Home இஸ்லாம் கட்டுரைகள் நவீன கராமாத்துகள்!
நவீன கராமாத்துகள்! PDF Print E-mail
Friday, 19 November 2010 11:14
Share

கராமாத்துகள் இறையச்சமுடைய நேர்மையாளர் ஓவ்வொருவர் வாழ்விலும் நிகழக்கூடியவை.. அதிசயங்கள், வாபம், நட்டம் இரண்டையும் தரக்கூடியவை. ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய நன்மை, அடையக் கூடிய தீமை இரண்டையும் அறியும் ஆற்றலை, தான் விரும்பக்கூடிய மனிதர்களுக்கு அல்லாஹ் தருகிறான்

குர்ஆனில் இடம் பெறும் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அஸா என்னும் கைத்தடி நிகழ்த்திய அதிசயங்களைக் குறிப்பிடலாம்.

மூஸா நபி அந்த கைத்தடியை நிலத்தில் எறிந்தபோது மலம் பாம்பாக மாறியது. மிகப்பெரிய பாம்பாக உருவெடுத்து மந்திரவாதிகளின் பாம்புகளை விழுங்கியது. பாலைவனத்தில் தாகம் தணிக்க பாறையில் ஓங்கி அடித்தபோது அதிலிருந்து பனிரெண்டு நீரூற்றுகள் கிளம்பின. ஃபிர்அவுன் கூட்டம் துரத்தியபோது அஸாவை செங்கடல்மீது வைத்த போது கடல் பிளந்து பாதை உருவாகியது. மூஸா நபி கூட்டத்தை உயிர் பிழைக்க வைத்தது.

அதே மணல்திட்டு பாதையில் துரத்திய ஃபிர்அவுன் கூட்டத்தை கடல் திரும்பவும் மூடி அழித்தது. ஈஸா நபி இறந்தவர்களை உயிர்ப்பிக்கச் செய்தார். வெண்குஷ்ட பிணியாளர், பிறவிக்குருடர்களை தனது கரத்தால் தொட்டு சுகப்படுத்தினார். களிமண்ணால் பட்சி உருவத்தை செய்து அதில் ஊதி உயிருள்ள பட்சியாக மாற்றினார். இபுராகீம் நபியை எரியும் நெருப்பில் வீசியபோது அந்த நெருப்புக்குண்டமே குளிர்பொய்கையாய் மாறியது. இஸ்மாயில் நபியின் கழுத்து பலிபீடத்தில் வைத்து அறுக்க அறுக்க அறுபடாமல் கத்தி அதிசயம் செய்தது.

 

கடலில் தூக்கி வீசப்பட்டபோது மீன்விழுங்கி மீனின் வயிற்றில் நபி யூணஸ் அலைஹிஸ்ஸலாம் வாழ நேர்ந்தது. நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் போர் புரிய திரட்டிய ராணுவத்தில் மனிதர்கள், ஜின்கள், பட்சிகள் இருந்துள்ளனர். எறும்புடன் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் பேசுகிறார்கள். ஸஃபா நாட்டின் மக்களை பல்கீஸ் என்ற இளவரசி ஆட்சி புரியும் செய்தியைக் கொண்டுவந்து சேர்ப்பதற்கு முன்பாக வெகு தொலைவிலுள்ள அவரது சிம்மாசனத்தை ஜின்களில் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டு வந்துவிடுகிறார். இவையனைத்தும் குர்ஆனில் இடம் பெறும் நபிமார்கள் வாழ்வில் நிகழும் அற்புதங்களாகும்

முன் அறிவிப்பாக இரவுகளில் அவர்கள் அகக்கண்ணுக்கு காட்சியாக விரிக்கிறான். அல்லாஹ்விடம் தனித்தனியே பேசக்கூடிய மனிதர்கள் அன்றும் இருந்தனர் இன்றும் இருக்கின்றனர். (தொழுகையே அடியான் அல்லாஹ்விடம் பேசுவதுதானே!) தமக்குத் தேவையானவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்று சென்று கொண்டேயிருக்கும் மனிதர்கள் தம்மிடம் கராமத் உள்ளது என தம்பட்டம் அடிப்பதில்லை. அவரவர் வாழ்வில் அவரவர் இயற்கை வாழ்வுக்குத் தக்க கராமத்துகள் விளைகின்றன.  

பலரும் புக முடியாத, அருகே செல்ல முடியாத கல்லூரியில் எந்த சிபாரிசும் இல்லாமல் சாமான்யர் ஒருவருக்கு சீட்டு கிடைக்கிறது. இது கராமாத். அரசுப் பணியாளர் தொடர்ந்து 12 வருடமாக ஒரே இடத்தில் பணி செய்கின்றார். அரசியல், ஆள், பணபலம், எல்லாமிருந்தும் அவரை டிரான்ஸஃபர் செய்யவியலாமல் திணருகின்றனர். இது கராமாத்.

தனி நபராக பேருந்தின் கடைசி இருக்கையில் வெளியூர் பயணிக்கும் ஒருவருக்கு நடுநிசியில் இரத்த அழுத்தம் கீழிறங்கி மயக்க நிலைக்குச் செல்கிறார். அடுத்த நொடி அல்லாஹ்வை அழைக்கிறார். இரத்த அழுத்தம் சகஜ நிலைக்குத் திரும்புகிறது. இது கராமாத்.

நாட்டை வழி நடத்தக்கூடிய குழுவினரோடு பாமரர்க்கு தொடர்பு ஏற்படுகிறது. அல்லாஹ் ஏற்படுத்துகிறான். அவர்களுடன் சரி சமமாக அமர்ந்து விவாதிக்கிறார். பாமரரைக் குழு பாராட்டுகிறது. இது கராமாத்.

ஒருவருக்கு அந்த வருட கூட்டுக்குர்பானுக்காக மிகவும் அவசியமாக ரூ.6,000 தேவைப்படுகிறது. அவருக்குத் தெரிந்தவரிடம் கேட்கிறார். அவர் இல்லையென்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் தூரத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த ஒருவர் இவரைப்பார்த்தவுடன் அருகில் வந்து இவருக்கு ஏற்கனவே அவர் கொடுக்க வேண்டிய கடனை திரும்பக் கொடுக்கிறார். அதுவும் சரியாக ரூ.6,000. இவர்கள் இருவரும் பேசிக்கொண்டது அவர் காதில் விழுவதற்கு ஒரு சதவீதம் கூட வாய்பே இல்லை. அதே சமயம் அவர் கொடுத்த தொகையோ, இவர் தன் நண்பரிடம் கேட்ட அதே தொகை! (ஆச்சர்யத்தில் விக்கித்துப் போகிறார்.) இது கராமாத் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்.

கிராமத்தில் 80 வயது வரை நாட்டாண்மையாக வாழ்ந்து எந்த அமலும் செய்யாத மனிதர், பல பெண்களின் வாழ்வை சூரையாடிய முஸ்லீம், உள்@ர் முஸ்லீம் அவர் முன் நின்று பேச பயப்படுவர். எந்த ஊர், நாட்டுக்கும் செல்லாதவர். திடீரென ஒரு உறவினரிடமிருந்து அழைப்பு வருகிறது. வெளிநாடு செல்கிறார். இந்தியா வந்த பிறகு இரயிலில் திரும்புகையில் வழி தவறி காணாமல் போய் சிலநாட்களில் வடமாநில இரயில் நிலையத்தில் மய்யித்தாக கிடக்கிறார். அரசு ஊழியர்களாகவிருக்கும் அவரது சொந்தம், நண்பர்கள் அம்மாநிலம் செல்கின்றனர். அவ்வுடலை எப்படிக் கொண்டு வருவது என்றறியாமல் இருக்க அல்லாஹ் அவர்கள் மூளைக்குத் திரையிடுகிறான். விளைவு! ஒரு காருக்கு ரூ.40,000 வாடகை பேசி டிக்கியில் உடலை வைத்து ஐஸ்கட்டிகளைப் பரப்பி எடுத்து வந்துள்ளனர். உடல் ஊர் வந்தடைய மூன்று நாட்கள்.

டிக்கி திறக்கப்பட்டு உடல் மேல் கை வைத்தால் சதை கைகளில் ஒட்டுகிறது. மூக்கிலிருந்து புழுக்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. வீட்டுக்குள் கொண்டு வந்த மறு நிமிடம், இரத்தமும் சதையுமாக வாழ்ந்த நாட்டாண்மை மனைவி சொன்னார், ‘நாற்றம் தாங்கவில்லை, உடனே வெளியே கொண்டு போங்கள்’. இதுவும் அல்லாஹ்வின் கராமாத்.

வெளி மாநிலத்தில் அகால மரணமடையும் இளைஞன் உடலை தமிழகம் கொண்டு வர ஒரு குடும்பம் தவிக்கிறது. பலஆயிரங்கள் வாகனக்கட்டணமாகக் கேட்கின்றனர். விமானத்தில் கொண்டு வர ரூ.2,000 தான் கட்டணம். ஆனால், அவர்கள் கேட்கும் ஆவணங்கள் ஒரு பாமர குடும்பம் நிச்சயம் பெற்றுக் கொடுக்க முடியாது. படித்த குடும்பம் ஒருநாளில் பெற இயலாது. அதிசயமாக ஒரு அதிகாரி உதவுகிறார். மாலை 6 மணிக்கு மேல் முயற்சி துவங்கி இரவு 10 மணிக்குள் எல்லா ஆவணங்களும் பெற்று காலை 6 மணிக்கு விமானத்தில் உடல் ஏற்றப்படுகிறது. லுஹர் தொழுகைக்கு சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது. இது கராமாத் அல்லாமல் வேறு என்னவாகவிருக்கும்.

கராமாத்துகள் குறிப்பிட்டவர்களுக்குத்தான் நிகழும், மற்றவர்களுக்க நிகழாது என்பது அறிவுப் பூர்வ வெளிப்பாடல்ல. இறையச்சமுடைய நேர்மையாளர் ஒவ்வொருவர் வாழ்விலும் காராமாத்துகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

நன்றி:  முஸ்லிம் முரசு, நவம்பர் - 2010.