Home குடும்பம் ஆண்கள் மலட்டுத் தன்மையை எதிர்நோக்கும் ஆண்கள்!
மலட்டுத் தன்மையை எதிர்நோக்கும் ஆண்கள்! PDF Print E-mail
Saturday, 03 December 2011 07:15
Share

மலட்டுத் தன்மையை எதிர்நோக்கும் ஆண்கள்!

அரிது அரிது மானிடராதல் அரிது என்பார்கள். மனித பிறவி அத்துணை உயரிய, அரிய பிறவி. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர், தங்கள் மனம்போல வாழ்ந்து, கண்டபடி திரிந்து, வரைமுறையற்றுப் போய் இருக்கிறார்கள்

அண்மைக் காலமாக ஆண்மைக் குறைவு, ஆண் மலட்டுத் தன்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.

முற்காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை வரைமுறையான வாழ்வுச் சூழல் இரசாயனக் கலப்பற்ற இயற்கை உணவுகள், பெரியவர்களின் வழி நடத்துதல், ஒழுக்கமான வாழ்வு முறை, ஆண்கள் சமூகத்தில் நல்ல சரீர-மன வளத்துடன் வாழ உதவின. ஆண்மைக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் தலை தூக்கியது இல்லை

ஆனால் இன்று இதற்கு நேர்மாறான நிலை இருக்கிறது.

நாம் சுவாசிக்கிற காற்றில்கூட கலப்படம், குடிக்கிற தண்ணீர் கூட சுத்தமானதாக, சுகாதாரமானதாக இல்லை மனிதன் எந்திரங்களோடு எந்திரமாகவே மாறிப் போய் வாழ்ந்து வருகிறான்.

எதிலும் நாரிகம், அவசரம் என்ற பெயரில் பாஸ்ட் புட் அந்த ரசாயனக் கலவைகள் உடலில் பக்க விளைவுகளை சேர்த்துக் கொண்டு இருக்கின்றன. இந்த விளைவுகளால்தான் ஆண் விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கை உலகளாவிய அளவில் குறைந்து விடுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆண் விந்துவில் உயிரணுக்கள் அறவே இல்லாதவர்களும் கூடி வருகிறார்கள். இன்னும் சிலருக்கு விந்துவில் செத்த அணுக்களே பிரதானமாக இருக்கின்றது.

சுதந்திரத்துக்குப் பிறகு சுதந்திரம் என்ற பெயரில் மேற்கத்திய கலாச்சாரத்தால் கெட்டுப் போன நிலைதான் இன்றைய ஆண்களின் ஆண்மைக் குறைவு, ஆண் உயிரணு அறவே இல்லாத நிலைமை, பாலியல் நோய்கள், எய்ட்ஸ் போன்ற பிரச்சினைகள்

பெற்றோர்களும் இன்றைய பிள்ளைகளை எப்படி வழி நடத்துவது என்று தெரியாமல், திகைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சிலருக்கோ பிள்ளைகளை வழி நடத்த நேரமும் இல்லை.

இளம் வயதிலே-குறிப்பாக டீன் ஏஜ் பருவத்திலே ஆண்களை ஒழுக்கமான வாழ்வுக்கு வழி நடத்தாததின் விளைவுதான் சுய இன்பம், பிஞ்சிலே பழுத்து பிற மாதர் உறவு, விலைமகள் தொடர்பு, ஹோமோ செக்ஸ் என்ற ஓரினப் புணர்ச்சி உள்ளிட்ட விபரீதங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.

இத்தகைய செயல்பாடுகள், பின்னாளில் மலட்டுத் தன்மைக்கு வழி நடத்துகின்றன. சிலருக்கோ உயிரையே பறிக்கிற எய்ட்ஸாக மாறுகின்றது. இன்னும் சிலருக்கோ திருமணம் முடிந்து, முறைப்படி அனுபவிக்க வேண்டிய தாம்பத்ய இன்பத்தை மனைவியுடன் அனுபவிக்க இயலாமல் அவதியுறுகிற அவலம்ஸ சொல்லிக் கொண்டே போகலாம்.

இளைய தலைமுறை பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல அவர்களும் சுதந்திரம் என்ற பெயரில், நினைத்த நேரத்தில், நினைத்தவருடன் சுற்றித்திரிந்து, திருமணத்துக்கு முன்பே தாம்பத்ய சுகத்தை பெற்று விடுகிற அவலமும் நடக்கிறது. இதனால் பிறப்புறுப்பிலே தொற்று, கருப்பையிலே தொற்று உள்ளிட்ட பல பிரச்சினைகளை தாங்களே வரவழைத்துக் கொள்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலோர் திருமணமாகி முறைப்படியான தாம்பத்ய உறவு, குழந்தைப் பேறு போன்றவற்றுக்கு வழியற்று, கண்ணீரில் வாழ்க்கையை கரைத்துக் கொண்டிருப்பதை மருத்துவத்தில் பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட ஆண்மைக்குறைவு, பெண் மலட்டுத் தன்மை, திருமணத்துக்கு முன்னதாகவே பாலுறவு போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க தகுந்த விழிப்புணர்வு இங்கே உருவாக்கப்பட வேண்டும்.

  அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது ?   

ஒரு பெண்ணைத் தாயாக்க வேண்டுமானால் ஆணுக்கு கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்:

1. உடலுறவின்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைந்தது 2 மில்லி லிட்டர் இருக்க வேண்டும்.

2. விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியன் இருக்க வேண்டும்.

3. 70 சதவீதத்திற்கு மேலான உயிரணுக்கள் உயிர்த்தன்மையுடன் இருக்க வேண்டும்.

4. 30 சதவீதத்திற்கு மேலான அணுக்கள் உருச்சிதைவில்லாமல் இருக்க வேண்டும்.

5. விரைவாக ஊர்ந்து செல்லும் அணுக்களின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்கு மேலாக இருக்க வேண்டும்.

இப்படி இருந்தால் மட்டுமே அப்பாவாதற்கு அவர் முழுத்தகுதி உடையவர் ஆவார்.

புரதச் சத்து, வைட்டமின் ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் குறைவான உணவுகளை உண்டு வரும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதேபோல் சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கும் ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின், உயிரணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, விந்தணுக்கள் ஊர்ந்து செல்லும் தன்மையையும் பாதிக்கிறது. எனவே அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது.