Home குடும்பம் இல்லறம் பாலியல் நாட்டங்கள்!

இஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari

பாலியல் நாட்டங்கள்! PDF Print E-mail
Saturday, 19 November 2011 11:36
Share

[ திருமணம் என்பது இரு உடல்களின் சங்கமத்திற்கு ஒப்பந்தம் போடும் ஒரு நிகழ்வு என்பதாக மட்டுமல்லாது திருமணம் என்பது இனப்பெருக்கத்திற்கு முன்மொழியப்படும் முதல் சடங்கு என சமூகத்தில் திருமணம் பற்றிய புரிந்துணர்வுகள் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் திருமணச் சடங்குகளே இல்லாது போய் இருக்கும், இன்றும் கூட சமூகத்தில் திருமணம் என்பது உடல் இணைப்பிற்கான சடங்கு அல்ல அதற்கும் மேலாக இல்லற ஒப்பந்ததில் சந்திகளை நல்ல முறையில் கொண்டு சென்று உயிர்த்தன்மையை அடுத்த தலைமுறைக்கு அனுப்பி வைக்க முயற்சிக்கும் ஒரு தொடக்கம்.

தனிமனிதனின் பருவத் தேவையாக இணையைத் தேடுவது, இனப்பெருக்கம் செய்வது, அவற்றை வளர்ப்பது, உடல் முதிர்ச்சி அடைந்ததும் மறைவது. பெண் உடலின் இயற்கை அமைப்பு பூப்பு எய்தியதிலிருந்து சுமார் 45 வயது வரை இனப்பெருக்கத்திற்கு தேவையான முட்டைகளை திங்கள் தோறும் வெளி ஏற்றும், அதன் பிறகு முதுமைப் பருவம், அதற்கு மேல் இயற்கையும் பெண்களை தொல்லைப் படுத்த விரும்பாததால் அல்லது உடல் தன்மை இனப்பெருக்கத்திற்கு ஏற்றதல்ல என்பதால் முட்டை உற்பத்தி நின்றுவிடுகிறது. இவை பெண்களைப் பொருத்த அளவில் கலவி இன்பத்திற்கான காலமும் இதுவே.

ஆணுக்கு இந்தக் கட்டுபாடுகளை இயற்கை விதிக்கவில்லை சீரான உடல் நிலை உள்ள ஆண் இனப்பெருக்கத்திற்கு முடிந்த வரையில் உதவ முடியும் என்பதே இயற்கை விதியாக இருக்கிறது. இணையாக சேர்ந்த பெண் மாதவிலக்கு நின்ற பிறகும் ஆணுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடிய கட்டாயத்தில் வைத்திருப்பது இயற்கை கிடையாது, சமூகம் மற்றும் இருவருக்கிடையே ஆன வயது வேறுபாடு அவற்றை நீட்டிக்கிறது,

ஆணையும் கட்டுக்குள் கொண்டுவரவும் பெண்களை அதற்குமேலும் தொல்லை படுத்துவது நல்லது அல்ல என்பதால் இந்திய சமூகச் சூழலில் ஆணுக்கு வாலிபம், இல்லறம், துறவறம் என மூன்று பருவகாலங்கள் பிரிக்கப்பட்டு, இல்லறக் கடமைகள் முடிந்த ஆண் துறவரம் மேற்கொள்வது நல்லது என்கிற வழியுறுத்தல் இருந்தது. ஆனால் பலரும் அப்படி இருக்கவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளுடன் 90 வயது வரை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.]

பாலியல் நாட்டங்கள்!

எந்த ஒரு இயக்கம் என்றாலும் அதில் ஈர்ப்புத் / விலக்குத் தன்மை அந்த இயக்க விசையில் இருக்கும். முழுப் பரவெளிக்கும் (பிரபஞ்சம்) பொருந்தும் உண்மை. உயிரினங்கள் அனைத்தின் தொடர்சியும் இனப்பெருக்கம் மூலமே நடைபெறுகிறது. வாழை மரம் போன்ற தாவிர வகைகள் மற்றும் நுண்செல்கள் தவிர்த்து மாற்றுப் பாலினம் இன்றி இனப்பெருக்கம் நடைபெறுவது உயிரினங்களின் வகைகளில் மிக மிகக் குறைவே. இயற்கை அமைப்புப் படி ஒரு இனத்தில் இருபால் பகுப்புகளும் இனப்பெருக்கத்திற்கு அவை இரண்டின் பங்களிப்புகளும் இணைந்தால் தான் உதவ முடியும் என்பது இயற்கை விதியாக இருக்கிறது.

உயிரினங்களில் தாய்மை இனப்பெருக்கத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதுடன் பெருக்கும் தன் இனங்களை தன்னிச்சையாக செயல்படும் வரை காப்பதற்கும் பொறுப்பேற்றுக் கொள்வதும் அதே இயற்கைத் தன்மை வழி சொல்லிக் கொடுக்காமல் நடைபெறும் ஒரு வியப்பு. ஒரு சில உயிரினங்களில் குட்டிகளை, குஞ்சுகளை ஆண் இனமும் பேணிக் காப்பது உண்டு. அவை பெரும்பாலும் இணை இணையாகவே வசிக்கும். பெரும்பாலும் அனைத்து உயிரினங்களிலுமே வளர்ப்பது தாயின் செயலாகவே நடைபெறுகிறது. அவ்வாறு செயல்படுவதற்கு அவற்றின் உடல்கூறில் அமைந்துள்ள பெண்பால் மரபியல் அமைப்பு என்பதைத் தவிர்த்து அந்த தாய்களுக்கு தனிப்பட்ட பலன் எதுவுமே இல்லை. தனது கடமை என்ற அளவில் இனப்பெருக்கத்துக்கு துணை புரிவதுடன் வளர்ப்பதிலும் பங்காற்றுகின்றன.

இனப்பெருக்கத்திற்கு உதவும் ஆண் உயிரினங்களுக்கு சிற்றின்பங்கள் கிடைக்கின்றன. அவற்றிற்கு இன்பம் ஏற்படுகிறதா? யார் கண்டது? அவை அவற்றை விரும்பிச் செய்கிறதா? உந்துதலால் செய்கிறதா? என்று பார்த்தால் ஆண் இனங்கள் இன்பம் அடைவதாகத் தான் கொள்ள முடிகிறது. கன்றுக் குட்டியின் தாடையை, முதுகை வருடிக் கொடுத்தால் அது காட்டிக் கொண்டே இருக்கும், எனவே உயிரினங்களுக்கு உடல் பசிக்கு உடனடியாக கிடைக்கும் உணவுகளில் ஏற்படும் நிறைவு போலவே அவைகளுக்கும் பல்வேறு உணர்வுகளும் இன்ப நுகர்சிகளும் தேவையாக இருக்கிறது என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

மனித இனத்தின் சிக்கல், ஆண் சமூகக் கட்டமைப்புதான். சமூகமாக வாழ்வதும், அதை அடையாளப்படுத்திக் கொள்வதும், அதையே முன்னிலைப் படுத்துக் கொள்வ விளைவதும் இதன் தொடர்ச்சிக்கு சந்ததிகளைப் பெருக்கிக் கொள்ளும் பொருட்டு தங்கள் சமூகப் பெண்களை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். ஆண் பெண் வேறுபாடுகள் சமூகத்தின் முதன்மைக் காரணியாக இருக்கின்றன.

பொதுவானவர்களிடம் ஆணுக்கு ஆணோ, பெண்ணுக்கு பெண்ணோ ஈர்ப்புகள் இருப்பது இல்லை என்றே சொல்ல முடியாது, பெரும்பாலும் தலைமை விசுவாசிகள் தலைவனின் செயல்பாட்டின் வழி தலைவன் மீது ஈர்ப்பு கொண்டிருப்பார்கள், ஆனால் அவை பாலியல் வேட்க்கையில் அடங்கும் ஈர்ப்பாக இருக்காது. அழகான ஆண்கள் யார் என்று கேட்டால் ஓரின பால் நாட்டம் இல்லாத ஆண்கள் கூட சில ஆண்களைக் குறிப்பிட்டு இவர்களெல்லாம் அழகானவர்கள் என்று சொல்வார்கள். அது அவர்களை மனதுக்குள் பாலியல் சார்ந்த ஈர்பாக நினைத்துக் கொள்கிறார்கள் என்று பொருள்படாது. மற்றபடி அவர்களின் உடலமைப்புடன், திறமை, நடவெடிக்கை ஆகியவற்றில் எதோ ஒன்றில் அவர்களைப் பிடித்திருக்கிறது என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

உடல் பலம் ரீதியாகவும், குழந்தை பெற்றுக் கொண்டு பேணி வளர்க்கும் பொறுப்புகள் என்றும் இருப்பதால் சமூகம் மற்றும் பேரரசு, அரசு அமைப்பில் பெண்களின் பங்கு என்பதே இல்லை. அடிமையாகவும், குழந்தை பெரும் பாலினமாகத்தான் பெண்கள் நிலை இருந்திருக்கிறது. பெண்நிலை கீழாக இருந்ததால் உடலுறவு 'இன்பம்' தரக்கூடியவள் என்கிற தகுதியைக் கூட அவளுக்கு இருப்பதாகவோ, அப்படி ஒரு தகுதியைக் கொடுக்கவோ ஆண் சமூகம் தயாராக இருந்ததில்லை. கிளர்ந்தெழும் பால் உணர்வுகளை தனித்துக் கொள்ள ஆண்கள் ஆண்களையே நாடும் அவல நிலையை அவர்களே விரும்பியும், வழியின்றியும் ஏற்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

நாட்டை வளப்படுத்தவும், வீரத்தை உலகரிய செய்யவேண்டும், தன்னைச் சார்ந்தவர்களின் ஆளுமையைப் பரப்ப வேண்டும் என்பதற்கு எளிய வழிகளாக பேரரசுகளும், மன்னர்களும் நினைப்பது பிறநாட்டினரிடம் போரிட்டு அவற்றைக் கைப்பெற்றி தனது ஆளுமைக்குக் கொண்டுவருவதைத் தான். அப்படிச் செய்வதன் மூலம் வீழ்ந்த நாட்டின் உலோக செல்வங்களும், அடிமைப்பட்ட மன்னன் செலுத்தும் வரியும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும், இதனால் பண்டையகாலத்தில் உலகங்களிலும் இருந்த மன்னர் ஆட்சிகள் எப்போதும் போருக்கான ஒத்திகையும், போரையும் தொடர்ந்து செய்துவந்திருக்கின்றன. வடக்கு ஆசியாவில் சீன மன்னர்கள் ஆட்சியைப் பார்த்தால் பெரும்பாலான மன்னர்கள் இயற்கை எய்தியதே இல்லை, போரில் சண்டையிட்டே இறந்திருக்கிறார்கள். சீனாவின் பண்டைய வரலாறுகள் சண்டைகளும் அரசு எழுச்சி வீழ்ச்சி என மாறி மாறி நிகழ்ந்ததை அறிய முடிகிறது. (From the Qin dynasty to the Qing dynasty, there have been nearly 400 Emperors - சீனாவின் மெகாசீரியல்களுக்கு இவைதான் கதைக் களம்) இவை ஆசிய அளவில் சீனப் பேரரசுகள் கம்போடியா, தாய்லாந்தைக் கூட ஆளுமைகளுக்கு கீழ் கொண்டு வந்திருக்கிறது.

பண்டைய மேற்கத்திய ஐரோப்பிய கிரேக்க மற்றும் ரோமன் பேரரசுகளின் இல்லங்களில் ஆண்கள் பெண்களுடன் தனது வாரிசுகளை உருவாக்க வேண்டுமென்ற காரணத்தினால் கூடினார்கள். ஆசிய நாடுகளில் பெண்களை உயர்வாக நடத்தினார்களா? ஆசிய ஆண்களின் ஆண்மையின் பெருமை அவனுடைய அறிவுத் திறமை, உடல்பலம் மற்றும் எத்தனை மனைவியைக் கொண்டிருக்கிறான், எத்தனை குழந்தைகளைக் கொண்டிருக்கிறான் என்பதாக கட்டமைக்கப்பட்டிருந்தது. மற்றபடி ஆசிய ஆண்களும் பெண்களை சமாக நடத்தி இருக்கவில்லை. போரில் தோற்கும் இனங்களது பெண்களை அடிமையாகவும், மணந்து கொள்ளவும் முற்பட்டனர். அரபு நாடுகளில் இன்றும் பலதாரமணத்துக்கு வருமானத் தடைகள் தவிர்த்து மனதளவில் கூட தடையேதும் இல்லை.

இந்திய சமூகச் சூழலில் பெண்கள் நிறைந்திருக்கும் அந்தப்புரம் இல்லாத அரண்மனைகளே இல்லை என்பது போல் தான் கதைகளில் படிக்கிறோம். இந்திய சூழலில் தாய்மைக்கு முதன்மைத்துவம் கொடுத்திருந்தாலும் பெண் ஆணின் சொத்து என்பதாக நினைத்து கணவனை இழந்த பெண்களை உடன்கட்டை ஏறச் செய்வது தமிழ் சூழலில் கூட இருந்ததற்கு சங்க இலக்கிய குறிப்புகள் உண்டு. ஆசிய ஆண்கள் பெண்களை பிள்ளை பெறும் இயந்திரமாகவே நடத்தினர். தமிழ்ச் சூழலில் பலதார மணம் தவறு என்பதை சிலப்பதிகாரமும், கம்பைராமாயணமும் வழியுறுத்தி கட்டுபடுத்த முயன்றது.

மேற்கு நாடுகளில் நாகரீக வளர்ச்சியின் காரணமாக பெண்கள் சமமாக நடத்தப்படும் நிலையும் வளர்ந்தது, வெள்ளையர்கள் எங்கெல்லாம் ஆட்சியைப் பிடித்தார்களோ அங்கெல்லாம் அவர்களைப் பார்த்து பிற இனத்தினரும் ஒருதார மணத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டனர்.

மனித உணர்வுகளில் வழி செயல்பாட்டிலும், பழக்க வழக்கங்களிலும் எது இயற்கை என்பது பற்றி பல்வேறு கருத்துகள் இருக்கிறது. எவையெல்லாம் இயற்கை எவையெல்லாம் இயற்கைக்கு எதிரானது என்பதை முடிவு செய்யும் போக்கு சமூகம் சார்ந்தது என்பதைவிட மதம் சார்ந்ததாகவே இருக்கிறது.

உடல்சார்ந்த செயற்கை மா(ற்)றுதல் களில் இந்துக்கள் காதில் சிறு துளையிட்டு காதணிகள் அணிந்து கொள்ளப்படுகிறது. காதில் துளையிடும் பழக்கம் ஆதிவாசிகளாக (நாகரீக வளர்ச்சி இல்லாத காலகட்டங்களில் இருந்து - என்று எழுதத் தயங்குகிறேன், நாகரீகம் என்பது தம்மை உயர்த்திச் சொல்ல தற்கால சமூகம் அமைத்துக் கொண்ட சொல், எனக்கு உடன்பாடு இல்லை, இன்றைய நவநாகரீகம் என்று சொல்லப்படுபவை பல, பிற்காலத்தில் பிற்போக்குத் தனமாகக் கூட நினைக்கப்படலாம்) வாழ்ந்த போது ஏற்பட்டு தொடர்ந்து வரும் ஒரு பழக்கமாக இருக்கும்,

முகங்களை அழகாகக் காட்ட காதணி அணிவது நன்றாக இருக்கிறது என்பதால் பல்வேறு பிற இன சமூகங்களிலும் விருப்பமுடையவர்கள் காதில் துளையிட்டுக் கொள்கிறார்கள். ஆனால் இந்திய சமூகத்தில் இதற்குச் சொல்லப்படும் மறைமுகக் காரணம் 'காதில் துளையிடுவதன்' மூலம் அக்குபஞ்சர் போல் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் நோய்களை குறைக்க பயன்படுகிறது, அதற்காகத் தான் நம் முன்னோர்கள் செய்து கொண்டார்கள் என்று கதை விடப்படுக்கிறது. மற்றொன்று விருத்த சேதனம் (சுன்னத்) என்று சொல்லப்படுகின்ற ஆண்குறியின் மொட்டு (Glans) பகுதியின் மென்மையைப் காக்கும் முன்தோலை (Foreskin) அகற்றிக் கொள்ளும் சடங்கு, விருத்தசேதனம் இஸ்லாம் சமயத்தினரால் பின்பற்றப்படுகிறது.

முன்தோலை அகற்றிக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்று சொல்லப்படும் காரணங்கள்.

1. உடல் தூய்மை பேணுகிறது, 2. நோய் தொற்றுவதை (ஓரளவுக்கு) குறைக்கிறது, இதில் தவறு ஒன்றுமே இல்லை. சொல்வதும் உண்மைதான். முன் தோலில் தங்கும் கழிவுப் படலம் (கலோக்கியல் ஆங்கிலத்தில் Cock Cheese என்று சொல்லப்படும், smegma - sebaceous paste collects under the foreskin near the base of the head) முன் தோலை அகற்றிக் தடுக்கப்படுகிறது அதன் மூலம் பால்வினை நோய்கள் தொற்றும் வாய்ப்புகளை 50 விழுக்காடு குறைக்கிறது ( முற்றிலும் தடுக்கிறது என்று சொல்லவதற்கு இல்லை) ஆனால் ஆண்குறி முனையின் (Glans) மென்மைகள் போய்விடும் என்பதால், நீண்ட நேரம் உறவு கொள்ள விரும்புவர்களுக்கு பயனாக இருக்கும். அல்லது உடல் ரீதியான குறையால் மனம் செயல்பாடுகளின் வழி உணர்வுகளை கட்டுப்படுத்தி தேவையான நேரம் உறவு கொள்ள இயலாதாவர்களுக்கு மென்மையற்றதன்மை பயனளிக்கும். சிலருக்கு பிறவியினாலும் ஒரு சில திடீர் உடல் நோய்களால் முன் தோல் இழுவை (Flexiblity) தன்மை இல்லாமல் மிகவும் குறுகியதாக விட்டமாக இருக்கும், அவர்கள் அகற்றிக் கொள்வதால் பயன் உண்டு.

உடல்கூறுகளின் வளர்ச்சியினால் பருவம் அடைதல் என்று சொல்வது ஆண்/பெண் இருவரும் ' இனப்பெருக்கத்துக்கு ஆயத்தம் ஆகிவிட்டார்கள் என்பாதாக பொருள். உடலியல் மாற்றங்களில் சுரப்பிகள் வளர்ந்து பணியைத் தொடங்க அதன் ரசாயன மாற்றங்கள் மனதில் தூண்டுதல் ஏற்படும் பாலியல் உணர்வு என்பது உடல்சார்ந்த இச்சை என்றாலும் மனதின் செயல்பாடுகளே அதன் தீர்வுகளை முடிவு செய்கிறது. பாலியல் வேட்கையும் தணிப்பும் உடல் இன்பம் என்றே சொல்லுவார்கள்.

வேறெந்த உயிரினங்களும் வெறும் இச்சைக்காக கூடுவதே இல்லை, பெண் உயிரினங்கள் இனப்பெருக்கத்துக்கு ஆயத்தமாகும் போது அதனை அறிந்து கொண்ட ஆண் உயிரினம் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறது. மனித இனத்தில் மட்டும் தான் உடல் இன்பம் ஆண்/பெண் இருவருக்கும், குறிப்பாக ஆணுக்கு அன்றாட தேவை என்கிற அளவில் உடல்கூறுகள் அமைந்துவிட்டது. ஒருவனுக்கு ஒருத்தி அல்லது எப்படி வாழ்ந்தாலும் மனிதனின் அன்றாட உடல் இன்பத் தேவை என்பது குழந்தைப் பெருவதற்காக அல்ல என்ற நிலையில், உடல் இன்பம் என்பது ஒப்புதலுடன் கூடிய இரு உடல்களின் தற்காலிக சேர்க்கை என்பதாகத் தான் பொருள்படும்.

ஆண் / பெண் சேர்க்கையின் நோக்கம் இனப்பெருக்கம் மட்டுமல்ல, அது ஒரு அன்றாடத் தேவையாகிப் போனதை இயற்கை என்று சொல்ல முடியுமா? இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த எத்தனை முறைகளை பயன்படுத்தினாலும் அவை அனைத்துமே இயற்கைக்கு மாறுபட்ட ஒன்று தானே. இன்றைய இனப்பெருக்கத் தேவையை தனிமனிதனின் வருமானமும், மனைவி/கணவன் ஆகியோரின் உடல் நிலையும், அதை ஏற்றுக் கொள்ளும் இருவரின் மன நிலையும் தான் முடிவு செய்கிறது. இனப்பெருக்கம் தான் நோக்கம் அதனால் ஈர்ப்பு இருப்பது இயற்கையாகவே இருக்கும் என்றால் உடலியல் குறைபாடுகளால் இனப்பெருக்கம் செய்ய முடியாத தம்பதியினர் கூடிக் களிப்பதை இயற்கைக்கு எதிரானது, தேவையற்றது என்று எவரும் சொன்னால் அது அறிவீனம். மனித உடல் அமைப்புகளையும், மனம், பொருளாதாரச் சூழல் சமூகம் இவற்றைப் பார்த்தால் இச்சைகளின் நீண்டகாலத் தேவை உடல் இன்பம் மட்டும் தான். மாற்றுபாலின சேர்க்கையாளர்கள் (Normal Sex Orentation) நாடும் உடல் இன்பம் உறுப்பு சங்கமங்களினால் மட்டும் தான் தனித்துக் கொள்வதில்லை, பல்வேறு 'வழிகளிலும்' அடைகிறார்கள், இவையெல்லாம் மற்றும் சுய இன்பம் காண்பது இயற்கையா? உடல் இன்பம் பெறும் முறைகளை இயற்கை செயற்கை என்று வகைப்படுத்த முடியாமல் போவதற்கு அதன் நோக்கம் இனப்பெருக்கம் மட்டுமல்ல என்பதே உண்மை. அப்படி இருக்கும் போது கூட விரும்பும் உடல்களுக்கு சட்ட சிக்கல் எதுவும் இல்லை என்றால் அது தற்பாலினமாகவோ இருந்தால் அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை/

மாணவவிடுதிகள், மேன்சன்கள் ஆகியவற்றில் தங்கும் ஆண்கள் நெருங்கிப் பழகுபவர்களிடம் இருந்து எதிர்பாராதவிதமாக தற்பால் சேர்க்கை விருப்பிற்குள் விழுந்துவிடுகிறார்கள். நெடும் தொலைவு இரவு பேருந்துப் பயணங்களில் நடுத்தரவயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அருகில் அமர்ந்திருக்கும் பருவ வயது இளைஞர்களை சீண்டுவார்கள், பலருக்கும் இது போன்ற பாலியல் தொல்லை அனுபவங்கள் இருக்கும். ஆனால் இப்படி நடப்பது தற்காலிகம், அதை இடம்மாறி உட்கார்ந்து அல்லது கூச்சல் போட்டு தவிர்க்கமுடியும், உடன் தங்கி இருக்கும் நண்பர்கள், அறையை பகிர்ந்து கொள்பவர்களினால் ஏற்பட்டால் விருப்பம் இல்லை என்றால் அவர்களிடையே நட்பு கெடும், விருப்பம் இருந்தால் அந்தப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள்.

பகுத்தறிவு, ஆன்மிகம் என எந்த நோக்கில் பார்த்தாலும் உயிரினங்கள் பிறப்பு வளர்ச்சி முடிவு என்கிற சுழற்சிக்கு ஒவ்வொன்றும் தன்னால் இயன்ற பங்களிப்பை செய்து பூமியை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது, இதுதான் இயற்கை. இந்த உயிர்த்தன்மையின் கூறுகளாக தாவரங்களும் சிலவகை ஒரு செல் உயிரனங்கள் தவிர்த்து தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் கிடையாது, உயிரினப் பெருக்கத்திற்கு ஆண் / பெண் என ஒரே உயிரினப் பிரிவின் இருவகை உயிரினங்களின் சேர்க்கை இன்றியமையாததாகும். ஆண் பெண் சேர்க்கையால் உயிரினப் பெருக்கம் என்கிற சமண்பாட்டில் தூண்டும் பொருள்களாக புலனின்பம் என்கிற பயனும், இனப்பெருக்கம் என்பது அதன் ஈடுகளும் ஆகும்.

இனப்பெருக்கம் என்கிற செயலுக்கான நற்பலனை செயல்படும் போதே பெருவது பெருவதே கலவி இன்பம் அல்லது உடல் இன்பம். உயிர்ப்புக்கான இனப்பெருக்கம் என்னும் செயல்பாட்டின் புறக்காரணிகள் தான் ஆண் / பெண் உடல் கூறுகள், அதில் பெறப்படும் பிற பயன் உடலின்பம். சமூகமாக மாற்றிக் கொண்ட மனித இனத்தின் நோக்கம் இனப்பெருக்கம் என்கிற மையத் தன்மை.

மனிதர்களில் சிலர் இருப்பது போல் பிற உயிரினங்களில் எப்போதுமே தற்பால் சேர்க்கை நாட்டம் உள்ள உயிரினம் எதுவும் கிடையாது. அப்படி இருக்கும் உயிரினங்கள் இருபால் நாட்டம் கொண்டவை, இனப்பெருக்கத்திற்கும் உதவும், தற்பால் நாட்டத்திலும் இருக்கும், அதன் செயல்பாடுகள் ஒற்றைத் தன்மை வாய்ந்தவை கிடையாது. ஆளுமைச் சமூகம் என்கிற ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளாதால் பிற உயிரனங்களில் தற்பால் நாட்டம் இருந்தாலும் அவை நிலைத்த தன்மை கொண்டது இல்லை.

தனிமனிதனின் பருவத் தேவையாக இணையைத் தேடுவது, இனப்பெருக்கம் செய்வது, அவற்றை வளர்ப்பது, உடல் முதிர்ச்சி அடைந்ததும் மறைவது. பெண் உடலின் இயற்கை அமைப்பு பூப்பு எய்தியதிலிருந்து சுமார் 45 வயது வரை இனப்பெருக்கத்திற்கு தேவையான முட்டைகளை திங்கள் தோறும் வெளி ஏற்றும், அதன் பிறகு முதுமைப் பருவம், அதற்கு மேல் இயற்கையும் பெண்களை தொல்லைப் படுத்த விரும்பாததால் அல்லது உடல் தன்மை இனப்பெருக்கத்திற்கு ஏற்றதல்ல என்பதால் முட்டை உற்பத்தி நின்றுவிடுகிறது. இவை பெண்களைப் பொருத்த அளவில் கலவி இன்பத்திற்கான காலமும் இதுவே.

ஆணுக்கு இந்தக் கட்டுபாடுகளை இயற்கை விதிக்கவில்லை சீரான உடல் நிலை உள்ள ஆண் இனப்பெருக்கத்திற்கு முடிந்த வரையில் உதவ முடியும் என்பதே இயற்கை விதியாக இருக்கிறது. இணையாக சேர்ந்த பெண் மாதவிலக்கு நின்ற பிறகும் ஆணுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடிய கட்டாயத்தில் வைத்திருப்பது இயற்கை கிடையாது, சமூகம் மற்றும் இருவருக்கிடையே ஆன வயது வேறுபாடு அவற்றை நீட்டிக்கிறது, ஆணையும் கட்டுக்குள் கொண்டுவரவும் பெண்களை அதற்குமேலும் தொல்லை படுத்துவது நல்லது அல்ல என்பதால் இந்திய சமூகச் சூழலில் ஆணுக்கு வாலிபம், இல்லறம், துறவறம் என மூன்று பருவகாலங்கள் பிரிக்கப்பட்டு, இல்லறக் கடமைகள் முடிந்த ஆண் துறவரம் மேற்கொள்வது நல்லது என்கிற வழியுறுத்தல் இருந்தது. ஆனால் பலரும் அப்படி இருக்கவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளுடன் 90 வயது வரை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

உடல் நிலை காரணங்கள் தவிர்த்து வயதின் காரணாமாக இந்தகாலத்தில் செயல்படாத ஆணுக்கு வய்க்கரா போன்ற மருத்துவ வில்லைகளும், மாதவிலக்கு நின்ற பெண்களின் வரண்ட குறிகளுக்கு களிம்பு வகைகளையும் பரிந்துரை செய்து இல்லற இன்பம் சாகும் வரை என்பதாக நீட்டிக்கப்பட்டு இருப்பது இயற்கையா என்று பார்த்தால், கலவி இன்பத்திற்கு இருக்கும் இயற்கைத் தடைகளையெல்லாம் உடைத்து எரிந்துவிட்டிருக்கிறோம் என்றே தெரிகிறது.

ஒரு தனிமனிதன் இல்லறத்திற்குள் நுழைவது என்பதன் முதல் சடங்கு திருமணம், இதன் மூலம் எதிர்பாலினரிடம் கருத்தொற்றுமையுடன், இல்லற இன்பம் பெற்று, குழந்தைகள் பெற்று சந்ததி பெருக்கத்திற்கு உதவுவதாக சமூகத்தின் மூன்பு தன் சார்ந்துள்ள சமுக / மதப் பழக்கவழக்கப்படி உறுதி மொழி ஏற்கிறார்கள், அரசாங்க சட்ட அளவில் இருவருக்கும் பாதுகாப்பாக சொத்து உரிமை இன்னும் பல உரிமைகளை வழங்குகிறது. திருமணம் என்பது சமூகங்களை ஏற்றுக் கொண்டோரின் மன ஒப்புதலுடன் கூடிய முழுக்க முழுக்க சமுகம் சார்ந்த சடங்கு. இந்த சடங்கின் வழி அந்த சமூகத்தின் சந்ததிகள் பெருகிவளர்கின்றன. அனைத்து சமூகங்களின் திருமணச் சடங்குகளின் வழியாக பூமியின் உயிர்த்தன்மை நிலைத்து இருக்கிறது.

திருமணம் என்பது இரு உடல்களின் சங்கமத்திற்கு ஒப்பந்தம் போடும் ஒரு நிகழ்வு என்பதாக மட்டுமல்லாது திருமணம் என்பது இனப்பெருக்கத்திற்கு முன்மொழியப்படும் முதல் சடங்கு என சமூகத்தில் திருமணம் பற்றிய புரிந்துணர்வுகள் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் திருமணச் சடங்குகளே இல்லாது போய் இருக்கும், இன்றும் கூட சமூகத்தில் திருமணம் என்பது உடல் இணைப்பிற்கான சடங்கு அல்ல அதற்கும் மேலாக இல்லற ஒப்பந்ததில் சந்திகளை நல்ல முறையில் கொண்டு சென்று உயிர்த்தன்மையை அடுத்த தலைமுறைக்கு அனுப்பி வைக்க முயற்சிக்கும் ஒரு தொடக்கம், அதனை பெற்றோர்கள் வாழ்த்துகிறார்கள்.

அதை வெறும் சட்டங்களுடன் தொடர்பு படுத்திப் பார்த்து ஓரினவாதிகள் திருமணம் சமூகத்தால் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்று கூறுவதும், தாங்கள் திருமணம் செய்து கொண்டதாக அறிவிப்பதும், கேலிக் கூத்தாகத் தான் நினைக்க முடிகிறது. நல்ல உடல் நிலையில் இருந்து அடுத்தலைமுறை தேவைகள் என்கிற எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் வாழ்ந்து இறந்து போவது உயிர்புடன் வைத்திருக்க முயலும் சமூகத்திற்கு பேரிழப்புதான். இந்த காரணங்களுக்காக சமூகம் தற்பால் புணர்ச்சியனரின் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளச் சொல்லி வழியுறுத்தலாம்.