Home இஸ்லாம் நூல்கள் இஸ்லாத்தின் நிழலில் இளைய இரத்தங்கள்
இஸ்லாத்தின் நிழலில் இளைய இரத்தங்கள் PDF Print E-mail
Thursday, 09 February 2012 07:53
Share

இஸ்லாத்தின் நிழலில் இளைய இரத்தங்கள்

[ இளைஞர்கள் உடல் வலிமைமிக்கவர்கள்;

பெருமளவு உடல் ஆரோக்கியமானவர்கள்;

உள்ளம் தெளிவானவர்கள்; உணர்வுகள் விறுவிறுப்பானவர்கள்;

புலன்கள் துடிதுடிப்பாகச் செயற்படுகின்றவர்கள்.

எனவே, ஆவல்களும் வேட்கைகளும் அதிக ஆசைகளும் உடையவர்கள்.

எல்லா வகையிலும் உயிரோட்டமுடனும், துடிதுடிப்புடனும் செயற்படுகின்ற தன்மையுடையவர்கள்.

மிக இலகுவிலேயே உணர்ச்சி வசப்பட்டு, அதன்படியாய் செயற்பட முனைந்துவிடுவார்கள்.

இக்கால கட்டத்தில், இளைஞர்கள்; பெற்றோர், உறவினர்கள் போன்ற பிறரில் தங்கி நிற்பதில் இருந்து தன்னில் சுயமாக தங்கி நிற்க பிரயத்தனப்படுவர். இது, இளமையின் முக்கிய பண்பாக கானப்படுகிறது. 'ஒரு கொள்கைக்காக ஆயத்தப்படுத்துகின்ற, வாழ வைக்க முனைகின்ற, பக்குவப்படுத்துகின்ற பருவமாக உள்ளது' என உளவியலாளர்கள் கருதுகின்றனர்.

துர்பாக்கியம் என்னவென்றால், இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புக்கள் இளைஞர்களை பயன்படுத்தவும் அதிகளவு தவறிவிட்டன. சில இயக்கங்கள் இப்போது உணர்ந்து செயற்படத் தொடங்கியுள்ளன. ஆனால், பல அமைப்புகள் இன்னும் உணரவில்லை. இந்நிலை மாறுமானால், இஸ்லாமிய சமூகத்தில் மகத்தான மாற்றம் ஏற்படும்; முஸ்லிம் உம்மத் உலகளாவிய அளவில் உயர்ச்சி பெறும்.]

இஸ்லாத்தின் நிழலில் இளைய இரத்தங்கள்

  எம்.ஏ.ஹபீழ் ஸலபி  

இன்று முழு முஸ்லிம் உம்மத்தும் ஓர் இறுக்கமான நெருக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் வாழும் இடங்களிலெல்லாம் அவர்களுக்கெதிரான சதிவலைகள் பின்னப்பட்டு, அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு இனச் சுத்திகரிப்புக்கு ஆற்படுத்துவதையும் அவதானிக்கின்றோம். முஸ்லிம்களை ஒடுக்கி, இஸ்லாத்தை கொச்சப்படுத்துவதற்காக, அதன் எதிரிகள் எல்லாம் தமக்கிடையே இருந்து வந்த நீண்டகால பகையுணர்வை மறந்து, கைகோர்த்துள்ளனர். இதனால், இஸ்லாமிய 'ஷரீஆவை' நிலைநாட்ட எடுக்கப்படும் எத்தனங்கள் எல்லாம் பயங்கரமான பதிலடிகளோடு பின்தள்ளப்படுகின்றன.

இத்தகைய ஒரு நெருக்கடியான காலகட்டத்திலே, ரணப்பட்டுப் போயிருக்கும் இஸ்லாமிய உம்மத்திற்கு ஒத்தடம் கொடுக்கவேண்டிய இளைஞர்கள் பற்றி நாம் பேசமுனைகின்றோம். இஸ்லாமிய உம்மத் எதிர்நோக்கும் இன்றைய காலத்தின் அறை கூவலுக்கு அவர்கள்தான் சரியான பதிலடி கொடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். எனவே, முஸ்லிம் சமூகத்தின் முக்கிய அங்கமான இளைஞர்களின் பணி எத்தகையது என்பது பற்ற சிந்தித்து, அவர்களது செல்நெறியை வகுத்துக் கொடுப்பது கடமையாகவுள்ளது.

ஒரு சமூகத்தின் ஜீவ நாடியாகவும் நிகரற்ற, மகத்தான வளமாகவும் அதன் உயிரோட்டமுள்ள ஓர் ஆக்க சக்தியாகவும் இளைஞர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான், அந்த சமுதாயம் உயர்ந்த, உன்னத சமுதாயமாக வளர்ச்சி பெற முடியும் என்பதில், இளைஞர்களின் சக்தியை நன்கு புரிந்தவர்களிடம் மாற்றுக் கருத்து எதிரொலிக்க முடியாது. இஸ்லாமிய சமூகத்தில் இளைஞர்களின் முக்கிமான, சிற்பான இடத்தை வகிக்கின்றார்கள். ஏனெனில், இளைஞர்கள் சமூகத்தின் முக்கிய அங்கமாகவும் அதன் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பி அதன் தலைமைத்துவத்தை சுமக்கப் போகின்றவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இளமைப் பருவம் என்பது, அல்லாஹ்வின் அளவற்ற அருளாகவும், தனிமனித ஆளுமை வளர்ச்சிப் படியில் (Development of human personality) மிக முக்கிய பருவமாகவும், படித்தரமாகவும் அமைந்து காணப்படுகிறது. உடலாரோக்கியமும் உணர்ச்சி உத்வேகமும், துடிதுடிப்பும் அதிகமாக அமையப் பெறும் இப்பருவத்தில், பக்குவப்படுத்தப்படல் அவசியமாகும்.

உடல் வலிமை மிக்க இப்பருவத்தில் இளைஞர்களின் ஆற்றல்களும், ஆவல்களும், வேட்கைகளும், உணர்வுகளும் சரியான இஸ்லாமிய நெறிமுறையில் வளப்படுத்தப்படல் வேண்டும். இதில் நாம் பொறுப்பேற்று, கையாளாகாத நிலையில் இருந்துவிட்டால், இளைஞர்கள் தவறான, இஸ்லாத்திற்கு முரணான திசைகளில் வழிநடாத்தப்பட்டு, அவர்களது ஆற்றல்களும், திறமைகளும் அழிவு சக்திகளாக மாற்றப்பட்டு, மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டு இஸ்லாமிய சமூகத்திற்கும் ஏனையவர்களுக்கும் தலையிடியாகப் போவது தவிர்க்க முடியாது; முழு மனித இனத்திற்கும் அது அழிவையும், நாசத்தையும் விளைவித்து விடும்.

இன்று, குக்கிராமம் முதல் பெரும் நகரங்கள வரை, உலகலாவிய ரீதியில் பேரலையாக ஆர்த்தெழுந்து விரவிவரும் இளைஞர்களின் முறை தவறிய உணர்ச்சி ரீதியான போராட்டங்கள், ஒழுக்கக் கேடான நடவiடிக்கைகள், வன்முறை வெறியாட்டங்கள், கொலை, கொள்ளைச் சம்பவங்கள் என்பன இளைஞர்களைப் பண்படுத்தத் தவறியமையை பட்டவர்த்தனமாகப் பிரதிபலிக்கின்றன. இளைஞர்களைக் கணக்கில் கொள்ளாது விட்டதனால் 'மாபியா'க் கும்பல்கள் அவர்களை தமக்குச் சாதகமாக, நன்கு பயன்படுத்தி வருகின்றன. இஸ்லாமிய சமூகத்தின் ஆக்க சக்தியாக திகழ வேண்டிய இளைஞர்கள், அதன் அழிவு சக்தியாக பயன்படுத்துகின்றார்கள்.

'உனக்கு, ஐந்து விடயங்கள் வருவதற்கு முன்னர், ஐந்து அருட்கொடைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள். அவை:

1. மரணம் வரமுன் வாழ்க்கையையும்.

2. நோய் வரமுன் உடலாரோக்கியத்தையும்.

3. அதிக வேலை பழுக்கள் வரமுன் ஓய்வு நேரத்தையும்.

4. முதுமை வரமுன் இளமைப் பருவத்தையும்.

5. வறுமை வரமுன் செல்வநிலையையும்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : நஸாயீ)

'மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது. அவை:

1. தனது (உலக) வாழ்வை எவ்வாறு கழித்தான்?

2. தனது வாலிபப் பருவத்தை எவ்வழிகளில் ஈடுபடுத்தினாய்?

3. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தாய்? அதை எவ்வாறு செலவழித்தாய்?

4. பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தாய்?' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : தபரானி.)

 இளைஞர்களே!

நம்மைக் கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடிக்கும் பதிலீடு இல்லை. அவற்றை ஒரு போதும் மீளப்பெறவே முடியாது. கடந்தவை கடந்து விட்டது. இனி இருக்கும் காலத்தையாவது பிரயோசனமாகக் கழிக்க முயற்சிப்போம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது பிரசாரத்தை ஆரம்பித்த போது, முதலில் விளங்கி, ஏற்று, செயற்பட்டு, அதனை பிரசாரப்படுத்தியவர்களும் இளைஞர்களே! இந்த வகையில் எமது சமூகத்தின், நாகரிகத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் நமது இளைஞர்களின் கரங்களிலே பாரியளவு தங்கியள்ளது.

எனவே, அவர்களின் பொறுப்புக்களையும், கடமைகளையும் உணர்த்துவதோடு, அவர்களை வழிபிறழச் செய்யும் சமூக, சூழல் காரணிகள் அவர்களின் இன்றைய நிலை, ஈடேற்றம் பெற என்ன வழியுண்டு என்பன பற்றிய தெளிவை மிகச் சுருக்கமாக இக்கட்டுரையில் முன்வைக்க விளைகின்றேன்.

 இளமைப் பருவம்:

மனித வாழ்வு பல பருவங்களைக் கடந்து செல்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து சிறு பிராயத்தை அடைந்து, அதிலிருந்து வளர்ச்சியுருகின்ற பருவமாக இளமைப் பருவம் உள்ளது. இப்பருவம் வாழ்வுக்கான பொறுப்புணர்ச்சியை வழங்க வேண்டியுள்ளது. வாழ்வின் திசை எது என்பதை தீர்மானிக்க வேண்டிய பருவமாகவும் உள்ளது. இக்காலப்பிரிவிலே இளைஞனது உடல், உள்ளம், புலன்கள், உணர்வுகள் என்பன மிகத்துடிப்புடன் செயற்படுகின்றமையால் வளப்படுத்தப்படல் வேண்டும்.

 இளமையின் பண்பு:

இளைஞர்கள் உடல் வலிமைமிக்கவர்கள்; பெருமளவு உடல் ஆரோக்கியமானவர்கள்; உள்ளம் தெளிவானவர்கள்; உணர்வுகள் விறுவிறுப்பானவர்கள்; புலன்கள் துடிதுடிப்பாகச் செயற்படுகின்றவர்கள். எனவே, ஆவல்களும் வேட்கைகளும் அதிக ஆசைகளும் உடையவர்கள். எல்லா வகையிலும் உயிரோட்டமுடனும், துடிதுடிப்புடனும் செயற்படுகின்ற தன்மையுடையவர்கள். மிக இலகுவிலேயே உணர்ச்சி வசப்பட்டு, அதன்படியாய் செயற்பட முனைந்துவிடுவார்கள்.

இக்கால கட்டத்தில், இளைஞர்கள்; பெற்றோர், உறவினர்கள் போன்ற பிறரில் தங்கி நிற்பதில் இருந்து தன்னில் சுயமாக தங்கி நிற்க பிரயத்தனப்படுவர். இது, இளமையின் முக்கிய பண்பாக கானப்படுகிறது. 'ஒரு கொள்கைக்காக ஆயத்தப்படுத்துகின்ற, வாழ வைக்க முனைகின்ற, பக்குவப்படுத்துகின்ற பருவமாக உள்ளது' என உளவியலாளர்கள் கருதுகின்றனர்.

 இலட்சியக் கனவு காணும் பருவம்:

இளமை பருவத்தின் இன்னொரு முக்கிய பண்பாக எதிர்காலத்தைப் பற்றிய இலட்சியக் கனவு காணல் அமைகிறது. இளமைக் காலத்திலே துடிப்போடும், கற்பனை வளமிக்க தன்மையுடனும் இருக்கின்ற இளைஞர்கள், தனிப்பட்ட தன் சுய முன்னேற்றம் பற்றியும், குடும்ப உயர்வு பற்றியும் இலட்சியக் கனவு காண்பார்கள். இப்பருவத்தில் தன்னுடைய முன்னேற்றம் பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் இருப்பார்கள். குடும்ப மேம்பாடு பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் இருப்பார்கள். பல்வேறு சிந்தனை வேறுபாடுடைய இளைஞர்கள் இருப்பார்கள். சுயநலத்தை மறந்து சமூக மேம்பாடு பற்றிச் சிந்திப்பவர்கள் மிகக் குறைவாகவே இன்றுள்ளனர்

 பயனுள்ள பருவம்:

எதிர் காலத்தை பற்றிய சிந்தனை உருவாகும் இப்பருவத்தில், இளைஞர்களின் ஆளுமையை வளர்த்து, பண்புகளை பருவமடையச் செய்வது சமூகத்திற்கு பயனளிக்கும். உறங்கிக் கிடக்கும் உன்னத உணர்வுகளைத் தட்டி எழுப்பி, ஒரு கொள்கைக்காக வாழத் திருப்பிவிடுவது என்பது இப்பருவத்தில் இலேசான காரியம். எனவேதான், அரசியல்வாதிகள் இளைஞர்களை தமது சுயநலத்தின் கருவிகளாக, ஆயுதங்களாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

துர்பாக்கியம் என்னவென்றால், இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புக்கள் இளைஞர்களை பயன்படுத்தவும் அதிகளவு தவறிவிட்டன. சில இயக்கங்கள் இப்போது உணர்ந்து செயற்படத் தொடங்கியுள்ளன. ஆனால், பல அமைப்புகள் இன்னும் உணரவில்லை. இந்நிலை மாறுமானால், இஸ்லாமிய சமூகத்தில் மகத்தான மாற்றம் ஏற்படும்; முஸ்லிம் உம்மத் உலகளாவிய அளவில் உயர்ச்சி பெறும்.

 இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்:

இஸ்லாம் இளைஞர்களுக்கு மிக முக்கியமான இடத்தை வழங்கியுள்ளது; இஸ்லாமிய சமூகத்தின் மிக மகத்தான சொத்தாக மதிக்கிறது. உலகில் சத்தியம் நிலைக்கவும், அசத்தியம் அழியவும், அர்ப்பணிப்புடன் அயராது உழைத்தவர்கள் இஸ்லாமிய இளைஞர்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தமது ஏகத்துவப் பிரசாரத்தை, ஜாஹிலிய்யத்துக்கு எதிராக மக்காவில் ஆரம்பித்த போது, முதலில் விளங்கி, அதிகளவு விரும்பி ஏற்று, செயற்பட்டு அதனைப் பிரசாரப்படுத்த துணை நின்றவர்களும் இளைஞர்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னர் உலகில் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட தூதர்களின் ஆதிமீக, பிரசார வரலாற்றிலும் இளைஞர்களின் பணி மகத்தானது.

 அந்தஸ்தும் மகத்துவமும்:

இஸ்லாம் ஆற்றல் மிக்க இளைஞர்களை எந்நேரமும் வரவேற்றுக் கொண்டே இருக்கிறது; பண்பாடும், சீரிய சிந்தனையுமுள்ள வாலிபர்களை அன்போடு அரவணைத்துக் கொள்கிறது; அவர்களுக்கு உரிய இடத்தையும், அந்தஸ்தையும் வழங்கி மகிமைப் படுத்துகிறது. உலகிலுள்ள எந்தமதமும், சித்தாந்தமும், தலைவனும் வழங்காத இடத்தை, இஸ்லாம் இளைஞர்களுக்கு வழங்கிக் கௌரவித்துள்ளது மனித, வாழ்வின் பருவங்களைப் பற்றி அறிவுறுத்திய அண்ணல் நபியவர்கள் 'ஐந்து விடயங்களுக்கு முன்னர், நீங்கள் ஐந்தைத் தேடிக்கொள்ளுங்கள் என்று கூறி, முதுமைக்கு முன்னர் இளமையைப் பயன்படுத்திக்கொள்ள பணித்துள்ளார்கள். மனிதன் தனது வாழ்வின் வசந்த காலப் பருவமாக இருக்கும் இளமையை வீணாகிவிடாது, மிகக் கவனமாக, அவதானத்துடன் பாதுகாத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழுமிய கருத்தை வலியுறுத்தியுள்ளார்கள்.

'அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத (கியாமத்) நாளில் அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அவர்கள்:

01. நீதமிகு தலைவர்

02. அல்லாஹ்தஆலாவின் வணக்கத்தில் வளர்ந்த ஒரு வாலிபர்

03. மஸ்ஜித்களுடன் இதய புர்வத் தொடர்பு கொண்ட மனிதர்

04. அல்லாஹ்வுக்காக நேசித்து, அவனுக்காகப் பிரியும் இரு மனிதா;கள்.

05. அழகும், கவா;ச்சியுமிக்க பெண் (விபச்சாரத்திற்காக) அழைக்கும் போது, நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன் என்றுரைக்கும் மனிதன்.

06. தனது வலக்கரம் தா;மம் செய்வதை, இடக்கரம் அறியாதளவு இரகசியமாக செலவு செய்யும் மனிதன்.

07. தனிமையில் இறையச்சத்தில் ஈடுபடும் போது, (அல்லாஹ்வின்) அச்சத்தால் அழும் மனிதன்." (அறிவிப்பவா;: அபு+ஹுரைறா ரளியல்லாஹு அன்ஹு , நூல்: புகாரி 6806)

இளைஞர்களின் இன்றைய நிலை:

இன்றைய குறைநிலைக் கட்டமைப்பு நியதிகளில் இஸ்லாமிய வழிகாட்டல் இன்மையால், இளைஞர் சமுதாயம் தவறான வழியில் செல்கிறது. நமது சூழலில் நஞ்சு கலக்கப்பட்ட இனிப்பே மலிந்து காணப்படுகிறது. அரங்கேற்றப்படும் அனாச்சாரங்கள் அதிகமாக இளைஞர்களையே பாதிக்கிறது. மேற்கின் சடவாத இறக்குமதிகளுக்கு இலகுவில் பலியாகிவிடுகின்றனர், இளைஞர்கள். எங்கே போகிறோம், எது எமது இலக்கு என்று தெரியாமல் அலைகளின் முதுகில் சவாரி செய்யும் குமிழிகள் போன்று இஸ்லாமிய இளைஞர்கள் குறிக்கோள் எதுவும் இல்லாமலேயே போய்க்கொண்டிருக்கிறார்கள்.

 சிந்தனையில் தாக்கம் செலுத்தும் காரணிகள்:

சமகால உலகில் இஸ்லாமிய இளைஞர்கள் பல்வேறு அறைகூவல்களையும் சவால்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது. இளைய இரத்தங்களின் ஆத்மீக ஒழுக்க வாழ்விற்கு எதிரான கருத்து ரீதியான, ஒழுக்க, பண்பாடு ரீதியான சவால்கள் மிகப் பயங்கரமானவைகளாக உள்ளன.

இஸ்லாமிய இளைஞர்களின் ஈமானை சூரையாடுகின்ற, அவர்களுடைய உயர் ஒழுக்க மாண்புகளைத் தகர்த்து எறிகின்ற, இஸ்லாமிய இலட்சியக் கனவுகளைக் கொச்சைப்படுத்துகின்ற பல்வேறு அறைகூவல்களுக்கு நமது இளைஞர்கள் ஆளாகின்றார்கள். நவீன கல்விக் கோட்பாடு, நவீன இலக்கியம், தகவல் தொழிநுட்பம், தொலைத் தொடர்பு சாதனங்கள், சினிமா, சமுதாய சூழ்நிலை போன்ற பல்வேறு காரணிகளை இதில் அடையாளப்படுத்தலாம்.

 நவீன கல்விக் கோடபாடு:

இளைஞர்களின் ஆளுமையை வளர்ந்து, அவர்களது பண்புகளை பக்குவமடையச் செய்வதில் கல்வி மகத்தான பங்கை வகிக்க வேண்டும். ஆனால், நமது அமைப்பில் இத்தகைய கல்வி வழக்கில் உள்ளதா? நவீன கல்வி முறை தகவல்களையும் விடயங்களையும் வழங்குகின்றதேயன்றி இளைஞர்களின் உள்ளத்தைப் பயன்படுத்தி உணர்வுகளைச் செம்மைப்படுத்தி, ஆத்மாவிற்கு ஒளியூட்டத்தவறிவிட்டன.

'எங்கள் இளைஞர்களின் ஆண்மையை

அவர்கள் வகுப்பறையிலேயே

பறித்து விட்டார்கள்

அவர்கள் தங்களின்

தடித்த புத்தகங்களால்

எங்களின் விரைகளை

நசுக்கிவிட்டார்கள்.'

 என்று கோபத்தோடு, டைபக் எனும் உகண்டா நாட்டுக் கவிஞன் கதறி அழுகிறான்.

நவீன கல்விக் கோட்பாடு, ஆண்மக்களின் ஆண்மையைக் கூட அபகரித்துவிட்டது. தடித்த புத்தகங்களைத் தந்து என்ன பிரயோசனம்?

'பல இளம் பெண்கள்

புத்தகச்சுமை பொறுக்காமலேயே

பூப்பெய்தி விட்டார்கள்.' (வைரமுத்து, இன்னொரு தேசிய கீதம், பக்கம் : 87)

நவீன கல்வி என்று போதிக்கப்படுவதெல்லாம் மேற்கத்திய சடவாத சிந்தனையால் தோற்றுவிக்கப்பட்ட கல்வி முறையாகும். 'எதிலும் சந்தேகிப்பதுதான் அறிவு தேடுவதற்கான அடிப்படை விதி' என்ற கோட்பாட்டைத் தோற்றுவித்து இளைஞர்களின் சிந்தனையில் குழப்ப நிலையை இது ஏற்படுத்தி விட்டுள்ளது. அதன் பிரதிபலிப்பே இன்றைய இளைஞர்கள் பால் காணப்படும் வறுமை, ஏமாற்றம், விரக்தி, எத்தகைய உயர்ந்த இலட்சியமும் குறிக்கோளுமன்றி, தட்டுத்தடுமாறி, உளவியல் பாதிப்புக்குள்ளாகி, போதைப் பொருளிலும் பாலியல் இன்பத்திலும் தஞ்சமடையும் இழிநிலை! இதனை மேலும் புரிந்து கொள்ள வைரமுத்துவின் சில வரிகள் துணைபுரிகின்றன.

'இளைஞனே! உன்னைப்பற்றி எனக்கு வருகிற தகவல்கள் என் குதூகலத்திற்கே குழி தோண்டுகின்றன.

ஒரு கல்லூரி விடுதிக்கு இரவில் விலை மகளிர் வருவதாய் என் காதுக்கு வருகிறது.

பாவிகளே! அது கல்விச்சாலையா? கல்விச்சாலையா?

வேறொரு விடுதியில் ஒரு மாணவியின் கைப்பையில் போதை மாத்திரைகளும், கர்ப்பத்தடை மாத்திரைகளும் சரி விகிதத்தில் இருந்ததாய்ச் சாட்சி கிடைத்திருக்கிறது.

அடி பாவிப் பெண்ணே!

நீ மனதை நிரப்ப வந்தாயா?

மடியை நிரப்ப வந்தாயா?'

(வைரமுத்து, சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் பக்கம் : 11)

உன்னதமான இலட்சியமோ, குறிக்கோளோ அற்ற நவீன கல்வி இளைஞர்களை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் பயங்கரமான அறைகூவலாக தலையெடுத்துள்ளது.

 மூளைச் சலவைக்கு ஆட்படுத்தப்படல்:

மேற்கத்திய நாகரிகம் இஸ்லாமிய உலகில் புகுத்தப்பட்டு, முஸ்லிம் இளைஞர்களிடம் திணிக்கப்பட்டது. முஸ்லிம் சிறுபான்மையினராக வாழுகின்ற நாடுகளில் இஸ்லாமியத் தனித்துவத்தை இளைஞர்கள் இழந்தனர். இதன் விளைவாக மூளைச் சலவைக்கு உள்ளான ஓர் இளைஞர் முழு, முஸ்லிம் சமூகத்தில் திட்டமிடப்பட்டு இஸ்லாத்தின் எதிரிகளால் வளர்க்கப்பட்டனர்.

மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர்களினால் முஸ்லிம் சமூகத்தின் கட்டமைப்பையும், கொள்கையையும், தனித்துவத்தையும் சில போது, ஈமானியத்தையும் ஆட்டம் காணச் செய்யப்படுகிறது. இளைஞர்களின் விரக்தி நிலையை பயன்படுத்தி இத்தகைய அழிவு நாச வேலைகளை இஸ்லாத்தின் எதிரிகள் மிகத் துள்ளியமாக நுணுக்கமாகச் சதிகளை மேற்கொள்ளுகின்றனர்.

இதுவரை நாம் இளைஞர்கள் பற்றிய சில விடயங்களை சுருக்கமாக விளக்கினோம். உண்மையில் இளைய இரத்தங்கள் சரியான முறையில் பயிற்றுவிக்கப்படாவிட்டால், எமது சமூகத்தின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகவே இருக்கும். கருத்து மயக்கத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ள இளைஞர் சமுதாயத்தின் இஸ்லாமிய ஒளியின் பக்கம் மீட்டெடுக்கும், சக்தியும், ஆற்றலும் உள்ளவர்கள் இதில் மிகுந்த அர்பணத்துடன் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்.

சிறந்த முறையில் பயிற்றுவித்து, அவாகளின் உள்ளங்கள் இஸ்லாமிய அகீதாவிலும், ஒழுக்க மாண்புகளாலும் ஆன்மீக பாசறையில் பயிற்சி பெற்ற, பண்பாடுள்ள ஸஹாபாக்கள் போன்று புரட்சிகரமாக வழிநடாத்த வேண்டும். இதற்கு இளைஞர்களின் இறைவிசுவாசமும், இறைநம்பிக்கையும் மிக உறுதியாக்கப்படக்கூடிய ஆன்மீக ஒளியூட்டல் அவசியமாகும்.

source: http://safwanlanka.blogspot.com/