Home கட்டுரைகள் கவிதைகள் முட்டித் தள்ளிடுவோம்..
முட்டித் தள்ளிடுவோம்.. PDF Print E-mail
Sunday, 03 October 2010 17:21
Share

யாசர் அரஃபாத்

விதைக்கப்பட்ட எங்கள் உயிர்

புதைக்கப்பட்ட நீதி;

மீண்டும் இரத்ததுளிகளால்

போர்த்தப்படும்

பயங்கரவாதம்!

 

மிதமான தீர்ப்பு என்று

மதவாதம் கூறும்;

 

அநியாயம் என்று

அடிப்பட்டவனுக்கேத் தெரியும்!

 

சமரச முயற்சி என்று

காதோடு கேட்கும்;

நம் வீடு என்றால் மட்டும்

நரம்புகள் துடிக்கும்!

 

உயிரோடு குழித்தோண்டி

சமாதிக்கட்டிய நீதித்துறை;

இன்னொரு கழுத்தறுப்பு

கட்டப்பஞ்சாயத்து நடைமுறை!

 

தூங்கியதுப் போதும்

விழித்தெழு விரைவில்;

அயர்ந்து விட்டால்

அடுத்த இடிப்பு உன் வீட்டிலும் உண்டு!

 

ஒன்று சேர்வோம்

ஒருக்கொள்கை அமைப்பு;

இப்படியே விட்டால்

நம் தலைமுறையும்

எதிர்பார்க்கும் அடுத்த வழக்கு!

 

இருக்கும் போதே

முடித்திடுவோம் - எதிரியை

முட்டித் தள்ளிடுவோம்;

 

source: http://itzyasa.blogspot.com