Home கட்டுரைகள் கவிதைகள் திரையிட்டு வந்தேன்...
திரையிட்டு வந்தேன்... PDF Print E-mail
Thursday, 30 September 2010 08:15
Share

யாசர் அரஃபாத்

குறையேதுமில்லை

திரையிட்டு வந்தேன்;

உன் இச்சைக்கொண்ட பார்வைக்கு

எச்சில் துப்பி எதிர்ப்பேன்!

 

அரைநிர்வாணம்

அழகாய் தோன்றும் உனக்கு;

உன் அக்காள் தங்கை காட்டி வந்தால்

 முழுக்கோபம் எதற்கு!

 

மாற்றான் தோட்டத்து மல்லிகை மட்டும்

மணக்கவேண்டும் உனக்கு;

மானங்கெட்ட மானிடனே

மனைவியை பூட்டிவைக்கிறாய் எதற்கு!

 

போர்த்தியிருக்கும் எங்களை

கழட்டச் சொல்லி கேட்கிறாய்;

கழட்டி வந்த பெண்களிடம்

கைவரிசையைக் காட்டுகிறாய்!

 

மானம் காக்க மறைத்திருப்பது

சிறையென்று நீ நினைத்தால்;

ஒத்துக்கொள்கிறேன் ஒளிந்திருக்கிறேன்

உனக்காகத்தான்; தப்பிப்பதற்கு!

 

யாசர் அரஃபாத்   http://itzyasa.blogspot.com