Home கட்டுரைகள் பொது காலத்தால் மாறும் மனிதர்கள்!
காலத்தால் மாறும் மனிதர்கள்! PDF Print E-mail
Sunday, 04 March 2012 07:23
Share

 காலத்தால் மாறும் மனிதர்கள் 

கற்கால மனிதனோடு ஒப்பிட்டு பார்த்தால் மனிதன் இன்று எவ்வளவோ மாறிவிட்டான். தொழில் நுட்ப வளர்ச்சிகள் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுகின்றன. மக்கள் முன்னேற்றங்களுக்கு ஈடு கொடுத்து வளர பழகி விட்டனர். தாங்கள் வாழ்கின்ற சூழ்நிலைகளில் கிடைக்கின்ற வசதிகளில் நிறைவு காண்பதோடு தொடர் மற்றங்களுக்கு ஈடு கொடுத்து வளர்கின்றனர்.

வாழ்க்கை தர உயர்வு நமது வாங்கும் சக்தியோடு தொடர்பு உடையது. எனவே தான் நுகர்வோரை கவரக்கூடிய வழிமுறைகளும் நவீன காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டிருக்கிறது.

வாழ்க்கை துனைவி எப்படி பட்டவராக இருக்க வேண்டும்? இல்லற வாழ்க்கைக்கு ஏற்ற நற்குணங்களை உடையவராகவும், தன்னை மணந்து கொண்ட கணவரது செல்வத்துக்குத் தக்கவாறு செலவு செய்பவராகவும் விளங்குபவரே சிறந்த வாழ்க்கைத் துணைவி. குடும்பத்திற்கு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் கணவனின் செல்வத்திற்கு தக்கமுறையில் செலவு செய்வராக என்றால் வீட்டு பொறுப்புகளை அவரே முடிவு செய்பவர் என்ற நிலை முற்காலத்திலிருந்தே இருந்துள்ளது.

தற்போது வீட்டு சாதனங்களின் முக்கிய நுகர்வோராக பெண்கள் எண்ணப்படுகின்றனர். நிதித்திட்டம் தயாரிப்பது, ஆடை, வீட்டிற்கான உணவுப்பொருட்கள் மற்றும் இதர தேவையான பொருட்களை வாங்குவது அனைத்தும் பெண்கள் தான். முக்கிய சீன நகரங்களில் இந்நிலை மாறி வருகிறது என்பது கண்டறியப்பட்டுள்ள ஆச்சரியப்படும் உண்மை. நவீனகால மாற்றங்களை ஆய்வு செய்த இயுரோமானிட்டர் என்ற ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள் பல ஆச்சரியமான உண்மைகளை கண்டறிந்துள்ளன.

"புதிய மனிதர்கள்" என சீனாவில் அழைக்கப்படுகின்ற பாலியல் சவால் உடையவர்கள் வளர்ந்துவரும் நிலை பலவித சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறன. மிகுந்த பெண்மை தன்மையோடு கூடிய ஆண்மையையும், சிந்திக்கின்ற மற்றும் தனக்கேயுரிய பாணியையும் கொண்டுள்ள ஆண்களை தான் பாலியல் சவால் கொண்டவர்களாக இயுரோமானிட்டர் உலக ஆய்வு நிறுவனம் குறிப்பிடுகின்றது. இவர்கள் பொருட்கள் வாங்குவதில் முதிர்ச்சியும் அறிவுகூர்மையும் உடையவர்களாக கருதப்படுகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, கடந்த வருடம் சீன நகர்புற குடும்ப நுகர்வு பற்றிய ஆய்வு சீன தகவல்தொடர்பு பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது. இதன்மூலம் சீனாவின் முக்கிய நகரங்களில் வீட்டு சாதனங்களின் நுகர்வில் அதிகமுடிவுகளை கணவர்கள் எடுப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாய்வு பெய்சிங், ஷாங்காய் உள்ளிட்ட ஒன்பது நகரங்களில் 1,546 குடும்பங்கள் மீது நடத்தப்பட்டது. நாள்தோறும் தேவைப்படும் பொருட்கள், ஆடைகள், பொழுதுபோக்கு மற்றும் வீட்டு மின்சாரப் பொருட்கள், கனணிகள், செல்லிடைபேசிகள், வீடுகள், சிற்றுந்துகள் மற்றும் பயணங்கள் முதலிய 10 நுகர்வுப்பொருட்கள் நிர்ணயிக்கப்பட்டன. இவைகளில் 5 க்கு மேற்பட்ட பொருட்களில் 50.4 விழுக்காடு முடிவுகளை கணவன்மார் செய்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இன்று பெண் சமூகம் மிக பல மாறுதல்களை கண்டுள்ளன என்று தான் செல்ல வேண்டும். பெண்கள் உயர்க்கல்வியை தொடர்ந்து தங்கள் வாழ்க்கை நிலையை உயர்வானதாக தெரிவு செய்வது அதிகமாகியுள்ளதால், ஆண்கள் வீட்டுப் பொறுப்புகளை அதிகமாக தாங்க வேண்டியதாகியுள்ளது. ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான வேலைகள் என்ற பாரம்பரிய குடும்பப்பணிகள் இன்று முக்கிய மாற்றங்களை பெற்றுள்ளன. வீட்டின் முடிவுகளில் அதிக பொறுப்பு ஏற்கும் ஆண்களின் எண்ணிக்கை பெருகுவது என்பது தொழில்துறையில் மாற்றங்களை கொண்டுவரும்.

அதாவது இதுவரை பெண்களை இலக்காக கொண்ட அனைத்து உற்பத்திப் பொருட்களும் ஆண்களை மையமாகக் கொண்டு செயல்படும். தொழில் நுட்பத்துறையின் விரைவான உயர்வான வளர்ச்சியினால், நுட்பம் சார்ந்த வீட்டு உற்பத்திப்பொருட்கள் அதிகரித்துள்ளன. இது பெண்களை விட அதிக தொழில்நுட்ப உணர்வு கொண்ட ஆண்களை முடிவு மேற்கொள்ள செய்கின்றது என்று Xiao Mingchao கூறுகிறார். ஆண்கள் தங்கள் தோற்றத்தில் அதிக அக்கறை கொள்வதால் ஆடைகள், துணை அழகுப்பொருட்கள், குளியறைப் பொருட்கள் மற்றும் உடற்பயிற்சி கருவிகள் ஆகியவற்றின் சந்தையை பெருக்கியுள்ளது. வாங்கும் திறன் அதிகமாக இருக்கின்றபோது ஆண்கள் தங்களுக்கு நல்ல கடிகாரங்களை வாங்குவதோடு, வைரம், பவளம் என மிகவும் விலையுயர்ந்த பரிசுகளை தங்கள் மனைவியருக்கு வாங்கி மகிழ்விக்கின்றனர்.

குடும்பப்பணியிலான மாறுதல்கள் வியாபாரத்திலும் பலவித மாற்றங்களை கொண்டு வருகின்றன. உற்பத்தி நிறுவனங்கள் தங்களுடைய சந்தைகளை வியாபார ரீதியில் பிரித்து பல்வேறு வகைகளாக கையாளும் நடைமுறைகளையும், நுகர்வோரை மேலும் நல்லமுறையில் சென்றடையக்கூடிய வழிகளையும் ஆய்ந்து வளர்த்து வருகின்றன. பிரிட்டனை மையமாக கொண்ட தூசி உறிஞ்சி தயாரிப்பு நிறுவனமான டைசன் அதிக தொழில் நுட்ப தன்மையோடு, பெண்களிடமிருந்து தனது பார்வையை ஆண்களின் மேல் திருப்பியுள்ளது.

தொழில் நுட்பத்தை விவரிக்கும் விளம்பரங்கள், பார்வையாளார் அறையில் மாதிரிப் பொருட்களை பூட்டப்படாத அளவில் வெளியே வைத்து அது செயல்படும் விதங்களை அறியச்செய்வது ஆகியவை ஆண்களின் ஆர்வத்தை ஈர்க்க டைசன் நிறுவனம் மேற்கொள்ளும் உத்திகளாகும். டைசன் நுகர்வோரில் 40 விழுக்காட்டினர் ஆண்களே.

தோல்காப்பு மற்றும் அன்றாட பொருட்களை உற்பத்தி செய்வதுதான் புரோக்ற்றர் மற்றும் கேம்பிள் நிறுவனம் (Procter & Gamble). ஆண்கள் அதிகமாக பயன்படுத்தும் கில்லட் சவரத்தகட்டிற்கு உலக அளவிலான முத்திரையை பெறுவோம் என இது ஜனவரி 2005 யில் அறிவித்தது. அற்கான முயற்சிகளில் முழுமையாக இறங்கி ஆண்களை கவர பலவித முறைகளை கையாண்டது. ஜூலை முதல் செப்டம்பர் வரை 8 விழுக்காடு என்ற இரண்டு மடங்கு உயர்வு பெற்றதோடு 20.2 பில்லியன் டாலர் நிதிநிலையையும் அடைந்தது.

இதுபோல பல்வேறு நிறுவனங்கள் ஆண் நுகர்வோரை கவர இன்னும் அதிகயளவிலான சந்தைகள் உள்ளன என்று இயுரோமானிட்டர் ஆய்வு நிறுவனம் பரிந்துரைக்கின்றது. பெண்களை விட ஆண்கள் இணையதளம் மூலமாக பொருட்கள் வாங்குவதில் ஈடுபாடு காட்டுகின்றனர். இது இணையதள விற்பனையாளர்கள் தங்கள் இணையதளங்களை விரிவாக்கி, உற்பத்திப் பொருட்களை வியாபார ரீதியில் பிரிவு செய்து நுகர்வோரை கவரமுடியும்.

உள்ளுர் தேவைகளின் சிறப்பு அறிவு பெற்றிருந்தால் உள்நாட்டு சந்தையில் அதிக பங்காற்ற முடியம் என்று Xiao குறிப்பிடுகிறார். வாழ்க்கைதரம் உயர்ந்து வீட்டின் உட்புற அலங்காரங்களை பலர் மேற்கொள்வது சுய உற்பத்திப் பொருட்கள் மற்றும் வீடு அலங்காரம் பற்றிய ஆலோசனை அளிப்பவர்களுக்கு அதிக சந்தையை கொண்டுவரும். இவர்கள் தங்கள் கையாலே தங்கள் வீட்டை அழகு செய்யும் அதிக ஆண்களை நுகர்வோராக பெறலாம் என்று Xiao குறிப்பிடுகிறார்.

குடும்ப பணிப்பொறுப்பு முறையில் ஏற்படும் சிறிய மாற்றம் குடும்ப முடிவுகளில், தொழில் நுட்ப தொழில்துறையில், வியாபாரத் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது என்பது இதன் மூலம் புரிகிறதல்லவா. அதனால் தான் வழமையான பணிகளில் நாம் காட்டுகின்ற சிறு வித்தியாசங்கள் கூட மலைபோன்ற விளைவுகளை கொண்டு வரும் என்று கூறுகிறார்கள் போலும். பத்தோடு பதினொன்றாய் இல்லாமல் தனித்தன்மையுடைய நமது வித்தியாசமான நேர்முக அணுகுமுறை சமூகத்தில் பெரிய நல்ல விளைவுகளை கொண்டுவரும் என்பது உறுதி என எண்ணலாம் தானே.

நன்றி: சீன வானொலி