Home கட்டுரைகள் அரசியல் இஹ்வானுல் முஸ்லிமீன் vs மொஸாத் (இஸ்ரேல்)
இஹ்வானுல் முஸ்லிமீன் vs மொஸாத் (இஸ்ரேல்) PDF Print E-mail
Saturday, 05 February 2011 07:40
Share

எகிப்தில் தற்போது நடந்துவரும் மக்கள் புரட்சி

M. ஷாமில் முஹம்மத்

[''இஹ்வானுல் முஸ்லிமீன்'' அமைப்பின் உயர் மட்ட உறுப்பினர் இந்த ஆர்ப்பாட்டங்களை ஒரு அமைப்பினர் செய்யவில்லை அனைவரும் செய்கின்றனர் இவற்றை ஒரு அரசியல் கட்சிக்குள் அடக்கிவிடமுடியாது என்று தெரிவித்திருந்தார்.

உண்மையில் எகிப்திய இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் உருவாக்கம்தான் ஹமாஸ் என்பதும் இவர்கள் எகிப்தின் அதிகாரதில் பங்கு கொண்டால் நிச்சயம் இஸ்ரேலை பெரிதும் பாதிக்கும் என்பதும் இஸ்ரேல் நலன் பேணும் மேற்கு உலகிக்கு நன்கு தெரியும்.

எகிப்தில் நடக்கபோகும் மாற்றங்களை சாதகமாக திசைக்கு மாற்றும் பாரிய வேலைத் திட்டம் ஒன்றில் CIA , மொசாட் ஆகியன மேற்கு உளவு அமைப்புகளுடன் இணைந்து துரிதமாக இரவு பகலாக இயங்கிக் கொண்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மொசாத் பல திட்ட பரிமாணங்களை ஏற்கனவே உருவாக்கி இருக்கும் அதன் ஒரு பரிமாணமா இராணுவ புரட்சி அல்லது பிராந்தியத்தில் ஷியா, சுன்னாஹ் என்ற பிளவையும் ஜிஹாதிய ஸலபிகளுகும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பும் இடையில் மோதல்களை உருவாக்க இவர்கள் புதிய போலியான இஸ்லாமிய போராளிகள் அமைப்பைக் கூட உருவாக்கலாம்! வெற்றியுடன் கூடவே அழிவுகளும் வரலாம்.

பலமான எதிர்கட்சியான இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பும் அதன் சார்பு அமைப்புகளும் எகிப்தின் அரச நிர்வாகத்தில் அமர்ந்தால் 30 ஆண்டு கால எகிப்தின் மேற்குலகம் சார்பு நிலை மற்றும் இஸ்ரேலுடன் அதன் சமாதன உடன்படிக்கையை ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று இஸ்ரேல் அச்சம் கொண்டுள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.]

ஹோஸ்னி முபாரக்கை கைவிட்ட மேற்குலகம், புதிய உபாயம் தேடும் இஸ்ரேல்!

அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிலாரி கிளிங்டன் எதிர் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு ஒன்றை ஏற்படுத்துமாறு தெரிவித்ததுடன் கெய்ரோவின் நடைபெறும் வன்முறை சம்பவத்தை ஆராயுமாறும் காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புதிய உதவி ஜனாதிபதியை கேட்டுள்ளார், தொலைபேசியில் அழைத்துள்ள ஒபாமா ஹுஸ்னி முபாரக் இடைக்கால நிர்வாகத்தை உடன் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் எகிப்து அரசு இந்த கோரிக்கைகளை மறுத்து விட்டதுடன் இவ்வாறான அறிக்கைகள் உள்நாட்டில் நிலைமையை மோசமாக்கும் என்று தெரிவித்துள்ளது

அமெரிக்காவின் அறிக்கைகளை தொடர்து இன்று மேற்குலக நாடுகளின் தலைவர்கள் முபாரக்கின் அரசுக்கு தாக்கமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர் பிரிட்டிஷ், பிரான்ஸ், ஜேர்மன் ,இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் உடனடியான இடைக்கால நிர்வாகம் என்பதை வலியுறுத்தியுள்ளனர் விரிவாக பார்

அந்த அறிக்கையில் நாங்கள் எகிப்தில் மோசமடைந்து வரும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து கொண்டிருகின்றோம் எகிப்து மக்கள் தாம் அமைதியாக ஒன்று கூடுவதற்கும் பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பை பெற்றுகொள்வதற்குமான முழு உரிமையை கண்டிப்பாக அனுபவிக்க கூடியதாக இருக்கவேண்டும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் முழுமையாக ஏற்று கொள்ளமுடியாதவை என்றும்

நாங்கள் வன்முறையை மேற்கொள்ளும் அதை துண்டும் அனைவரையும் கண்டிக்கின்றோம் அந்த வன்முறை எகிப்தின் அரசியல் பிரச்சினையை மேலும் மோசமாகக்கி விடும் உடனடியான இடைக்கால அரசு ஒன்றுதான் தற்போது எகிப்து எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்ள போதுமானது என்று தெரிவித்துள்ளது

ஐநா வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் தான் தனது பதவிக்காலம் முடியும்வரை பதவி வகிப்பேன் மீண்டும் தேர்தலில் வேட்பாளராக வரமாட்டேன் என்று அறிவித்துள்ளது மக்களின் கோரிக்கையை திருப்திப்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை மாற்றத்துக்கான தேவை இருப்பின் உடனடியாக அது இப்போதே நடைபெறவேண்டும் என்று தெரிவித்துள்ளதுடன் அமைதியான ஆர்பாட்டம் செய்யும் மக்களை தாக்குவது கண்டிக்க தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.இந்த அறிக்கைகளுக்கு முன்னர் துருக்கியும் ஈரானும் தமது ஆதரவை எகிப்து மக்களுக்கு தெரிவித்துள்ளது

இவற்றுக்கு நேர்மாறாக இஸ்ரேல் தனது ஆதரவை ஹுஸ்னி முபாரக் அரசுக்கு தெரிவித்ததுடன் மேற்குலக நாடுகளை முபாரக் அரசின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என்று வலியுறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது ஆனால் இஸ்ரேலின் வலியுறுத்தல்களையும் மீறி முபாரக் அரசை வலியுறுத்தும் அறிக்கைகள் வெளிவந்துள்ளன.

இங்கு அவதானிக்கவேண்டிய விடையம் அரசியல் அறிக்கைகள் என்பது வேறு அரசியல் நகர்வுகள் என்பது வேறு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் தமது அரசியல் நகர்வுகளையும் அதை வழிநடத்தும் வெளிநாட்டு கொள்கைகளையும் தமது உளவுத் தகவலின் ஊடாக வடிவமைகின்றது அதேபோன்று வெளிப்டையான வெளிநாட்டு கொள்கைகளை ராஜதந்திர நகர்வுகளின் ஊடாகவும் தமது தேசிய நலன் கருதி இரகசியமான கையாளப்படும் வெளிநாட்டு கொள்கைகளை தமது உலனாய்வு பிரிவுகளின் ஊடாவும் அடைந்து கொள்ளகின்றது

மேற்கின் காதலனாக இருந்தவர்தான் ஹுஸ்னி முபாரக் மேற்கின் நலன் என்றால் எதையும் இழக்கவும் விட்டுகொடுக்கவும் முன்வரும் ஒருவராக தான் கடந்த மாதம் வரையும் இருந்து வந்தார் மேற்கின் காதலை பெற மக்களின் வெறுப்பையும் பெருட்படுத்தாமல் பல தியாகங்களை செய்தவர் அப்படிப்பட்ட மா மனிதனை இன்று மேற்கு கைவிட்டு விட்டது அவர் நினைத்தும் பார்க்காத வேகத்தில் அவருக்கு எதிரான அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருகின்றது இப்போது மேற்குலகிக்கு தோற்று போகும் முபாரக் தேவை இல்லை இப்போது அவர்களின் தேடல் எல்லாம் முபாரக்கை விடவும் தமக்கு பொருத்தமான ஒருவரை உருவாக்குவதுதான்

எகிப்தில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரும் மேற்கு தமது பாதுகாப்பு இயந்திரங்களை வேகமாக இயக்குகின்றது அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிலாரி ‘ நடைபெறும் வன்முறையை பார்த்து அதிர்ச்சி அடைகின்றோம் ‘ என்று தகவல் தரும்போது அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரொபேர்ட் கேட் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சருடன் இணைந்து இஸ்லாமிய சக்திகளின் கையில் எகிப்து சிக்கிவிடாமல் இருக்க தேவையான உபாயங்கள் பற்றி பல மணித்தியாலம் பேசி வருகின்றனர்.

மறுதரப்பில் CIA தனது புலானய்வு வலையமைப்பை வேகமாக இயக்கிவருகின்றது CIA தலைமையகத்தில் நாளொன்றுக்கு உள்வரும் வெளிச் செல்லும் தகவல்களின் வீதம் திடீர் ஆதிகரிபை பெற்றுள்ளது என்று ஒரு தகவல் தெரிவிக்கின்றது இஸ்ரேல் ஜெர்மனி அமைச்சரவை ஜெருசலத்தில் ஒன்று கூடி பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து விசேட கலந்துரையாடல்களை செய்து வருகின்றது.

அதேவேளை இஹ்வானுல் முஸ்லிமீன் கடைபிடித்து வரும் அமெரிக்கா முன்மொழிந்த ‘இஸ்லாமிய பயங்கரவாதம் ‘ என்பதற்கு தாம் எதிரானவர்கள் என்பதான வெளிக்காட்டல் குறிப்பாக அல் காயிதா நடவடிக்கைகளுக்கு முற்றிலும் எதிரானவர்கள் என்ற அவர்களின் வெளிக்காட்டல்கள் ஓர் அளவுக்கு மேற்கு உலகின் கடுமையான பார்வையில் இருந்து இவர்களை சற்று விளக்கி இருந்தாலும் பலஸ்தீன் காஸாவை தனது கட்டுபாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் இராணுவ பிரிவு என்பதான இஸ்ரேலின் போதனை தோற்று போய்விடாது.

உண்மையில் எகிப்திய இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் உருவாக்கம்தான் ஹமாஸ் என்பதும் இவர்கள் எகிப்தின் அதிகாரதில் பங்கு கொண்டால் நிச்சயம் இஸ்ரேலை பெரிதும் பாதிக்கும் என்பதும் இஸ்ரேல் நலன் பேணும் மேற்கு உலகிக்கு நன்கு தெரியும் எகிப்தில் நடக்கபோகும் மாற்றங்களை சாதகமாக திசைக்கு மாற்றும் பாரிய வேலைத் திட்டம் ஒன்றில் CIA , மொசாட் ஆகியன மேற்கு உளவு அமைப்புகளுடன் இணைந்து துரிதமாக இரவு பகலாக இயங்கிகொண்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இஸ்ரேலை சுழ பிராந்தியத்தில் உருவாகிவரும் மாற்றம் இஸ்ரேலை அச்சமடைய செய்வதுடன் மிக தீவிரமாக செயல்படவும் தூண்டும் இஸ்ரேலுக்கு முக்கிய நாடான ஜோடானிலும் இஹ்வானுல் முஸ்லிமீன் அரசியல் இயக்கத்தின் பலம் அதிகரித்து செல்கின்றது பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் எழுச்சியால் பெரிதும் பாதிக்கபடபோவது இஸ்ரேல் என்பதை அது உணருகின்றது இஸ்ரேலுக்கு வலதும் இடதுமாக இருக்கும் நாடுகளான ஜோடானும், எகிப்தும் இஹ்வானுல் முஸ்லிமீன் அரசியல் இயக்கத்தின் பலமான கோட்டைகளாக மாறிவருகின்றது என்பதும் இது வரை இஸ்ரேல பிராந்தியத்தில் பேணிவந்த நிலை, நிலைதடுமாற போகின்றது என்பதும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பை எப்படி உறங்க விடும் ?

மொசாத் பல திட்ட பரிமாணங்களை ஏற்கனவே உருவாக்கி இருக்கும் அதன் ஒரு பரிமாணமா இராணுவ புரட்சி அல்லது பிராந்தியத்தில் ஷியா, சுன்னாஹ் என்ற பிளவையும் ஜிஹாதிய ஸலபிகளுகும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பும் இடையில் மோதல்களை உருவாக்க இவர்கள் புதிய போலியான இஸ்லாமிய போராளிகள் அமைப்பைக் கூட உருவாக்கலாம்! வெற்றியுடன் கூடவே அழிவுகளும் வரலாம். 

இஹ்வானுல் முஸ்லிமீன் எகிப்தில் மௌனித்துள்ளது?

எகிப்தில் ஆர்ப்பாட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள மிக பாரிய மக்கள் தொகை திரண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன 10 இலட்சம் மக்கள் தற்போது திரண்டுள்ளதை பார்க்கமுடிகின்றது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன இந்த ஆர்பாட்டம் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கையும் அவரின் அரசாங்கத்தையும் அகற்றும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றது ஹுஸ்னி முபாரக்கை தூக்கில் போடவேண்டும் என்று ஆர்பாட்டம் செய்யும் மக்கள் கூறுகின்றனர் இராணுவம் முதல் தடவையாக அமைதியான ஆர்ப்பாட்டத்தை அனுமதிப்பதாக அறிவித்துள்ளது சட்ட ரீதியான ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கிறது மக்கள் அனைவரும் வீதியில் இரங்கி போராடுகின்றனர்.

ஹுஸ்னி முபாரக் அரசு அவசர அவசரமா எதிர் கட்சிகளை பேச்சுக்கு அழைத்தது ஆனால் மிக சிறிய கட்சிகள் சில பேச்சுகான அழைப்புக்கு சாதகமாக சமிக்கை காட்டினாலும் அழைப்பை பிரதான கட்சிகள் நிராகரித்து விட்டன சர்வதிகாரி பதவி துறக்கும் வரை இராணுவத்துடன் அல்லது உதவின் ஜனதிபதிடன் அல்லதுஅவரின் அரசுடன் பேச்சு இல்லை என்று இஹ்வானுல் முஸ்லிமீன் தெரிவித்துள்ளது விரிவாக

இன்று மீண்டு தொடங்கியுள்ள போராட்டம் பெரிய எடுப்பில் தொடங்கியுள்ளது ஆர்பாட்டம் ஹுஸ்னி முபாரக்கை நாட்டை விட்டு ஓடச் செய்யுமா என்ற பல மான எதிர்பார்புடன் முஸ்லிம் உம்மாஹ் காத்திருக்கின்றது இந்த வேளையில் எகிப்திய இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் நடவடிக்கைகள் பற்றி சற்று நோக்குவது பொருத்தமாக இருக்கும் இஹ்வானுல் முஸ்லிமீன் உலகின் 80 க்கும் அதிகமான நாடுகளில் இயங்கும் ஒரு சர்வதேச இஸ்லாமிய இயக்கம் இந்த இயக்கம் தோன்றி வளர்ந்த நாடும் அதன் தலைமை உள்ள நாடும் எகிப்துதான் இந்த அமைப்பு எகிப்தில் மட்டும் 6 இலட்சம் உறுபினர்களை கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கடந்த தேர்தலில் 80 பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றியுள்ளது இரண்டு கட்டங்களாக நடைபெற்றதேர்தலில் இரண்டாம் கட்ட பாராளுமன்ற தேர்தலை இந்த அமைப்பு பகிஷ்கரித்து அதனால் 80 ஆசனங்களை மட்டும் கைப்பற்றி பாராளுமன்றத்தின் 20 வீதமான இடங்களை பிடித்து கொண்டுள்ளது முழுமையாக தேர்தலில் பங்குகொண்டிருந்தால் இன்னும் பல ஆசனங்களை கைப்பற்றியிருக்கும் என்று எகிப்திய தகவல்கள் தெரிவிக்கின்றன அந்த அமைப்பு கடுமையான ஒடுக்கு முறைகளின் கீழும் பலமானதும் பிரதானமானதுமான எதிர்கட்சியாக எழுத்து நிற்கின்றது

ஆனாலும் தற்போது நடை பெற்றுவரும் ஆர்பாட்டங்களில் தனது இஸ்லாமிய செய்தியை ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களுக்கு முன்வைக்கவில்லை என்று விமர்சிக்கபடுகின்றது. இஹ்வானுல் முஸ்லிமீன் தன்னை தனித்துவமாகவும், புறம்பாகவும் அடையாளப் படுத்த முயற்சிக்க வில்லை என்றுதான் கூறவேண்டும்

எல்லா ஊடகங்களும் இஹ்வானுல் முஸ்லிமீன் எங்கே என்று கேட்டும் அளவில்தான் அதன் நடவடிக்கைகளை அமைத்துள்ளது கடந்த 25 ஆம் திகதி இஹ்வானுல் முஸ்லிமீன் முக்கிய உறுப்பினருடன் தொடர்பு கொண்ட அல் ஜஸீராவின் செய்தியாளர் அவருடன் போசும்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருகின்றீர்கள் உங்களின் நடவடிக்கைகளை காணமுடியாது உள்ளது, ஆர்பாட்டம் பலமாக நடைபெறுகின்றது ஆனால் அதை வழிநடத்தும் ஒரு தலைவர் இன்றி இருக்கிறது என்று அவரிடம் தெரிவித்தார் அதற்கு பதிலளித்த அந்த அமைப்பின் உயர் மட்ட உறுப்பினர் இந்த ஆர்ப்பாட்டங்களை ஒரு அமைப்பினர் செய்யவில்லை அனைவரும் செய்கின்றனர் இவற்றை ஒரு அரசியல் கட்சிக்குள் அடக்கிவிடமுடியாது என்று தெரிவித்திருந்தார்

அதேபோன்று லொஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பத்திரிகை எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் ஆர்ப்பாட்ட காரர்களுக்கு அதன் மார்க்க தகவலை வழங்காது மௌனித்துள்ளது– Egypt’s Muslim Brotherhood mutes its religious message for protests- என்று தலைப்பிட்டு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த தகவலில் அந்த இஸ்லாமிய எதிர் அணியினர் மேற்குல ஜனநாயக பெறுமானங்களை கொண்ட மதசார்பற்ற ஒருவரான முஹமத் எல்பரடேய்யை-Mohamed ElBaradei- ஆதரிப்பது நீண்ட கால நோக்கில் அதன் கொள்கை எவ்வாறு புதிய எகிப்துக்கு பொருந்த போகின்றது என்பது தெளிவற்றது என்று தெரிவித்துள்ளது

முஹமத் எல்பரடேய் ஒரு லிபரல் சிந்தை கொண்டவர் என்றும் அவரை இடைக்கால அரச தலைவருக்கான வேட்பாளராக தாம் ஆதரிப்போம் என்றும் தெரிவித்துள்ளது ஆக இஹ்வானுல் முஸ்லிமீன் ஆர்பாட்டங்களில் தன்னை தனித்துவமாக வெளிப்படுத்தி ஊடகங்களில் பெரிதாக இடத்தை பிடித்து இலக்கை கோட்டை விடாமலும் அதே சமையம் இடைக்கால அரசுக்காக தனது இஸ்லாமிய அரசியல் முகாமில் பயிற்றப்படாத ஒருவரை வேட்பாளராக ஆதரிக்கும் நிலையை யும் எடுத்துள்ளது இது ஹிஸ்புத் தஹ்ரீர் போன்ற அமைப்புகளின் விமர்சனத்தை பெற்றுள்ளது

சட்டத்துறை நிபுணரான முஹமத் எல்பரடேய் மூன்று தடவைகள் ஐ.நா வின் சர்வதேச அணு சக்தி அமைப்பின்- the International Atomic Energy Agency -தலைவராக செயல்பட்டவர் இவர் அமெரிக்க ஜோஜ் புஷ் நிர்வாகத்துடன் முரண்பாடுகளை கொண்டவர் இவர் சர்வதேச அணு சக்தி அமைப்பின் தலைவராக இருந்த காலத்தில் இவரின் இஸ்ரேல், மற்றும் ஈரான் தொடர்பான அறிக்கைகள் எகிப்திய மக்கள் மத்தியில் பெரிதும் இடம்பிடித்துள்ளது என்று குறிப்பிடலாம்.

இஹ்வானுல் முஸ்லிமீன் ஆர்பாட்டங்களில் தன்னை தனியாக அடையாளப்படுத்தி மேற்குலகத்துக்கு முழு மக்கள் போராட்டத்தையும் அடக்குவதற்கு இடம் கொடுக்கவில்லை என்பதுடன் எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் தற்போதைய இலக்கு தமது வளர்சிக்கு முதல் பெரும் தடையாக இருக்கும் சர்வாதிகார ஜனதிபதியை அகற்றுவதுதான் என்பதுடன் கிலாபத் நோக்கிய அதன் பயணம் நீண்டது என்பதுடன் அதன் பயணம் மேலும் அதிக தூரம் கொண்டது என்பதை காட்டுகின்றது.

அதேவேளை இஹ்வானுல் முஸ்லிமீன் எகிப்தின் சர்வதேச உடன்படிக்கைகளை தாம் மதித்து நடப்பதாகவும் தெரிவித்துள்ளது, பலமான எதிர்கட்சியான இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பும் அதன் சார்பு அமைப்புகளும் எகிப்தின் அரச நிர்வாகத்தில் அமர்ந்தால் 30 ஆண்டு கால எகிப்தின் மேற்குலகம் சார்பு நிலை மற்றும் இஸ்ரேலுடன் அதன் சமாதன உடன்படிக்கையை ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று இஸ்ரேல் அச்சம் கொண்டுள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் என்பதும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது

source: http://ourummah.org/