Home குடும்பம் பெண்கள் கணினியும் கன்னியர் வாழ்க்கையும்
கணினியும் கன்னியர் வாழ்க்கையும் PDF Print E-mail
Monday, 21 February 2011 07:32
Share

ஜெ. ஜஹாங்கீர்

[ நூறு, ஆயிரம், இலட்சம், பல இலட்சம் எனப் பதிவு செய்துள்ள இணையதளத் தகவல் மையங்கள் மக்களுக்குப் பயன் தந்தனவா? சாதகமா? பாதகமா? அலசியது என்டிடிவி ஹிந்த்.

என்டிடிவி எக்சிகியூட்டிவ் எடிட்டர் சஞ்சய் பிண்டோ, இணையதளத் திருமண தாட்காம் களில் 4 கோடிப் பேர் பதிவு செய்துள்ளனர். அதனில் 80% வரன்களைத் தனியார் துப்பறியும் நிறுவனங்கள் துப்பறிந்து பணம்பெற்று தகவல் தருகின்றனர் என்கிறார்.

4 கோடி வரன்கள் தகவலில் 30 சதத்தில் புகைப்படங்கள் இல்லை. வெறும் தகவலே உள்ளன. பிள்ளைகள் விருப்பம் இல்லாமல் பெற்றோரும், பெற்றோருக்குத் தெரியாமல் பிள்ளைகளும் பதிவு செய்கின்றனர்.

சென்னை நகர போலீஸ் இணை கமிஷனர் இணையத் திருமணத் தகவல் வரன்களில் 50% போலியானவை எனக் குறிப்பிடுகிறார். ஆனால் "ஒரு மெட்ரிமோனியல் சந்தானம் " 10 வரன்களுக்கு 9 வரன்கள் ஜெனின் என்று சர்டிபிகேட் கொடுக்கிறார்.

''இணையதளத்தால் எங்களுக்கு நல்ல வரன்கள் கிடைத்தன'' என்ற குரல் சமூகத்தின் காதுகளுக்கு வரவில்லை. ஒரு தொகை பெற்று முகவரி, தொடர்பு போன் எண் மட்டும் கொடுக்கும் போஸ்ட்மேன் வேலையால் வரன்களுக்கு எந்த பயனும் ஏற்படாது.]

கிராமம், நகரம் விரிவாக்கம் நாள்தோறும் மேலோங்கும் நிலையில் மக்களின் இடப்பெயர்ச்சி தினந்தோறுமிருக்கிறது. முதல் தலைமுறை பட்டதாரிகள், கழனிவாழ் குடும்பங்கள் தம் பிள்ளைகளின் பணிக்காக மாவட்ட, மாநில எல்லை தாண்டி பயணிக்கின்றனர்.

நான்கு தெருக்களுக்குள் தங்களது மொத்த வாழ்வும் முடிந்த நிலை மாறி பிரிவுப் பிரயாணங்கள் தொடர்வதால் வாழ்வு இணைத் தேடலுக்கு வசதி இல்லாது போனது. வீடு வீடாகச் சென்று பார்த்து குடும்ப உறவுமுறை, வாழ்வியல் நிலை அறிந்து அறிமுகத்தோடு புகைப்படம் பெற்று மணவாழ்க்கை ஒப்பந்தத்தை முடித்து வைத்த மீடியேட்டர்களுக்கு சமூக வளர்ச்சி சங்கடத்தைத் தந்தது.

ஒரு கட்டத்துக்கு மேல் இருபுறமும் இணைப்புப்பாலமாக நிற்க அவர்களுக்கு வீரியம் போதவில்லை. இந்த இடைவெளியை நிரப்ப, படித்தோரின் தேவையைப் பூர்த்தி செய்ய அமர்ந்த இடத்தில் அறைக்குள்ளாகக் கணினிக்குள் கொண்டுவந்து வரன் தகவல் தரும் பணியை "மெட்ரிமோனியல் தாட் காம்" இணையதளத் திருமணத் தகவல் நிலையங்கள் தரத் துவங்கின.

அதற்குக் கட்டணமாக ஒரு தொகையும் பெற்றுக் கொண்டன. நூறு, ஆயிரம், இலட்சம், பல இலட்சம் எனப் பதிவு செய்துள்ள இணையதளத் தகவல் மையங்கள் மக்களுக்குப் பயன் தந்தனவா? சாதகமா? பாதகமா? அலசியது என்டிடிவி ஹிந்த்.

என்டிடிவி எக்சிகியூட்டிவ் எடிட்டர் சஞ்சய் பிண்டோ இணையதளத் திருமண தாட்காம்களில் 4 கோடிப் பேர் பதிவு செய்துள்ளனர். அதனில் 80% வரன்களைத் தனியார் துப்பறியும் நிறுவனங்கள் துப்பறிந்து பணம்பெற்று தகவல் தருகின்றனர்.

4 கோடி வரன்கள் தகவலில் 30 சதத்தில் புகைப்படங்கள் இல்லை. வெறும் தகவலே உள்ளன. பிள்ளைகள் விருப்பம் இல்லாமல் பெற்றோரும், பெற்றோருக்குத் தெரியாமல் பிள்ளைகளும் பதிவு செய்கின்றனர்.

சென்னை நகர போலீஸ் இணை கமிஷனர் இணையத் திருமணத் தகவல் வரன்களில் 50% போலியானவை எனக் குறிப்பிடுகிறார். ஆனால் "ஒரு மெட்ரிமோனியல் சந்தானம் " 10 வரன்களுக்கு 9 வரன்கள் ஜெனின் என்று சர்டிபிகேட் கொடுக்கிறார்.

ஒன்பது ஜெனின் எனக் கூறும் சந்தானம் ஏன் துவக்கத் தகவல்தான் இது எனக் கூறுவேண்டும்? என்ற கேள்வியை முன் வைத்த பிண்டோ 2வது திருமணம் நடத்தி வைக்கும் போக்கும் இருக்கிறது. ஆக இது ஓர் மிஸ் பிஸினஸ் (தவறான வியாபாரம்) எனக் குறிப்பிட்டார்.

சந்தானம் கூறுகிறார். இன்றைய வளர்ச்சிப் போக்குக்கு இணையதளத் திருமணத் தகவலகம் தேவையான பிளாட்பாரம். நாங்கள் தரும் தகவல்கள் துவக்கம்தான். இருவருக்குமிடையில் போன் தொடர்பு ஏற்படுத்தித் தருவோம். முகவரி தருவோம். வரனுடைய போன் எண்ணை மட்டுமே வெரிஃபை பண்ணுவோம். இன்ன நிறம், இன்ன உயரம். இன்ன உடலளவு என்று கேட்பதற்கெல்லாம் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அது எங்களது பணியல்ல என்கிறார்.

சந்தானத்துக்கு டாக்டர் சுதா எதிர்வினையாற்றுகிறார். நீங்கள் கொடுக்கும் முதல் தகவல்தானே வாழ்க்கைக்கு ஆதாரம். அது சரியில்லாதபோது முற்றிலும் வினையாகும் ஆபத்துள்ளதே! வெறுமனே முகவரி தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொடுப்பதால் என்ன பிரயோசனம் இருக்கிறது? நிறைய பணம் கொடுத்தால் நல்ல வரன் தருகிறோம் என்று கூறுகின்றனர். அதற்கு மட்டும் எப்படி நல்ல வரன் வரும்?

ஆக பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இணையத்தளங்கள் இயங்குகின்றன. நாளுக்குநாள் இணையத்தளத்தில் வரன் பதிவுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

தவறுகள் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. பணத்தை பிரதானமாகக் கருதுவதால் மனைவி இருப்பவருக்கு 2வது திருமணம் முடித்துக் கொள்ள இணையத் தளங்கள் வாய்ப்பளிக்கின்றன. 2வது மனைவி தேவையிருப்பவர் வெளிப்படையாக கூறித் தேடலாம். அப்படி நடக்கவில்லை என்பதே உண்மை எனக் குறிப்பிடுகிறார்.

முஸ்லிம் சமூகத்திலும் இணையதளத் திருமணத் தகவல் நிலையம் நடத்துவோர் உள்ளனர். குறிப்பிட்ட தொகை பெற்று பதிவு செய்து கையிருப்பில் உள்ள தகவல்களைத் தருகின்றனர். ஆனால் பொருத்தமாக இல்லை, ஒழுங்கானதாக இல்லை என்பதே சிலரது பதிலாக இருக்கிறது.

நமது அனுபவத்தில் பல் டாக்டர் முஸ்லிம் பெண், ஆசிரியைப் பெண், உரத் தொழிற்சாலை ஆய்வுக்கூட ஆய்வாளர் முஸ்லிம் பெண், நெய்வேலியில் மத்திய அரசுப்பணியில் உள்ள முஸ்லிம் பெண், திருமணம் முடிந்து ஓரிரு நாளில் தலாக்கான பட்டதாரிப் பெண்கள் இருவர் நிக்காஹ் தாட் காம் பிரயோசனப் படவில்லை.

இணையதளத்தால் எங்களுக்கு நல்ல வரன்கள் கிடைத்தன என்ற குரல் சமூகத்தின் காதுகளுக்கு வரவில்லை. ஒரு தொகை பெற்று முகவரி, தொடர்பு போன் எண் மட்டும் கொடுக்கும் போஸ்ட்மேன் வேலையால் வரன்களுக்கு எந்த பயனும் ஏற்படாது.

திருமணத் தகவல் நிலையங்கள் குடும்ப வாழ்வில் அனுபவசாலிகளான முதியோரைப் பணிக்கமர்த்தி அவர்கள் மூலம் வரனுடைய முகவரி, தொழில், பணி, குடும்பச்சூழல், ரத்த உறவுகளின் வாழ்வியல் முறைகளை ஆய்வு செய்யக்கூறி தனித்தனியே இருவரை ஒரு வரனுக்கு நியமித்து தகவல் சேகரித்து அது சரியாகவிருக்கும் பட்சத்தில் தங்களது இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இல்லாதபட்சத்தில் நிராகரிக்க வேண்டும். பெற்றோர்களிடம் இந்த வரன் 50 சதம் விசாரித்திருக்கிறோம் சரியாகவிருக்கிறது. மற்ற உங்களுக்கான விஷயங்களைப் பேசிக் கொள்ளுங்கள், விசாரித்துக் கொள்ளுங்கள் எனக் கொடுக்கும்போது வரன் தேடுவோர்க்கு ஒரு திருப்தி நிலை ஏற்படும். தவறுகள், தலாக்குகள் நடக்க 90 சதம் வாய்ப்பிருக்காது. தகவல் தருவோர் தங்களது கட்டணத்தை நியாயமாகப் பெற்றுக் கொள்ளலாம். மறுப்பிருக்காது.

இதைத்தவிர்த்து பெற்றோரே நேரடியாக விசாரித்து அறிந்து கொள்ளும் முறையை தகவலாளர் அமைத்திருப்பது இங்கீதமாக இருக்காது. பல பெற்றோர்களுக்கு அதற்கான அனுபவம், பொறுமையும் கிடையாது.

டாக்டர் சுதா கூறுவது போல் வரன் கைநழுவிப் போய்விடுமோ என வரனுடைய மேலோட்டமான பவிசைப் பார்த்து சடாரென ஏமாறும் நிலையும் ஏற்படும். இணைய தளப்பதிவு ப்ரோபைல்க்கு 500, 1000 பெற்று முகவரி, போன் எண் கொடுப்பதைத் தவிர்த்து மேற்குறிப்பிட்டவாறு முயன்று உதவினால் சமூகத்திற்குச் செய்த பேறாக அமையும்.

நன்றி: டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு

source: http://jahangeer.in/?paged=3