Home கட்டுரைகள் சமூக அக்கரை மொபைல் ஃபோன்களும் முஸ்லிம்களும்
மொபைல் ஃபோன்களும் முஸ்லிம்களும் PDF Print E-mail
Monday, 07 February 2011 09:49
Share

மொபைல் ஃபோன்களும் முஸ்லிம்களும்

      ஜூவைரியா பின்த் முஹம்மது அலி, மேலக்காவேரி       

[ மிக முக்கியக் கடமையான தொழுகையை ஒரு மனிதன் நிறைவேற்றும்போது அவருக்கு அருகில் அமர்ந்து ஒருவர் சப்தமிட்டு திருக்குர்ஆனை ஓதுவது கூட அங்கு தொழுபவற்கு இடைஞ்சலை தரக்கூடும் என்பதால் அவ்வாறு சப்தமிட்டு ஓதுவதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்திருக்கிறார்கள்.

அப்படியிருக்க,

இந்த மொபைல் ஃபோன்களிலிருந்து தொழுகை நேரத்தில் பள்ளிகளுக்குள் ஒலிக்கும் சங்கீதங்கள் தொழுகையில் ஈடுபட்டு அல்லாஹ்வின் நினைவில் மூழ்கியிருக்கும் இமாம் உட்பட அனைவரது மனவோர்மையையும் சீர்குலைத்து விடுகின்றன. 

இசையில்லாத சாதாரன ரிங் டோன், சைலன்சர், வைப்ரேட்டர், இன்னும் தேவைப்பட்டால் முழுதும் ஆஃப் செய்து வைத்துவிடக்கூடிய சகலவிதமான வசதிகளுடன் எல்லா மொபைல் ஃபோன்களும் தயாரிக்கப்படுகின்றன.
இந்த வசதிகளை கண்டுக்கொள்ளாமல் தாங்கள் இருக்கும் இடம், பொருள், ஏவல் எதையும் பற்றி கவலைப்படாமல் இந்த அரிய சாதனத்தை மனம்போன போக்கில் பயன்படுத்துபவர்களை நினைத்தால் மனம் வேதனையடையத்தான் செய்கிறது.]

அறிவியல் புரட்சி நிகழ்ந்த 20ம் நூற்றாண்டிலிருந்து விஞ்ஞான யுகமான 21ம் நூற்றாண்டிற்குள் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த நவீன யுகத்தில் விஞ்ஞானப் பூர்வமாக நிறைய வசதிகளை அனுபவித்து வருகிறோம். அதில் அதிமுக்கியமாக சொல்ல வேண்டிய, மனித வாழ்வோடு பின்னி பிணைந்து இன்று மிகமிக அத்தியாவசியப் பொருளாக மாறி நம்முடைய கரங்களில் தவழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு சாதனத்தைப் பற்றி நாம் இங்கு பேசுவோம்.

நம் கைகளின் பதினோராவது விரலாகவே மாறிவிட்ட மொபைல் ஃபோன்தான் அந்த அற்புத சாதனம்.

 20ம் நூற்றாண்டில் விஞ்ஞான அளவில் மட்டுமல்லாமல் மார்க்க அளவிலும் கூட நாம் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து முன்னேறி வந்திருக்கிறோம். இது ஏக இறைவன் நமக்கெல்லாம் அருளிக்கொண்டிருக்கும் அருள் மழை. இந்த அருட்கொடைகளை நாம் அல்லாஹ் வகுத்திருக்கும் வரம்புக்குள் பயன்படுத்துகின்றோமா என்பதுதான் நமது சிந்தனைக்குரிய கேள்வி.

அதாவது இன்றைய சூழ்நிலையில் நாம் அனைவரும் மிக அவசியமான பொருளாக கருதி மொபைல் போனை உபயோகித்து வருகிறோம். இச்சாதனம் நம்முடைய அன்றாட வாழ்வின் அவசர, அவசிய நேரங்களில் மிகவும் அற்புதமாக செயல்பட்டு வருவதால் நாம் அனைவரும் அதை மிகவும் விரும்புகிறோம். அதே நேரம் அதை நாம் சரியான பாதையில், மார்க்கத்திற்கு முரண்படாத வகையில் பயன்படுத்துகின்றோமா என்று ஆராய்ந்தால் மிகவும் வேதனையான விடையே நமக்கு அனுபவரீதியாக கிடைக்கிறது.

     தொழுகையில் இடையூறு விளைவிக்கும் மொபைல் .ஃபோன்கள்      

தொழுகையின் அவசியத்தையும், அதன் மூலம் நமக்கு கிடைக்கிற அளப்பறிய நன்மைகளையும் நன்கு உணர்ந்து அந்தத் தொழுகைகளைப் பேணுகின்ற முஸ்லீம்கள் கூட இந்த மொபைல் ஃபோன்களை அறிவுப்பூர்வமாக உபயோகிக்காத காரணத்தினால் தங்களது தொழுகைகளுக்கும், சக தொழுகையாளிகளின் வணக்க வழிபாடுகளுக்கும் இடைய+று ஏற்படுத்தி வருகின்றார்கள்.

மிக முக்கியக் கடமையான தொழுகையை ஒரு மனிதன் நிறைவேற்றும்போது அவருக்கு அருகில் அமர்ந்து ஒருவர் சப்தமிட்டு திருக்குர்ஆனை ஓதுவது கூட அங்கு தொழுபவற்கு இடைஞ்சலை தரக்கூடும் என்பதால் அவ்வாறு சப்தமிட்டு ஓதுவதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்திருக்கிறார்கள். அப்படியிருக்க இந்த மொபைல் ஃபோன்களிலிருந்து தொழுகை நேரத்தில் பள்ளிகளுக்குள் ஒலிக்கும் சங்கீதங்கள் தொழுகையில் ஈடுபட்டு அல்லாஹ்வின் நினைவில் மூழ்கியிருக்கும் இமாம் உட்பட அனைவரது மனவோர்மையையும் சீர்குலைத்து விடுகின்றன.

இந்த தொந்திரவை தவிர்க்கும்படி அடிக்கடி சொற்பொழிவுகளிலும், தொழுகைகளுக்கு முன்பும் பள்ளிகளில் மார்க்க அறிஞர்கள் சுட்டிக்காட்டியும், பள்ளிகளின் கதவுகளில் மொபைல் ஃபோன்களின் படம் போட்டு அவற்றை ஆஃப் செய்துவிடும்படி ஸ்டிக்கர்கள் ஒட்டியும் இந்த விஷயத்தில் நிறைய பேர் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.

இதில் இன்னொரு கொடுமையான விஷயம் என்னவென்றால் - மொபைல் ஃபோன்களில் ஏற்கனவே உள்ள இசை ஒலிகளும் பத்தாமல் கூடுதலாக சீசனுக்கு தகுந்தாற்போல் அவ்வப்போது வெளியாகும் லேட்டஸ்ட் திரைப்பட பாடல்களின் பல்லவிகளை தேடிப்பிடித்து தங்கள் ஃபோன்களில் பதிவிறக்கம் செய்துக் கொண்டு அவற்றை உச்சஸ்தாயியில் வைத்து ஒலிக்க வைக்கின்றனர். இந்த இசையோடு தங்கள் ஃபோன்கள் ஒலிக்கும்போது கேட்டு சிலிர்த்துப் போகின்றனர். அதிலும் கேட்போர் செவியும், சிந்தனையும் கூச்சப்படும் அளவுக்கு ஆபாச பாடல்களின் விரசமான காட்சிகளுக்காக இசையமைக்கப்பட்ட பாடல்கள்தான் இப்போதெல்லாம் ஏராளமான மொபைல் ஃபோன்களின் ரீங்காரங்கள்.

தொழுகையின் போதுதான் இப்படியென்றால் புனித ஹஜ்ஜில் ஈடுபடுகிற ஹாஜிகளில் பெரும்பாலோர் நிலைமையும் இந்த விஷயத்தில் அவசியம் கண்டித்து சொல்லப்பட வேண்டிய விஷயமாகி விட்டது.

முஸ்லீம்களின் வாழ்வில் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ்ஜை நிறைவேற்ற மிகுந்த பிரயாசைகளுடனும், நிறைய பொருள் செலவழித்தும் புனித மக்காவுக்கு வந்து சேர்கின்ற சிலர் தங்களுடன் சைத்தானின் வாழ்த்தொலியையும் தங்கள் மொபைல் ஃபோன்களில் நிரப்பி கொண்டு வருகின்றனர்.

ஹஜ் போன்ற லட்சக்கணக்கான மக்கள் கூடக்கூடிய சந்தர்ப்பங்களில் பலவகைகளில் பயன்தருவது மொபைல் ஃபோன்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், செய்த பாவங்கள் அனைத்தையும் சொல்லி அழுது புலம்பி வல்ல நாயனிடம் கையேந்தி முழுக்க முழுக்க அல்லாஹ்வின் சிந்தனையுடன் ஹஜ் கிரியைகளில் ஈடுபட வேண்டிய முஸ்லீம்கள் இந்த சந்தர்ப்பங்களில் கூட இந்த விஷயத்தில் கவனக்குறைவுடன் நடந்துக் கொள்வதுதான் வேதனையளிக்கிறது.

ஏராளமான முஸ்லீம்கள் அழுது புலம்பி துவா கேட்டவண்ணம் தவாஃபில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு மொபைல் ஃபோன் ரீங்காரமிட்டு கூட்டத்திலிருப்போரை முகம் சுழிக்க வைக்கிறது. இறைச் சிந்தனையில் உள்ள ஒருவர் தனது அழைப்புமணி ஒலித்ததும் 'நுஒஉரளந அந அல டுழசன! ஐ hயஎந ய phழநெ உயடடஇ உழரடன லழர pடநயளந றயவை கழச ய றாடைந." என்று சொல்வது போல் இல்லை! இந்த சம்பவம்? இதை சற்று சிந்தித்துப் பாருங்கள் சகோதர சகோதரிகளே! இது எந்தளவிற்கு அனாச்சாரமான கண்டிப்பிற்குரிய விஷயம் என்பதை உணர்வீர்கள்.

    ஹஜ் பயணத்தில் நேரில் கிடைத்த சில அனுபவங்கள்:    

குடும்பத்துடன் மினாவிற்கு வந்து தனித்தனி கூடாரங்களில் தங்குகின்ற தம்பதியர்கள் கணவரிடம் ஒன்றும், மனைவியிடம் ஒன்றுமாக இரு மொபைல் ஃபோன்களை கொண்டு வருகின்றனர். இந்த ஏற்பாட்டினால் பல சௌகரியங்கள் இருப்பதால் அவசியமான ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் குடும்பத்துடன் வருபவர்கள் இவ்வாறு இரண்டு பேர்களிடமும் ஃபோன் வைத்திருக்க நாமும் வலியுறுத்தவே செய்வோம். ஆனால் அந்த இடத்தில் கூட ஆபாசங்களை வெளிப்படுத்த வேண்டுமா என்ன? அதிலும் மனைவியின் கையில் இருக்கும் போனிலும் இந்த அசிங்கங்களை நிரப்பிக் கொடுக்கும் கணவர்களை என்ன சொல்வது? இது அவசியமற்ற அருவருப்பான செயலாகும்.

மார்க்க அறிஞர் ஒருவர் அருமை நபிகளாரின் வாழ்க்கையைப் பற்றி உணர்வுப்பூர்வமாக உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். கூடாரம் முழுவதும் ஆண், பெண் ஹாஜிகள் உரையின் நேர்த்தியினால் நபிகள் பெருமானாரின் காலக்கட்டத்திற்கே போய்விட்ட பிரமையில் மூழ்கியிருக்க திடீரென ஒரு மொபைலிலிருந்து இன்று தமிழகத்தையே சீரழித்துக் கொண்டிருக்கிற 'மன்மதராசா.. மன்மதராசா..மனசைக் கிள்ளாதே" என்ற பாடலின் இசை கூடாரத்தின் கூரையை பிய்க்கிறது.. அங்கிருந்த அனைத்து ஹாஜிகளின் மனதையும்தான்..

ஒரு சகோதரி தன் கைப்பையைத் தேடி அதிலிருந்து தனது மொபைலைத் தேடி எடுத்து பேசுவதற்குள் ஒட்டு மொத்த ஹாஜிகளின் கவனமும் அந்த பெண்மணியின் மீதும் அவரது கையில் இருக்கும் ஃபோன்மணியின் மீதும் வந்து சேர்ந்து விடுகிறது. இப்படியாக அங்கு நிலவிய பக்தி பரவசமான சூழ்நிலை இந்த சைத்தானின் சூழ்ச்சியினால் மாசுப்பட்டுப் போய்விடுகிறது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் பாருங்கள்.. இந்த தவறுக்கு மொபைல் ஃபோனை கண்டுபிடித்தவரையோ அல்லது அவற்றை தயாரித்து விற்பனை செய்யும் கம்பெனிகளையோ நாம் சிறிதும் குறை கூற முடியாது. காரணம், முக்கியமான சந்தர்ப்பங்களில் மொபைல் ஃபோன்களை உரிய முறைகளில் கையாளுவதற்கு தேவையான வசதிகளுடன்தான் அவர்கள் தயாரித்துள்ளனர்.

இசையில்லாத சாதாரன ரிங் டோன், சைலன்சர், வைப்ரேட்டர், இன்னும் தேவைப்பட்டால் முழுதும் ஆஃப் செய்து வைத்துவிடக்கூடிய சகலவிதமான வசதிகளுடன் எல்லா மொபைல் ஃபோன்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்த வசதிகளை கண்டுக்கொள்ளாமல் தாங்கள் இருக்கும் இடம், பொருள், ஏவல் எதையும் பற்றி கவலைப்படாமல் இந்த அரிய சாதனத்தை மனம்போன போக்கில் பயன்படுத்துபவர்களை நினைத்தால் மனம் வேதனையடையத்தான் செய்கிறது.

ஷைத்தானின் கேடுகளிலிருந்து தப்பித்து இறை மன்னிப்பை நாடி ஹஜ், உம்ரா பயனம் மேற்கொள்ளும் சகோதர, சகோதரிகள் இந்த விஷயத்தில் மிகுந்த பொறுப்புடன் நடந்துக் கொள்ளாவிட்டால், அந்த சைத்தானையே துணைக்கு அழைத்துக் கொண்டு புனிதபயணம் மேற்கொள்வதாகவே இதற்கு அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது. பிற ஹாஜிகளுக்கு எந்த வகையிலும் இடைய+று செய்யாமல் இருக்க வேண்டியது ஹஜ்ஜில் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஆனால் வேறு எல்லாவித இடைய+றுகளையெல்லாம் விட ஆபாச இசையைக் கொண்டு இவ்வாறு செய்யப்படுகிற இடைய+றுகளினால் பாவம்தான் மிஞ்சும் என்பதை மொபைல் ஃபோன்களுடன் புனித பயணம் மேற்கொள்வோர் கவனிக்க வேண்டும்.

      சகோதரர்களே! குறிப்பாக என்னருமை சகோதரிகளே!    

அத்தாயவசிய பொருள்களையும், சாதனங்களையும் அதற்குரிய வரம்புக்குள் சரியான வழியில் பயன்படுத்துவதன் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடைகளின் மகத்துவத்தை உணருங்கள். தீமைகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். இந்த நன் முயற்சியில் உங்களுக்கு உதவ எனக்குத் தெரிந்த சில உபயோகமான மொபைல் ஃபோன் குறிப்புகளை கீழே தந்துள்ளேன் அவற்றை பயன்படுத்தி மொபைல் ஃபோன்கள் எனும் அல்லாஹ்வின் அறிவியல் அருட்கொடையிலிருந்து நன்மையை பெறுங்கள்.

முதலாவதாக உங்கள் மொபைல் ஃபோன்களில் மியூசிகல் ரிங்டோனை மாற்றி சாதாரண டெலிபோனில் உள்ளது போன்ற ரிங்டோனை வையுங்கள். முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் மெல்லிய வித்தியாசமான ரிங்டோனையாவது வைத்துக் கொள்ளுங்கள். சினிமா பாடல்களின் மெட்டுக்களை மட்டும் கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள்.

தொழுகைக்காக மஸ்ஜிதுகளுக்குள் நுழையும் முன்பு மறந்து விடாமல் அவசியம் ஃபோனை அடக்கி வைத்து விடுங்கள். அல்லது ரிங்டோனை ஆஃப் செய்துவிட்டு வைப்ரேட்டரை ஆன் செய்து வையுங்கள்.

சொற்பொழிவுகளிலோ, சபைகளிலோ அமரும் முன்பு கண்டிப்பாக ஃபோனை சைலன்ஸர் அல்லது வைப்ரேட்டரில் செட் செய்துக் கொண்டு அமருங்கள். இவ்வாறான சபைகளில் அமர்ந்து இருக்கும்போது உங்களுக்கு அழைப்பு வந்தால் அங்கிருந்து வெளியில் சென்று அமைதியான குரலில் பேசிவிட்டு திரும்புங்கள்.

பிறருக்கு ஃபோன் செய்வதற்காக அவரது மொபைல் நம்பரை டயல் செய்யும் முன்பு அவர் வசிக்கும் பகுதியில் அப்போது தொழுகைக்கான நேரமில்லை என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். தொழுகை நேரமாக இருந்தால் சற்று நேரம் கழித்து அழையுங்கள்.

யாரையாவது அழைத்து பேச வேண்டிய தேவை உங்களுக்கு ஏற்படும் போது உங்கள் செலவிலேயே அழைத்து பேசுங்கள். மின்னல் வெட்டுவது போல் 'மிஸ்டு கால்" அடித்து விட்டு மற்றவர் கூப்பிடட்டுமே என்று காத்திருப்பது நாகரிகமான செயல் அல்ல.

பெட்ரோல் ஸ்டேஷன்களில் மொபைல் ஃபோனை ஆஃப் செய்து விடுங்கள். அல்லது உபயோகிக்காமலாவது இருங்கள். இதன் மூலம் சில திடீர் விபத்துக்களை தவிர்க்கலாம்.

டெக்ஸ்ட் மெஸ்ஸேஜ்களில் வீணான ஜோக்குகளை பரிமாறிக் கொள்ளாமல், நல்ல நிகழ்வுகளையும், அவ்வப்போது கடைபிடிக்க வேண்டிய நோன்பு போன்ற வழிபாடுகள்; பற்றிய நினைவ+ட்டல்களையும், குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிமொழிகளையும் பரிமாறிக் கொள்ளுங்கள்.

அவசியத் தேவையில்லாமல் மொபைல் ஃபோனை உபயோகிக்காதீர்கள். அவசியத் தேவைக்காக பேசும்போது கூட சுருக்கமாக பேசி முடியுங்கள். வீண் விரயத்தை தவிருங்கள். நீண்ட நேரம் வழவழவென்று அடிக்கடி மொபைல் ஃபோனில் பேசிக் கொண்டேயிருப்பது உங்கள் உடல்நலத்தையும், பொருளாதாரத்தையும் நாளடைவில் பாதிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

source: http://www.tamilmuslim.com/KATTURAIKAL/mobailphone.htm