம் வாக்கிங் செல்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மன ஆரோக்கியம்தான் இப்பிரச்சினைக்கான முதல் சிகிச்சை. எந்தப் பிரச்சினைக்கும் டென்ஷன் ஆகாமல், தைரியமாக சந்திக்கப் பழகுங்கள். உணவே மருந்து என வாழப்பழகுங்கள், மருந்தேஉணவு என்ற நிலை ஆபத்தானது.

 கேள்வி - 22.  எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. குடும்பச்சூழல் காரணமாக நாங்கள் குழந்தையே வேண்டாம் என முடிவு செய்திருக்கிறோம். சித்த மருத்துவத்தில் குழந்தையில்லாமல் செய்ய சிகிச்சை ஏதும் உண்டா?

 பதில் :  நீங்கள் நினைக்கிற மாதிரி குழந்தையே பிறக்காமலிருக்கச்செய்ய சிறப்பு சிகிச்சைகள் ஏதும் கிடையாது. பாதுகாப்பான நாட்கள் என்று சொல்லக் கூடிய நாட்களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஒன்றுதான் இதற்கான வழி. அதாவது மாதவிலக்கான ஒன்பதாம் நாள் முதல் பதினெட்டாம் நாள் வரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பத்தைத் தள்ளிப்போட மாத்திரைகள் உண்டு. அவையெல்லாம் ஒன்றிரண்டு மாதங்கள் சாப்பிடத்தானேதவிர, நீண்டகாலத்துக்கு எடுத்துக் கொள்கிற பட்சத்தில் பக்க விளைவுகளைஉண்டாக்கும்.

கரு உருவாகாமல் பாதுகாப்பாக இருக்கப் பாருங்கள். உண்டானபிறகு அதை அழிக்க நினைக்காதீர்கள். என் மருத்துவ அனுபவத்தில் முதல் குழந்தை வேண்டாம் என அதை அபார்ஷன் செய்தார் ஒரு பெண். அதன் பிறகு அவருக்குக்கருக்குழாய் அடைப்பு ஏற்பட்டு பத்தாண்டுகளாகியும் இன்னும் குழந்தை தங்காமல் சிகிச்சையில் இருக்கிறார். இப்போது குழந்தையே வேண்டாம் என நினைக்கிற நீங்கள் பிற்காலத்தில் மனம் மாறலாம். குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதிக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைத்து விட்டால்? எனவே முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். திருமணமான ஒரே வருடத்தில் செய்யக் கூடிய முடிவில்லை இது.

 கேள்வி - 23.  என் வயது 43. கணவருக்கு 50. ஏழு மாதங்களுக்கு முன்பு அவருக்கு முதல் முறையாக மாரடைப்பு வந்தது. இந்த வயதிலும் அவருக்கு இல்லற வாழ்க்கை ஈடுபாடு குறையவில்லை. மாரடைப்பு வந்ததால் நான்தான் பயப்படுகிறேன். மாரடைப்புவந்தவர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். குழப்பம் தீர்க்கவும்.

 பதில் :   மாரடைப்புக்கும், இல்லறவாழ்க்கை ஈடுபாட்டுக்கும் நீங்கள் பயப்படுகிற அளவுக்கு தொடர்பில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் இந்த மாதிரி தேவையற்ற பயங்களின் காரணமாக, இயல்பான உணர்வுகளைக்கூட அடக்கி வாழப் பழகுகிறார்கள். அப்படி அடக்கிக் கொள்கிறபோது அது மாரடைப்பில் கொண்டு போய்விட வாய்ப்புகள் அதிகம். ஆண்களுக்காவது இந்த ஆர்வத்துக்கு வடிகாலாக வழிகள் உண்டு. ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை.

இருதயக்கோளாறுகளால் பாதிக்கப்படுகிற பல பெண்களின் வரலாறை ஆராய்கிறபோது இப்படி இயல்பான உணர்வுகளை அடக்குவது காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. கணவன்- மனைவியான உங்களுக்குள் இந்த விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டாம்.

கணவரின் உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். நெய் மற்றும் எண்ணெயை அறவே தவிர்க்கவும். குறிப்பாக உறையும் தன்மை கொண்ட எண்ணெய்களைத் தொடவே வேண்டாம். நல்லெண்ணெய் அளவோடு சேர்த்துக் கொள்ளலாம். காய்கறி, கீரைகள் நிறைய இருக்கட்டும். பதப்படுத்திய உணவுகளை சாப்பிட வேண்டாம். ருசிக்காக சாப்பிடுவதைத் தவிர்த்து, ஆரோக்கியத்துக்காக சாப்பிடப் பழக வேண்டும். மாரடைப்பு ஒரு முறை வந்தால் மீண்டும் வந்துதானாக வேண்டும் என்றில்லை. மேற்சொன்ன விஷயங்ளில் கவனமாக இருக்கிற பட்சத்தில் அது வருவது தள்ளிப் போகவோ, வராமலே போகவோ கூடும்.

 கேள்வி - 24.  என் வயது 21. இப்போது நான் இரண்டு மாதக் கர்ப்பம். கர்ப்பமாக இருக்கிறபோது இல்லற வாழ்வில் ஈடுபட்டால் சுகப் பிரசவம் நிகழும் என்று கேள்விப்பட்டேன். அது நிஜமா? எத்தனை நாட்கள் இடைவெளியில் ஈடுபடலாம்? அதனால் குழந்தைக்குபாதிப்பிருக்குமா?

 பதில் :  நீங்கள் கேள்விப்பட்ட விஷயம் ரொம்பவும் தவறானது. கர்ப்பம் தரித்த முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களில் இல்லறவாழ்க்கையில் ஈடுபடுவது ஆபத்தானது. இடைப்பட்ட மாதங்களில் கர்ப்பப் பைக்கு அழுத்தம் தராத வகையில் மென்மையாக உறவு கொள்ளலாம். அதுவும் கூட பிரசவமாவதில் எந்தச்சிக்கலும் இருக்காது என சொல்லப்பட்ட பெண்களுக்கு மட்டும்தான். மற்ற பெண்கள் அதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்ப காலத்தில் இல்லறவாழ்வில் ஈடுபடுவதால் தொற்றுக் கிருமிகள் அதிகம் தாக்க வாய்ப்புகள் உண்டு. பிறப்புறுப்பு சுகாதாரம் என்பது இந்த நாட்களில் மிக மிக முக்கியம்.

சுகப்பிரசவத்துக்கு ஆரோக்கியமான உணவுதான் அடிப்படை. தினம் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடவும். இரவு உணவுக்குப் பிறகு வெற்றிலை, பாக்கு போடலாம். கமலா ஆரஞ்சும், வாழைப் பழமும் தினம் சாப்பிடலாம். முருங்கைக் கீரையும், முட்டையும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். தினம் மூன்று வேளை பால்குடிக்க வேண்டியது மிக முக்கியம்.

குதிகால் உயரமாக வைத்த ஹைஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனையை மட்டும் சரியாகப் பின்பற்றுங்கள். மற்றவர்கள் சொல்கிற அனுபவங்கள், கேள்விப்படுகிற விஷயங்களை எல்லாம் காதில் வாங்காமல், பயமின்றி பிரசவத்தை எதிர் நோக்குங்கள்.

 கேள்வி - 25.  எனக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. திருமணமான புதிதில் என் மேல் அன்பாக இருந்த கணவர், ஒரு குழந்தை பிறந்த பிறகு என்னை நெருங்குவதே இல்லை. உணர்ச்சிகளை அடக்க நான் சுய இன்பம் செய்ய வேண்டியிருக்கிறது. கணவருக்கு என் மேல் மீண்டும் நாட்டம் வர சிகிச்சை உண்டா?

 பதில் :  பொதுவாகவே திருணமான புதிதில் செக்ஸ் வாழ்க்கையில் இருக்கிற ஈடுபாடு, காலத்துக்கும் அப்படியே இருப்பதில்லை. உங்கள் கணவருக்கு அது ஒரேயடியாகக் குறைய என்ன காரணம்என முதலில் கண்டு பிடியுங்கள். ஒரு குழந்தை பெற்ற பிறகு தன்னை அழகாக, சுத்தமாக வைத்துக் கொள்கிற எண்ணம் பெரும்பாலான பெண்களுக்குப் போய் விடுகிறது.தினம் இரண்டு வேளைகள் குளியுங்கள்.

கஸ்தூரி மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், அது கணவரை இல்லற வாழ்க்கைக்கு ஈர்க்கும். நீங்கள் அணிகிற உடைகள் மற்றும் உள்ளாடைகள் அழுக்கின்றி, வியர்வை நாற்ற மின்றி சுத்தமாக இருக்கட்டும். படுக்கையறையை சுத்தமாக வைத்திருங்கள். தினம் காலையில் கணவருக்குக் கைப்பிடியளவு பச்சைப் புதினாவை சாப்பிடக் கொடுங்கள். கருணைக் கிழங்கு மற்றும் பசலைக் கீரை அதிகம் சமைத்துக் கொடுங்கள். முருங்கைப்பூவை நெய்யில் வதக்கிக் கொடுங்கள். இரவு படுக்கும் முன்பாக வெற்றிலை, பாக்குடன், சிறிது ஜாதிக்காய் சேர்த்துக் கொடுங்கள். இதெல்லாம் கணவருக்குத் தாம்பத்திய ஈடுபாட்டை அதிகப்படுத்தும். படுக்கையறையில் வீட்டுப் பிரச்சினைகள் பேசாதீர்கள்.

பதில்கள்: டாக்டர் ஷர்மிளா