Home குடும்பம் இல்லறம் முதலிரவை இன்பமாக கழிப்பது எப்படி?

இஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari

முதலிரவை இன்பமாக கழிப்பது எப்படி? PDF Print E-mail
Thursday, 29 September 2011 07:34
Share

முதலிரவை இன்பமாக கழிப்பது எப்படி?

முதல் இரவு - முதல் உறவு

உலகில் பருவ வயதைத் தாண்டிய, சிந்திக்க தெரிந்த எல்லோரும் ஒரு முதல் இரவுக்காக காத்திருக்கிறார்கள்.

திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உலக வாழ்க்கையில் ஒரே ஒரு முதலிரவே கிடைக்கின்றன, பலர் அந்த முதலிரவை திருமணத்திற்கு முன்னர் அப்படி, இப்படி என்று கற்பனைப் பண்ணிக்கொன்டு அந்த நாளைக்காக காத்திருக்கின்றார்கள்.

இன்றைய இளைஞர் யுவதிகள் அனைவரும் உடலுறவுக் கலையைப் பற்றி திருமணத்திற்கு முன்னரே ஊடகங்கள் மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்வதனால் அந்த விஷயத்தில் உஷாராக நடைபோட எத்தனிக்கின்றார்கள்.

இந்த விஷயத்தில் நகர்ப்புற பெண்கள் உஷாராக இருந்தாலும் கிராமத்துப் பெண்கள் மற்றும் அமைதியான ஒழுக்கமான சூழலில் வாழும் இளம் பெண்களும் அவர்களுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற நான்கு குணங்களையும் முறையே கொண்டவர்களாக இருக்க முனைவதனால் இதில் கொஞ்சம் மந்த கெதிதான்.

எவ்வளவு தான் உஷாராக இருந்தாலும் அந்த நாள் நெருங்கும் போது பெரும்பாலான இளைஞர்ளும், யுவதிகளும் டிம்மாகி விடுகின்றார்கள்.

சிலர் தாங்கள் பல வருடங்களாக காத்திருந்த, கற்பனை பண்ணியவாறு அந்த முதலிரவை ஒரே முறையில் காம உணர்ச்சிகளை தீர்த்துக்கொள்ளலாம் என நினைக்கின்றனர். இந்த எண்ணம் தவறானது என்று சொல்ல முடியாவிட்டாலும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே முதலிரவு எனும் கருத்து சரியானதாகாது.

முதலிரவை அடையும் புதிய தம்பதியினர், குறிப்பாக மணமகன் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில், முதலிரவு என்பது கணவனுக்கும் மனைவிக்குமிடையில் உடலுறவு விஷயத்தில் மட்டும் தான் என்பதல்ல.

இது மொத்த குடும்ப வாழ்க்கையின் முதலிரவாகும். அதில் கலவி ஆசையை பகிர்ந்து கொள்வது என்பது அதன் ஒரு பகுதி அல்லது ஒரு அங்கமாகும்.

இந்த இரவில் பல கட்ட அம்சங்கள் நடந்தேர வேண்டும்,

குறிப்பாக, இந்த முதலிரவில் மணமகனும் மணமகளும் சேர்ந்து உண்ணுவது அவர்களின் குடும்ப வாழ்க்கையின் முதல் உணவு.

இந்த முதலிரவில் மணமகனும் மணமகளும் சேர்ந்து புன்னகைப்பது அவர்களின் வாழ்க்கையின் முதல் புன்னகை.

அந்த முதலிரவில் மணமகனும் மணமகளும் சேர்ந்து முத்தமிடுவது அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பத்தை அன்பாய் ஆரம்பிக்க செய்யும் ஒரு அம்சமாகும்.

அந்த முதலிரவில் பழைய சில நினைவுகளை, சம்பவங்களை ஞாபகமூட்டல் புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாகும்.

இவ்வாறு பல கட்ட வேலைகள் இருக்கின்றன.

அவைகளில்,

முதலில் இருவரும் இணைந்து இரவு உணவை இன்பமாக பரிமாறிக்கொள்ளல்.

இரண்டாவதாக,

பழைய, முந்திய சில சம்பவங்களை ஞாபகப்படுத்திக்கொண்டு வந்து இருவரும் சுதந்திரமாக புன்னகைத்துக் கொள்ளல்.

சில நேரம் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில், ஒரே ஊரில் உள்ளவர்களாக இருக்கலாம்.

ஒரே சம்பவத்தில் தொடர்புபட்டவர்களாக இருக்கலாம்.

இந்த சில மறக்க முடியா, சிரிக்கத்தக்க கதைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் போது இருவருடைய உள்ளங்களிலும் உடல்களிளும் தேங்கிக்கிடக்கும் ஒரு வித பயம், அச்சம் மெது மெதுவாக நீங்க ஆரம்பிக்கும்.

அந்த புன்னகைகளுடன் நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த முக்கியமான கட்டத்திற்கு இருவரும் எத்த முடியும்.

காம உணர்வுகளையும் உடல் பசியையும் தணிக்கின்ற அந்த பொன்னான சந்தர்ப்பம் இது,

இதன் போது நிதானமாக நடந்து கொண்டால் முதலிரவின் இன்பத்தை, அதன் சுவர்க்கத்தை அடைந்து கொள்ள முடியும்,

இருவரும் இணைந்து கலவியில் இன்பமடைந்து ஓய்வு பெற்று விட்டு, அனுவவித்த இன்பங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

அதே நேரம் இருவரும் உடலுரவில் இணைந்து கொள்வதற்கு முன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித்தந்த துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்:

உடலுறவு கொள்வதற்கு முன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த துஆ:

"பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்ன ஷ் ஷைத்தான வ ஜன்னிப்னிஷ் ஷைத்தான மா ரஜக்னா" (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

அதன் பொருள்:

"அல்லாஹ்வின் பெயரால், இறைவா! எங்களை விட்டு ஷைத்தானை விலக்கி வைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் (குழந்தைச்) செல்வத்தை விட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!"

அல்லாஹ்வுத் தா ஆலா திருமறையில் கூரும்போது:

"மேலும் அவர்கள் எத்தகையோரென்றால், எங்கள் இரட்சகனே! எங்கள் மனைவியர்களிடமிருந்தும், எங்கள் சந்ததியர்களிடமிருந்தும் எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியைத் தந்தருள்வாயாக! அன்றியும், பயபக்தியுடையவர்களுக்கு எங்களை (நல்வழியில் நின்று அதன்பால் அழைக்கும்) வழிகாட்டியாகவும் நீ ஆக்குவாயாக என்று (பிராத்தித்துக்) கூறுவார்கள்." (அல் குர்ஆன் 25: 74).

உடலுறவு முடிந்து உரங்கும் போது உளுச்செய்து கொண்டு உறங்க வேண்டும்,

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உமர் பின் அல் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், இரவு நேரத்தில் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விடுவது பற்றிக் கேட்டார்கள், அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உளுச்செய்யுங்கள்; உங்கள் பிற உருப்புக்களைக் கழுவுங்கள்; பிறகு உறங்குங்கள் என்றார்கள்." (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி)

இதே போன்ற ஒரு செய்தியை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமயாகி) இருக்கும் போது உண்ணவோ, உறங்கவோ விரும்பினால் (முன்னதாக) தொழுகைக்கு அங்கத்தூய்மை (உளூ) செய்வது போன்று அங்கத்தூய்மை செய்வார்கள்." (ஆதாரம்: முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூரினார்கள்:

உங்களில் ஒருவர் தம் மனைவிடம் பாலுறவு கொண்டு விட்டு பின்னர் மீண்டும் (உறவு கொள்ள) விரும்பினால் அவர் (இடையில்) அங்கத்தூய்மை (உளூச்) செய்து கொள்ளட்டும்." (அறிவிப்பாளர்: அபூ சயீத் அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: முஸ்லிம்)

முதலிரவு முடிந்து தூங்கிய தம்பதியினர் அதிகாலையில் எழுந்து கடமையான குளிப்பைக் குளித்து கடமையான சுபஹ் தொழுகைக்கு தயாரக வேண்டும்.

source: http://changesdo.blogspot.com