Home குடும்பம் இல்லறம் இளம்வயது விவாகம் தவறில்லை!

இஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari

இளம்வயது விவாகம் தவறில்லை! PDF Print E-mail
Wednesday, 26 October 2011 07:57
Share

இளம்வயது விவாகம் தவறில்லை!

[ ஓட்டுப்போடும் வயதை 18 ஆக குறைத்துள்ள அரசு திருமண வயது 21 என்று பரப்புவது எந்த வகையில் நியாயம்! ஓட்டுப்போட அறிவிருப்பவர்களுக்கு, திருமணம் முடித்து குடும்பம் நடத்தத்தெரியாது என்று நினைப்பது எவ்வளவு பெரிய முரண்பாடு என்பதை சிந்திக்க வேண்டும்.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தடுமாறும் இளைஞர்களும் இளைஞிகளும் கெட்டு சீரழியட்டும் என்று விட்டு விட வேண்டியதுதானா?!

பள்ளி படிக்கும் வயதில் இது மாதிரியான காதலும் காமமும் கொள்ள முக்கிய காரணம் இன்றைய சினிமாக்களே என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.

ஆபாசத்தின் எல்லா கதவுகளையும் திறந்து வைத்துக்கொண்டு, அதை பத்திரிகைகள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் பரப்பிக்கொண்டு, முறையான திருமணத்தை முடித்துக்கொண்டு ஒழுக்கமுடன் வாழ்வதற்கு தடைக்கல்லாக இருப்பவர்கள் அனைவரும் மனித இன விரோதிகளே!]

சமீபத்தில் நான் படித்த ஒரு செய்தி என் நெஞ்சில் நெருப்பை அள்ளி கொட்டியதை போல இருந்தது, 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் (அதிக பட்சமாக அவர்களுக்கு 14 வயதிருக்கலாம்) மூன்று பேர் தன் ஆண் நண்பர்களுடன் பாண்டிசேரி போனதாகவும் அங்கு நேரமானதால் அவர்களை அப்படியே விட்டுவிட்டு அவர்களின் ஆண் நண்பர்கள் ஓடிவிட்டதாகவும், அங்கேயே சுற்றி திரிந்து இரண்டு நாட்கள் கழித்து வீடு வந்து சேர்ந்ததாக செய்தியப் படித்தவுடன், எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை, மனம் வேதனையிலும் வெறுப்பிலும் நொந்து போனது.

இதெற்கெல்லாம் முக்கிய காரணியாக நான் பார்ப்பது பெற்றோர்களையும், கலாச்சாரங்களை சீரழிக்கும் சினிமாவும் தான். தன் மகன், மகள்களின் நடவடிக்கைகளை கண்காணிக்காமல், கண்டிக்காமல் பணம் சேர்ப்பது ஒன்றே குறியாக இருக்கும் இக்கால பெற்றோர்கள், பணம் சம்பாதிக்கும் மிஷினாக மட்டும் இன்றி பொறுப்புள்ள மனிதர்களாகவும் நடந்து கொள்ளவேண்டும் எனபது என் அவா .

இன்று இணையங்களில் பார்த்தோமேயானால் பள்ளி மாணவ மாணவியர்களின் பாலியல் பற்றிய தவறான சிந்தனைகளும் செயல்பாடுகளும் வருங்கால இளைய சமுதாயத்தினரை எப்படியெல்லாம் சீரழித்து இருக்கிறது என்று தெரிய வரும் ,இந்த மாதிரியான பாலியல் உறவு காட்சிகளை அந்த மாணவிக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ எடுக்கப்பட்டு தன் நண்பர்களிடம் பெருமையாக காட்டவும் அதை பின் பணத்திற்காக இணையத்தில் இணைக்கும் செயலையும் செய்கின்றனர்

இந்த மாதிரியான சீரழிவுகளுக்கும், கலாச்சார சீர்கேடுகளுக்கும் பெற்றோரின் மனதை எப்படி எல்லாம் பாதிக்கும், அந்த பெண்ணின் எதிர்காலம் எப்படி பாதிக்கப்படும் என்பதை இருவருமே நினைத்துப் பார்ப்பதில்லை இவற்றையெல்லாம் பார்க்கும் போது பாலய விவாஹங்களே தவறில்லை என்ற எதிர் சிந்தனைக்கு தயாராகிறோம்.

பள்ளி படிக்கும் வயதில் இது மாதிரியான காதலும் காமமும் கொள்ள முக்கிய காரணம் இன்றைய சினிமாக்களே என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.

சமீப காலங்களில் வந்த படங்களில் பெரும் வெற்றி பெற்ற படங்களில் பள்ளிப் பருவ காதலே முக்கியமாக இருக்கிறது, பள்ளி சீருடை அணிந்து கதாநாயகி காதலனுடன் சுற்றும் போதும், உரசும் போதும் தன்னையே கதாநாயகிகளாக உருவகப்படுத்தி கொள்ளுகிற மாணவிகள் அதற்கான வடிகாலை தேடுகிறார்கள் அல்லது அதுமாதிரியான வலையில் விழ வைக்கப் படுகிறார்கள், இரண்டுமே தவறான செயல்கள்தான்,

இது மாதிரியான படங்களை வெற்றிபெற வைப்பதன் மூலம் நாமும் அந்த தவறுக்கு உடந்தையாகிறோம், அவர்களை இந்த வெற்றியின் மூலம் ஊக்குவித்தவர்களாகிறோம், உடனே எல்லா சேனலும் அந்த இயக்குனரை பேட்டி எடுக்க அவரும் தாமஸ் ஆல்வா எடிசன் மாதிரி உலகத்திற்கு ஒரு மிகப் பெரிய கண்டு பிடிப்பை கொடுத்தவர் போல கதா நாயகி சகிதமாய் பேட்டி கொடுக்க அதையும் நான் கண் கொட்டாமல் பார்க்கிறோம்.

சரி இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன?. இப்படி இளம் வயதினரை மனம் கிளர்ச்சி கொள்ளும் வகையில் சினிமா தயாரிப்பதை தடுக்க வேண்டும், பள்ளி சீருடை அணிந்து காதல் செய்யும் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும், மாணவ மாணவிகளுக்கு சினிமா, டிவி தவிர்த்து ஆன்மீக போதனைகளை சொல்லி கொடுக்கவேண்டும், ஒழுக்கம் என்பதன் முக்கியத்துவம் உணரவைக்க படுவது மிக முக்கியம் பெற்றோர்கள் அவர்களுடன் நல்ல நண்பராக பழகவேண்டும், கட்டுபாடுடன் கூடிய சுதந்திரம் மட்டுமே தரவேண்டும். மாணவ, மாணவிகளும் தங்களின் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்படவேண்டும்.

ஓட்டுப்போடும் வயதை 18 ஆக குறைத்துள்ள அரசு திருமண வயது 21 என்று பரப்புவதும் எந்த வகையில் நியாயம்! ஓட்டுப்போடுவதற்கு அறிவிருப்பவர்களுக்கு திருமணம் முடித்து குடும்பம் நடத்தத்தெரியாது என்று நினைப்பது எவ்வளவு பெரிய முரண்பாடு என்பதை சிந்திக்க வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தடுமாறும் இளைஞர்களும் இளைஞிகளும் கெட்டு சீரழியட்டும் என்று விட்டு விட வேண்டியதுதானா?!

ஆபாசத்தின் எல்லா கதவுகளையும் திறந்து வைத்துக்கொண்டு, அதை பத்திரிகைகள் மூலமாகவும்,

தொலைக்காட்சிகள் மூலமாகவும் பரப்பிக்கொண்டு, முறையான திருமணத்தை முடித்துக்கொண்டு ஒழுக்கமுடன் வாழ்வதற்கு தடைக்கல்லாக இருப்பவர்கள் அனைவரும் மனித இன விரோதிகளே!