Home குடும்பம் ஆண்கள் வரதட்சணையின் பல முகங்கள்!
வரதட்சணையின் பல முகங்கள்! PDF Print E-mail
Tuesday, 21 February 2012 07:28
Share

வரதட்சணைக்கு பல முகங்கள்! 

o பவுன் கணக்கில் கொட்டப்படும் நகையோடு பெண் திருமணமாவது – தங்க தட்சணை!

o பணம் வாங்குவது, திருமணச்செலவு முழுமையும் பெண் வீட்டார் செய்வது – ரொக்க தட்சணை!

o வரதட்சணைப் பணத்தை வைத்து வேலை வாங்குவது, வளைகுடா நாடுகளுக்குச்செல்வது – வேலை தட்சணை!

o வீடு, வாகனங்கள், இதர சொத்துக்கள் பெறுவது – சொத்து தட்சணை!

o ஆயிரம் பொய்சொல்லி யாவது ஒரு கல்யாணத்தை முடிக்க நினைப்பது -பொய் தட்சணை.

o வரதட்சணை கொடுக்க முடியாதவர்கள் தம்மகளுடைய திருமணத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று நினைப்பது கடன்படுவது - கடன் தட்சணை

o அப்படியும் கடன் எடுக்க முடியாதவர்கள் வங்கிகளில் வட்டிக்கு கடன் எடுப்பது - வட்டி தட்சணை

o என்னுடைய மகன் பெரும் டாக்டர், எஞ்சினியர், லோயர், அதிகாரி என்று மாப்பிள்ளையின் தகப்பனார் பேரம் பேசுவது - பெருமை தட்சணை.

o மாப்பிள்ளையைப் பற்றித்தரகர் பெரிதாகப்பேசிப் பெண்வீட்டாரிடம் அதிக கூலி பெற நினைப்பது - தரக தட்சணை.

o பெண்பிள்ளையைப் பெத்தவர் அனைத்தையும் கொடுத்துவிட்டு கடைசியில் தங்களிடம் ஒன்றும் இல்லாமல் வீதிக்கு வருவது - விதி தட்சணை

o வளைகுடாநாடுகளில் வேலைசெய்பவர் என்று பெரிய தங்க வளையல் கேட்பது - வளையல் தட்சணை

o சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை என்று ஆணவம் பேசுவது - ஆணவ தட்சணை

o நாங்கள் வரதட்சணை கேட்கவில்லை உங்கள் பிள்ளைக்கு நீங்கள் கொடுப்பதைக் கொடுங்கள் என்று நாசூக்காக சொல்வது - சொற்திறன் தட்சணை

o தன் உடன் பிறந்த சகோதரிகளுக்காய் தன் வாழ்வைத் தியாகம் செய்து வாழ நினைப்பது -தியாக தட்சணை

o வரதட்சணை வாங்காதே என்று உலமாக்கள் எவ்வளவுதான் கூறினாலும் அதைக் கவனத்தில் கொள்ளாது காரியத்தில் கண்ணாயிருப்பது - காரிய தட்சணை

o அரபு நாடுகளுக்குப் போய்வந்தும் அங்கு மாதிரி கொடுத்து செய்யாமல் எடுத்து செய்ய நினைக்கும் மானங்கெட்டவனை மாப்பிள்ளையாய் எடுப்பது - மடமை தட்சணை

o கையைநீட்டிப் பிச்சை கேட்பவனை பிச்சைகாரன் என்னும் சமுதாயம் கையை நீட்ட்டாமல் பிச்சை கேட்கும் இவனை மாப்பிள்ளை என்கிறதைச்சொல்வது -சமுதாய தட்சணை

o ஈத், இதர நாட்களை வைத்து பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது –பண்டிகை தட்சிணை!

o முக்கியமாக பிரசவ செலவை மாமனார் வீட்டிற்குத் தள்ளிவிடுவது – பிரசவ தட்சணை!

o குழந்தை பிறந்தால் அதற்கும் காது குத்து, மொட்டையடிப்பது என்ற பெயரில் பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – குழந்தை தட்சணை!

o மனைவியை வீட்டுவேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது, அதில் பங்கேற்காமல் இருப்பது – வேலைக்காரி தட்சணை!

o மனைவியை இருட்டுக்கு மட்டும் இலவசமாய் பயன்படும் பொருளாய் பார்ப்பது – தாசி தட்சணை!

.....மொத்தத்தில் முடிவு பெறாது இந்த வரதட்சணை! ................

source: http://saynotodowry.blogspot.com/2010/12/blog-post_2319.html