Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் கலிமாவிற்கு வழங்கப்படும் தவாறன அர்த்தங்கள் (3)
கலிமாவிற்கு வழங்கப்படும் தவாறன அர்த்தங்கள் (3) PDF Print E-mail
Saturday, 19 November 2011 12:11
Share

  கலிமாவிற்கு வழங்கப்படும் தவாறன அர்த்தங்கள் (3)  

[ தப்லீக் ஜமாஅத்திலிருக்கும் பெரியவர்கள் தொட்டு கீழ் நிலையிலுள்ளவர்களிடமும் சென்று அல்லாஹ் எங்கேயிருக்கின்றான் என்று கேட்டால் மௌனமாகவிருப்பார்கள் அல்லது எங்கும் இருக்கின்றான் என்பார்கள். நான்கு மாதம் நான்கு வருடங்களாக தப்லீக்கில் ஈடுபடுவோருக்கு இந்த அடிப்டை தெரியவில்லை.

கேட்டால் நமது உலமாக்கள் இது பற்றிப் பேசக் கூடாது என்று சொல்லியுள்ளார்கள் எனச்சொல்வார்கள். ஓர் அடிமைப் பெண்ணைப் பார்த்து அவள் முஃமினா? என்று சோதிப்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதே கேள்வியையே கேட்டார்கள் என ஹதீஸ்களில் பார்க்கின்றோம் ஆனால் இவர்களின் உலமாக்களோ இதைப் பற்றிப் பேசக் கூடாது எனப் பணித்துள்ளார்களாம்? இதுதானா நபிமார்களின் வழிமுறை?

நபியவர்களைப் பார்த்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:

لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ الزمر: 65

‘நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் இழப்பை அடைந்தவராவீர் (அஸ்ஸுமர் : 65)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே இந்த எச்சரிக்கையென்றால் ஷிர்க் எந்தளவுக்குப் பாரதூரமான ஒருபாவமாகவுள்ளது என்பதை நாம் யோசிக்க வேண்டும். இத்தகைய பெரும் பாவம் பகிரங்கமாகக் கண்முன்னால் நடைபெறும் போது அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கலாமா? ]

நபிமார்கள் எதைப்பிரசாரம் செய்தார்கள்? இன்று எதைப் பிரசாரம் செய்கின்றார்கள்? என்பது பற்றி நாம் இப் பகுதியில் அலசுவோம்.நபிமார்கள் எதைப்பிரசாரம் செய்தார்கள் என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு மிகத்தெளிவாகக் கூறுகின்றது.

وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ النحل: 36

''அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!’ என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.'' ( அநநஹ்ல் : 36)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது பிரசாரத்தில் இதையே முற்படுத்தினார்கள் என்பதைப் பல ஹதீஸ்கள் நமக்குணர்த்திக்கொண்டிருக்கின்றன. எனவே நம் கண்முன்னால் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கப்படுவதை நாம் கண்டால் நமக்கு ஆற்றலிருந்தால் அதை நல்ல முறையில் பிரசாரம் செய்து தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கின்றது. இதுவே அவ்விடத்தில் நாம் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பணியாகவுமுள்ளது.

ஆனால் இன்று நடைபெறுவதோ தலை கீழாகவுள்ளது. இஸ்லாம் வலியுறுத்தும் ஏகத்துவத்தைப் பேசாமல் தொழுகைப் பற்றியும் நற்பண்பாடு பற்றியும்ஷிர்க் அரங்கேறும் இடங்களில் பேசுகன்றார்கள். இணை வைத்தலோடு நல்லமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுமாயிருந்தால் மக்கத்து முஷ்ரிகீன்கள் அல்லாஹ்வுக்காக விட்டிருந்த ஒட்டகங்கள் அல்லாஹ்வுக்கு சேராது என்று ஏன் அல்லாஹ் கூறவேண்டும்? அவ்லியாக்கள் என்ற பேரால் தவாப், நேர்ச்சை, எண்ணெய் தேய்த்தல் என்று பித்தலாட்டங்கள் நடைபெறும் போது அவ்விடத்துக்குச் சென்று தொழுகை பற்றியும், நற்குணங்கள் பற்றியும் பேசுவதையா இஸ்லாம் நமக்குக் கற்றுத் தந்தது?

எமன் தேசத்துக்கு இஸ்லாத்தின் தூதை எடுத்துச் செல்லவிருந்து முஆதிப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து நபியவர்கள் பின்வருமாறு சொல்கிறார்கள்.

صحيح البخاري (2 104) 1395 – عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَى اليَمَنِ، فَقَالَ: அادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ، فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ، فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ قَدِ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ، فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத்தை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; நான் இறைத்தூதர் என்ற உறுதிமொழியின் பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதாக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக! என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (ரழி) ஆதாரம் : புஹாரி 1395)

யமன் தேசத்தவர்கள் ஏற்கனவே வேதம் வழங்கப்பட்டவர்கள் அல்லாஹ்வைத் தெரிந்தவர்கள் அவர்களுக்கே அல்லாஹ்வைத்தான் முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என நபியவர்கள் இங்கே பணித்துள்ளதிலிருந்து தொஹீத் தான் முதலில் பிரசாரம் செய்யப்பட வேண்டும் என்பது தெளிவாகின்றது.

தப்லீக் ஜமாஅத்திலிருக்கும் பெரியவர்கள் தொட்டு கீழ் நிலையிலுள்ளவர்களிடமும் சென்று அல்லாஹ் எங்கேயிருக்கின்றான் என்று கேட்டால் மௌனமாகவிருப்பார்கள் அல்லது எங்கும் இருக்கின்றான் என்பார்கள். நான்கு மாதம் நான்கு வருடங்களாக தப்லீக்கில் ஈடுபடுவோருக்கு இந்த அடிப்டை தெரியவில்லை. கேட்டால் நமது உலமாக்கள் இது பற்றிப் பேசக் கூடாது என்று சொல்லியுள்ளார்கள் எனச்சொல்வார்கள். ஓர் அடிமைப் பெண்ணைப் பார்த்து அவள் முஃமினா? என்று சோதிப்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதே கேள்வியையே கேட்டார்கள் என ஹதீஸ்களில் பார்க்கின்றோம் ஆனால் இவர்களின் உலமாக்களோ இதைப் பற்றிப் பேசக் கூடாது எனப் பணித்துள்ளார்களாம்? இதுதானா நபிமார்களின் வழிமுறை?

நபியவர்களைப் பார்த்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்'

لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ الزمر: 65

‘நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் இழப்பை அடைந்தவராவீர் (அஸ்ஸுமர் : 65)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே இந்த எச்சரிக்கையென்றால் ஷிர்க் எந்தளவுக்குப் பாரதூரமான ஒருபாவமாகவுள்ளது என்பதை நாம் யோசிக்க வேண்டும். இத்தகைய பெரும் பாவம் பகிரங்கமாகக் கண்முன்னால் நடைபெறும் போது அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கலாமா? இதுவா நபிமார்களின் தஃவா? தப்லீக் இயக்கத்தவர்கள் தமது பிரசாரத்தில் இவ்வாறு கூறுவார்கள் ‘நபியவர்கள் தாயிபுக்குச் சென்றார்கள் எதற்காகத் தெரியுமா? ஆனைத்தும் அல்லாஹ்வால்தான் நடைபெறுகின்றது என்ற கலிமாவுக்கும், தொழுகைக்காகவும்தான் ஆகவே அல்லாஹ்வின் பாதையில் அழைப்பு விடுக்க வாருங்கள்’ என்பார்கள்.

உண்மையிலேயே கலிமாவை இவ்வாறு விளங்கித்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களை அழைத்தார்கள் என்றால் பத்ர், உஹத் போன்ற யுத்தங்கள் எதுவுமே நடைபெற்றிருக்காது. ஏனென்றால் காபிர்கள் இதை ஏலவே ஏற்றிருந்தார்கள். அதனால்தான் தப்லீக் அமைப்பினருக்கு பிரச்சாரங்களின்போது எதிர்ப்புக்கள் வருவதில்லை. ஏனென்றால் மக்கள் எதைச் செய்தாலும் அதற்கேட்ப இசைந்து போவது அவ்வியக்கத்தவர்களின் பிராதான பண்பாகும். ஆனால் நபிமார்களின் பிரசாரப்பாணியைப் பார்ப்போமானால் ஆட்சியாளர் முதல் சதாரண மக்கள் வரை அனைவராலும் எதிர்க்கப்பட்டதாக அவர்களின் அழைப்புப்பணி காணப்பட்டது.

சத்தியத்தைச் சொன்னால்தான் எதிர்ப்புக்களும் எழும் என்பது நபிமார்களின் வரலாற்றிலிருந்து நாம் பெறும் பாடமாகவுள்ளது. அதனால்தான் வரகா பின் நவ்பல் அவர்கள் நபியவர்களைப் பார்த்து ‘இது போன்ற செய்தியை யார் கொண்டு வந்தாலும் அவர் கொடுமைப்படுத்தப்படுவார். உனது சமூகம் உன்னை இதற்காக வெளியேற்றும்’ என்று சொன்னார். எனவே அல்லாஹ்வைப் பற்றி சரியாகப் பேசிராத, பேசியவரை எதிர்க்கின்ற ஒரமைப்பில் நாம் எவ்வாறு அங்கம் வகிக்க முடியும்? தங்களது தலைவர்கள் உலகில் சுற்றித் திரிவதாகவும், அல்லாஹ்வோடு பேசியதாகவும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் பார்த்து இஷாராச் செய்ததாகவும் பொய்யையும் புரட்டையும் அள்ளி வீசுகின்ற ஓரமைப்பு எவ்வாறு தூய இஸ்லாத்தைப் பிரதிபலிக்க முடியும்? அதைப் பிரசாரம் செய்ய முடியும்? எனவே அல்லாஹ்வைப் பற்றிய சரியான அடிப்படையில்லாமல் எதைத்தான் நீங்கள் பிரசாரம் செய்து மக்களைப் பண்படுத்த முனைந்தாலும் அது ஒருக்காலும் நிலைக்கப் போவதில்லை.

மக்கத்துக் காஃபிர்களும் ஹஜ் செய்தார்கள். அரபாவுக்குப் போகவேண்டிய நாளில் அவர்கள் ஹரமில் இருப்பார்கள். எல்லோரும் முஸ்தலிபாவுக்குச் சென்றதும் அவர்கள் முஸ்தலிபாவுக்குச் சென்றார்கள். இஸ்லாம் வருவதற்கு முன்னால் நிலைமை இப்படித்தான் இருந்தது. பின்னர்தான் அல்லாஹ் பின்வருமாறு கட்டளையிட்டான்.

ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ البقرة: 199

''பின்னர் மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து நீங்களும் புறப்படுங்கள்! அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.'' (அல்பகரா : 199)

இவ்வாறான சில நல்லமல்கள் அவர்களிடம் காணப்பட்டாலும் அவர்களின் அடிப்படை பிழையாகவிருந்த காரணத்தால் அல்லாஹ் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே நல்லமல்கள் எத்தனைதான் காணப்பட்டாலும் அகீதாவில் சரியான தெளிவும், அறிவும் அங்கு காணப்படவில்லையெனன்றால் நல்லமல்கள் ஒருபோதும் பயனளிக்கப் போவதில்லை என்பதை தெளிவாக விளங்க வேண்டும்.

இந்த அடிப்டையைச் சரியாகத் தெரிந்து அதையே முதலில் மக்களிடம் நாம் முன்வைக்க வேண்டும். சத்தியத்தை நம்மால் முடிந்த வரை எடுத்துரைக்க வேண்டும். அழைப்புப்பணியில் இதுவே அடிப்படையானது.

கலிமாவுக்கு வழங்கப்படும் மற்றோரு தவறான விளக்கம்தான் ‘சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்குமில்லை’ ‘வணக்கத்துக்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்பதைச் சொல்லவே நபியவர்கள் உலகுக்கு வந்தார்கள். ஆனால் அதைச் சொல்ல அல்லாஹ்வின் சட்டமும், அதிகாரமும் அவசியப்படுகின்றன. அதற்காகவே நபியர்கள் ஆரம்பத்தில் பாடுபட்டார்கள். இந்த நோக்கத்துக்காகவே மக்காவில் நபியவர்கள் நபித்தோழர்களுக்குப் பயிற்சி வழங்கினார்கள். முதலில் தாருல் அர்க்கத்தில் இரகசியமாகப் பயிற்றுவித்து அவர்களுக்காக ஒரு நாட்டைத் தேடினார்கள். தாயிஃபுக்குப் போனார்கள் அது ஏதுவாக அமையவில்லை. பின்னர் மதீனாவுக்குப் போனார்கள் அது பொருத்தமாகக் காணப்பட்டது உடனே ஒப்பந்தம் செய்து ஆட்சியை அமைத்தார்கள். பின்னர்தான் யுத்தம் செய்தார்கள்....’ என்று சிலர் பேசுவதைப் பார்க்கின்றோம்.

நபியவர்களை நாடு பிடிக்க வந்தவர்களைப் போல இவர்கள் பார்க்கின்றார்கள் போலும். ‘உனது சமுதாயம் என்னை வெளியேற்றிரா விட்டால் நான் உன்னை விட்டுப் போகமாட்டேன்’ என்று ஹிஜ்ரத் போக முன்பு கஃபாவின் திறைச் சீலையைப் பிடித்து நபிவர்கள் சொன்ன செய்தியைப் பார்க்கும் போது நபியவர்களிடம் நாடு தேடும் யோசனைகளெல்லாம் எதுவுமில்லை என்பது புலனாகின்றது. ஆனால் இவர்களோ நினைத்தவாறெல்லாம் வியாக்கியானம் கூறி, கலிமாமாவே ஆட்சிக்குத்தான் என்று புதிய சித்தாந்தத்தையே உருவாக்கி விட்டார்கள்.

அபூலஹப் பயந்ததும் தம்மிடமுள்ள ஆட்சி பறிபோகிவிடலாம் என்பதற்குத்தான் என்றெல்லாம் விளக்கம் சொல்கிறார்கள். ஆனால் வரலாற்றைப் பார்க்கும் போது ‘ஆட்சியைத் தருகிறோம் இஸ்லாமியப் பிரசாரத்தை விட்டு விடு’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் காஃபிர்கள் கூறியதாகவே காண்கிறோம்.

صحيح البخاري :3534 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ مَثَلِي، وَمَثَلُ الأَنْبِيَاءِ كَرَجُلٍ بَنَى دَارًا، فَأَكْمَلَهَا وَأَحْسَنَهَا إِلَّا مَوْضِعَ لَبِنَةٍ، فَجَعَلَ النَّاسُ يَدْخُلُونَهَا وَيَتَعَجَّبُونَ وَيَقُولُونَ: لَوْلاَ مَوْضِعُ اللَّبِنَةِ

''என்னுடைய நிலையும் (மற்ற) இறைத்தூதர்களது நிலையும் ஒரு வீட்டைக் கட்டிய மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் அதனை, ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்டு முழுமையாகவும் அழகாகவும் கட்டி முடித்திருந்தார். மக்கள் அதனுள் நுழைந்து (பார்வையிட்டுவிட்டு) வியப்படைந்து, ‘இச்செங்கல்லின் இடம் மட்டும் (காலியாக) இல்லாதிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!’ என்று கூறலானார்கள்.''

இந்த ஹதீஸில் கட்டம் பூர்த்தியாகிவிட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் அப்போது பைத்துல் முகத்தஸ் கையிலில்லை. அப்டியென்றால் ஆட்சி பூரணமாகவில்லை. எனவே கொள்கையைத்தான் நபியவர்கள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது. அதாவது மார்க்கம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு முழுமையாகிவிட்டது அதன் பின்னால் ஆட்சி வரலாம் வராமலும் போகலாம் அது வேறு விஷயம். என்பதுவே நாம் இங்கே கவனிக்க வேண்டியதாகும்.

1924-ல் கிலாஃபத் வீழ்ந்ததன் பின்னர்தான் இந்த சிந்தனை மக்களிடையே பரவ ஆரம்பித்தது. சர்வதேச அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் இஸ்லாமிய ஆட்சி என்ற பேரில் போராடி வருகின்றன. இவற்றுள் சில நல்ல கருத்துக்களைப் பிரதிபலிப்பவை என்றாலும் சில அமைப்புக்கள் தவறான போக்குடையன. இவற்றுக்குப் பின்னால் ஷிஆக்களின் பின்னணிகள் காணப்படுவதோடு ஷிஆக்களும் இதே கோஷத்தைக் கையிலேந்தியிருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இது கலிமாவிற்கு வழங்கப்படும் 2வது தவறான விளக்கம் இது பற்றி விரிவாக அடுத்த தொடரில் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு "Next" ஐ "கிளிக்" செய்யவும்.