Home கட்டுரைகள் பொது அமெரிக்காவின் ஆணவம் அழிகிறது!
அமெரிக்காவின் ஆணவம் அழிகிறது! PDF Print E-mail
Saturday, 01 November 2008 17:13
Share

 

அமெரிக்காவிrற்கு தடியெடுத்த காலம் போய் தடிபிடிக்கும் காலம் வந்து விட்டது

இரண்டாம் உலப்போரை முடிவுக்கு கொண்டுவர முன்னால் ஜப்பான் தலைநகர் ஹீரோஷீமாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் அனுஆயுதங்களை முதன்முதலாக உபயோகித்து பல இலட்சக்கணக்கான உயிர்களை குடித்த பின் தன்னை ஒரு வல்லரசாக அறிமுகப்படுத்திக்கொண்ட பெருமை அமெரிக்காவுக்கு உண்டு.

அது தன் இள இரத்தம் ஓடிய காலம், அதிலும் 1991 ல் ரஷ்யாவை துண்டாடியபின் போட்டியற்ற வல்லரசாக திகழ்ந்தது. பல வெற்றிகளை குவித்தது, இந்நிலை சற்று சற்றாக குறைய ஆரம்பித்தது, இருந்தும் சீனா போன்ற நாடுகளையும் உளவு விமானங்கள் மூலம் உளவுபார்த்தது, இதை பொருத்துக்கொள்ளாத சீனா (செப்டம்பர் பதினொன்று, இரண்டாயிரத்தி ஒன்று நிகழ்ச்சிக்கு முன்னர்) அவ்விமானத்தை தரையிரங்கச்செய்து, அமெரிக்காவை மன்னிப்புக்கேட்க வைத்து பின்னர் சரக்கு விமானத்தில் அதை பிரித்து குப்பை போல் அனுப்பிவைத்தது.

இந்நிலையிலேதான் செப்டம்பர் பதினொன்று, இரண்டாயிரத்தி ஒன்று நிகழ்ச்சி அமெரிக்காவை உலுக்கியது, இதன் உண்மை இன்றும் மர்மமாகவே உள்ளது, இதை சாக்காக வைத்துக்கொண்டு அமெரிக்கா விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையில் கப்பம் கட்ட மறுத்த நாடுகளையெல்லாம் மிரட்ட ஆரம்பித்தது. இதில் ஆப்கானிஸ்தான், ஈராக், சூடான், லைபீரியா, ஈரான், சிரியா, வடகொரியா, கூபா, வென்சிவெல்லா போன்ற நாடுகளும் அடங்கும்.

முதலில் ஆப்கானிஸ்தானை கைவைத்தது, தாலிபான் அரசை அகற்றி பலரை பிணைக்கைதிகளாக்கி குவாட்னாமோ சிறையில் அடைத்தாலும் இன்றும் அவர்களின் ஆதிக்கத்தை அமெரிக்காவால் தடுக்கமுடியவில்லை, அதே தாலிபான் ராணுவ பீரங்கிகளில் வலம் வருகின்றனர்.

2 வதாக ஈராக்கை சின்னாபின்னமாக்கி முன்னால் ஈரான் ஈராக் போரில் அனுஆயுதங்களை ஈராக்கிற்கு வழங்கியது அமெரிக்காதான், தனக்கு எதிரான சாட்சியாக சத்தாம் ஹுஸைன் மாறிவிடலாம் என அஞ்சியதால் நீதியற்ற நீதிமன்றங்களின் மூலம் அவசர அவசரமாக சத்தாமை எவ்வித சப்தமின்றி இரவோடு இரவாக தூக்கிலிட்டது அமெரிக்கா, பின்னர் ஒராண்டில் அமைதியை கொண்டு வருவோம் என மார்தட்டியது ஆனால் அமெரிக்காவினால் ஐந்தாண்டுகள் முடிந்தும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

வடகொரியா தொடர்ந்து தன் அனு ஆயுத தயாரிப்புகளை செய்துகொண்டே இருக்கிறது, அதே போல் ஈரானும் தொடர்ந்து கொண்டிருக்கிறது ஆனால் அமெரிக்காவால் கூட்டத்தை மட்டும் கூட்டமுடிகிறது, ஒன்றும் செய்யமுடியவில்லை.

சீனாவின் முன்னேற்றத்தை தடுக்கமுடியாமல் தானும் அத்துடன் சேர்ந்து பல வர்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்கா செய்து கொண்டது.

ரஷ்யாவின் ஆட்டங்களை இன்னும் தடுத்து நிறுத்தமுடியவில்லை, சற்று முன் செசன்யா வில் தன்னுடைய மூக்கை ரஷ்யா தினித்த போதும் அமெரிக்காவால் ஒன்றும் செய்யமுடியவில்லை, தற்பொழுது ஜோர்ஜியாவின் விஷயத்திலும் ரஷ்யாவின் ஓட்டு ஐநா சபையில் பாலஸ்தீன் , ஈரான், சிரியாவின் விஷயத்தில் அமெரிக்காவிற்கு தேவை என்பதால் அமெரிக்கா கைகட்டி பார்த்துக்கொண்டிருந்தான் இருந்தது, ஒன்றும் செய்ய முடியவில்லை.

கருப்பின அமெரிக்கர்களின் போராட்டங்களை தடுக்க முடியவில்லை இதே நிலை பராசீல் மற்றும் வென்சுவெல்லாவிலும் தொடர வாய்ப்புள்ளது,

மெக்ஸீகோ, பொலிவியா,(
Bolivia ), ஹந்த்ராஸ் (Honduras) போன்ற நாடுகளில் அமெரிக்க தூதர்களையும் துரத்திய செய்தியும் சமீபத்தில் செய்திகளாக வந்தன.. அமெரிக்கா ஒன்றுகூட பேசமுடியவில்லை.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் 60 ஆண்டுகளுக்கு மேல் ஜப்பானில் நங்கூரம் போட்டுள்ள அமெரிக்கப்படையினரை வெளியேற்றிவிட்டு, அந்நாட்டு படையினரேயே அவ்விடத்தில் நிறப்ப, மக்கள் வாக்கெடுப்பு வேட்டை நடந்துள்ளதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

பொருளாதாரப்பின்னடைவை அமெரிக்கா சந்தித்துவிட்டதாக அந்நாட்டு வங்கியே தற்பொழுது அறிவித்துவிட்டது.

கிழடுதட்டிவிட்டால் உடனே மரணித்துவிடவேண்டும் என்பது அவசியமல்ல, ஆனால் சுய சக்தியை இழந்து தடியை தரையில் ஊண்டி நடக்க ஆரம்பித்துவிட்டது என்பதையே மேலேயுள்ள வெங்காயவெடி நிகழ்ச்சிகள் காட்டுகின்றன, சில காலங்களில் சுயநினைவைக்கூட அந்நாடு இழக்கக்கூடும்.

ஒரு காலத்தில் பாரசீக, ரோமானியப்பேரரசுகள் கொடிகட்டிப்பறந்தன. நபியவர்கள் காலத்திலேயே இவ்விரண்டு பேரரசுகளுக்கும் இஸ்லாமியர்களால் சாவு மணி அடிக்கப்படும் என்ற நற்செய்தி சொல்லப்பட்டு நபியவர்களுக்குப்பின் குறுகியகாலத்திலே சாவுமணியடிக்கப்பட்டது,

பழங்கால எகிப்தியர்கள் நாகரீகத்தில் உயர்ந்தோங்கியவர்கள், அவர்களின் ஆனவத்தால் அவர்களும் அழிக்கப்பட்டார்கள்.

இவ்வாறே பிரான்சு மற்றும் ஜெர்மனியும் வல்லரசுகளாக இருந்து வீழ்ச்சியடைந்தது நாம் அறிந்ததே.

இங்கிலாந்தின் ஆட்டம் ரொம்பவே இருந்தது, இப்பொழுது பலமிழந்துவிட்டது,

சோவியத் யூனியன் ரஷ்யாவிற்கும் என்ன நடந்தது என நாம் அறிவோம்.

இதே நிலையைத்தான் இன்று அமெரிக்காவும் சந்தித்துள்ளது.

எனவேதான் இறைவன் மனிதவாழ்வைப்பற்றி குறிப்பிடும்போது :

ஆரம்பத்தில் (குழந்தைப்பறுவத்தில்) பலஹீனத்தையும், பின்னர் (வாலிபப்பருவத்தில்) பலத்தையும், இந்த பலத்திற்குப்பின் (வயோதிபத்தில்) பலவீனம் மற்றும் நரையையும் கொடுத்துள்ளதாக இறைவன் குறிப்பிடுகிறான்..

 

அதற்கு எடுத்துக்காட்டாக : வானத்திலிருந்து மழையை இறக்கி பின்னர் அதை பூமியடியில் பல ஊற்றுகளாக ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு நிறங்களையுடைய பயிர்களை முளைக்கச்செய்து, அவை பின்னர் உலர்ந்து மஞ்கள் நிறமாகி, எதற்கும் உதவாத கூளங்களாகி விடுகின்றன. என அதே இறைவனே குறிப்பிடுகின்றான்.

இதே நிலை இச்சமுதாயத்தின் உதாரணமும் கூட என இறைவன் நமக்கு விளக்கிச்சொல்ல விரும்புகிறான்.

எனவே எவரும் நிரந்தர பலசாலியாகவோ, நிரந்தர வாலிபப்பருவத்திலே இருக்கமுடியாது என்பதே இறைவனின் விதிமுறையாகும்.

எனவேதான் இறைவன் கூறுகிறான்;

{سُنَّةَ اللَّهِ الَّتِي قَدْ خَلَتْ مِنْ قَبْلُ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللَّهِ تَبْدِيلاً} (الفتح: 23).

இவ்வாறே இதற்கு முன்னும் நடந்தது என்பதே இறைவனது நடைமுறையாகும், இறைவனது நடைமுறைகளில் அறவே மாற்றங்கள் ஏற்படாது 48:23

எனவே அமெரிக்காவின் கைவிரல்கள் பலமிழந்துவிட்டன, பொருளாதாரநிலையை சரிசெய்ய முடியாமல் தவிக்கிறது, மத்தியகிழக்கு நாடுகளிடம் இனிமேல் உறிஞ்ச இரத்தமில்லை, எனவே தடியெடுத்த காலம் போய் தடிபிடிக்கும் காலம் அமெரிக்காவிrற்கு வந்து விட்டதுஅவ்விடத்தை நிறப்பப்போவது சீனாவா ? திரும்பவும் ரஷ்யாவா? அல்லது இந்தியாவா? காலம் பதில் சொல்லும்.

-மௌலவி முஹம்மது இப்ராஹீம்