Home இஸ்லாம் கட்டுரைகள் வாழ்வு இரண்டு வகை!
வாழ்வு இரண்டு வகை! PDF Print E-mail
Friday, 06 January 2012 07:06
Share


  வாழ்வு இரண்டு வகை - 

  ரஹ்மானின் அடிமை, 

  ஷைத்தானின் அடிமை. 

அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள். நீ என்னை சொற்பொழிவுக்கு அழைத்து வந்தாய். இறுதிவரை உரை, செவிமடுக்க தவ்பீக் வாய்ப்பு தா.

துஆ, பிரார்த்தனையுடன் அமர்வீர்! நீங்கள் ஏழை, பணக்காரர், ஆண், பெண் யாராக இருந்தாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டு வந்த முபாரக்கான தீனை கற்க வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றினால் அல்லாஹ் உம்மீது மதிப்பு தருவான்.

சொத்து, உடைமை, குறைவு - நிறைவு அல்லாஹ்வின் பார்வையில் மாறுபாடு இல்லை. ஏழை மதத்தை கடைப்பிடித்தால் அவரளவுக்கு சுவனம் செல்வார். பணக்காரர் மார்க்கத்தை கடைப்பிடித்தால் அவரளவுக்கு சுவனம் பிரவேசிப்பார்.

நபித்தோழர்களில் பல்வேறுபட்ட நிலையில் சஹாபிகள் அவை நிறைந்தனர். பிலால் ரளியல்லாஹு அன்ஹு கருப்பு. நீக்ரோ அடிமை. ‘‘சுவனத்தில் நடக்கும் சப்தம் கேட்டேன்''. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கினார்கள்.

ஹதீஸில் வருகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒட்டகத்தில் சுவர்க்கத்தில் நுழைவார்கள். ஒட்டகத்தின் கயிறு பிலால், கரங்களில் பிடித்திருப்பார். ஓர் அடிமைக்கு இந்த உயர்வு கிடைக்கிறது.

ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சஹர் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது, பிலால் ரளியல்லாஹு அன்ஹு வந்து சஹர் நேரம் முடிந்து விட்டதாக கூறினார்கள். இரண்டாவது முறையும் கூறினார்கள். மூன்றாவது தடவை கூறினார்கள்; ''அல்லாஹ் மீது ஆணையாக சஹர் முடிந்துவிட்டது''.

சாப்பிடுவதை உடன் நிறுத்திய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ''சஹர் நேரம் இன்னும் இருக்கிறது. அல்லாஹ் மீது நீங்கள் ஆணையிட்டதால் இறைவன் சஹர் நேரத்தை முற்படுத்தி விட்டான்''. ஏழையாகவிருந்தாலும் பிலாலிடம் தீன் இருந்ததால் உயர்வு கிடைத்தது.

அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு செல்வந்தர், தலைவர், நீதிபதி, 12 பெரிய கடை வணிகர். ஆரம்ப நாட்களிலேயே ஈமான் ஏற்றவர். சுவனபதி பெற்ற 10 தோழர்களுக்கு ஈமான் அபூபக்கர் மூலம் கிடைத்தது. அனைத்தையும் அல்லாஹ்வின் மார்க்கத்துக்காக தியாகம் புரிந்தவர்கள்.

பூமியில் வாழ்பவர்கள் கூறினர் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அனைத்தையும் இழந்தார்கள். பறிகொடுத்தார். வானத்தின் இறைவன் ஆஸ்மான்வாலா, கூறினான்;

‘‘நீங்கள் எமது சலாத்துக்கு தகுதியானவர்.’’

வானவர் ஜிபுரயீல் அலைஹிஸ்ஸலாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள்; ''அல்லாஹ் அபூபக்கருக்கு சலாம் சொன்னான்''.

கதீஜா ரளியல்லாஹு அன்ஹா பெரும் செல்வ பெண்மணி இரண்டுமுறை விதவையானவர்கள். வாரிசுகள் இருந்தனர். ஈமான் கொண்ட முதல் பெண்மணி. ‘‘அனைத்து செல்வம், பிள்ளை, தான் உட்பட தீனுக்கு அர்ப்பணம்’’ - கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்

செலவழித்தார்கள். மரணிக்கும் போது மூன்று நாட்கள் பட்டினி.

ஏழை, பணக்காரர், ஆண், பெண் உயர்வடையலாம். ஒரே நிபந்தனை. தீனை வாழ்க்கையில் கொண்டுவர வேண்டும். முழுமையாக நுழைவீர்.

இஸ்லாம் துணிகடையல்ல. வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம். வேண்டாததை விட்டுவிடலாம். உங்கள் கலாச்சாரம், வேலை, சமூகம் விரும்பியதை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றதை விட்டுவிட அனுமதியில்லை.

ஆயத் தொடர்ச்சி -

ஷைத்தானைப் பின்பற்றாதீர்.

எது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை இல்லையோ அது ஷைத்தானுடைய வாழ்க்கை. உமது பகிரங்க எதிரி. ஷைத்தானைப் பின்பற்றுவோர் நாசமாகிப் போவர்.

வாழ்வு இரண்டு வகை ரஹ்மானின் அடிமை, ஷைத்தானின் அடிமை.

ஆயத் பின்னணி. அப்துல்லா இப்னு சலாம் தீனை ஏற்றுக் கொண்டார். யூத ஆலிம். யூத வேதம் வாயிலாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்களின் வருகை உணர்ந்து தாமே வலியமுன் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். ஒட்டகம் ஹலால். யூத வேதத்தில் ஒட்டகம் ஹராம். வாழ்நாளில் அவர் ஒட்டகக் கறி சாப்பிட்டதேயில்லை. மனதில் நினைத்தார். இந்த ஒரு விஷயத்தில் மூசா நபியை பின்பற்றலாம். ஏனைய கடமைகளில் ஷரீஅத்தை கடைப்பிடிப்போம். இரண்டு நபிகளையும் பின்பற்றுவோம்.

ஒட்டகக் கறி நாம் சாப்பிடுவதேயில்லை. ஆனால், நாம் ஹலால் விளங்கியுள்ளோம். அந்த சூழலில் ஆயத் இறங்கியது. இரண்டு வழி கிடையாது. பின்பற்ற அனுமதியில்லை. முழுமையாக பரிபூரணமாக தீனில் நுழைவீர்.

யா அய்யுஹல்லதீன ஆமனூ உத்குலூ பிஸ்ஸில்மி காப்பா. மூசா நபியின் ஷரீஅத் நமக்கில்லை. 'லா இலாஹ இல்லல்லாஹ் மூசா கலீமுல்லா', கூறினால் நாம் முஸ்லிமாக முடியாது. 'லா இலாஹ இல்லல்லாஹ் ஈசா ரூஹ§ல்லாஹ்' மொழிந்தால் முஸ்லிமாக முடியாது. யூதர்கள், கிருத்தவர்கள் இறைவனை ஒப்புகின்றனர். ஆனால் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் முஸ்லிம்களாகிவிட முடியாது. ஈமான் நிபந்தனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூதுத்துவத்தை ஒப்புவதாகும். இஸ்லாம் நிபந்தனை, ரசூலுல்லாஹ்வை பின்பற்றுவதாகும்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் காது கொடுத்து கேளுங்கள். யாருடைய வேதத்தை நீங்கள் படித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த தவ்ராத்காரர்கள் இன்று இருந்திருந்தால் என்னை பின்பற்றாமல் ஈடேற்றம் கிடைக்காது.

இன்றைய காலத்தில் யார் யாரையோ பின்பற்றுகிறீர். நேர்வழி கிடைக்காது. நபியின் வாழ்வை ஏற்றபின் வேறு எந்த பக்கமும் பார்க்க அனுமதியில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷரீஅத் அனைத்து வகையிலும் பூரணமானது. உயர்வானது. அதீவுர் ரசூல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுங்கள். கிட்டத்தட்ட நாற்பது முறை குர்ஆனில் வருகிறது. இறைவன் மீது அன்பு, நபிகளார் மீது அன்பு. நபிகளாரின் வார்த்தை அல்லாஹ்வின் வார்த்தையாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடல் ரீதியான அமல் அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவையில் எழுதுபவர் ஒரு தோழர் அமர்ந்து அனைத்தையும் எழுதிக் கொண்டேயிருப்பார். இதர நபித் தோழர்கள், ‘‘சில நேரம் மகிழ்ச்சி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துக்கம் அனைத்தையும் எழுதக் கூடாது வாதிட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உச்சரித்ததை எழுதாமல் அவர் அமர்வதை கண்ணுற்ற நபிகளார் ஏன் எழுதாமல் அமர்ந்துள்ளீர் - வினவினார்கள். நபித் தோழர்களின் அச்சத்தை விளக்கினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 'யார் கையில் முஹம்மதின் உயிர் இருக்கிறதோ அல்லாஹ் மீது சத்தியமாக. என் நாவிலிருந்து வரும் சொல் இறைவார்த்தையாகும்'. காமில்தீன். பிறர் வாசலில் சென்று கொள்கை பிச்சை கேட்க வேண்டியதில்லை. 24 மணி நேரம் ரசூலுல்லாஹ்வை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

மனிதர்கள் தங்கம், வெள்ளி சுரங்கம். பல அபாரமான, திறமை, ஆற்றல் உண்டு. நல்லவை தேடினால் நன்மை தென்படும். கெட்டதை மட்டும் தேடிக் கொண்டிருந்தால் தீய குணம் கண்ணில்படும். கெட்டதை உங்களுக்குள் தேடுங்கள். நீங்கள் கெட்ட மனிதர். அதனால் மற்றவர்களின் அருவெறுப்பு குணங்கள் கண்ணில் படுகின்றன. பட்டாம்பூச்சி போல் வாசனை தேடுவீர்.

-ஹைதராபாத், டோலி சவுக்கி, தப்லீக் மர்க்கஸ் மஸ்ஜிதே ஆமினா வார உரை.

-தமிழில் : பொறியாளர் ஆ.ர. இபுராஹிம், பி.இ.,

முஸ்லிம் முரசு டிசம்பர் 2011