Home இஸ்லாம் கட்டுரைகள் பத்து கட்டளைகள்
பத்து கட்டளைகள் PDF Print E-mail
Friday, 03 October 2008 08:37
Share

குர்ஆனில் பத்து கட்டளைகள்

திருக் குர்ஆனின் வசனம் 6:151,152 முன்வந்த வேதங்களில் வரும் பத்து கட்டளைகளை பின் வருமாறு உறுதிப்படுத்துகிறது:

''வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்தவற்றைக் கூறுகிறேன்' என்று (முஹம்மதே) கூறுவீராக! அவை:

1. அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது.

2. பெற்றோருக்கு உதவுங்கள்.

3. வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். உங்களுக்கும்,அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.

4. வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்.

5. அல்லாஹ் தடைசெய்துள்ள எவரையும் உரிமையிருந்தாலே தவிர கொல்லாதீர்கள். நீங்கள் புரிந்து கொள்வதற்காக இதையே உங்களுக்கு உபதேசம் செய்கிறான். 6:151

6. அநாதையின் செல்வத்தை அவன் பருவமடையும் வரை நியாயமான முறையிலே அன்றி (அனுபவிக்க) நெருங்காதீர்கள்.

7. அளவையும், நிறுவையையும், Nhமையாக நிறைவேற்றுங்கள்.

8. எவரையும் அவரது சக்திக்கு மேல் நாம் சிரமப்படுத்துவதில்லை.

9. உறவினராகவே இருந்தாலும் பேசும்போது நீதியையே பேசுங்கள்.

10. அல்லாஹ்வின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள். 6:152.

இதுவே எனது நேரான வழியாகும். எனவே இதனையே பின்பற்றுங்கள்.பலவழிகளைப் பின்பற்றாதீர்கள்.அவை அவனது (ஒரே) வழியைவிட்டும் உங்களைப் பிரித்துவிடும். நீங்கள்(இறைவனை)அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு உபதேசிக்கிறான்.

பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பத்துக் கட்டளைகள்

1419 ஆண்டுகளுக்குமுன். ஹிஜ்ரி  பத்தாம் ஆண்டு.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:

அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1.( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது.

இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

3.( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும்,கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4.( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.

5.மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்;ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள!

ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள்.

உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை வி;டுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்.

முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன!

இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

7.மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்!உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள்.

ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள்.உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற:குச் செல்வீர்கள்.

8.மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம்.

அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீர்கள்)

9.மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே!

இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர், குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.)சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.

10.( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?

'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.' அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.இதைக்கேட்ட இறுதித்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,

'அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!!இறைவா! நீயே இதற்கு சாட்சி! இறiவா! நீயே இதற்கு சாட்சி!

இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.

மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.

(ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி, முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர், இப்னுஹிஷhம், ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்)

இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் நிறைவேற்றிய கட்டளைகள்

وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاس إِمَامًا قَالَ وَمِن ذُرِّيَّتِيقَالَ لاَ يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ

 இந்த வசனத்தில் இறைவன் தமது தோழர் இப்றாஹீம்அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மாண்பை விவரிக்கிறான். இறைக்கட்டளைகளை அவர்கள் நிறைவேற்றிவிட்டதால் ஏக இறைவனின் முன்மாதிரித்தலைவராக அல்லாஹ் அவர்களை ஆக்கியுள்ளான். இதையே 'இப்றாஹீமை அவருடைய இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்ததை எண்ணிப்பாருங்கள்' என்று அல்லாஹ் கூறியிருப்பது மிகவும் சிந்திக்கத்தக்கதாகும்.

'(இறைதூதர்) இப்றாஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்தபோது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்.' 2:124

இப்றாஹீம்அலைஹிஸ்ஸலாம்அவர்களுடைய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு விட்டு பின்னர் அதிலிருந்து நழுவிவிட்ட வேதக்காரர்களுக்கும், இணைவைப்போருக்கும் - இறைவன் சில கட்டளைகள் முலம் மற்றும் தடைகள் மூலம் சோதித்ததை நினைவூட்டுவதற்கு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைவன் கட்டளையிட்டுள்ளான்.

'இப்றாஹீம் ஒரு சமுதாயமாகவும், இறைவனுக்கு அடிபணிந்தவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார்.அவர் இணைவைப்பரில் ஒருவராக இருந்ததில்லை.

'இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்தார்.(ஆகவே) அவரை அவன் தேர்ந்தெடுத்தான்.நேரான வழியில் அவரைச் செலுத்தினான்.' (16:120,121)இப்றாஹீம்யூதராகவோ,கிறித்தவராகவோ இருந்ததில்லை, மாறாக,அவர் உண்மை வழியில் நின்ற முஸ்லிமாக இருந்தார். இணைவைப்பவர்களில் ஒருவராக இருந்ததில்லை.இப்றாஹீமுக்கு மிக நெருக்கமான மக்கள் அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், நமபிக்கை கொண்டோரும்தாம்.அல்லாஹ் இறைநம்பிக்கை கொண்டோரின் பாதுகாவலன் ஆவான்.' (3:67,68)இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்

நிறைவேற்றிய கட்டளைகள்

பல கட்டளைகள் என்பதைக் குறிக்க இந்த 124-வது வசனத்தின் மூலத்தில்'கலிமாத்'كلمات’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. மார்க்க விதிகள், இறைக்கட்டளைகள், தடைகள் ஆகியவற்றைக் இது குறிக்கும். அவற்றை இப்றாஹீம் (அலை) அவர்கள் நிறைவேற்றினார்கள். முழமையாகக் கடைபிடித்தார்கள். அதையடுத்து 'மக்களால் பின்பற்றப்படவேண்டிய முன்மாதிரித் தலைவராக உம்மை நாம் ஆக்குவோம்' என அல்லாஹ் அறிவித்தான்.இறைநேசர் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்

அவர்கள் எந்தக் கட்டளைகளால் அல்லாஹ் சோதித்தான் என்பது தொடர்பாக அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.இப்னு அப்பாஸ்ரளியல்லாஹு அன்ஹூ அவர்கள், 'புனித ஹஜ் கிரியைகள்தாம் அவை' என்று கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் தூய்மை தொடர்பான சில கட்டளைகளை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்அவர்களுக்கு இறைவன் பிறப்பித்தான்.

தலைப்பகுதியில் பேணவேண்டிய ஐந்து தூய்மைகளும்,இதர உறுப்புகளில் பேண வேண்டிய ஐந்து தூய்மைகளும் அவற்றில் இருந்தன.

தலையில் மேற்கொள்ள வேண்டிய ஐந்து தூய்மைகள்!

1. மீசையை கத்தரித்தல்.

2. வாய் கொப்பளித்தல்.

3. நாசிக்கு தண்ணீர் செலுத்(திச் சீந்)துதல்.

4. பல் துலக்குதல்.

5. தலைவாருதல்

உடலில் மேற் கொள்ள வேண்டிய ஐந்து தூய்மைகள்

1. நகங்களை வெட்டுதல்.

2. மர்ம உறுப்பைச் சுற்றியுள்ள முடியை மழித்தல்.

3. விருத்த சேதனம் செய்தல்.

4. அக்குள் முடியை அகற்றுதல்.

5. இயற்கைக் கடனை முடித்த பின் மலஜலம் பட்டபகுதியை தண்ணீரால் கழுவுதல் ஆகியனவாகும்.

இதே கருத்துகளைப் போன்று தூய்மைகளைப்பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் வலியுறுத்திக்கூறியுள்ளனர்.அவயாவனை:

இயற்கை மரபுகள் ஐந்தாகும். அவை:

1. விருத்தசேதனம் செய்தல்,

2. மர்ம உறுப்பின் முடியைக் களைய சவரக்கத்தியை உபயோகித்தல்.

3. மீசையைக் கத்தரித்தல்.

4. நகங்களை வெட்டுதல்.

5. அக்குள் முடியை அகற்றுதல்

ஆகியனவாகும்.(அறிவிப்பவர்: அபூஹுரைராரளியல்லாஹு அன்ஹூஆதாரம்: புகாரி-5889முஸ்லிம்: 430)மேலும் ஆயிஷாரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கும் மற்றொரு நபிமொழியில்,

இயற்கை மரபுகள் பத்தாகும். அவை:

1. மீசையைக் கத்தரித்தல்.

2. தாடியை வளரவிடுதல்

3. பல் துலக்குதல்.

4. நாசிக்குத் தண்ணீர் செலுத்திச்சீந்துதல்.

5. நகங்களை வெட்டுதல்.

6. கைவிரல்களை கோதிக் கழுவுதல்

7. அக்குள் முடியை அகற்றுதல்

8. மர்ம உறுப்பைச் சுற்றியுள்ள் முடிகளை மழித்தல்.

9. சிறுநீர் கழித்தபின் தண்ணீரை உறிஞ்சியெடுத்தல்.

10. வாய் கொப்பளித்தல்.

(ஆதாரம் : முஸ்லிம்.)

அடுத்து 124 -வது வசனத்திற்கு இப்னு அப்பாஸ்ரளியல்லாஹு அன்ஹூ அவர்கள் விளக்கம் அளிக்கும் ஒரு செய்தியை இப்னு ஹாத்தம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:தூய்மை தொடர்பானதும் வணக்கம் தொடர்பானதும் ஆகியவை பத்து விஷயங்களாகும்.அவற்றில்ஆறு மனிதனின் தூய்மை தொடர்பானது:

1. மர்ம உறுப்பைச் சுற்றியுள்ள முடிகளை மழித்தல்.

2. அக்குள் முடியை அகற்றுதல்

3. விருத்தசேதனம் செய்தல்,

இந்த மூன்றும் ஒன்று தான் என இப்னு ஹுபைராரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்.

2. நகங்களை வெட்டுதல்.

3. மீசையைக் கத்தரித்தல்.

4. மிஸ்வாக் செய்தல்.

5. ஜும்ஆ நாளில் குளித்தல்.

நான்கு புனித ஹஜ்ஜு கிரியைகளின் போது நிறைவேற்ற வேண்டியவை:-

1. தவாபு செய்தல்

2. ஸயீ செய்தல்.

3. ஸபா மர்வாவுக்கிடையே ஸயீ செய்தல்.

4. (மினாவில) கல் எறிதல்.

இக்ரிமா ரஹ்மதுல்லாஹி அலைஹிஅவர்கள் கூறியதாவது:

இறைமார்க்கத்தின் விதிமுறைகளின் மூலம் அவற்றை முழமையாகக் கடைபிடித்தவர் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்அவர்களைத்தவிர வேறு யாருமில்லை. இப்றாஹீமைஅவருடைய இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்ததை எண்ணிப்பாருங்கள். அவர் அற்றை முழுமையாக நிறைவேற்றினார்' என்று அல்லாஹ் கூறியுள்ளான் என்று இப்னு அப்பாஸ்ரளியல்லாஹு அன்ஹூஅவர்கள் கூறினார்கள்.அப்போது நான், எந்தக் கட்டளைகள் மூலம் அல்லாஹ் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்

அவர்களை சோதித்தான்? எவற்றை அவர்கள் முழுமையாக நிறைவேற்றினார்கள்? என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹூஅவர்களிடம் கேட்டேன்.

அதற்கு அவர்கள் பின் வருமாறு பதில் அளித்தார்கள்.

இஸ்லாம் மொத்தம் முப்பது கூறுகள் கொண்டதாகும்.

அவற்றில் பத்துக் கூறுகள் பராஅத் (அல்லது தவ்பா) அத்தியாயத்தில் '(பாவமன்னிப்புக் கோரி) மீண்டவர்கள், (இறைவனை வழிபடுபவர்கள்)' எனத் தொடங்கும் 9:112-வது வசனத்தில் இடம் பெற்றுள்ளன.

முதல் பத்துக் கூறுகள்:

1. பாவமன்னிப்புக் கோருதல்.

2. வழிபாடு.

3. இறைப்புகழ்

4. நோன்பு நோற்றல்.

5. குனிந்து (ருகூவு) வணங்குதல்.

6. சிரவணக்கம் (ஸஜ்தா) செய்தல்

7. நன்மையை ஏவதல்.

8. தீமையைத் தடுத்தல்.

9. இறை வரம்புகளைப் பேணுதல்.

10. இறை நம்கிக்கை கொள்ளல்.

இரண்டாவது பத்துக் கூறுகளாவன :

அல் முஃமினூன் என்னும் 23-வது அத்தியாயத்தில் 'இறை நம்பிக்கையாயர்கள் வெற்றி பெற்றனர்' எனத் தொடங்கும் முதல் பத்து வசனங்களில் இடம் பெற்றுள்ளன.அவை:

1. பணிந்து தொழுவது.

2. வீண்விளையாட்டுகளைப் புறக்கணிப்பது.

3. ஸகாத் வழங்குவது.

4. கற்பைக்காப்பது.

5. அமானிதங்களை (பிறர் உடைமையைக்) காப்பது.

6. வாக்கைக் காப்பது.

7. நிலையாகத் தொழுவது ( காண்க 23:2-9)

8. தீர்ப்பு நாளை நம்புவது (70:26)

9. இறைவன் அளிக்கும் வேதனை குறித்து அஞ்சுவது (70:27)

10. சாட்சிகளை நிலை நிறுத்துவது (70:33)

மூன்றாவது பத்துக் கூறுகளாவன:

அல்-அஹஸாப் எனும் அத்தியாயத்தில் (இறைவனுக்கு முற்றிலும் அடிபணியும் ஆண்களும் பெண்களும் எனத் தொடங்கும் 33:35-வது வசனத்தில் இடம் பெற்றுள்ளன.அந்தப் பத்துக் கூறுகளாவன:

1. இஸ்லாத்தை ஏற்றல்.

2. இறை நம்பிக்கை கொள்ளல்.

3. கட்டுப்பட்டு நடத்தல்

4. உண்மை பேசுதல்.

5. பொறுமை காத்தல்.

6. இறையச்சம் கொள்ளல்.

7. தர்மம் செய்தல்.

8. நோன்பு நோற்றல்.

9. கற்பைப் பேணுதல்;.

10. அல்லாஹ்வை அதிகமதிகம் (நினைத்தல்) திக்ரு செய்தல். (காண்க: 33:35)

இவையனைத்தையும் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் முழுமையாக நிறைவேற்றினார்கள். அதனால் அவர்களுக்கு நரகவிடுதலை வழங்கப்பட்டது.இதையே இறைவன் 'அல்லாஹ் வின் கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றிய இப்றாஹீமின் (ஏடுகளில் உள்ளவை அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)' (53:57) என்று கூறியுள்ளான்.

இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பத்து கட்டளைகள் وصايا ابرهيم العشر

1. வீண் பேச்சு பேசாதீர்.

2. ஹலாலான உணவைத் தேடுங்கள்

3. பாவங்;களை தவிர்ந்து கொள்ளுங்கள்.

4. நீதி நேர்மையோடு வாழுங்கள். பிறர் மனம் புண்படும்டி நடவாதீர்கள்.

5. உலகோர் அனைவருக்கும் உணவு வழங்கப்படும்.உலோபிக்கும்,

பேராசைக்காரனுக்கும் தடுக்கப்படும்.6. ஏழைகளை மேலாக மதியுங்கள்.

7. உறவினர்களை அரவணைத்துக் கொள்ளுங்கள்.

8. அநியாயம் செய்தோருக்கு அருள் புரியுங்கள். தீமைசெய்தோரை மன்னியுங்கள்.

9. உங்களால் பிறருக்குத்தொல்லை ஏற்படின் மன்னிப்புக் கேளுங்கள்.

10. உங்கள் பொன்னான நேரங்களை அல்லாஹவை வணங்குவதிலும்,இறைஞ்சுவதிலும் பொருளீட்டுவதிலும்,தமது மனைவி,மக்கள், சமூகத்தாரின் கடமைகளை நிறைவேற்றுவதிலும் செலவிடுங்கள்.

(ஆதாரம் : கஸஸுல் அன்பியா, கஸஸுல் குர்ஆன்)

وصايا موسي العشر

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பத்து கட்டளைகள்

மூஸாஅலைஹிஸ்ஸலாம்அவர்களுக்கு (முப்பதுடன் பத்தும் சேர்த்து நாற்பது நாட்கள் நோன்பும் நோற்றபின் 7:142) இறைவனால் தவ்ராத் வேதமும் பத்து இறைக்கட்டளைகளும் அருளப்பட்டன.அவர்களுக்கு வழங்கப்பட்ட பத்து இறைக்கட்டளைப் பற்றி யூத கிறித்தவ வேதங்களில் என்ன கூறப்பட்டுள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள ஆசப்படுகிறோம். இதைப்போன்று இப்றாஹீம்

அலைஹிஸ்ஸலாம்அவர்களுக்கும் பத்து கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பத்து கட்டளைகள் குறித்து குர்ஆனிலும் சொல்லப்படுகிறது. இதிலிருந்து மனித இனத்திற்குத் தேவையான பொதுவான உபதேசங்கள் எல்லா வேதங்களிலும் ஒரே மாதிரியாகவே காணப்படுகின்றன. என்பதை புரிந்து கொள்கிறோம்.பின்னர் மனிதனது வளர்ச்சி,தேவைகளை அனுசரித்து காலத்திற்கும்,சூழ்நிலைக்கும் ஏற்றவாறு அந்தந்த சமுதாயத்தினருக்கு தனித்தனியாக வேதங்களும், கட்டளைகளும் வழங்கபட்டுள்ளன.

இப்போது நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேதக்கட்டளைகளைப் பார்ப்போம்.

பத்துக்கட்டளைகள்

1. வணங்குதற்குரியோன் என்னைத்தவிர வேறு எவருமில்லை.

எனவே எனக்கு இணைவைக்கக்கூடாது.

2. என் பெயரில் பொய் சத்தியம் செய்வது கூடாது.

3. வாரத்தில் ஒருநாளான சனிக்கிழமையை வணக்கநாளாகக் கொள்வது.

4. உன் தாய், தந்தையருக்கு மரியாதை செலுத்துவாயாக!

5. எனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவாயாக!

6. கொலை செய்யாதீர்!

7. விபச்சாரம் செய்யாதீர்!

8. திருடாதீர்!

9. பிறருக்கு எதிராக பொய் சாட்சி கூறாதீர்!

10.அண்டை வீட்டார் மனைவியைப் பார்க்கவோ ஆசைப்படவோ செய்யாதீர்!

வேலைக்கார அடிமை,அடிமைப்பெண்,கால்நடைகள் மீதும் ஆசையுறாதீர்!

(பொறாமைப்படாதீர்!) ஆதார நூல்கள் : கஸஸுல் குர்ஆன், கஸஸுல்

அன்பியா. அறிவிப்பவர் : இமாம் : இப்னு கதீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி)

இந்த பத்து கட்டளைகளை இமாம் தஹபீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்,அராயிஸுல் மஜாலிஸ் என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பத்து கட்டளைகள்!

1. வணங்குதற்குரியோன் என்னைத்தவிர வேறு எவருமில்லை.

எனவே எனக்கு இணைவைக்கக்கூடாது.

2. எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்திக் கொண்டிருப்பாயாக

அதனால், நீண்ட ஆயுளைப் பெறுவாய்.

3. கொல்லவேண்டாம் என்று அல்லாஹ் தடுத்துள்ள எவரையும்

கொல்லாதீர்கள். கொன்றால் பூமியிலும் உனக்கு இடமில்லாமல்

போய்விடும்.

4. என் பெயரில் பொய் சத்தியம் செய்யாதீர்.

5. செவியால் கேளாத, கண்ணால் காணாத, இதயத்தால் தெளியாத

எதற்கும் சாட்சி கூறாதீர்.

6. நான் மற்றவர்களுக்கு அளித்த அருட்கொடைகளைப்பற்றி

பொறாமைப்படாதீர்.

7. விபச்சாரம் செய்யாதீர்! திருடாதீர்!செய்யின் என் அருட்கதவு மூடப்படும்.

8. என்னைத்தவிர வேறு எவருக்கும் பலியிடாதீர்! என் பெயர் கூறி

அறுக்கப்படாத எந்தப்பலியும் ஏற்கப்படமாட்டாது.

9. அண்டை வீட்டார் மனைவி மீது ஆசையுறாதீர்! அது பாவத்திலெல்லாம்

பெரும் பாவமாகும்.

10.நீ விரும்புவதை மற்றவருக்கும் வீரும்புவாயாக! நீவெறுப்பதை

மற்றவருக்கும் வெறுப்பாயாக!

இவை திருக்குர்ஆனிலுள்ள 6:151,152-வது வசனங்களில் பொதிந்துள்ளவையே இக்கட்டளைகள் என குர்ஆன் விரிவுரையாளர்கள் எனக்கூறுகின்றனர்.