Home குடும்பம் இல்லறம் முத்தத்தில் உற்பத்தியாகும் 30 வாட் மின்சாரம்!

இஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari

முத்தத்தில் உற்பத்தியாகும் 30 வாட் மின்சாரம்! PDF Print E-mail
Saturday, 08 October 2011 07:02
Share

 முத்தத்தில் உற்பத்தியாகும் 30 வாட் மின்சாரம்!

தம்பதிகளின் முத்தமிட்டு கொண்டாலும், ஆழ்ந்து அனுபவித்து நீண்ட நேரம் முத்தமிடுங்கள் என்கிறார்கள். இது எதிர் உயிரிகளைத் தூண்டும் பாக்ட்ரீயாக்களை ரிலீஸ் செய்கிறதாம். நீண்ட கால அடிப்படையில் உடம்பின் கொலஸ்ட்ராலையும் கட்டுபடுத்துகிறதாம். இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடுவது மனிதனுக்கு, திமிங்கலத்துக்கும் இதழ் என்று அழைக்கப்படுகிற உதடு என்கிற உறுப்பின் மகிமை மகத்தானது.

உணர்ச்சிகரமான நரம்புகள் உதடில் அதிகம். அதனால் தான் உதட்டை தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழுகின்றன. உதட்டை விரலில் தொடுவதை விட உதட்டால் தொடுவதால் ஏற்படும் நன்மைகளை பெரிய பட்டியலாக போட்டுக்கொடுத்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்டு இதழோடு இதழாக ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளும் முத்தத்தில் இருவர் உடலிலும் 30 வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறதாம்.

மனிதர்கள் தங்கள் உடலில் அதிகமாக உள்ள கலோரிகளை குறைப்பதற்கு என்னென்னவோ உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால் ஆணும் பெண்ணும் சேர்ந்து 15 நிமிடம் தொடர்ந்து கொடுத்துகொள்ளும் இதழ் முத்தத்தில் 30 கலோரிகள் குறைகிறது. இது அரைமணி நேராம் மாய்ந்து மாய்ந்து நடக்கும் நடைபயிற்சிக்கு சமமானது.

முத்தம்தான் உடலுறவுக்கான முதல் தூண்டுதல். உதடு பிரியாமல் கன்னத்தில் கொடுக்கும் முத்தத்தைவிட, உதடு பிரிந்து உதடுகளில் கொடுக்கும் காண்கில முத்தத்திற்கு ஆரோக்கியம் அதிகம்.

முத்த நேரத்தில் வாயில் ஊரும் உமிழ்நீரில் கூட நோய் கிரிமிகளை கொள்ளும் ஆற்றல் கொண்டது. இதன் மூலம் பற்களில் உள்ள பக்ட்ரீயாக்களை போக்கி விடுகிறது. இத்தனை முன்னேற்பாடுகளும் வாய்மூலமாக ஆணிடமிருந்து பெண்ணுக்கோ, பெண்ணிடமிருந்து ஆணுக்கோ கிருமிகள் பரவிவிடக்கூடாது என்பதற்காக இயற்கை கொடுத்திருக்கும் முன்னேற்பாடு. இந்த கிரிமிகளை கொள்ளும் சக்தி ஆணும் பெண்ணும் முத்தமிடும் போது மட்டுமே ஏற்படுகிறது என்பதுதான் ஆச்சர்யம். இத்தகைய முத்தத்தின் மூலம் இருவரின் முகம், தாடை, கழுத்து, கன்னம் போன்ற இடங்களில் உள்ள தசைகள் திடமாக இருக்க உதவுகிறது. இருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தும் வேலையையும் இந்த முத்தம் செய்கிறது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடைபெறும் முத்தத்தில் ஓரளவேனும் அன்பு பாகம் இருந்தால் தான் முத்தம் கொடுக்க தோன்றும். வெறும் காம உணர்வில் முத்தம் கொடுக்கும் எண்ணம் ஏற்படாது. எனவே கணவன் மனைவிக்கு இடையே நடைபெறும் இத்தகைய முத்தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து திடத்தன்மையை வலுபடுத்துகிறது. மனரீதியாக இருவருக்கும் இடையே பிணைப்பை, ஒற்றுமையை வலுபடுத்துவதன் ஆரம்பம் தான் முத்தம். ஆகவே இதழோடு இதழ் சேர்க்கும் முத்தம் என்பது உணர்சிகளின் முதல் திறவுகோல் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் திறவுகோலும் கூட என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்தியர்களுக்கு முத்தமிட தெரியவில்லை என்கிறது ஒரு ஆய்வு. ஆணுறை தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் செக்ஸ் குறித்து சர்வே நடத்துகிறது. முத்தமிடுவது பற்றி அவர்கள் ஒரு சர்வே நடத்தினார்கள். ஒவ்வொருநாட்டிலும் எப்படி முத்தமிடுகிறார்கள் என்று ஆராய்ந்தார்கள். ஆராய்ச்சியின் முடிவில் முத்தம் கொடுக்க தெரியாத நாடு இந்தியாதான் என்றார்கள். இந்தியர்களுக்கு முத்தமிடுவதில் ஆர்வமில்லை. அதுமட்டுமல்ல அவர்களுக்கு சரியாக முத்தமிடவும் தெரியாது என்று தடாலடியாக அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள்.

முத்தம் பற்றி விலாவரியாக எழுதிய நாடு இந்தியா. வாத்ஸாயனர் எழுதிய காமசூத்திரத்தில் 27 வகையான முத்தங்களை பட்டியலிடுகிறார். முத்தம் பற்றி இவ்வளவு விரிவான விளக்கம் உலகில் எந்த ஒரு மொழியிலும், எந்த புத்தகத்திலும் இதுவரை எழுதப்படவில்லை."சும்பண விகல்பம்" என்ற தலைப்பில் முத்தத்தை பற்றி தெளிவாக எழுதியுள்ளார். "சும்பணம்" என்றால் முத்தம் என்று ஒரு பொருள். உடலுறவில் முத்தம் தேவையா என்று அவரே கேள்வி எழுப்பி உள்ளார். பின் அவரே பதில் சொல்கிறார் படுக்கையறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பெண் சட்டென்று உணர்ச்சி வசப்படமாட்டாள். பாரம்பரியமாக அவளது முன்னோர்களிடமிருந்து அவள் பெற்று வந்த நாணமும், பாதுகாப்பு உணர்வும் அவளது செக்ஸ் உணர்வுக்கு தடைபோட்டுக் கொண்டே இருக்கும்.

"உறவில் ஈடுபடும் ஆண் நம்மவன், நமக்கு பாதுகாப்பு கொடுப்பவன், நல்லவன்" என்ற நம்பிக்கை ஏற்பட்டால்தான் பெண் உணர்ச்சி வசப்படுகிறாள். ஆனால் ஆண் அப்படியில்லை. வெறிபிடித்த வேங்கைபோல்தான். முரட்டுத்தனமாக படுக்கையறையில் நுழைகிறான். பெண்ணை அணுகுகிறான். இப்படி செய்யும் ஆணைப் பார்த்தாலே பெண்ணுக்கு வெறுப்பு ஏற்படும். செக்ஸ் என்பது வெறியை தனித்துக் கொள்ளும் ஒரு செயல் அல்ல. அங்கே இன்பத்தை ஆணும் பெண்ணும் சரிசமமாக பகிர்ந்துக்கொள்ள வேண்டும். மென்மையான சில முன்விளையாட்டுகள் மூலம் பெண்ணை தூண்டி உறவுக்கு தயார் படுத்த வேண்டும். இந்த விளையாட்டுகளில் மிக முக்கியமானது முத்தம்.

எப்பொழுது ஒரு பெண்ணின் உணர்ச்சிகள் கிளர்ந்து எழுந்து ஆணோடு கூடுகிறாளோ அப்போதுதான் ஆணுக்கு கிடைக்கும் இன்பமும் இரட்டிப்பாகும். அதைவிட்டுவிட்டு பொறுப்பில், பயத்தில் பயந்துபோய் மரக்கட்டையாக இருக்கும் பெண்ணுடன் கொடூரமாக உறவில் ஈடுபடுவது பாவமான செயல் என்றும் "வாத்ஸாயனார்" குறிப்பிடுகிறார். முத்தம் கொடுப்பதைப் பற்றி ஒரு பெரிய பட்டியலே போடுகிறார் "வாத்ஸாயனார்". இப்படி முத்தத்தில் முன்னோடியாக இருந்த இந்தியர்கள்தான் நவீன காலத்தில் முத்தம் கொடுக்க முடியாமல் திணறுகிறாள். முத்தம் என்பது வெறும் காம உணர்வில் மட்டும் ஏற்படுவதல்ல. பாசமும் அன்பும் இருக்கும் பட்சத்தில்தான் முத்தம் கொடுக்கும் உணர்வு ஏற்படும் என்பதுதான் உண்மை.

- Dr. V.C.வடிவுடையான்