தாயும் சேயும் கருவறையில்... |
![]() |
![]() |
![]() |
Monday, 05 December 2011 12:25 | |||
தாயும் சேயும் கருவறையில்... அகத்தே நீ உதைக்க
புறத்தே காணாத பேரின்பம் உன்னை சுமக்கும் ஒவ்வொரு துளியும் எனை வென்று சிறை மீட்பேன் என் கண்மணியே உன்னை
இவை தான் உலகமென்று
புறம் காண மறுக்குதம்மா உள்ளம் அகத்தே உன் அரவணைப்பில் நாற்பது வாரமாய் தவமிருந்து எம் உள்ளம் படைத்தவளே
எனை சிறைமீட்கும் வேள்விதனில்
வேதனை பல அனுபவிப்பாயே என் தாயே உன் வேதனையின் தாக்கத்திலே அலறுகின்றேன் அழுகுரலாய் என் ஆதங்கம்
சோதனையும் வேதனையும்
உன் முகம் காண காற்றாக பறந்திடுமே கண்மணியே நீ ஆணாக பிறப்பாயோ பெண்ணாக பிறப்பாயோ - ஏக்கம் எங்கும் நிறைந்திருக்க தூக்கமில்லா உன் நினைப்பில் காத்திருப்பேன் உனக்காக
பெண்மையிலே வளர்ந்தேனே
உன்னுள்ளம் கொண்டேனே பெண்ணாக முதல் பிறப்பு ஆணாகும் அதன் பிறகு வித்திட்ட விதியம்மா மாற்றமிலா உண்மையிது
எனைக்காக்கும் இன்னுயிரே உனைக்காப்பேன் என்றுமிங்கு உன் சேயான நானிங்கு தாயே உன் பாதம் முத்தமிடுகிறேன் தர்மம் புகட்டிவிடு தாயே எமக்கு..............
|