Home கட்டுரைகள் அரசியல் ஜெயலலிதாவின் வியக்க வைக்கும் அரசியல் சாதுர்யம் - புலம்பும் கருணாநிதி!
ஜெயலலிதாவின் வியக்க வைக்கும் அரசியல் சாதுர்யம் - புலம்பும் கருணாநிதி! PDF Print E-mail
Friday, 26 August 2011 11:09
Share

[ மக்களின் அன்றாட வாழ்க்கையின் முக்கியத் தேவையான மின்சார வெட்டை சரிசெய்தது ஒன்றே போதும் ஜெயலலிதாவின் நிர்வாகத்திறமைக்கும் கருணாநிதியின் திறமையற்ற சுயநல நிர்வாகத்திற்கும் உள்ள வேறுபாட்டை எடைபோட! இனி வருங்காலத்தில் தேர்தலில் தி மு க விற்கு ஓட்டுப்போட என்னும் குடிமகன் இதை நினைத்தாலே போதும். தி மு க வுக்கு ஓட்டளித்தால் இருண்ட தமிழகம் தான் கண்முன் நிற்கும்.

ஜெயலலிதாவின் நூறுநாள் ஆட்சியின் முக்கிய சாதனை தொடர் மின்வெட்டை சரிசெய்ததே - அதுவும் கருணாநிதி அரசால் தலைகீழ் நின்றுபார்த்தும் சரிசெய்ய முடியாத தொடர் மின்வெட்டை சரிசெய்து மக்களை ஆச்சரியப்பட வைத்ததுதான்.

''கருணாநிதிக்கு சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் பணம்'' - இதனை ரோட்டில் போகும் குப்பனோ சுப்பனோ சொல்லவில்லை. அமெரிக்கா உள்பட உலக நாடுகளை கலக்கிக்கொண்டிருக்கும் 'விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளியிட்ட தகவலாகும். இப்பொழுதாவது புரிந்திருக்கும் தமிழக மக்களின் கஷ்டத்திற்கு என்ன காரணம் என்று. இதற்கு மேலும் மக்களை ஏமாற்ற முடியும் என்று அவர்கள் நம்பினால்.....]

திமுக கட்டிய சட்டமன்ற கட்டிடத்தை, உயர் ஆராய்ச்சி மருத்துவமனையாக மாற்றிய ‘ஜெயலலிதாவின்’ வியக்க வைக்கும் அரசியல் சாதுர்யம்’,

‘ஒரே கல்லில் மூன்று மாங்காய்’ அடித்தது போல அமைத்துள்ளது முதல்வர் ஜெயலலிதாவின் ஒரு புதிய அறிக்கை. அந்த அறிக்கையானது, ஜெயலலிதாவின் அரசியல் எதிரியான கருணாநிதியே அசந்து போய் தனது ஒப்புதலை வழங்க வேண்டிய கட்டயத்திற்கு தள்ளியுள்ளது.

தனது அறிக்கையில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திமுக ஆட்சியில் சட்டமன்றத்திற்கென கட்டப்பட்ட கட்டடத்தில், புது டில்லியில் உள்ள எய்ம்ஸ் எனப்படும் (AIIMS-All India Institute of Medical Sciences) எனப்படும் பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனையை போன்றதொரு மருத்துவமனையை அமைக்க தனது அரசு முடிவு செய்திருப்பதாக ஜெயலலிதா அறிவிப்பை வெளியிட்டு, தனது அரசியல் எதிரிகளையே வாளாயிருக்க செய்துவிட்டார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பை வெளியிட்டு தெரிவித்ததாவது:

தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச்சூழலைக் கொண்ட தரமான மருத்துவச் சேவையை தாராளமாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் விதமாக, ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்துதல்; உயிர் காக்கும் உபகரணங்களை தமிழ்நாடு சுகாதார நலத் திட்டத்தின் கீழ் 55 கோடி ரூபாய் செலவில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குதல்; உணவு பாதுகாப்பு – மருந்து கட்டுப்பாடு நிருவாகத்திற்கென தனியாக ஒரு ஆணையரகத்தை உருவாக்குவது;

திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு சிகிச்சை மையம், மக்கள் வீட்டிற்கே சென்று சுகாதார வசதிகள் அளிக்கக் கூடிய நடமாடும் மருத்துவமனை என்னும் புதிய திட்டம் உட்பட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் எனது தலைமையிலான அரசின், 2011-2012 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதை இந்த உறுப்பினர்கள் அறிவீர்கள்..

இவை மட்டும் அல்லாமல், அனைவருக்கும் மருத்துவ சேவையை நல்கும் வகையில், முதல்வரின் விரிவான பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, இவற்றுக்கெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும், தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாகப் பெறும் வகையில், பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை, அதாவது, மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மருத்துவமனை, சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய தி.மு.க அரசால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கட்டப்பட்ட, 97,829 சதுர மீட்டர் தளப் பரப்பு கொண்ட பிளாக் ‘ஏ’ கட்டடத்தில் அமைக்கப்படும்.

இந்தக் கட்டடம், சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தற்போது உள்ள 36 துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதல்ல என்பதாலும்; பயன்படுத்தக் கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதால், அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்தக் கட்டடம் இல்லை என்பதாலும்; இரு வேறு கட்டடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும்; சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருவதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.

தற்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டடம், ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டடத்தில் பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு, உயர் தர மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு, இந்த மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மருத்துவமனை, புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் விளங்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

மேலும், தற்போது கட்டப்பட்டு வரும் பிளாக் ‘பி’ கட்டடங்களில் புதியதாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்கவும் எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது என்பதையும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

முதல்வர் பதவியேற்ற பின்னர் ஜெயலலிதாவின் சட்டமன்ற மாற்ற முடிவானது, ஒரு ‘திராவிட எதிர்ப்பு’ , ‘தமிழ் மற்றும் தமிழர் எதிர்ப்பு’ மற்றும் ‘வாஸ்து’ போன்ற ‘மூட நம்பிக்கையின்’ அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு அவசர முடிவு என்பதை யாவரும் அறிவர். ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியின் போதும் இவ்வாறாகவே ‘கண்ணகி’ சிலை விடயத்தில் முடிவெடுத்தது இங்கு நினைவு கூரத்தக்கது.

இதனையடுத்து சனாதன ஹிந்து சாதி பிரிவின் உயர் சாதியாக தங்களை கூறிக்கொள்ளும் ‘ஐயங்கார்’ சமூகத்தை சேர்ந்த ‘ஜெயலலிதா’வின் ‘திராவிட எதிர்ப்பு’ நிலையானது அவருக்கு அரசியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தகூடியதாக இருந்தது.

இந்நிலையில், ஜெயலலிதா இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் தனது நோக்கத்தை ஏறத்தாழ சாதித்துவிட்டதாகவே தெரிகிறது.

ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பை எதிர்க்க முடியாமல் புழுங்கிபோய், அது குறித்து ‘தமிழர்களின் அரசியல் சாணக்கியன்’ என வர்ணிக்கப்படும் கருணாநிதி கருத்து கூறும் போது, "புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகக் கட்டடத்தை தமிழக அரசு என்ன செய்யப்போகிறதோ என்ற பதிலுக்காகக் காத்திருந்தேன். கடைசியில் மருத்துவமனையாகப் பயன்படுத்திக் கொள்ளப்போகிறார்கள் என்ற பதில் கிடைத்துள்ளது.

மருத்துவமனையாகப் பயன்படுத்துவதில் தவறில்லை. இதற்கும் நானே வழி காட்டியிருக்கிறேன். என் ஆயுள் காலத்திற்குப் பிறகு கோபாலபுரம் வீட்டை மருத்துவமனையாகப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் எழுதிக் கொடுத்திருக்கிறேன்", என்று கூற வைத்திருப்பதை ‘ஜெயலலிதாவின்’ சதூர்யத்திற்கு கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும்.

ஏனெனில் ஜெயலலிதாவின் இந்த அறிக்கை குறித்து நேரடியாக எதிர்த்து கருத்து சொல்ல முடியாத நிலை உருவானதை அடுத்தே கருணாநிதி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் என்பது தெளிவு.

எனினும், தனது ஆதங்கத்தை படம் பிடித்து காட்டிய கருணாநிதி கூறுகையில் " 500 கோடி ரூபாய் செலவழித்து கட்டப்பட்டக் கட்டடம் அது. ஒவ்வொரு நாளும் காலை, மாலையும் நேரில் சென்று பார்த்து, முதல்வர் நூறாவது முறையாக வருகிறார் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு நான் தொட்டுத் தொட்டுப் பார்த்து கட்டிய கட்டடம்.

அது என் சொந்தக் கட்டடமா? மக்களுக்குச் சொந்தமான கட்டடம். அது அழகுறவும், பயனுறவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஆசையோடு கட்டிய கட்டடம். சுதந்திர இந்தியாவின் முதல் தமிழ்நாட்டு முதல்வராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். காங்கிரஸ் கட்சியினரே மறந்துவிட்ட நிலையில் அவர் பெயரில் அந்த இடத்திற்கு ஓமந்தூரார் வளாகம் என்று பெயரிட்டேன். அவர் ஆண்டதின் நினைவாகத்தான் அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகமும் கட்டப்பட்டது.

தாராளமாக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் புழங்கும் வகையில் விஸ்தாரமாகக் கட்டப்பட்டக் கட்டடத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு நாங்கள் குருவிக் கூட்டில்தான் இருப்போம் என்றால் அது உங்கள் பாடு, உங்களை நம்பி வந்தவர்கள் பாடு.

தமிழ்நாட்டில் துக்ளக் தர்பார் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நண்பர் துக்ளக் சோவை நான் சொல்லவில்லை. அந்த ஆட்சி நீண்ட நாள் நடைபெற முடியாது; கூடாது. மக்கள் கண்ணை மூடிக்கொண்டே இருக்க மாட்டார்கள்.

சமம் என்ற வார்த்தையே அதிமுக ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காது. தந்தைப் பெரியார் பெயரில் நூற்றுக்கணக்கான இடங்களில் சமத்துவபுரம் வீடுகளைக் கட்டினேன். அதைப்போல ஜெயலலிதா ஓர் இடத்திலாவது சமத்துவபுர வீடுகள் கட்டுவாரா? அடிக்கல்கூட நாட்டமாட்டார். ஏனென்றால் அவருக்குச் சமத்துவம் பிடிக்காது", என்று கருணாநிதி தனது அதிருப்ப்தியை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறாக, தனது பாணியில் ஜெயலலிதாவையும், துக்ளக் சோவையும் கூடவே காங்கிரஸ்காரர்களையும் ஒரு பிடி பிடித்து, ஜெயலலிதா ‘சமச்சீர் கல்வியில்’ தனக்குத்தானே வைத்துகொண்ட சூட்டின் ‘வெந்த புண்ணிலும்’ வேல் பாய்ச்சிய ‘முத்துவேலரால்’ அதற்கு மேல் எதுவும் கூற இயலவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது .

இவ்வாறாக ஜெயலலிதா தனது பரம எதிரியான கருணாநிதியையே வாயடைக்க செய்துள்ள அதே நேரம், இந்த அறிவிப்பின் மூலம் மற்றுமொரு மிகப்பெரிய பின்னடைவிலிருந்து தன்னை முன்கூட்டியே காத்துக்கொண்டுள்ளார்.

அந்த பின்னடைவும் ‘சமச்சீர் கல்வி’ போன்றே சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து ஜெயலலிதாவிற்கு கிடைக்கவிருந்த பெரும் ‘இடிதான்’ .

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற உடன் செய்த முதல் காரியமே ‘சட்டமன்ற’ மாறுதல் தான் என்ற நிலையில், அவருக்கெதிராக போடப்பட்ட முதல் வழக்கும் அது சம்பந்தமானதாகவே இருந்தது.

அதாவது சுமார் 1000 கோடி ரூபாய்கள் செலவில் கட்டப்பட்ட ஒரு ‘சட்டமன்ற’ கட்டிடத்தை தனது மனம் போல ‘வாஸ்த்து’ ‘பேஸ்து’ என முழு முட்டாள் மடையார்கலான ஜோசியர்கள் பேச்சை கேட்டு மாற்றுவதா, என்ற ரீதியில் போடப்பட்ட வழக்கு அது.

இந்நிலையில் ஜெயலலிதா தனது அதிரடி செயல்பாட்டை காட்ட முனைந்து ‘சமச்சீர் கல்வி’ விடயத்தில் தவறாக முடிவெடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கெதிராக சட்டமியற்றி தனது கையை சுட்டுக்கொண்டார்.

ஆனால் உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வி விடயத்தில் முன் வைத்த முக்கியமான கேள்வி என்னவென்றால் சுமார் 200 கோடி ரூபாய்கள் போது மக்கள் பணத்தில் அச்சிடப்பட்ட ‘சமச்சீர் கல்வி’ புத்தகங்கள் என்னவாது? அதற்கு யார் பதில் சொல்வது என்பதுதான். இதற்கு பதில் சொல்ல முடியாமலேயே ‘சமச்சீர் கல்வி’ வழக்கில் அரசு ‘கால்வாசி’ தோற்றுப்போனது.

இந்நிலையில்தான், 1000 கோடி மக்கள் வரிப்பணம் செல்விடப்பட்டுள்ளதே என உச்ச நீதிமன்றம் ‘புது சட்டமன்றம்’ விடயத்தில் கேள்வி கேட்குமுன் தயாராக ஒரு தக்க ‘பதிலை’ கொடுத்துள்ளார் ஜெயலலிதா.

எனினும், ஒரு அரசு ‘சட்டமன்றம்’ என்ற நோக்கில் கட்டப்பட்ட ஒரு பெரும் செலவிலான கட்டிடத்தை மூட நம்பிக்கைகளுக்காகவும், இன ரீதியிலான உள்நோக்குடனும் மாற்றலாமா? என்ற கேள்விக்கு ஜெயலலிதா தலைமையிலான அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

இவ்வாறாக, இந்த புதிய அறிவிப்பின் மூலம் அவருக்கெதிராக சட்டமன்ற மாற்ற விடயத்தில் போடப்பட்ட வழக்கில் பாதி வென்றுவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது.

இதற்கடுத்ததாக இந்த அறிவிப்பின் மூலம் ஜெயலலிதா பெறப்போகும் பயன்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அது என்னவென்றால் ‘திராவிடர்கள்’ மற்றும் ‘தமிழர்’ உயர்வின் சின்னமாக கட்டப்பட்ட ‘சட்டமன்ற கட்டிடம்’ வாஸ்து ரீதியாக, அல்லது ‘சோவென’ தன் மீது பெய்யும் ‘சனாதன ஹிந்து’ தர்ம வழிகாட்டுதலின் பிரகாரம், தான் ஆட்சி செய்ய தகுதியானதில்லை, என்று காட்டும் அதே நேரம் அதை அதி உயர் ஆராய்ச்சி மருத்துவ மைய்யமாக ‘மாற்றுவதன்’ மூலம் தனது பெயரையும் காப்பாற்றிக்கொண்டு ‘தமிழர்களுக்கு’ நலன் புரிந்தவர் ‘ஜெயலலிதா’ என்று நிலைநாட்ட முடியும் என்பதே அது.

இவ்வாறாக அரசியல் எதிரிகளை வாயடைக்க செய்தது, நீதிமன்றம் இது குறித்து கேள்வி எழுப்பாமல் செய்தது, இறுதியாக ‘தமிழர் மற்றும் திராவிடர் சின்னமாக’ சட்டமன்றத்திற்காய் வடிவமைக்கப்பட கட்டிடத்தின் நோக்கத்தை ‘திசை திருப்பி’ தனது ‘சாதனை சின்னமாய்’ மாற்றுவதில் வெற்றியடைந்து, இந்த ‘அறிக்கை என்ற ஒரே கல்லில் மூன்று பலன்கலான ‘மாங்கைகளை’ வீழ்த்தி சாதித்துள்ளார் ஜெயலலிதா.

தமிழர் சின்னம் என்று பார்த்து பார்த்து கட்டிய, கருணாநிதி, இந்த கட்டிடத்தில் காட்டிய அக்கறையை தனது குடும்ப அங்கத்தினர்களை மற்றும் அவர்களது ‘தொண்டரடிப்பொடிகளை’ கட்டுப்படுத்துவதிலும், மாறன்களின் சன் டிவி என்னும் வளர்த்த கடா மார்பில் பாய்வதை தடுப்பதிலும் காட்டியிருந்தால் ஒரு ‘வேளை’ .தனது ‘ஆட்சியை’ தக்க வைத்து, தான் கட்டிய சட்டமன்றத்தின் மூலம் தமிழரின் ‘மாட்சியை’ தக்க வைத்திருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது.

மக்களின் அன்றாட வாழ்க்கையின் முக்கியத் தேவையான மின்சார வெட்டை சரிசெய்தது ஒன்றே போது ஜெயலலிதாவின் நிர்வாகத்திறமைக்கும் கருணாநிதியின் திறமையற்ற சுயநல நிர்வாகத்திற்கும் உள்ள வேறுபாட்டை எடைபோட! இனி வருங்காலத்தில் தேர்தலில் தி மு க விற்கு ஓட்டுப்போட என்னும் குடிமகன் இதை நினைத்தாலே போதும்.... தி மு க வுக்கு ஓட்டளித்தால் இருண்ட தமிழகம் தான் கண்முன் நிற்கும்.

ஜெயலலிதாவின் நூறுநாள் ஆட்சியின் முக்கிய சாதனை தொடர் மின்வெட்டை சரிசெய்ததே - அதுவும் கருணாநிதி அரசால் தலைகீழ் நின்றுபார்த்தும் சரிசெய்ய முடியாத தொடர் மின்வெட்டை சரிசெய்து மக்களை ஆச்சரியப்பட வைத்ததுதான்.

''கருணாநிதிக்கு சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் பணம்'' - இதனை ரோட்டில் போகும் குப்பனோ சுப்பனோ சொல்லவில்லை. அமெரிக்கா உள்பட உலக நாடுகளை கலக்கிக்கொண்டிருக்கும் 'விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளியிட்ட தகவலாகும். இப்பொழுதாவது புரிந்திருக்கும் தமிழக மக்களின் கஷ்டத்திற்கு என்ன காரணம் என்று. இதற்கு மேலும் மக்களை ஏமாற்ற முடியும் என்று அவர்கள் நம்பினால்.....

கருணாநிதிக்கு சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் பணம் - விக்கிலீக்ஸ்

சென்னை : திமுக தலைவர் கருணாநிதி சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் பணம் போட்டு வைத்திருப்பதாக வெளிவந்த செய்திகளை மறுத்துள்ளார்.

விக்கிலீக்ஸ் என்ற இணைய தளம் சுவிஸ் வங்கிக்கணக்கில் இந்திய அரசியல் தலைவர்கள் வைத்திருக்கும் பணத்தொகை தொடர்பில் புள்ளிவிபரம் வெளியிட்டதை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்தி வெளியானது..

சுவிற்சர்லாந்தின் UBS, LGT, COOP, ABS என பல்வேறு வங்கிகளில் ராஜீவ் காந்தி, ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி, ஷரத் பவார், ஆகிய இந்திய தலைவர்கள் போட்டுவைத்திருக்கும் பணத்தொகை விபரம் இடம்பெற்றுள்ளது.

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழக அரசியல் தலைவர்களில், கருணாநிதிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாயும், கலாநிதி மாறனுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாயும், சுவிஸ் வங்கிகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவல்கள் குறித்து கருணாநிதி கருத்து தெரிவிக்கையில்; ஒரு தமிழ் பத்திரிகை 35 ஆயிரம் கோடி சுவிஸ் வங்கியில் நான் போட்டு இருப்பதாக செய்தி வெளியிட்டு உள்ளது. எது பற்றியும் விசாரிக்காமல் செய்தி வெளியிட்டுள்ளது. அதை நிருபிக்க வேண்டும். தவறான செய்தியை வெளியிட்ட அந்த பத்திரிக்கை மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வழக்கறிஞர்களுடன் பேசி முடிவு செய்வோம் என தெரிவித்தார்.

source: http://tamil.unitymedianews.com/