Home குடும்பம் பெண்கள் திருமணமான பெண்கள் மத்தியிலும் அழகு பற்றிய விழிப்புணர்வு!
திருமணமான பெண்கள் மத்தியிலும் அழகு பற்றிய விழிப்புணர்வு! PDF Print E-mail
Wednesday, 30 March 2011 07:49
Share

திருமணமான பெண்கள் மத்தியிலும் அழகு பற்றிய விழிப்புணர்வு!

கணவனைக் கவர்வதில் ஒரு மனைவியின் தோற்றம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. அழகை விரும்பாத ஆண்கள் உலகில் உண்டா என்ன! அதுவும் வாழ்நாள் முழுக்க கூடவே வரும் துணையான மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பாத ஆண்கள் எவருமே இருக்க முடியாது என்றே கூறலாம்.

''நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள்...'' என்பது நபிமொழி. கணவனுக்காக தன்னை எவ்வாறு வேண்டுமானாலும் அலங்கறித்துக்கொள்ளலாம் என்பது பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியிருக்கும் அனுமதி. ''கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள்...'' என்கின்ற வார்த்தைக்குள் இந்த அழகு-அலங்காரம் குறித்த விஷயங்கள் யாவும் அடங்கிவிடுகிறது.

மனைவி தன்னை அழகுப்படுத்தியும், முகம் மலர்ந்தும் இருந்தால் கணவன் எதிர் வீட்டு ஜன்னலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

திருமணமாகாத பெண்களைவிட திருமணமான பெண்கள் மத்தியில்தான் இப்போது அழகு பற்றிய விழிப்புணர்வு அதிகம். அதுவும் வேலைக்குப் போகும் பெண்களைவிட, குடும்பத் தலைவிகளிடம்தான் இந்த உற்சாகம் கூடுதல். இதற்காக அவர்கள் பல காரணங்களைக் கூறுகிறார்கள்.

''அழகாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டாலே முதலில் நாம் வாழும் வீடு சுத்தமாகிவிடும். வீட்டை அழகாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். இதற்காக நாம் சுறுசுறுப்புடன் செயலாற்றத் தொடங்கிவிடுவோம். நம்மைச் சார்ந்தவர்களும் அழகாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் அதைத் தொடர்ந்து வரும். கணவர், குழந்தைகள் அழகாக இருக்க அவர்களைத் தயார்படுத்தத் தொடங்கிவிடுவோம்.

கணவரை ஸ்மார்ட்டாக ட்ரஸ் செய்து அனுப்பிப் பாருங்கள், சுறுசுறுப்பு தானாகவே அவருக்கு வந்துவிடும். வேலையில் வேகமும் அதனால் உடலளவிலும் மனதளவிலும் ஒரு சோர்வின்மை தெரியும். அழகாக இருக்கவேண்டும் என்றாலே சிரித்த முகத்துடன் இருக்கவேண்டும். அதனால் பல நேரங்களில் பல கோபங்களைக் கட்டுப்படுத்த முடியும். கோபத்தால் ஏற்படும் மனஅழுத்தம் இல்லாமல் போய்விடும். இதனால் மனநல பாதிப்புகள் எழாது. ஆரோக்கியமாக இருந்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல்நலத்திற்காக நாம் அழகாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வதில் தவறில்லையே'' என்கிறார் ஒரு இல்லத்தலைவி.

உண்மைதான். அவரைப் பார்த்தால் எதோ கல்லூரி மாணவி போல்தான் தோற்றமளிக்கிறார். ஆனால் அவர் திருமணமாகி குழந்தை பெற்ற தாயாக இருக்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறது. அவரைப் போலவே அவரது தோழியும் இரண்டு குழந்தைகளுக்குத் தாய் என்றால் நம்பமுடியவில்லை.'' அழகைப் பராமரிப்பதும், உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும்தான் என்னை இந்த அளவிற்கு இளமையாக வைத்திருக்கிறது'' என்கிறார் அவர்.

''அழகைப் பராமரிக்கவும், உடம்பை ஸ்லிம்மாக வைத்திருக்கவும் நடங்கள். எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் நடங்கள். இதுதான் என் இளமையின் ரகசியம்'' என்கிறார் இன்னொரு இல்லத்தலைவி

''இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின்னரும் எப்படி இப்படியரு அழகுடன் இருக்கமுடிகிறது?'' என்று அவரைக் கேட்டால் தயங்காமல் சொல்கிறார்.

''ரொம்ப சிம்பிள். மனசையும், உடலையும் எப்பவும் சந்தோஷமாக வைத்திருக்கிறேன். கவலைகளைப் பக்கத்தில் அண்டவிடுவதில்லை. நகர வாழ்க்கையில் யாரும் நடக்க விரும்புவதில்லை. ஆனால் நான் நடக்கிறேன். வெளியில் போனால் முடிந்தளவு நடந்தே போகிறேன். நடப்பதால் நம் உடலழகு மெருகேறுகிறது என்கிறபோது நாம் ஏன் நடக்கக்கூடாது!'' என்கிறார் மற்றொரு இல்லத்தலைவி.

''ஒரு பெண்ணின் உண்மையான அழகு குழந்தையைப் பெற்ற பின்னர்தான் துவங்குகிறது. அதை நம் பெண்கள் உணர மறுக்கிறார்கள். கல்யாணமாகி குழந்தை பெற்றதுமே உடலை மறந்துவிடுகிறார்கள். என்னுடைய இளமையின் ரகசியம் எது என்று கேட்டால் சுறுசுறுப்புதான். அதிகாலை எழுந்து இரவு வரை பிஸியாக இருப்பேன். இந்த சுறுசுறுப்புதான் என் இளமைக்குக் காரணம்'' என்கிறார் நகரத்தில் வாழும் 30 வயதான ஒரு இல்லத்தலைவி.

''ஒவ்வொரு வயதிலும் பெண்கள் ஒவ்வொரு விதமான அழகில் தெரிவார்கள். ஆனால் திருமணமாகி குழந்தை பெற்றதும், அவர்களுக்கு முழுமையான அழகு கிடைத்துவிடுகிறது. உலகில் எல்லா இன்பங்களையும் அடைந்துவிட்ட சந்தோஷம் அவர்களுக்கு எக்ஸ்ட்ரா அழகைக் கொடுக்கிறது. ஆனால் பல பெண்கள் அதை உணருவதில்லை. தங்களுக்குக் கிடைக்கும் அழகைப் பாதுகாக்க வேண்டுமென்று நினைப்பதில்லை'' என்கிறார் அவரது தோழி.

''அதிகம் தண்ணீர் குடிக்கவேண்டும். அது தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும். தோலை இளமையாக வைத்திருக்க இதைவிட சிறந்த வழி கிடையாது'' என்று சொல்லும் தன்யாவுக்கு, 3ல வயதில் ஒரு குழந்தை இருக்கிறது என்றால் நம்பவே முடியவில்லை.

''குழந்தை பிறந்தால் அழகு போய்விடும் என்கிறார்கள். ஆனால், அதில் உண்மையில்லை'' என்று அடித்துக் கூறுகிறார்கள் இங்கே இடம் பெற்றிருக்கும் பெண்கள்.

குழந்தை பிறந்ததும் பெண்கள் தங்கள் உடல் பற்றிய அக்கறையையும் அழகு பற்றிய விழிப்புணர்வையும் மறந்து, கணவன், குழந்தை என்ற அளவில் சுருங்கி விடுவதுதான் இதற்குக் காரணம். அழகாக இருக்கவேண்டும் என்று ஆர்வப்பட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல், சோம்பலில்லாமல் வீட்டு வேலைகளொ அல்லது உடற்பயிற்சி மூலமாகவோ என்றைக்கும் அழகான தோற்றத்துடன் விளங்கலாம்.

ஐம்பதிலும் அழகாய் இருக்க சில வழிகள்

நமக்கு வயதானாலும் ஒன்றும் தப்பில்லை... மனசும் நம்முடைய தினசரி செயல்பாடுகளும் சரியாக இருந்தால் ஐம்பதென்ன.. எண்பதானாலும் இளமையான தோற்றத்துடன் வாழமுடியும்.

இதோ அதற்கான சில வழிகள்

o கண்களுக்கு அதிக சிரமம் தரும் வேலைகளை தவிர்க்கவேண்டும். அதிக நேரம் டி.வி. பார்ப்பது, அதிகம் நேரம் புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள் முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரும் அது உங்கள் வயதைக்கூட்டி முதியவராக தோற்றமளிக்கச் செய்யும். எனவே அந்த கருவலையத்தை தவிர்க்கும் விதமாக ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவிவிடுங்கள் பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும்.

o முதுமையில் நீர்சத்து குறைபாடு என்பது உடலில் ஏற்படும். இதனால் பலருக்கு நா வறட்சி, உதடு கறுத்துப் போதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இதற்கு எலுமிச்சை பழத்தைத் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் ஆவி பிடியுங்கள். நா வறட்சியை தவிர்க்க அடிக்கடி வெந்நீர் குடியுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க பழகுங்கள்.

o கால்வெடிப்புகள் உங்கள் முதுமை தோற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் என்பதால் இதமான சுடுநீரில் பாதத்தை நனைய விட்டு நன்கு கழுவுங்கள் பிறகு வெடிப்பு உள்ள இடத்தில் மஞ்சள் பற்றை போடுங்கள் அல்லது கற்றாழை கொண்டு வந்து அதனுடைய சாறை கால்வெடிப்புகளில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். இதனால் பித்த வெடிப்பு கால் ஆணி ஆகியவை குணமாகிவிடும்.

o முதுமையில் கன்னங்களில் குழி விழுவது இயற்கைதான் ஆனால் இதையும் நம்மால் தடுத்துவிடமுடியும். தினமும் காலையிலும், மாலையிலும் இதமான சூடுள்ள வெந்நீரைகுடித்து அதை இரண்டு கன்னப்பகுதியிலும் ஒதுக்கி உப்ப வைக்க வேண்டும். சிறிது நிமிடம் இப்படியே வைத்திருந்து பிறகு கொப்பளியுங்கள். பிறகு கன்னங்களின் உட்புறத்தில் விரலால் மசாஜ் செய்யவேண்டும். இப்படி சில வாரங்கள் செய்தாலே போதும் கன்னங்களில் குழி மறைந்து இளமைத் தோற்றம் கிடைக்கும்.

o கழுத்து சுருக்கம் என்பதும் உங்களின் வயதை கூட்டும் அதனை அகற்ற சொர சொரப்பாக அரைக்கப்பட்ட அரிசி மாவையும், கடலை மாவையும் கழுத்துப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு நீரில் கழுவுங்கள்.

o உடல் ஆரோக்கியமாக இருந்தாலே இளமையாக உணர்வுகளும் மனநிலையும் உங்களுக்குள் இருக்கும். அந்த உடல் ஆரோக்கியம் வேண்டுமானால்.. விடியற்காலையில் வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு குறைந்த பட்சம் ஒரு கிலோ மீட்டர் தூரமாவது நடைபயிற்சி செய்யுங்கள். வீட்டிற்குள்ளேயே சுற்றிவந்தாலும் சரி! நடைபயிற்சியால் உடலிலுள்ள உறுப்புகள் உற்சாகம் பெறும் நரம்பு மண்டலம் நீரடையும், வயிற்று பிரச்னைகள் தீரும். இரத்தக்கொதிப்பு, நீரழிவு கட்டுப்படும்.

o உங்கள் மனநிலையில் வயதானவர் என்கிற எண்ணத்தை தூக்கி எறியுங்கள். நம்மால் எதையும் செய்ய முடியும் நம் உடல் மிகமிக உற்சாகமாக இயங்குகிறது. நூறு சதவிகிதம் இளமையாக இருக்கிறது. ஆரோக்யமாக இருக்கிறது என்றே எண்ணுங்கள்.

o  இயற்கை அழகை நேசியுங்கள். புதுப்புது விஷயங்களை ரசியுங்கள்.

o காதல் உணர்வு உங்களை இளமையாக வைத்திருக்கும் என்பதால் கணவனைக் காதலியுங்கள். உங்கள் கணவனின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் ரசியுங்கள், கூடவே பாராட்டுங்கள்.

o வாரத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் உறவினர்களின் வீட்டிற்கு விசிட் அடிடுங்கள். அந்த மனநிலை உங்களுக்குள் இருக்கும் இறுக்கத்தை துரத்தி மனதை உற்சாகப்படுத்தும்.

o கணவருடன் தனிமையில் மனம்விட்டு நிறைய விஷயங்கள் பேசுங்கள். ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள்ள தவறுகளை சுட்டிக் காட்டி தெளிவு நிலைபெறுங்கள். அது உங்களுக்குள் இருக்கும் காம்ப்ளக்ஸை விலக்கி புத்துணர்ச்சியை தரும்.

o உடல் உறவு என்பது மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்திருக்கும் என்பதால் வாரத்திற்கு நான்கு முறையாவது உடல்உறவு வைத்துக் கொள்ளுங்கள். (கணவனை சரி கட்டுவது உங்கள் கையில்தான் இருக்கு.) இதெல்லாம் நீங்கள் மேற்கொண்டாலே ஐம்பதிலும் இருபது வயது இளம்பெண்ணாக மாறமுடியாவிட்டாலும் இளமையாகத் தோற்றமளிப்பீர்கள். பிறகென்ன! உங்கள் கணவர் உங்கள் பிடிக்குள்தான்.